பக்கங்கள்

சனி 14 2015

வெட்கம்..என்ன விலை...???


நன்றி! புதியஜனநாயகம்





பிள்ளை இல்லாதவர்கள்  அம்மனை வேண்டிக் கொண்டதால் தனக்கு பிள்ளை 
பிறந்தாக தொலைக்காட்சியில் பேட்டியில் ஒருவர் கூறினார்.. அது போல் மேல் கண்ட படத்தில் உள்ளவர்கள் யாகம், பூஜை, மண்சோறு, பால்குடம், தீச்சட்டி, வேல் குத்துதல்,பறவை காவடி எடுத்ததினால் ஒரு ரூபா சம்பளத்தில்  66கோடியே 65 இலட்சம். சம்பதித்தவர்கள் அநீதி மன்றத்திலிருந்து விடுதலை ஆகி மீண்டும் தமிழகத்தில் முதல்வராக ஆகலாம். இதுவும்  தெய்வீக நிகழ்வாக அவதாரமாக மாறலாம். மாற்றப்படலாம்

வெள்ளி 13 2015

பேசுவதற்கு ஒன்றுமில்லை, பத்து நிமிட அவகாசம் தருகிறோம்.!!!

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
போலீசு, நீதிமன்றம், அதிகார வர்க்கம் என எல்லாமே மக்களுக்கு எதிரானவையாக மாறிப்போன இந்தச் சூழலில் அரசை எதிர்க்காமல் பூரணமதுவிலக்கு எப்படி சாத்தியம்?

பிப்ரவரி 15ம்நாள் ஏழு கிராம மக்களும் ஒன்றாக திரண்டனர். அந்தந்த கிராம மக்களுக்கு முறையான பேருந்து வசதி இல்லாத போதும் 5.கி.மீ தூரம் நடந்தே வந்து சேர்ந்தனர்.

இவர்களுடன் பள்ளி மாணவர்களும்,பெண்களும் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்திருந்தனர். பெண்களையும் பள்ளி மாணவர்களையும் கண்டவுடன் குடிப்பதற்க்காக வந்திருந்த குடிமகன்கள்.. வெட்கி தலை குனிந்து.. திரண்டு இருந்த பெண்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் அரணாக நின்றனர்.

பறை முழக்கத்தை.தொடர்ந்து கண்டன முழக்கங்கள் வெடிக்க அவ்விடம் போர்க் கோலமானது.

“எப்பவும் போலவே....வழக்கமாக  தொண்டை தண்ணி வத்த கத்திவிட்டு போயிடுவானுக”  என்று எப்பவும் போலவே   ஏளனமாக வேடிக்கை பார்த்தபடி நின்றனர் பிரம்ம தேசத்தின் போலீசார்.

திரளான மக்களின் ஆராவாரத்துக்கு மத்தியில் பேசினார்கள் பு.முா.இ..மு.வின் மாநில செயற்குழு உறுப்பினர்களான தோழர்கள் ராஜாவும்.....சாரதியும்...

“பேசுவதற்கு ஒன்றுமில்லை, பத்து நிமிடம் அவகாசம் தருகிறோம்.”“ கடையை இழுத்து மூடுங்கள். முடியாதென்றால் விலகிக் கொள்ளுங்கள்” என்று வந்திருந்த  போலீசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

“பள்ளிகள்- கல்லுாரிகள், குடியிருப்புப் பகுதிகளில் டாஸ்மாக கடையை வைக்கக்கூடாது” என்று விதி இருந்தும் அதனை அப்பட்டமாக மீறுகிறது  சாராயம் விற்கும் தமிழக அரசு.

தான் சொல்லும் சட்டத்தை தானே காலில் போட்டு மிதிப்பதோடு மட்டுமின்றி, “சட்டப்படி நட, சாராயக்கடையை மூடு“ என்று நியாயமான முறையில் போராடும் மக்களின் மண்டையை பிளப்பதோடு, பொய்வழக்கு போட்டு வைக்கிறது. பின்  மக்களின் நண்பன்  என்று சொல்லிக் கொள்ளும் அந்த போலீசின் துணையோடு மீண்டும் சாராயக் கடையை திறக்கிறது தமிழக மக்களின் முதல்வரின் அரசு.


பத்து நிமிட அவகாசம் முடிந்தது. போலீசும் மாவட்ட நிர்வாகமும் கடையை மூடுவதாக இல்லை. களமிறங்கினார்கள் ஏழு கிராம மக்கள். சாராய பாட்டில்கள் வீதியில் விழுந்து நொறுங்கியது. சாராயக்கடை அடித்து நொறுக்கப்பட்டது. சாராயக் கடையின் கதவை மக்களே இழுத்து பூட்டி வெற்றி முழக்கமிட்டனர்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
படங்கள்- வினவு


சிதறிய கண்ணாடித் துண்டு காலில் பட்டு இரத்தம் கசிந்த நிலையிலும், கடையை நோக்கி கல்லெறிந்த சிறுவர்களின் போர்க்கோலத்தைக் கண்டு போலீசே விலகி நிற்கத்தான் வேண்டியிருந்தது.

நன்றி.-- வினவு.- புதியஜனநாயகம் மார்ச்2015இதழ்



வியாழன் 12 2015

புழுதி வாரி தூற்றியவர்களுக்கு...........!!!!!!!!!!

