பக்கங்கள்

சனி 18 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -17-

 வரலாறு அறிவோம். திராவிடம் பற்றி

ஒரு காலத்தில் உணவு விடுதிகளைப் பெரும்பாலும் பிராமணர்களே நடத்திவந்தனர். பிராமணர் அல்லாதார் உள்ளே சென்ற உட்கார்ந்து சாப்பிட முடியாது.

எடுப்புச் சாப்பாடுதான் வாங்கிச் சென்று வெளியே சாப்பிட வேண்டும்.

சென்னையில் அன்றைய மவுண்ட் ரோடிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில், ‘பஞ்சமர்களும், நாய்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது’ என்று விளம்பரப் பலகைகளை வைத்திருந்தனர்.

இரயில்வே உணவு விடுதிகளில் பிராமணாள், இதராள் என்று விளம்பரப் பலகை
வைக்கப்பட்டு இருந்தது. இது மட்டுமல்ல.

இருப்புப் பாதைகள் போடப்பட்டு, இரயில் பயணம் தொடங்கிய காலத்தில், நான்கு வகைப் பெட்டிகள் இருந்தன. அவற்றை நான்கு வருணத்தாரும் தனித்தனியாகப் பயன்படுத்தும்படியாக

உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இந்து மத வேதியக் கூட்டம் இரயில்வே நிர்வாகத்தைக் கேட்கும் அளவுக்குப் பேதங்கள் மோசமாக இருந்தன.

இயக்கத்தின் தொடக்கம்

இப்படிப்பட்ட சூழலில்தான் 1912-ல் டாக்டர் சி.நடேசனாரின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டது ‘மெட்ராஸ் யுனைடெட் லீக்’. அதுவே 1913 முதல் பிராமணர் அல்லாதாரைக் குறிக்க திராவிடர் சங்கம் என்று புதுப் பெயர் பெற்றது

பிராமணர் அல்லாதார் இயக்கமான திராவிட இயக்கம் தோன்றியதற்கு முக்கியக் காரணம், 

காங்கிரஸில் ஆதிக்கம் செலுத்திய பிராமண வழக்கறிஞர்கள்தான். அவர்கள் ஆதிக்கம் எங்கும் நிறைந்திருந்தது என்பதைத் தனது ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்னும் நூலில் பதிவுசெய்திருக்கிறார் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்திவந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி.

பிராமணர் அல்லாதோர் நிலை

அந்தக் காலகட்டத்தில் உத்தியோகத் துறையில் எங்கும் பிராமணர் ஆதிக்கம்; பிராமணர் அல்லாதாருக்கு முட்டுக்கட்டை என்ற நிலை இருந்தது. எடுத்துக்காட்டாக 1912-ல் சென்னை மாகாணத்தின் நிலை என்ன? துணை ஆட்சியர்களில் 55%, சார்பு நீதிபதி 82.5%, மாவட்ட முன்சீப்களில் 72.6% பிராமணர்கள். இந்தப் பதவிகளில் இந்து பிராமணர் அல்லாதார் முறையே 21.5%, 16.7%, 19.5%. 

கடப்பை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் உயர் பதவி வகித்த டி.கிருஷ்ணாராவ் (ஹுஸுர் செரஸ்தார் - மாவட்ட ஆட்சியர் பதவிக்கு நிகரானது) என்பவரின் உறவினர்கள் 116 பேர் அந்தத் துறையில் இருந்தனர். சென்னை சட்ட மன்றத்தில் 1914-ல் சட்ட மன்ற உறுப்பினர் குன்சிராமன் நாயர் எழுப்பிய வினாவுக்குக் கொடுக்கப்பட்ட பதில் என்ன? 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யப்பட்ட 650 பட்டதாரிகளில் பிராமணர்கள் 452 பேர், பிராமணர் அல்லாத இந்துக்கள் 12 பேர், பிற இனத்தவர் 74 பேர்!

கல்வி, வேலைவாய்ப்பு நிலைதான் இப்படி என்றால் சமுதாய நிலை என்ன?.

