பக்கங்கள்

சனி 02 2013

தீபாவளி பீத்தல்................

தீபாவளி விருந்துக்காக பக்கத்து வீட்டிற்கு வந்திருந்த மாப்பிள்ளை வீட்டாரின் ஒருவர் சொன்னார்.

என்னைய தீபாவளி விருந்தெல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு.ஒரு வாரத்துக்கு மருந்து மாத்திரை கொடுத்துள்ளார் மருத்துவர் என்று பெருமையாக பீத்திக் கொண்டார்.

அதற்கு பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார்.“ இதென்ன அதிசியம், என்னைய எதுமே சாப்பிடக்கூடாதுன்னு, ஒரு மாதத்திற்கு மருந்து மாத்திரை கொடுத்துள்ளார் மருத்துவர் என்று தான் பையில் வைத்திருந்த மருந்து மாத்திரைகளை காண்பித்தார்.

ஒரு வாரத்திற்கு பீத்தினவர் கப்சுப்ன்னு ஆகிட்டார்.

இதனால் தெரிவது என்னவென்றால் வந்த இடத்தில் நாமதான் பெரிசு என்று பீத்தக்கூடாது.

வெள்ளி 01 2013

விட்டு விலகாத மூடநம்பிக்கைகள்..........


தற்போது நிலவரப்படி
தமிழகத்தில் மழை
பெய்ய வாய்ப்பு
குறைவு.....................

அதனால் காற்று
அழுத்த தாழ்வு
மண்டலம் ஒன்று
உருவாகி அது
கடற்கரையை நோக்கி
வந்தால்தான் மழை
பெய்ய வாய்ப்பு......

இதனால் வடகிழக்கு
பருவ மழையும்
இந்தத் தடவையும்
பொய்த்து விட்டது.

ஆகையினால். இந்த
குறைகளை போக்கிட
பத்தாயிரம் மரங்களை
வெட்டியதை கண்டு
கொள்ளமால இரு
பதாயிரம் மரக்கன்றுகளை
நடச் சொல்லும்
அரிய விஞ்ஙானிகளின்
பேச்சை ஊதா
சீனப்படுத்தாமல்...

மழை வரவழைப்பதற்க்கு
இரத்தத்தோடு ஊறிப்
போன பரம்பரை
வழக்கமான சடங்கு
சாத்திரங்களை மண்
ணோடு புதைக்காமல்

இல்லாத ஒன்றிடம்
வேண்டி நின்று
அது,கேட்டதாக
ஆடுகளை
கோழிகளை
வெட்டி அறுத்து
பலி கொடுத்து
பொங்கல் இட்டு
வணங்கியும் மழை
வராததால்.............

அடுத்த படியாக........
கழுதைக்கும் கழுதைக்கும்
மணமுடித்து பார்த்து
மொய்யெழுதி திண்ட
சோறு செமிக்க
வானத்த வாய்
பொளந்து பாத்த
போது மழை
தடுக்கப்பட்டதை
கண்டு............................

மாற்றாக..............
மழையை தடுக்கும்
அரக்கன் பொம்மையை
தயார் செய்து.........
தெருத்தெருவாக
இழுத்து வந்து
பழைய வௌக்குமாறு
பிஞ்ச செருப்பால்
அடிஅடியென்று
அடித்து துவைத்து
தடையை நீக்கியும்
மழை பொழியவில்லை.

பெய்தால் நாசம்
பெய்யாவிட்டால்
மோசம் என்ற
நிலையை மாற்ற
பெய்த மழையை
சேமிக்க வழிகான
இருக்கும் ஒன்றிக்கு
வக்கும் மனமும்
இல்லாத போது.

அந்த இருக்கும்
ஒன்றிடம் மனு
கொடுக்க ஊர்
வலம் வந்த போது
லத்தி அடிகள்
மழையா பொழிந்தது
மறந்தா போயிற்று..

