பக்கங்கள்

வெள்ளி 07 2014

இனி,வேடிக்கை பார்த்தால், பளார் அறை,அடி,உதை வாங்க வேண்டும்.

மதுரை மா வட்டம் பேரையூர் செல்லாயி  புரத்தை சேர்ந்தவர் கருப்பையா என்பவர்.

நவம்பர் 28ல் பட்டா மாறுதல் தொடர்பாக பேரையூர் தாலுக்காவுக்கு சென்று கொண்டு இருந்தார்.

வழியில்  செல்லும் வேலையை மறந்து கோழி திருட்டு தொடர்பாக,
நாண்கு பெண்கள் உள்பட ஐந்து பேரை பொதுமக்கள் பிடித்து  கட்டி
வைத்து போலீசிடம் ஒப்படைத்துக் கொண்டு இருப்பதை வேடிக்கை
பார்த்து  கொண்டு நின்றார்.

இவர் வேடிக்கை பார்ப்பதைக்கண்ட  டி.ராமநாதபுரம் சப்.இன்ஸ்பெக்டர் புஷ்பா ராணி,இவரிடமிருந்த பணத்தையும்,  செல்போனையும் பறித்துக் கொண்டதோடு, காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்று பூட்சு காலால் மிதித்தார். மேலும் சுகுமாறன்,ராஜேஷ் ஆகிய ஏட்டுகளான போலீஸ்
காரர்ர்களும்  சேர்ந்து தாக்கினார்கள்.

தாக்குதலால் காயம்மடைந்த இவர் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதன்பின்பு, தமிழ்நாடு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் என்னை தாக்கிய மூன்று போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று  மனு தாக்கல் செய்தார்.

இவரின் மனுவை விசாரித்த நீதிபதி,தமிழக உள்துறை செயலர், டிஜிபி, மாவட்ட எஸ்பி ஆகியோர்கள் பதில் அளிக்க உத்தரவிட்டார்..

இதிலிருந்து தெரிவது என்னவென்றால்.  செல்லும் வழியில் வேடிக்கை பார்ப்பதை தவிர்த்துவிட்டு, நம் வேலையை பார்க்க வேண்டும். தப்பித்தவறி செல்லும்  வேலையை மறந்துவிட்டு வேடிக்கை பார்த்தால்,   போலீசிடம் பூட்ஸ் எத்தும் அடி.உதையும் வாங்க வேண்டும். மேலும் பணம் வைத்திருந்தால்  காசு பணத்தையும்  செல்போனையும் பறி கொடுக்க வேண்டும்.

அடி வாங்கியதில் காயம் ஏற்ப்பட்டால்.தாமதிக்காமல் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற வேண்டும். பிறகு சிகிச்சை பெற்ற கையோடு..........

(வசதியிருந்தால்)   போலீசை கண்டு பயப்படாத வக்கீலை பார்த்து தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்யவேண்டும்.

.....................

.....................

.....................


அப்புறம்............


அப்புறமென்ன........பூட்சுகாலால் எத்தியதோடு இல்லாமல் அடித்து
உதைத்த போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் காலம் வரை காத்திருக்கவேண்டும்.

வியாழன் 06 2014

ஒரு வார வேலைக்கு 75 ஆயிரம் சம்பளம்..........

இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு வேலைக்கு போகிறவர்களுக்கு, ஒரு வார கால வேலைக்கு சம்பளமாக 75 ஆயிரம் வழங்கப்படுகிறது.

அந்த ஒரு வார வேலை  இதுதான்...............

இரண்டு நாட்கள் சாப்பிடாமல் பட்னியாக இருக்க வேண்டும். வயிறு.மற்றும் குடல் பகுதிகளை 100/- சதவீதம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன்பிறகு,சிறு சிறு கட்டிகளாக ஆக்கப்பட்டு இருக்கும் தங்கக் கட்டிகளை ஆசனவாய் வழியாக செலுத்திக் கொண்டு, 10 கிராம் தங்கத்திற்கு 500 ரூபாய் வீதம் ஒரு டிரிப்பில் குறைந்தது 15 தங்கக் கட்டிகளை கட்த்திக் கொண்டு விமானம் ஏறி, பாதுகாப்பாக இந்தியாவிற்கு கொண்டு வந்து சேர்க்கும் வேலைக்குத்தான் . ஒரு வார வேலைக்கு ஊதியமாக 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்த வெளிநாட்டு வேலையில்  போது போலீசிடம் மாட்டாமல்  வந்தால் தொழிலாளிக்கு 75 ஆயிரம் ,முதலாளிக்கும் லாபமோ லாபம்.