1916-ல் டி.எம்.நாயர், தியாகராயர் உள்ளிட்டோர் முன்னின்று தொடங்கிய தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், நீதிக் கட்சியாக அழைக்கப்பெற்றது. நீதிக் கட்சி திராவிடர் கழகம் ஆனது. திராவிடர் கழகத்திலிருந்து திமுகவும் அதிலிருந்து அதிமுகவும் உருவாயின. ஒட்டுமொத்தமாக இவற்றை
'திராவிடர் இயக்கம்’  என்று ஒரு பொதுச் சொல்லால் குறிப்பதாகக் கொண்டால், இழிவுகள் பலவற்றிலிருந்து இந்தத் திராவிடர் இயக்கமே நம் மக்களை மீட்டெடுத்தது.

திராவிடர் என்ற பெயர் மாற்றமே திராவிட இயக்கத்தின் சாதனை என்று சொல்லலாம். ஏனென்றால், 

1901-ல் எடுக்கப்பட்ட சென்னை மாகாணத்து மக்கள்தொகைக் கணக்கில் ‘பிராமணர்கள் 3.4%, சூத்திரர்கள் 94.3%’ என்று பிராமணர் அல்லாதாரை அரசாங்கமே சூத்திரர்கள் என்று குறிப்பிடும் இழிநிலைதான் அன்று இருந்தது. 

இந்த நிலையில்தான் பெரியார், ‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி!’ என்ற பெருமுழக்கத்தை வீதிகளில் எல்லாம் ஒலிக்கச் செய்தார். 

பின்னதாக, நீதிக் கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் அமைச்சரவை ‘சூத்திரன்’ என்ற இழி பட்டத்தைப் பதிவேடுகளிலிருந்து ஒழித்தது.

ஆட்சியில் பங்கேற்று நேரடி மாற்றங்களைக் கொண்டுவந்தது மட்டும் அல்லாமல், எல்லாத் தளங்களிலும் மாற்றுகளை உருவாக்க முற்பட்டது திராவிட இயக்கம்.

 டாக்டர் சி.நடேசன், பிராமணர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க சென்னையில் 1916-ல் உருவாக்கிய திராவிட சங்க விடுதியை (Dravidian Association Hostel) ஓர் உதாரணமாகச் சொல்லலாம். 

மாணவர் விடுதிகளில்கூடப் பாகுபாடுகள் நிறைந்திருந்த காலத்தில் மாற்றாகத் தொடங்கப்பட்ட மாணவர் விடுதி இது. பிற்காலத்தில் இந்திய நிதியமைச்சராக ஆகவிருந்த ஆர்.கே.சண்முகம், பாரிஸ்டர் ரங்கராமானுஜம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்களாக விளங்கிய டி.எம்.நாராயணசாமிப் பிள்ளை, எஸ்.ஜி.மணவாள ராமானுஜம் மற்றும் சடகோப முதலியார், பிற்காலத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக வந்த சுப்பிரமணிய நாடார் போன்றவர்களெல்லாம் இந்த விடுதியில் தங்கிப் படித்தவர்கள்தான்!

திராவிட இயக்கம் கொண்டுவந்த மாற்றங்கள்

திராவிட இயக்கம் கொண்டுவந்த மாற்றங்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. சுதந்திரத்துக்கு முன்பு சென்னை மாகாணத்தில் 1920-1937 காலகட்டத்தில் ஆட்சியிலிருந்து நீதிக் கட்சி ஆட்சி கொண்டுவந்த மாற்றங்கள்.

2. ஆட்சியிலிருந்து இறங்கிய நீதிக் கட்சியின் தலைவராக 1938-ல் பெரியார் பொறுப்பேற்று, பிறகு 1944-ல் திராவிடர் கழகமாக அதை உருமாற்றிய பின்னர், தேர்தல் அரசியலிலிருந்து விலகி, பொதுத் தளத்திலிருந்து மேற்கொண்டுவரும் மாற்றங்கள்.

3. 1967 முதலாகத் தமிழகத்தில் ஆட்சியில் இருந்துவரும் திமுக, அதிமுக இரு திராவிடக் கட்சிகள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த மாற்றங்கள்.