ஆளுகின்ற கூட்டம்
செய்கின்ற போக்கால்
மழை பொழியவில்லை
என்ற துப்பு புரியாமல்

பரம்பரை வழக்கம்
அய்தீகம் என்று
சொல்லி நாளும்
ஒரு மூட தனத்தை
விட்டு விலகி............

மழை வராதிருக்கும்
காரணத்தை அறிய
முயலுவீர் மக்காள்!!!



வியாழன் 31 2013

காந்தி ஏமாற்றிய ரூ.5000.....

காந்தி ஏமாற்றிய ரூ.5000
காந்தியின் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாதபோதிலும் வேறு வழியின்றி அவர் காந்தியின் தலைமையை ஆதரித்தே பேசியிருக்கிறார். காந்தியுடன் கசப்பான தனிப்பட்ட அனுபவமும் அவருக்கு இருந்தது. சிறையிலிருந்து திரும்பிய வ.உ.சியின் குடும்ப வறுமை போக்க, 5000 ரூபாய் நிதி திரட்டி வ.உ.சியிடம் ஒப்படைக்கு மாறு காந்தியிடம் கொடுத்திருக்கிறார்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்த தமிழர்கள்.
கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை கேட்டும் காந்தி அந்தப் பணத்தை வ.உ.சியிடம் தரவேயில்லை. எனினும் வ.உ.சி. அதைப் பொருட்படுத்தவில்லை. காந்தியின் அகிம்சைக் கொள்கைதான் அவரைப் பெரிதும் இம்சை செய்திருக்கிறது.
சிறுவயல் என்ற கிராமத்தில் ப.ஜீவா நடத்திவந்த ஆசிரமத்துக்குச் சென்றிருக் கிறார் வ.உ.சி. அங்கிருந்த ராட்டை களைப் பார்த்துவிட்டு, “இங்குள்ள இளைஞர்கள் நூல் நூற்கிறார்களா?” என்று ஜீவாவைக் கேட்கிறார். “ஆம்”என்று அவர் சொன்னவுடன், “முட்டாள் தனமான நிறுவனம். வாளேந்த வேண்டிய கைகளால் ராட்டை சுற்றச் சொல்கிறாயே” என்று கோபப்பட்டிருக் கிறார். இந்த உணர்வோடுதான் காங்கிரசில் இருந்திருக்கிறார் வ.உ.சி.
நன்றி! பு.மா.இ.மு

ஈனப்பிறவிகள்..............1.


கருணை உள்ளமும், கடும் உழைப்பும், நேர்மையும் ஒருபோதும் முதலாளிகளுக்கு இருந்தது இல்லை. மக்கள் பணத்தையும், அரசு கஜானாவையும் களவாடுவது, மோசடி செய்வது, பொய்க்கணக்கு எழுதி வரி ஏய்ப்பு செய்வது, இரட்டை வேடம் போடுவது, பிறரது உழைப்பை அபகரித்துக் கொள்வது ஆகிய அனைத்து ’நற்பண்பு’களுக்கும் சொந்தக்காரர்கள் முதலாளிகள்.இவர்கள் ஈனப்பிறவிகளில் முதல் வரிசையில் உள்ளவர்கள். 

பிறரது உழைப்பைச் சுரண்டியும், ஏமாற்றியும் பிழைப்பு நடத்தும் மானம் கெட்ட பண்பாடே முதலாளிகளின் பண்பாடு. இதனால்தான், ஒரு திருட்டுப் பயலுக்குரிய கூச்சமோ, சொரனையோ இல்லாமல், கோட்டு-சூட்டுடன் உலா வருகின்றனர்.இந்த ஈனப்பிறவிகள்.

வங்கிக் கடன் மோசடி மட்டுமன்றி, பல தொழிலாளர்களது கூலியையும் திருடிக்கொள்ளும் இவர்களுக்கு முன்., சட்டமும், அரசு கெடுபிடிகளும்  மண்டியிட்டு கிடக்கின்றன. 

