பக்கங்கள்

சனி 04 2017

வந்ததும் போனதும்...

அம்மா போயி
மம்மி வந்த
கதை மாதிரி


அம்மி போயி
மிக்ஸி வந்தது
உரல் போயி
கிரைண்டர்ரு வந்தது


மண்பானை மறைந்து
குக்கர் வந்தது

விறகு மறைந்து
கேஸ் வந்தது

மண் குடம்
தண்ணி போயி
பிரிட்ஜ்  பாட்டில்
தண்ணி வந்தது

மொத்தத்தில் இயற்கை
போய்...... மனிதனுக்கு

சர்க்கரை நோய் வந்தது
இரத்த கொதிப்பு வந்தது
மாரடைப்பு வந்தது
புற்று நோய் வந்தது
ஆஸ்துமா வந்தது
அல்சர் வந்தது

ஏமாளிகளின் நாட்டில்
கோமாளிகளின்  ஆட்சி
வந்தது..பின்
சாராயம் வந்தது.
ஒட்டுக்கு பிரியாணியும்
இரண்டயிரம் பணம்
வந்தது..இவ்வளவு
வந்தும் புத்தி
என்ற ஒன்று
மட்டும் மறைந்தே
போய்   விட்டது

வெள்ளி 03 2017

சி்ந்தித்தால் கோபம் வரும்....




்அ்ணணே.... அறிவாழி அண்ணே...வணக்கம் அண்ணே.....

வணக்கம் தம்பி இன்னிக்கு என்ன வில்லங்கமான  கேள்வி  கொண்டு வந்திருக்க....

பயப்படாதிங்கண்ணே......சிந்தித்ததால் உங்களுக்கு சிரிப்பு வர்ர மாதிரிசெய்தி கொண்டு வந்திருக்கண்ணே..... சொல்ரேன் கேளுங்க.....

.....................................

தினமும் பால் அருந்தினால் உடல் என்னாகும்ண்ணே.....

உன் உடல் வலிமை பெறும் தம்பி......
அப்படியாண்ணே.......அப்போ..பூனை ஏண்ணே இன்னும் வலிமை பெறவில்ல..

டேய்...... நான் செத்தேன்டா......!!

அட போங்கண்ணே.... இதுக்கு போயி  சாவாங்களா....???

சரி, அடுத்த கேள்விய கேளு....


தினமும் நீண்ட தூரம் நடந்தால் எடை குறையும்ன்னு சொல்றாங்களே... நிஜம்மாண்ணே.....

ஆமாடா.....வயிறு பெறுத்தவுக..உடம்பு பெறுத்தவுக  காலையில வாக்கிங் போறது எதுக்குன்னு நிணச்ச.......

யானையுந்தான் நீண்ட துதூரம் நடக்குதுலண்ணே அதுக்கு மட்டும் ஏண்ணே எடை குறையல......

ஏலே.....நீ வில்லங்கமாவுல கேள்வி கேட்குற......

இல்லண்ணே... நா..படிச்சத உங்கட்ட கேட்டு தெரிஞ்சுக்க வேணாம்ம்மண்ணே..

சரி சரி.....

அப்புறம்ண்ணே...தினமும் ரெண்டு மணி நேரம் நீச்சடித்தால் உடம்பு ஸ்லிம்மா ஆகுமாண்ணே.......

அது எப்படிடா ஆக முடியும்.....சென்னையே வெள்ளத்துல மிதக்குது...அங்க குந்தியிருக்கிற திமிலங்கலம் எல்லாம் ஸ்லிம்மா ஆகியில இருக்கனும்லடா 

அண்ணே..உங்களுக்கும் இருக்குதுண்ணே......

என்னாதுடா...... கொழுப்பு இருக்குதுங்கிறியா......

ஆமண்ணே... புல்லை மட்டுமே திண்ணும் ஆட்டுக்கு எப்படிண்ணே கொழுப்பு வந்திச்சு......

அத நம்ம நாட்டுல புல்லட் ரயில் விடப் போகும் புல்லட் பாண்டிகிட்டதாண்ட கேட்டு தெரிஞ்சிகினும்....சரி இன்னும் இருக்கா...அவ்வளவுதானா...?

ஏண்ணே...போர் அடிக்குதா......???

இல்லடா..... வயித்த கலக்குதுடா......