இவற்றில் தேர்தல் அரசியலில் பங்கேற்காமல், பொதுத் தளத்தில் நின்று அரசியல் கட்சிகளுக்கான சமூக நீதி அழுத்தங்களையும் கொடுத்துவரும் திராவிடர் கழகம் வெளியிலிருந்து உருவாக்கிவரும் மாற்றங்கள் என்றால், இரு திராவிடக் கட்சிகளின் ஐம்பதாண்டு ஆட்சிக் காலம் மட்டுமின்றி காமராஜரின் ஆட்சிக் காலகட்டத்தையும்கூடச் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். பிராமணியத்துக்குத் துணை போகும் காங்கிரஸை ஒழிப்பதே என் கடமை என்று கூறி காங்கிரஸிலிருந்து வெளியேறி வந்த பெரியார், காமராஜரின் ஆட்சிக்காக அதே காங்கிரஸைத் தன் தோளில் தூக்கிச் சுமந்தார் என்பதும் பெரியார் முன்மொழிந்த பல திட்டங்களையும் யோசனைகளையும் நிறைவேற்றியவர் காமராஜர் என்பதும் வரலாறு.

ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தைத் தந்தை பெரியார் தலைமை தாங்கி தடுத்து நிறுத்தியது முக்கியமான ஒன்று. எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், சமூக நீதி, தமிழ், தமிழர் நலன் என்பதே எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு திராவிடர் கழகத்தின் உயிர்மூச்சாக இருந்திருக்கிறது. அதேபோல, பொதுத் தளத்தில் அது உருவாக்கிய கருத்துருவாக்கம், கட்சிக்கு அப்பாற்பட்டு ஆட்சியாளர்களைச் செயல்பட வைத்திருக்கிறது. ஆகையால், திராவிடர் கழகம் பொதுத் தளத்தில் செய்த காரியங்களை இந்தச் சின்ன கட்டுரைக்குள் கொண்டுவருவது சாத்தியமற்றது என்பதால், முன்னதாக நீதிக் கட்சி வடிவிலும் பின்னதாக திராவிடக் கட்சிகளுக்குப் பின்னின்றும் செய்த மிக முக்கியமான மாற்றங்களை மட்டும் இங்கே தருகிறேன்.

நீதிக் கட்சி கொண்டுவந்த முக்கியமான 10 அரசாணைகள், சட்டங்கள்

■ நாட்டிலேயே முன்னோடியாகப் பெண்களுக்கு வாக்குரிமை (10.05.1921).

.■ பஞ்சமர் என்ற சொல் நீக்கி ஆதிதிராவிடர் என்றழைக்கும் அரசாணை (25.3.1922).

■ கல்லூரிகளில் எல்லாத் தரப்பு மாணவர்களையும் சேர்க்க குழுக்கள் அமைக்கும் அரசாணை (20.5.1922). கல்வி மறுக்கப்பட்ட பிராமணரல்லாத குழந்தைகளைத் தொடக்கப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கை (21.6.1923). புதிய பல்கலைக்கழகம் காண சட்டம் இயற்றப்பட்டது. பின்னாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக இது காரணமாயிற்று.

.தாழ்த்தப்பட்ட மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாகச் சேர்ப்பதற்கான நடவடிக்கை (24.9.1924).

.குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக் கட்டிவிட்டு, தேவரடியார் என்று முத்திரை குத்தும் முறைக்கு முடிவுகட்டும் சட்டம் (1.1.1925).

. கோயில்களில் கொள்ளையை முடிவுக்குக் கொண்டுவர இந்து சமய அறநிலையச் சட்டம் (27.01.1925).

.சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பிராமணரல்லாத மாணவர்களைச் சேர்ப்பதற்கான உத்தரவு (15.9.1928).

.எஸ்.முத்தையா முதலியாரின் முயற்சியால் முதல் இடஒதுக்கீட்டுச் சட்டம் (13.9.1928). வகுப்புவாரி ஒதுக்கீட்டுக்கான அரசாணை (27.2.1929).

சமூகமாற்றத்துக்கு அடித்தளமிட்ட கல்வி, சமூக நலத் திட்டங்கள்

கல்லூரி முதல்வர்கள் எல்லாம் பிராமணர்களாகவே
இருந்த நிலையில்,
பிராமணர் அல்லாத மாணவர் சேர்க்கைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டிருந்த காலகட்டம் அது;

பனகல் அரசர் என்ன செய்தார்?

ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக்குக் குழுக்கள் அமைக்க உத்தரவிட்டார்.

மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சம்ஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் எனும் நடைமுறையை நீக்கினார்.

ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த மருத்துவத் துறையை

இந்தியமயமாக்கிய பெருமையும் நீதிக் கட்சி முதலமைச்சர்
பனகல் அரசரையே சேரும்.

சென்னை மாநிலக் கல்லூரி சமஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கு மாதச் சம்பளம் ரூ.300,

தமிழ்ப் பேராசிரியர் கா.நமசிவாயனாருக்கு மாதச் சம்பளம் ரூ.81 என்றிருந்தது.

