பக்கங்கள்

புதன் 16 2013

போங்கப்....பூ............!!!

ஒவ்வொரு தடவ வரும் தீபாவளி அன்னிக்குத்தான், சின்னஆட்டையும, பெரிய ஆட்டையும் தின்னுறிங்களாக்கும்., இது ரெம்ப அதிசியம்டா........சாமி.....................


சின்னஆடு


பெரிய ஆடு







பூ....................... இதென்ன அதிசியம்.!!

நாங்க ஒவ்வொரு பக்ரீத்துக்கும் பாலைவனத்தையே தின்னுறோம்ல.........


இங்க  இதுதான் அதிசியம். தெரியுமில்ல..................

“போங்கப்...பூ...................”


இதில எதுவுமே  வாங்க முடியாம ?  மெல்ல முடியாம!  வெறும் வாய மெல்லுறோம்ல............இதுதானுங்கப்பு    இங்க.........அதிசியம்......

செவ்வாய் 15 2013

அரை ஆடை பக்கிரியின் எகத்தாளம்.........!!!



தீண்டாமை கொடுமைக்கு எதிராக சமபந்தி பற்றி அம்பேத்கர் பேசிய போது, அம்பபேத்கரின் அந்த  பேச்சுக்கு எதிராக.......

அரை ஆடை பக்கிரியானவர். “ உண்ணுவதில் சமமாக உட்கார்ந்து உண்ண வேண்டும் என்று ஆசைபடுபவர்கள்”, “மலம் கழிக்கும்போது சமமாக உட்கார ஆசைப்படுகிறார்களா” என்று எகத்தாளமாக கேட்டார்.


பீ  திண்ணும் பண்ணியோட உட்கார்ந்து சாப்பிடுவோம் ஒழிய தீண்டதகாதவர்களுடன் சமமாக உண்ணமாட்டோம் என்பதுதானே--அரை ஆடை பக்கிரியின் மண்டையோட்டுலிருந்து உதித்த மகா த்த்துவம்.

நன்றி!    தேவியர் இல்லம்

திங்கள் 14 2013

குரு தட்சனையாக வாயிலே கொள்ளிக் கட்டையை வைக்கலாம்.!!!

பள்ளிக்கூடத்துல பாடம் சொல்லிக் கொடுக்கிற வாத்தியாரு, படிக்கிற பிள்ளைகளுக்கு இப்படி சொல்லிக் கொடுத்தாரு.............

பிள்ளைகளா.....சரசுவதி பூஜையில நீங்க படிக்கிற புத்தகங்களையெல்லாம் வைத்து வழிபட்டால் நீங்கள் சிறந்த அறிவைப் பெறலாம்.

அதனால. சரசுவதி பூஜை அன்னிக்கு விளையாட போயி.மிஸ் பண்ணாம சரசுவதி பூஜையில கலந்து வழிபடுங்கள் என்றார்.

எது எதெல்லாம்  பார்த்ததையும் கேட்டதையும் கேள்வியா கேட்டு,
அவுங்க அப்பனையும் ஆத்தாளையும் துளைத்தெடுத்து ,அதனால, ஆத்தாளிடம் திட்டு வாங்கியும் சோர்ந்து போகாத பள்ளிக்கூடம்
 படிக்கும் பிள்ளைகள்.

ஆத்தாளுக்கும் அப்பனுக்கும் அடுத்த இடத்தில் இருக்கும் குருவான வாத்தியார் சொல்வதில் மட்டும் கேள்விக் கேட்காமல்..................
சரசுவதி பூஜையில் புத்தகத்தை வைத்து வழிபட்டால்,பள்ளி
கூடத்துக்கு செல்லும் போது புத்தக மூட்டையை சுமக்காமல்
தூக்கி எறிந்து விட்டு செல்லலாம்.

ஸ்கூல்பீஸ்,வேன்பீஸ்  போன்ற பீஸெல்லாம் கட்டாமல்
இருக்கலாம் பரிட்சையில் பாசாவதற்கு விநாயகரிடம்  தேங்கய்
உடைக்க வேண்டுவது இல்லாமல், பரிட்சை எழுதாமலே பாசாகலாம்,
சேட்டைகள் செய்தாலும்  ஆத்தாளிடமும் அப்பனிடமும் அடி
வாங்காமல் தப்பிக்கலாம்.

மற்றபடி வாத்திமாரிடம் லீவு லெட்டர் கொடுக்காமல் லீவு போ்ட்டுக்கலாம்.

இப்படியெல்லாம் நல்லதை கொடுக்கும் சரசுவதி பூஜையை வழிபடச் சொல்லும்  வாத்திமாரின் வாய்களிலே.... கொள்ளிக் கட்டையை  குரு தடசனையாக வைக்கலாம்.

ஞாயிறு 13 2013

ஒரே குட்டையில் காட்டும் பல வண்ண மட்டைகள்..



அவரு சொன்னாருப்பா..... அந்தப்பன்னியும்.இந்த எருமையும் ஒரே குட்டையில்   படுத்து புரண்டதுன்னு.......

அவரு, பன்னிக்கும் எருமைக்கும் சொன்னத தனக்காக மாற்றி கொண்டு கொண்டது. மஞ்சள் பத்தரிகை நடத்தி.அந்த பத்திரிகை பெயரிலே தொலைக் காட்சி சேவை செய்துவரும் அந்த டி்வி

மணம்.குணம்,காரம் அணைத்தையும் ஒரே குட்டையில் காட்டும் ஒரே டி்வி அந்த  டிவிதான்.

அவனவன் பாட்டுக்கும்,சிரிப்புக்கும், செய்திக்கும்.சினிமாவுக்கும் தனித்தனியாக நிறுவி, ஒவ்வொன்றும்,ஒவ்வொரு விதமா. சிறுசுலிருந்து பெரிசு வரை, (தாயின் கருவரையிலிருந்து வெளி வருவதற்கு முன்னமே ) மூளையின் அணைத்து பாகங்களையும் பூசனம் புடிக்கச் செய்யும் திருப்பணியை செய்துவரும் நிலையில்.

இந்த  டிவிக்காரன்மட்டும். ஒரே குட்டையில் அணைத்து விதமான மட்டைகளையும் காட்டி மூளையை பூசனம் புடிக்கச் செய்யும் பணியை செவ்வனே செய்கிறது.

இன்றைக்கு அந்த டிவியில் சரஜ்வதிபடத்தை போட்டு, அந்தக்காலத்தில் முன்னணி நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்த ஒரே படமன்னு  டைட்டில போட்டு தன் வரலாற்று ஆய்வை வெளிப்படுத்தி தன் தீரச்செயலை காட்டிக் கொண்டது.

 அவனவன் பல டி்வியில் செய்கின்ற காரியத்தை, ஒரே டிவியில் காட்டி செய்வதால் இப்படிபட்ட டிவிக்களை “ஒரே குட்டையில் காட்டும் பல வண்ணமட்டைகள்” என்று பெயர் வைக்கலாம்.


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...