சில ஆயிரம் ரூபாய் கடனுக்காக போட்டோவைப் போட்டு அவமானப்படுத்திய வங்கிகள், பல இலட்சம் கோடிகளை மோசடி செய்த முதலாளிகள் பட்டியலை வெளியிடமாட்டார்கள். ஒருத்தன் பெயரைக் கூட வெளியில் சொல்லாமல் அமுக்கி வைத்துள்ளார்கள்  அவ்வளவு நேர்மையானவர்கள். ஏழைக்கு ஒரு நீதி! முதலாளிக்கு ஒரு நீதி! இதுதான் ஈனப்பிறவிகளின் மனுநீதி!

தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கும் கருணை வள்ளல்கள் என்று இந்த ஈனப்பிறவிகள் பீற்றிக்கொள்கின்றனர். அவர்களது திறமையால் தான் தொழில்வளமும், லாபமும் பெருகிவருவதாகத் தம்பட்டம் அடிக்கின்றனர். மறுபுறத்தில், தொழிலாளிகள் உழைக்கத் தயங்குவதாகவும், சங்கம் துவக்கி தொழில் அமைதியைக் கெடுப்பதாகவும் அவதூறு பேசித் திரிகின்றனர், முதலாளிகள். வறுமையில் வாடுகின்ற மக்களுக்கு மானிய விலையில் எதைக் கொடுத்தாலும் மக்கள் சோம்பேறிகளாகி விடுவார்கள் என்று வாய்க்கொழுப்புடன் பேசுகின்றனர், பேசிவருகின்றனர் இந்த ஈனப்பிறவிகள்.

தொழிலாளியைச் சுரண்டாமல் இனப்பிறவியால் வாழமுடியாது. பொதுச் சொத்தைத் திருடாமல் ஈனப்பிறவியால் கொழுக்க முடியாது. அடக்கு முறைகளைச் செய்யாமல் அவர்களால் பாதுகாப்பாக இருக்க முடியாது. இதற்காக எத்தனை பெரிய கொடூரத்தையும் செய்யத் தயங்காத மாபாவிகளே, இந்த ஈனப்பிறவிகள்.

 சட்டத்தில் ஓட்டை போட்டு பதுங்கிக் கொள்ளும,  பெருச்சாளிகளே .இந்தமுதலாளி என்ற ஈனப்பிறவிகள்.

நன்றி!! வினவு.



புதன் 30 2013

மானமுள்ளவர்கள் கொண்டாடும் விழா......

மானமுள்ள தமிழர்கள் கொண்டாடும் விழா............
பெரியார் பிறந்த தினவிழா !!!

நன்றியுள்ள இந்தியர்கள்  கொண்டாடும் விழா........
அம்பேத்கர் பிறந்த தின விழா !!!

மாணவர்கள்.இளைஞர்கள் கொண்டாடும் விழா
பகத்சிங் பிறந்த தின விழா !!!

உலக பாட்டாளி வர்க்கங்கள் கொண்டாடும் விழா....
நவம்பர் புரட்சி தின விழா !!!

 -------------------------------------------------------------------------

சாதி வெறியர்கள் கொண்டாடும் விழா.....
 சாதிவெறி குல தெய்வ பூசை விழா !!!

மதவெறியர்கள் கொண்டாடும்விழா.......
 விநாயக சதுர்த்தி விழா !!!

துரோகிகள் கொண்டாடும் விழா...........
ஆகஸ்டு சூதந்திர விழா !!!

திங்கள் 28 2013

இறைவனையும்,மன்னனையும் பாடி வந்த கீர்த்தனையை மாற்றிய கவிஞர்.