கடைசியா ஒண்ணே ஒன்னுண்ணே.......

சரி...சொல்லு......டா

தினசரி சூரியன் வருவதற்கு முன் எழுந்து எழுந்தால் சகல தெய்வங்களும்  நம்மல தேடி வருமாம்லண்ணே.....

போடா வெண்ண   ..தினமும் டீ கட திறப்பதற்கு முன்னமே வந்து குந்தியிருக்கிறமோ..... எந்த செல்வம்டா வந்திருக்கு  ஒன்னச் சொல்லுடா...
சரி..நம்மல விடு..... நியூஸ் பேப்பர் போடுறவன் நமக்கு முன்னாடி எழுந்து வீடு வீடா...கட கடையாய் ஏண்டா அலையுறான்....


ஏன்னு..சிந்திக்கனும்ண்ணே........

நீ சொல்றத..கேட்டு சிந்தித்தால்.....சிரிப்பு வருவதற்கு பதிலா.... கோபம்தாண்டா வரும்.......



இப்படியெல்லாம் சொல்லி நம்மல ஏமாத்திகிட்டு இருக்காங்கே..இல்லயாண்ணே......


சரியா..சொன்னேடா.......

புதன் 01 2017

நீ..மட்டும் அல்ல..நானும்தான்...........



அவர்கள்   யார்
என்று தெரியவில்லை

தெரிந்து கொள்ள
வழியும் இல்லை

அவர்கள் வாதம்
கடுமையாக இருந்தது

அவர்களின் வாதம்
நாட்டு நடப்பை
பற்றி  நீண்டது

அவர்கள்  இருவருமே
தங்களைப் பற்றி
மாறி மாறி
சொல்லிக் கொண்டார்கள்


முதல்  நாள்
ஒரு பேச்சு
மறு  நாள்
ஒரு பேச்சு
பேசும் உச்ச
நீதி  மன்றம்
அல்ல  நான்

நீ மட்டும்
அல்ல நானும்தான்..

அவர்கள் பேச்சு
முடிவுக்கு வந்ததா
 இல்லையா  என்பது
எனக்கு தெரியவில்லை

அவர்களுடன் இருந்தவர்
நான் போறேன்
என்று விட்டு
நகர்ந்த போது
நீ  மட்டும்
அல்ல நானும்தான்
என்று சொல்லாமல்
அவரைத் தொடர்ந்தேன்........

செவ்வாய் 31 2017

ஒரு அக்காவின் மிரட்டல் & உத்தரவுக்கு பணிந்து......





'துரை சண்முகம் என்பருடைய கவிதை ஒன்றை அனுப்பியிருக்கிறேன் மரியாதையாக போஸ்ட் செய்யவும்' என்று அக்கா ஒருவர் மிரட்டலோடு உத்தரவிட்டிருக்கிறார்

 அவர் கொண்டாடிய கடைசி தீபாவளி 


அப்போது என் மகளுக்கு
எட்டு வயது
அக்கம் பக்கத்தில்
தீபாவளி பரபரப்பு.

குடும்பம்
கொண்டாடவில்லை என்றாலும்
தெருவே தீபாவளியை
மகள் கண்ணில் காட்டியது.

ஏம்ப்பா….
நம்ம வீட்ல
இதெல்லாம் இல்ல – என
புதுத்துணி, பலகாரம்
பூவாணம் பார்த்து
கேட்டாள் மகள்

எதுவோ..
மனிதனுக்கு ஒரு கொண்டாட்டம் !
என ஊரே திளைக்கையில்
கருத்தியல் கனத்தை
குருத்து தாங்குமோ?
அச்சத்தோடு,
”கொண்டாட்டம் கூடாதென்பதல்ல
இது அவமானம்….” என
ஆரம்பித்தேன் காரணத்தை.

”வேற இருக்கட்டும்
வெடியாவது கிடையாதா?” என
வேண்டினாள் மகள்.
முடியாத கருத்தை
முகை அவிழ்க்கும் இயல்பாய்
கதையாகத் தொடர்ந்தேன்….

நரகாசுரனை கொன்றதற்கு
தீபாவளி – என
ஊர்க்காரணம் சொன்னவுடன்,
”அப்ப அவன் கெட்டவனா?
அடுத்த கேள்வியோடு
ஆவலாய் அருகே வந்தாள்.