 மாட்டிக்கிட்டால் தொழிலாளிக்கு மட்டும் வாழ்க்கையே அவலம். இந்தத் தொழிலில் முதலாளி யாரென்றே  இந்தத் தொழிலாளிக்கு தெரியாது.........

செய்தி... தமிழகத்தில் அதிகரிக்கும் தங்கக் கடத்தல்.


புதன் 05 2014

யாருக்கு நடத்தலாம் கவுன்சிலிங்............

தனியார்மயம் தாராளமயத்தால் கல்லா நிரம்பிய  புதியவர்கள் திரைத்தொழிலில் புகுந்து வாரத்துக்கு அஞ்சாறு படங்கள் ரிலீசாக்கிறார்கள்

ரிலீசான அந்த அஞ்சாறு படங்களில் எந்தப்படமும் ஓட்டமா கவோ
,மெல்லொட்டமாகவோ  ஓடி , காலியான கல்லாவை  நிரப்ப  மாட்டுகிறது.

இதனால் கல்லா நிரம்பாத கவலையில் தவிக்கிறார்கள் திரைப்பட தயாரிப்பாளர்கள். ரசிகர்களும் இவர்களின் கல்லாவை நிரப்ப காணிக்கையோ, அபிசேகமோ செலுத்துவதில்லை.

திரைப்பட முதலீட்டு ஆளர்களான இவர்களை அரசின் திரைப்படத்துறையும் கண்டு கொள்வதில்லை.

இதனால் திரைப்பட தயாரிப்பாளர்,திரைப்படரசிகர்கள்,திரைப்படத்துறை  இவர்களில் யாருக்கு  நடத்தலாம் கவுன்சிலிங்....................



இருதலை கொள்ளி எறும்பாக தவிக்கும் மதுரை மக்கள்.!!!!!

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் கொசுக்களின் உற்பத்தியும் வளர்ச்சியும் அதிகரித்து உள்ளது.

அதிகரித்துள்ள அந்த கொசுக்களுக்கு ,சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த பெருமை உடையவர்கள் மதுரை மக்கள் என்ற அரும்பெருமைகளை உணராமல்..தெரியாமல்.........

மாலை 4 மணிக்கெல்லாம் தங்கள் பணியை.வேலையை காட்டத் தொடங்கி விடுகிறது. இதனால் தமிழ் வளர்த்த பெருமையுடைய  மதுரை மக்கள்.

மாலை 4மணிக்கே வீடுகளைின் கதவுகளையும் சன்னல்களையும் பூட்டிக் கொண்டு கொசுக்களின் வெலைகளிலிருந்து தற்காத்து கொள்ள வேண்டி இருக்கிறது.

கோடைகாலம் வருவதற்கு முன்பே கோடைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் தற்கப்புக்காக ஜன்னல்களை அடைத்து வைப்பதால்.காற்று தடுக்கப்பட்டு வெப்பம் அதிகரிக்கிறது.

காற்றுக்காக ஜன்னல்களை திறந்து வைத்தால் கொசுக்கள் தமிழ் வளர்த்த ,வளர்க்கும் மக்கள் என்றும் பாராமல் கடியோ, கடியென்று கடிக்கிறது.

இதனால் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த பெருமை உடைய மதுரை மக்கள் தமிழ் வளர்க்கும் பொது மக்கள் இருதலை கொள்ளி எறும்பாக தவியாய் தவிக்கிறார்கள்.

செவ்வாய் 04 2014

யாகம் செய்தால் அதிக மதிப்பெண் பெறலாம்........

சரஸ்வதி பூஜையில் புத்தகத்தை வைத்து வழிபட்டால் கல்விக் கண் திறந்து படிக்காமல் -மணப்பாடம் செய்யாமல் பாஸாகலாம் என்று அஞ்ஞான வாத்திமார்கள் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புகட்டி வழிகாட்டினார்கள்.

வாத்திமார்களின் வழியைக்கேட்டு , வழிபட தெரியாத மாணவன் ஒருவன் கேட்டானாம். ஒரு நாள் வழிபடுறதவிட, தினசரி இரவில் தூங்கும்போது புத்தக்தை தலைக்கு வைத்து படுத்தால், புத்தகத்தில் இருப்பதெல்லாம் மண்டையில் ஏறிடும்ல சார், ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கலாம்ல சார் என்றானாம்.