இறைவனை நிணைத்து மனம் உறுகி பாடி வேண்டுதலையும், நாட்டை ஆளும் மன்னனை புகழ்ந்து பாடி பரிசினை பெருவதும்மே,கீர்த்தனை பாடல்களாக இருந்து வந்தன.தமிழ் கவிஞர்களுக்கு

அப்படிப்பட்ட, இல்லாத ஒன்றிடம் வேண்டுவதும், இருப்பவர்களை புகழ்ந்து பாடி யாகசம் பெறுவதும்மாக இருந்த கீர்த்தனைப் பாடல்களை மாற்றி,எல்லா தொழில் முறைகளுக்கும்,ஏழை எளியவர்களுக்கும், சாதரணமான வர்களுக்கும்  புரியும் வண்ணம் பாடல் கீர்த்தனைகளை பாடி,பாடல்(கவிதை) உலகில் ஒரு புரட்சியை உண்டாக்கியவர்  கவிஞர்.

கவிதைகளிலே தமிழே கோலோச்ச வேண்டும என்று தன் கவிதைகளிலே, பாடல்களிலே  அதை நடைமுறைப்படுத்தியவர் கவிஞர்

தமிழ்நாட்டில் தமிழ்க் கவிஞர்களிலே,உறையாடல்கள்  இன்றி முழுக்க,முழுக்க கவிதையிலே நாடகம் எழுதியவர்.  

இவர் எழுதிய “புரட்சிகவி” என்ற கவிதை நாடகம். இந்திய வரலாற்றில் இலக்கிய உலகில், கவிதையிலே.இரண்டுமணி நேரம் நாடகமாக நடந்தது.

இந்த நாடகத்துக்கு “தந்தை பெரியார்” தலைமை வகித்து அவரின் பாராட்டைப் பெற்ற  கவிஞர்.

தன் பாடல்களிலே,மூடப்பழக்த்தை சாடி, அறிவியலை மிகுதியாக இழைய விட்டிற்கும் பெருமைக்குரிய கவிஞர். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.


ஞாயிறு 27 2013

என்பது வருட வாழ்க்கையில் நாற்பது வருடம் நாட்குறிப்பு எழுதியவர்!!!

புத்தாண்டு பிறந்துவிட்டால் வாழ்த்துக்களுடன் ஒவ்வொரு கம்பெனிகாரர்களும் காலண்டர்களும் டைரிகளும் தங்களின் வாடிக்கையாளர்க்கும்,நண்பர்களுக்கும் இலவசமாக வழங்குவார்கள்

மற்றவர்கள் கடைகளுக்கு சென்று தங்களுக்கு பிடித்த பிராண்டுகளை தேடி வாங்கிக் கொள்வார்கள்.

இப்படி டைரி வாங்குபவர்களில் ஒரு சிலரைத்தவிர,பலர் தினசரி காலண்டரில் உள்ள தாள்களை கிழிப்பதற்குகூட மறந்துவிடுவது மாதிரி ,ஒன்றிரண்டு நாட்கள் அல்லது ஒரு வாரம்.கூடிப்போனால்  ஒரு மாதம் வரை எழுதிவிட்டு அதை அப்படியே! மறந்து விடுவார்கள்.

இணையம் வராத,வளராத அந்தக் காலத்திலே! அப்படி என்றால்! உலகத்தையே! கிராமமாக்கிய இன்று எத்தனை பேர்  நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தை தொடருகிறார்களோ???

ஆனால் இருபதாம் நூற்றாண்டில் எண்பது ஆண்டுகள்வரை வாழ்ந்த வாழ்க்கையில் நாற்பது ஆண்டுகள் விடாது தொடர்ந்து நாட்குறிப்பு எழுதி வந்திருக்கிறார் ஒருவர்.

அவரை தமிழ்நாட்டு மில்டன் என்றும்,தனித்தமிழ்தந்தை என்றும் அழைப்பார்கள். தமிழர்தந்தையான ஈ.வே.ரொ.வுக்கு“ பெரியார் ”பட்டம் வழங்கிய பெண்கள் சங்கத்தின் தலைவியின்  தந்தையுமான மறைமலை அடிகளார் தான்  நாற்பது வருடமாக நாட்குறிப்பு எழுதிவந்தவர்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...