நடந்தது இதுதான்,
அசுரர்களின் காட்டுக்குள்
ஆரியப் பார்ப்பனர்கள்
அத்து மீறி நுழைந்தார்கள்.

சுரா எனும் சாராயத்தை
ஊர் கெடுக்க கலந்தார்கள்.

அசுரர்களின்
ஆடு, மாடுகளை
அடித்து யாகத்தில் எரித்தார்கள்
அடுத்தவன் உழைப்பில்
திருடித் தின்றார்கள்.

தேவர்களின் தீய செயலை
எதிர்த்துக் கேட்டான் நரகாசுரன்
எங்களுக்கா தொல்லை தருகிறாய் ?
என
விஷ்ணுவை விட்டு கொன்றார்கள் !
இதுதான்
கதைக்கு பின்னால் உள்ள
கள வரலாறு!

இன்னும் புரியும்படி
சொல்கிறேன்,
எங்கிருந்தோ வந்து
ஊரில் ஒரு
சாராயக்கடையை திறக்கிறான்
நான் எதிர்த்துக் கேட்டால்
நரகாசுரன்,

நம்ப ஊர் ஆத்துல ஒருவன்
மணலைத் திருடுகிறான்
எதிர்த்துக் கேட்டால்
நான் நரகாசுரன்,

படிக்குற
உன் பள்ளிக் கூடத்தை
ஒருவன் மூடுகிறான்
எதிர்த்துக் கேட்டால்
நான் நரகாசுரன்.

எங்கிருந்தோ வந்து
நாம இருக்கும்
இடத்தை ஒருவன் பறிக்கிறான்
எதிர்த்துக்கேட்டால்
நான் நரகாசுரன்.

இதுக்காகவெல்லாம்
அப்பாவை
ஒருவன் கொலை செய்தால்
கொண்டாடுவாயா?

கேட்ட மாத்திரத்தில்
கண்களை உருட்டி
கைவிரல் ஆட்டி
”ஊம்…
தொலச்சி புடுவேன்!” – என
மகள் வெடித்த
வெடிப்பு இருக்கிறதே
அந்த வீரியத்தை
பட்டாசு எதிலும்
பார்க்க முடியாது.

குழந்தைக்கு உணர்த்துவது
சிரமம் என நினைத்திருந்தேன்
பிற்பாடுதான் புரிந்தது
பெரியவர்களுக்கு
புரிய வைப்பதுதான்
பெரும்பாடு.

இன்று
வளர்ந்துவிட்ட மகளிடம்
மீண்டும் தொடர்ந்தேன்.

”பூர்வகுடி மக்களை
இன்று
காட்டை விட்டு துரத்துவது
வேதாந்தா கம்பெனி,

பூர்வகுடி திராவிடர் வளத்தை
அன்று
ஆட்டையப் போட்டது
வேதக் கம்பெனி.

அரசாங்க மொழியில் சொன்னால்,
நரகாசுரன்
அந்தக் கால நக்சலைட்!”

மகள்
வெடித்துச் சிரித்தாள்
பூவாணம் தோற்றது
புது அர்த்தம் பொலிந்தது.

நன்றி!  – துரை. சண்முகம்.

திங்கள் 30 2017

தன் பவரை காட்டிய பெண்மணி..............




நீங்க செல்போனை

புடுங்குங்க.. புடுங்காமப் 
போங்க...

நம்பரைக் கட் பண்ணுங்க..

 பண்ணாமப் போங்க...

நாங்க ஆதாரை 
இணைக்கவெல்லாம் முடியாது...

ஆங்!...ஆங்... ஆங்்்


- மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

ஞாயிறு 29 2017

மதவெறியும் சாதிவெறியும் கொண்ட இரு கண்கள்



தேசியமும் தெய்வீகமும்
எனது இரு
கண்கள் என்றான்
அவன்......

சரி இருக்கட்டும்
அதை ஏன்?
என்கிட்ட சொல்றீங்க
என்றாள் அவள்....


நீ என்
சம்சாரம்“தானே
என்று கேட்டான்
அவன்...................

 பகல்ல கூட
கண் தெரிலையா
வீடு மாறி
வந்திருக்க மூதேவி
மொதல்ல கண்
டாக்டர பாரு
என்றாள் கோபமாக

நன்றி!---வில்லவன்ஃ

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...