இந்த பேதம் நீக்கப்பட்டது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் படிப்பதற்குத்தான் வழி இருந்ததே தவிர, தமிழ் படிக்கக் கதவு அடைக்கப்பட்டது.

நீதிக் கட்சிப் பிரமுகர்கள் ஆர்.வெங்கடரத்தினம் நாயுடு, டி.என்.சிவஞானம் பிள்ளை, எஸ்.முத்தையா முதலியார், டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியார் போன்ற தலைவர்கள் போராடிப் போராடிதான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி கற்பிக்கப்படுவதற்கு வழிவகுத்தனர்.

பிட்டி. தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான்,  
1921ல் பள்ளிகளில்
இலவச நண்பகல் உணவு அளித்தார் 
இதற்காக
சென்னை மாநகராட்சிப் பணம் செலவழிப்பதை
நகராட்சி சட்டத்தைத் திருத்தி மாகாண அரசே ஏற்றுக்கொண்டது.

இதன் காரணமாகப் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

இன்னும் ஒரு குறிப்பிடத் தகுந்த தகவல் உண்டு.

இலவச இரவுப் பள்ளிகள் நடத்த முன்வந்தால், மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிலைப்பாடுதான் அது.

பகல் பொழுதில் பணியாற்றச் செல்வோர் இரவில் படிக்கும் ஒரு வாய்ப்புக்குத் கதவைத் திறந்துவிட்டவர் நீதிக் கட்சித் தலைவர் பிட்டி. தியாகராயர்தான்.

தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு அரசினர் கல்லூரி சம்ஸ்கிருதக் கல்வி நிலையமாக இருந்ததை மாற்றி, தமிழும் சொல்லிக்கொடுக்கப்பட ஆவன செய்தார் நீதிக் கட்சித் தலைவர் ஏ.டி.பன்னீர்செல்வம். பிராமண மாணவர்கள் மட்டும் பயன் கண்ட ராஜா மடம், ஒரத்தநாடு விடுதிகள் மற்றவருக்கும் திறந்துவிடப்பட்டன. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 10-ம் வகுப்புத் தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதேபோல, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் அரைச் சம்பளம் கட்டினால் போதும் என்று அறிவிக்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமையை நிலைநாட்ட ஆண்டுதோறும் அறிக்கைகள் வெளியிடப்பட உத்தரவிடப்பட்டது.

பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்காவிட்டால் பேருந்துகளின் உரிமம் ரத்துசெய்யப்படும் என்று ஆணையிட்டு, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஊரிலிருந்து பள்ளிகளை நோக்கிச் செல்ல வழிவகுத்தவர் நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன். 

தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்க்காத பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தப்படும் என்று ஆணையிட்டவர் முன்னோடிகளில் ஒருவரான சிவகங்கை எஸ்.இராமச்சந்திரன்.

தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதித் தனி அலுவலர்கள் நியமனம். தனி அலுவலர் என்பது ‘லேபர் கமிஷனர்’ என்று மாற்றம். இம்மக்களுக்கு 7 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் வழங்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என்னென்ன சாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி தொடங்கப்பட்டது. குறவர்கள் சீர்திருத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக 2,776 கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. வலையர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியோருக்காகக் கூட்டுறவுச் சங்கங்கள் தொடங்கப்பட்டன. மீனவர் நலன் காப்பதற்காக ‘லேபர் கமிஷன்’ நியமிக்கப்பட்டது. இதேபோல கள்ளர் சமுதாய முன்னேற்றத்துக்காகவும் ‘லேபர் கமிஷன்’ நியமிக்கப்பட்டது.

திராவிடக் கட்சிகள் முன்னெடுத்த பெரும் மாற்றத்துக்கான நகர்வுகள்

திமுகவின் முதல் முதல்வரான அறிஞர் அண்ணா மிக விரைவில் காலமாகிவிட்டதால், இரண்டாண்டுக்கும் குறைவாகவே ஆட்சியில் இருந்தார். எனினும், திராவிடக் கட்சிகள் செல்ல வேண்டிய திசையைச் சுட்டும் வகையில், நான்கு முக்கியமான முடிவுகளை அவர் முன்னெடுத்தார்.