அதுக்கு  அந்த வாத்திமார் சொன்னாராம். அப்படியெல்லாம் ஏறாதுடா? மாணவனே!  கல்விக்கு கடவுள் சரஸ்வதியடா....அத வணங்கினாத்தாண்டா  கல்விக் கண் திறக்கும் ..நீ சொல்வது போல் நடக்காதுடா........ தூங்குவது கும்பகர்ணன்டா............அது மாதிரி கல்வியும்   ஓ..ம் மண்டையில துாங்கி போயிரும்டா ........என்றாராம்.

இந்த வாத்திமார்களின் சொன்ன விளக்கத்தை மொய்பிக்கும் வகையில் ஒலகப் புகழ்பெற்ற சல்லிக்கட்டு கூத்து நடக்கும் அலங்கா நல்லூரில் உள்ள தர்ம சாஸ்தா அய்யோப்பன் ஆலயத்தில்.....பத்து,பனிரெண்டு வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் வேண்டி மகா.....ருத்திர ஜெப யாகம் நடத்தினார்கள்.

கல்விக் கடவுள் சரஸ்வதி என்பதால் சரஸ்வதி தேவிக்கும் அபிசேக ஆராதனை நடத்தினார்கள். உடன் இருந்த கணபதி மற்றும் லெட்சுமி ஆகியோர் கோபித்து கொள்ளக்கூடாது என்பதால் கணபதி ஹோமமும் லெட்சுமி குபேர பூஜை உள்ளிட்ட ருத்திர ஜெய யாகம் நடத்தப்பட்டது.

தேங்காய் உடைப்பது,பிள்யைாரை  சுத்தி சுத்தி வருவது போன்றவை பழைய முறையாக இருப்பதால்......... புதிய முறையான..

இந்த யாகத்தால்  அதிக மதிப்பெண் பெற்று விடலாம் என்ற அசையாத நம்பிக்கையில் சுற்று வட்டாராத்திலிருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் குடும்பத்தார்கள் படை சூழ வந்து பங்கேற்றனர்.

பத்தாவது ,பனிரெண்டாவது  அரசு தேர்வு விடைத்தாள்களை, கடவுள்களானவர்கள் ,வாத்திமார்களாக அவதாரம் எடுத்து   அய்ப்பன்
சாராக,சரஸ்வதி டீச்சராக, கணபதிசாராக, லெட்சுமி டீச்சராக...வந்து
பேப்பரை திருத்தினால்............யாகமும் பூஜையும் செய்ததில் மகிழ்ந்து
ரெண்டு மார்க் கேள்விக்கு அய்ந்து மார்க் போட்டு அதிக மதிப்பெண்
பெற வழி வகுப்பார்கள் என்று நம்பலாம்  ஏன்? என்றால்? நம்பிக்கைத்தானே வாழ்க்கை...????

இந்த நம்பிக்கையை  பொய்ப்பிக்கும் வகையில்..........


இதில் அவதாரம் எல்லாம் நடக்காது.தேர்வு விடைத்தாளின் தேர்வு எண்ணை தப்பாக எழுதுவதை தவிர்த்த  புதிய நடைமுறையில் .பரிட்சை   விடைத் தாள்களை திருத்தவது எல்லாம் மெக்காலே பிரபு வகுத்த வழியில் வழுவாது வந்த அஞ்ஞான வாத்திமார்கள்தான் என்ற  . உண்மை எல்லாவல்ல மர மண்டைகளுக்கும்  நடை முறை உணர வைத்திருக்கிறது.


திங்கள் 03 2014

கதவு திறக்க படாததால் தற்கொலை செய்த வாலிபர்........

பேரையூர் அருகே பெரிய வண்டாரியை சேர்ந்தவர் மகாலிங்கம்.வயது 26, செங்கள் சூளையில் பணிபுரிந்து வந்தார். பணி முடிந்து வீட்டீற்கு திரும்பி வந்தார்.

வீட்டிற்கு வந்தவர். பூட்டியிருந்த வீட்டை தட்டினார். வீட்டிற்குள் இருந்த இவரது  மனைவி கதவை திறக்கவில்லை, பலமுறை தட்டியும்

கதவு திறக்ககப்படாததால் மன வேதனை அடைந்த மகாலிங்கம் அருகே உள்ள கட்டிடத்தில் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்தார்.

மகாலிங்கத்தின் தந்தை பிளாவடி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மகாலிங்கம் எப்படி ? எதனால் ?மன வேதனை அடைந்தார்.? இறந்தார்? என்று விசாரனை செய்து வருகிறார்கள்.அதன்பின்பு.................உன்மை .........பத்திரிகையில் வரும்.??? வராமலும் இருக்கும்.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...