பக்கங்கள்

சனி 10 2016

கேட்டவர் திட்டினார்..............



கணேசனை பார்த்தாயா.....?

எந்த கணேசன்........!

தெரு முச்சந்தியில் இருந்தாரே
அந்தக் கணேசன்.......??

அந்தக் கணேசனைத்தான்
நேற்றே ஆற்றில் கரைத்து
விட்டார்களே...!!

ஒனக்கு கொழுப்புடா...!!!


வெள்ளி 09 2016

இதுவும் ...ஒரு போர்............?????




யாரு...டீ.....நீ....
யார்..டீ....நீ......

நீ...யாரு...டீ...
நீ...யார்...டீ.....

நானா....டீ.....
நானா....டீ......

ஆமா.....டீ.....
ஆமா.....டீ....

அடியே...நீ
இழுத்து கிட்டு
ஓடி..வந்து..
இருக்கீயே..அவனோட
பொண்டாட்டி......டீ......

போடீ...இவளே..
நா....ஒன்னும்
ஓம் ..புருசன..
இழுத்து கிட்டு
வரல...டீ.......

இப்படித் தாண்டீ
சொல்வீங்க டீ..
.
.........................
.......................
.......................



புதன் 07 2016

இதெல்லாம் எதற்க்காக...........



அன்று ஒருநாள்
ஒரு அமாவாசை
இரவில் அவர்கள்
இருவரும் ஒருவரை
ஒருவர் இடித்துக்
கொண்டார்கள்.........

மறு நாள் காலையில்
நல்ல வெயிலில்
அவர்கள் இருவரும்
ஒருவரை ஒருவர்
பார்த்து முறைத்துக்
கொண்டார்கள்........

பின் ஒருநாளில்
அவர்கள் இருவரும்
ஒருவரை ஒருவர்
திட்டிக் கொண்டபடி
அடிதடியில்  மோதிக்
கொண்டார்கள்................

இடித்துக் கொண்டதால்
முறைத்துக் கொண்டதால்
மோதிக் கொண்டதால்
ஏற்ப்பட்ட கௌவரத்தில்

இருவரும் தங்கள்
கைகளில் வெட்ட
அரி வாளுடன்
உச்சி வெயில்
மணடையை பிளக்க
பட்டப் பகலில்
ஒருவரை ஒருவர்
வீதியல் வெட்டிக்
கொண்டார்கள்.............

ஒருவன் பிணவறையில்
மற்றவன் அடுத்து
பிணவறைக்கு செல்ல
ஐஒசியில்................

இதெல்லாம் எதற்க்காக
அய்யா எதற்க்கா..க......




திங்கள் 05 2016

சித்து வெள்ளி பதக்கம் பெற உதவியது யாரு தெரியுமா...?

அன்றைய செய்தித்தாளை படித்த அவருக்கு இருப்பு கொள்ளவில்லை. ஒலிம்பிக்கில்  பேட்மின்டன்  விளையாட்டில்  சித்து வெள்ளி பதக்கம் பெற்றதற்கு காரணம் யாரு தெரியுமா..? என்று  தான் சொன்ன போது தன்னை எல்லோரும் எள்ளி நகையாடியது அவருக்கு நிணைவு வந்தது


இப்போது பி.வி. சித்து. வெள்ளி பதக்கம் வாங்க காரண கர்த்தாவாக இருந்தது யாரு என்று செய்தித்தாளை படிப்பவர்கள் அனைவருக்குமே தெரிந்துவிட்டது. எனபது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தன்னுடைய கணிப்பு சரியாக இருந்திருக்கிறது என்பதை தன்னை எள்ளி நகையாடியவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்று  முடிவு செய்தார்.. அதனால் மீண்டும் அந்தச் செய்தியை படித்தார்.



ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதால் திருப்பதி கோயிலில் சித்து வேண்டுதலை நிறைவேற்றினார்.   ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம்  வென்ற வீராங்கனை பி.வி.சித்து திருப்பதி ஏழுமலையான்  கோயிலில் நேற்று தன் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் நேர்த்திக் கடனாக  ரங்கநாதர் மண்டபம்அருகே உள்ள துலாபாரத்தில் தனது எடைக்கு எடை வெல்லம் காணிக்கையாக செலுத்தினார்.. அவருடன் சென்ற பயிற்சியாளர் கோபிசந்தும் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்தார்


சாமி தரிசனம் செய்த சித்து நிருபர்களிடம் கூறுகையில் , “ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க செல்லும் முன் ஏழு மலையான் கோயிலுக்கு வந்து ((ஏழமலையானே. நான் ஒலிம்பிக்கில்  வெற்றி பெற்று பதக்கம் வெல்ல அருள் புரிய வேண்டும் என்றும் அதற்கு காணிக்கையாக ... எடைக்கு எடை வெல்லம் செலுத்துகிறேன் என்று )  வேண்டிக் கொண்டேன்.


தற்போது ஏழுமலையான் அருளால் நான்  வெற்றி பெற்று பதக்கம் பெற்றதால் எனது வேண்டுதலின் நேர்த்திக்கடனை செலுத்தினேன். தொடரந்து போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை பெறுவேன் -----என்று அவர் படித்து முடித்ததும் தன் தொடையை ஓங்கி அடித்து... அவராக பேசிக் கொண்டார்.

வௌக்கண்ண வெண்ணெய்கள் “ ஏழுமலையானிடம் வேண்டியதால்தான் சித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்” என்று தான் அப்ப சொன்னதை ஒரு வெண்ணய்களும் நம்பல.... இப்ப அந்தப் பொண்ணே சொல்லியிருச்சுலே....
என்றபடி மீண்டும் தன் தொடை அடித்துக் கொண்டார்.

“இப்ப  என்னடா சொல்லப் போறீங்க...” னொண்ணைகளா...?? என்றார் வெற்றி பெருமிதத்தில்.........

அவரின் னொண்ணைகள் வந்து அவருடன் பேசிய பிறகுதான்... அடுத்து என்னவென்று  தெரியும்..


ஞாயிறு 04 2016

அதனால்தான் அய்யா.........



நீ...பேயை பார்த்து
இருக்கிறாய்யா.....?


இல்லை அய்யா....


சரி அதனிடம்
அடி வாங்கி
இருக்கிறாய்யா....??


ம்..ம்..இல்லை அய்யா......


பின்னே எப்படி?
உன்னவளை பேய்
என்கிறாய் அய்யா......


நாட்டை ஆளும்
அது  யாரையும்
மதிப்பது இல்லை
வீட்டை ஆளும்
இது எதையும்
மதிப்பது இல்லை
அதனால்தான்  அய்யா..........

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...