1. சடங்குகள், தாலி மறுத்து நடைபெறும் சுயமரியாதைத் திருமணங்களுக்கும் சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம். 

2. சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம்.

3. தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை; தமிழ், ஆங்கிலம் மட்டுமே பயிற்றுமொழி என்ற இருமொழிக் கொள்கை முடிவு.

4. *அரசு அலுவலகங்களில் எந்த மதம் தொடர்பான கடவுள் படங்களும் உருவங்களும் இருக்கக் கூடாது என்ற ஆணை இதிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள் ஆர்எஸ்எஸ் பார்ப்பனர்களும் ஏன் திராவிடத்தை வெறுக்கிறார்கள் என்று காரணத்தை புரிந்திருப்பீர்கள் தமிழர்களே ஜாதி மத வேறுபாடின்றி தமிழர்களாக ஒன்றினைவோம் தமிழர்களாகவே வாழ்வோம்


புதன் 15 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -15-



 நாட்டிலே.....
 கரோனா நாடகம்
நடக்குது. ஏலே ....ஏலேங்
குயிலே..........

டாஸ்மாக் விற்பனை
ஆட்டம் போடுது
குயிலே.................

கட்.......... படிங்க மொதல்ல..

செவ்வாய் 14 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -14-


பீமா கொரேகான் வழக்கை முடிக்க மோடி அரசு செய்யும் மோசடிகள்அம்பலப்படுத்துகிறது அம்னெஸ்டி

 பீமா கொரேகான் : செயல்பாட்டாளர்கள் ...

மோடியின் பாசிச ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் போராடுபவர்களை கண்காணிப்பதும், பொய் வழக்குகள் போட்டு முடக்குவதும் தொடர்ந்து வருகிறது.

 

**

 

பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 செயற்பாட்டாளர்களுக்காக குரல் கொடுத்துவரும் வழக்கறிஞர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களின் கணினிகள் ஸ்பைவேர் எனப்படும் வேவு பார்க்கும் பொருளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததை அம்னெஸ்டி இண்டர்நேசனல் அமைப்பு கண்டறிந்துள்ளது.

 

கடந்த ஜூன் 15, 2020 அன்று அம்னெஸ்டி இண்டர்நேசனல் அமைப்புசிட்டிசன்ஸ் லேப் எனும் இணையச் செயற்பாட்டாளர் குழுவுடன் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிடுள்ளது. அதில் பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 11 சமூக ஆர்வலர்களுக்காக குரல்கொடுக்கும் வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் 9 பேரின் கணினிகள் வேவு பார்க்கப்படுவதை தமது ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

 

ஜனவரி 1, 2018 அன்று நடந்த பீமா கொரேகான் வன்முறைக்கு முந்தைய நாள் நடந்த எல்கர் பரிஷத் மாநாட்டை ஏற்பாடு செய்ததாகக் கூறி 5 சமூகச் செயற்பாட்டாளர்களை 2018-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் கைது செய்தது போலீசு. அதனைத் தொடர்ந்து அந்த வழக்கில் மேலும் 6 சமூகச் செயற்பாட்டாளர்களையும் இணைத்து அவர்களையும் அடுத்தடுத்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளது போலீசு.

 

கைது செய்யப்பட்ட 11 பேரில் ஒருவர் மட்டுமே எல்கர் பரிஷத்தோடு தொடர்புடையவர். மற்றவர்கள் தொடர்ச்சியாக மனித உரிமைப் பிரச்சினைகளுக்காகவும், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காகவும், தொழிற்சங்க உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தகுற்றத்திற்காகஇத்தகைய போலி வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தடைசெய்யப்பட்ட இந்திய பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)-யோடு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது போலீசு.

 

மேலும் பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்வதற்கு திட்டமிட்டதாகவும் அரசாங்கத்தை நிலைகுலையச் செய்யும் சதியில் பங்கெடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு ஆதரவாக போலி கடிதங்களையும் அவர்களது கணினிக்குள் வைத்து வழக்கை ஜோடித்தது போலீசு.

 

கைது செய்யப்பட்டவர்களின் கணினிகளின் வன்தகட்டின் (Hard Disk) நகலை புனே போலீசு நீதிமன்றத்துக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் கொடுத்தது. அதனை வாங்கி ஆய்வு செய்த கேரவன் பத்திரிகை, அந்த வன்தகட்டில்மால்வேர்என சொல்லப்படும் தகவல் திருட்டு மென்பொருட்கள் இருந்ததையும் அதன் மூலம் கோப்புகள் கையாளப்பட்டதையும் இந்த ஆய்வு அம்பலப்படுத்தியது.

 

இந்தமால்வேர்களை இயக்குபவர்கள், இதன் மூலம், தொலைவிலிருந்தே கணிணிக்குள் தங்களுக்குத் தேவையான ஆவணங்களை நுழைக்க முடியும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அவர்களது கணினியிலிருந்து கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படும் கடிதங்கள் இப்படித்தான் கணினிக்குள் கொண்டு வந்திருக்கப்பட வேண்டும் என கணினி பாதுகாப்பு வல்லுனர்களும் வழக்கறிஞர்களும் குறிப்பிடுகின்றனர்.

 

கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், வாட்சப் நிறுவனம், இஸ்ரேலின் மென்பொருள் நிறுவனமான என்.எஸ்.. உருவாக்கிய பெகாசஸ் என்னும் வேவுபார்க்கும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டு நூறுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் வாட்சப் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டதாகக் கூறி அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்தது. என்.எஸ். நிறுவனமோ, தாம் அரசாங்கங்களுக்கு மட்டும்தான் அத்தகைய வேவுபார்க்கும் தொழில்நுட்பங்களை வழங்குவதாகத் தெரிவித்தது.

அச்சமயத்தில் இந்தியாவில் பத்துக்கும் மேற்பட்டோர் அந்த பெகாசஸ்மால்வேர்செயலி மூலமாக கண்காணிக்கப்பட்டிருப்பதாக வாட்சப் நிறுவனம் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட நபர்களுக்குத் தொடர்பு கொண்டு தாம் பிரச்சினை குறித்து தெரிவித்துவிட்டதாகக் கூறியிருக்கிறது வாட்சப். அந்த வகையில் வாட்சப் தொடர்பு கொண்டவர்களுல் பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்த மூன்று செயற்பாட்டாளர்களும் அடங்குவர்.

 

இதன் தொடர்ச்சியாக, கைது செய்யப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும் சமூகச் செயற்பாட்டாளர்களும் வழக்கறிஞர்களும் கண்காணிக்கப்படலாம் என்ற சந்தேகத்தின் பெயரில், இவ்வழக்குகளுக்காக குரல் கொடுப்பவர்களின் கணிணிகளை அம்னெஸ்டி இண்டர்நேசனல் எனும் மனித உரிமைகள் அமைப்பும், சிட்டிசன்ஸ் லேப் என்ற இணையச் செயற்பாட்டாளர்கள் குழுவும் இணைந்து ஆய்வு செய்தன. இவர்கள் அனைவருக்குமே, கடந்த 2019 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மின்னஞ்சல்கள் மூலம் மால்வேர்கள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த மின்னஞ்சல்களில் இருக்கும் இணைப்பை அழுத்தினால் அது பின்னணியில், ‘நெட்வயர்எனும் வணிகரீதியான வேவுபார்க்கும் மென்பொருளை கணினியில் நிறுவும். அதன் மூலம் கணினி, கைப்பேசி ஆகிய அனைத்தையும் வேவுபார்க்க முடியும்.

 

வழக்கறிஞர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களுமான, நிகல்சிங் ரத்தோட், டிக்ரி ப்ரசாத் சௌகான், யக் மோஹித் சவுத்ரி, ராகினி அகுஜா, கல்வியாளரான பார்த்த சாரதி ரே, பத்திரிகையாளரான பி.கே.விஜயன், ஜக்லக் எனும் மனித உரிமைகள் அமைப்பின் வழக்கறிஞர்களான ஷாலினி கெராம், இஷா கந்தெல்வால் ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிகளுக்கும் ஜக்லக் அமைப்பின் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கும் மால்வேர் அனுப்பப்பட்டிருக்கிறது.

 

இந்த மின்னஞ்சல்கள் அனைத்தும் அச்சமயத்தில் முக்கியமாக பேசப்படும் விவகாரங்கள் குறித்து தலைப்பிடப்பட்டு அனுப்பப்பட்டிருக்கின்றன. அது குறித்த ஆர்வத்தில் செயல்பாட்டாளர்கள் இணைப்பை அழுத்தினால் அந்த மால்வேர் மறைமுகமாக தரவிறக்கப்பட்டு பின்னணியில் இருந்து செயல்பட ஆரம்பிக்கும். அனுப்பப்படும் மின்னஞ்சல்கள், கணினி செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்தையும் கண்காணிப்பதோடு, இந்த மால்வேரை அனுப்பியவர்கள் விரும்பும் கோப்புகளை கணினிக்குள் நுழைக்கவும் வழியேற்படுத்திக் கொடுக்கவல்லவை.

 

பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரின் மீதும் ஊபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளான பின்னரும்கூட 11 பேரும் பிணை வழங்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவரகள். இந்தியச் சிறைகளில் கொரோனா தொற்று பெருமளவில் பரவிக் கொண்டிருக்கையில் அதற்கு மத்தியிலும் இவர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றங்கள் மறுத்து வருகின்றன.

 

புனே போலீசுத்துறையின் வசம் இருந்த இந்த வழக்கை, அமித்ஷாவின் உள்துறைச் செயலகத்தின் கீழ் உள்ள தேசிய புலனாய்வு முகமை (NIA) கடந்த ஜனவரி 24, 2020 அன்று மராட்டிய அரசிடமிருந்து தன்னிச்சையாக எடுத்துக் கொண்டது. இந்த வழக்கை NIA கையிலெடுத்தவுடன் பீமா கொரேகான் வழக்கில் கலவரத்தைத் தூண்டிய வலதுசாரி கிரிமினல்களாகிய மிலிந்த் ஏக்பொடே மற்றும் சாம்பாஜி பீடே ஆகிய இருவரின் மீதான குற்றச்சாட்டுகளையும் புறக்கணித்தது.

 

தேசிய புலனாய்வு முகமைக்கு என ஒரு காவிப் பின்னணி இருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டிலிருந்தே ஆளும் பாஜகசங்க பரிவாரக் கும்பலுக்கு ஆதரவாக பல்வேறு வழக்குகளை நீர்த்துப் போகச் செய்தது. பல மாநில அரசுகளாலும் நடத்தப்பட்டு வந்த வழக்குகளை தன்னிச்சையாக கையெலெடுத்துக் கொண்டு, காவிக் கும்பலுக்கு ஆதரவான வகையில் வழக்கை திசை மாற்றிக் கொண்டு போவதே இதன் வாடிக்கையாக இருந்துவருகிறது. மராட்டிய தீவிரவாத எதிர்ப்புப் படைப்பிரிவினரால் வெற்றிகரமாக புலனாய்வு செய்யப்பட்ட மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யா சிங் விடுவிக்கப்பட்டது அதற்கு நல்ல உதாரணம். இந்த வழக்கில் குற்றவாளிக்குச் சாதகமாக நடந்து கொள்ளுமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் பேரம் பேசியது அச்சமயத்தில் வெளிவந்து என்..-வின் யோக்கியதை அம்பலமாகியது.

 

செயற்பாட்டாளர்களின் கணிணிக்குள் அந்த ஆவணங்கள் எப்படி சென்றன என்பதை கேரவன் பத்திரிகை நடத்திய ஆய்வு அம்பலப்படுத்தியிருக்கிறது. செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவாக உள்ளவர்களின் கணிணிகள் கண்காணிக்கப்படுவது அம்னெஸ்டி அமைப்பு நடத்திய ஆய்வில் அம்பலமாகியுள்ளது.

 

மோடியின் பாசிச ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் போராடுபவர்களை கண்காணிப்பதும், பொய் வழக்குகள் போட்டு முடக்குவதும் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில், சி... எதிர்ப்புப் போராளிகளை டில்லி போலீசு விரட்டி விரட்டி வேட்டையாடுவதில் இருந்தே புரிந்து கொள்ள முடியும்.

 

இவை எங்கோ யாருக்கோ நடக்கிற ஒன்று என ஒதுக்கியிருந்தால், இந்தக் கைதுகள் அனைத்தும் படுகொலைகளாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை. அன்று நமக்குக் குரல் கொடுக்கவென யாரும் இருக்கப் போவதில்லை !

 

- நந்தன்

- செய்தி ஆதாரம் : ஸ்க்ரால்

- நன்றி : வினவு




ஞாயிறு 12 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்”-13-


கூடவே அநீதியை எதிர்த்து போராடாத இனமும்
அழியட்டும்.. போராடும் இனத்தை அடக்குபவர்களும் அழியட்டும்...





ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...