படம்-மாபெரும் ஜனநாயகவாதி தோழர் ஸ்டாலின்
எதற்காக எல்லோரும் ஸ்டாலினை "சர்வாதிகாரி" என்று சொல்கிறார்கள்? ஸ்டாலின் கால சோவியத் ஒன்றியத்தில், மாஸ்கோ மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப் பட்ட உண்மைக் கதை இது:

ஸ்டாலினின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஒருவர், பொது மக்களின் பணத்தை சுருட்டி வந்தார். அந்தப் பணத்தில், மாஸ்கோ நகருக்கு வெளியே ஆடம்பரமான பங்களா வீடொன்றை கட்டி வந்தார். வீடு கட்டி முடிந்ததும், ஸ்டாலின் அவரைத் தனது அலுவலகத்திற்கு அழைத்துப் பேசினார்.

"அமைச்சரே! உங்களுக்கு பிள்ளைகள் என்றால் விருப்பமா?"


"ஆமாம், எனக்குப் பிள்ளைகள் மீது கொள்ளைப் பிரியம் உள்ளது." என்றார் அமைச்சர் ஆர்வத்துடன்.

"நல்லது. அப்படி என்றால் நீங்கள் புதிதாக கட்டிய அந்தப் பெரிய வீட்டை, சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு தானமாக கொடுத்து விடுங்களேன்?" என்றார் ஸ்டாலின் அமைதியாக.

(நன்றி: The Red Executive, by David Granick (1960)) 

 தகவல்..Kalaiyarasan Tha

புதன் 11 2015

உலகிலேயே தீண்டாமையை பாதுகாக்கும அரசு....

படம்-www.vinavu.com

இந்திய ஜனநாயகம் வெள்ளைக்காரன் கொடுத்த ஜனநாயகம், சுதந்திரத்திற்க்காக, ஜனநாயகத்திற்க்காக இந்திய மக்கள் போராடியதால் பெற்ற சுதந்திரமில்லை. ஆங்கிலேய ஆட்சியாளர்களால் காங்கிரசு முதல் ஜஸ்டிஸ் கட்சியினர் வரை பதவிகளை உருவாக்கி கொடுத்தது.

தமிழ்  சமூகம் சாதி ஆதிக்கமும், நிலவுடமை ஆதிக்கமும் கொண்டது. இந்த இரண்டு அமைப்பும் ஜனநாயகத்திற்கு விரோதமானது. உலகிலேய பெரிய ஜனநாயகம் என்று பீத்திக் கொள்ளும் இந்த நாட்டில்தான்  அரசே தீண்டாமையை   பாதுகாக்கும் அரசாக இருக்கிறது. இருந்து வருகிறது.












ஐரோப்பியரால் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்பட்ட ஆப்பிரிக்க வரலாறு

நிசிங்கா : அங்கோலாவின் அரசி பற்றிய சரித்திரப் படம்



அங்கோலாவின் கடைசி அரசியான நிசிங்காவின் வரலாற்றைக் கூறும் திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்காவிலும் நாகரிகமடைந்த நாடுகளும், அங்கே மன்னராட்சிகளும் இருந்துள்ளன. ஐரோப்பிய காலனியாதிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக பெரும் போர்கள் நடந்துள்ளன. ஐரோப்பியரால் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்பட்ட ஆப்பிரிக்க வரலாறு, தற்போது மெல்ல மெல்ல வெளிவருகின்றது.

17 ம் நூற்றாண்டில் அங்கோலாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்த போர்த்துக்கேயர்கள், அங்கிருந்த மன்னன் நின்கோலா வின் பெயரே, அந்த நாட்டின் பெயர் என்று தவறாக நினைத்துக் கொண்டார்கள். அதனால், முபுண்டு மொழி பேசும் மக்கள் வாழ்ந்த இராச்சியத்தின் பெயர், அன்றிலிருந்து அங்கோலா என்று அழைக்கப் படலாயிற்று.

1583 ம் ஆண்டு, கிளுவாஞ்சி மன்னருக்கு மகளாக பிறந்த நிசிங்கா, வருங்காலத்தில் இராணியாக வருவாள் என்பதை, ஒரு அப்போதே ஒரு பெண் சோதிடர் அறிவித்திருந்தார். கிளுவாஞ்சி மன்னர், போருக்கு செல்லும் போதெல்லாம், இளவரசி நிசிங்காவை தன்னோடு அழைத்துச் செல்வார்.

அங்கோலா மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி ஒன்றை கைப்பற்றிய போர்த்துக்கேயர்கள், அங்கே கோட்டை கட்டி, மன்னருக்கு கீழ்ப்படிவான குடிமக்களையும் பிடித்து வைத்திருந்தனர். அப்போது நடந்த போரின் முடிவில், அங்கோலா மன்னருக்கும், போர்த்துகேய ஆளுநருக்கும் இடையில் ஒரு சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது.

போர்த்துக்கேயருடனான சமாதான ஒப்பந்தத்தில் இளவரசி நிசிங்கா கையொப்பம் இட்டிருந்தார். சமாதானத்தை நிலைநிறுத்துவதற்காக, கத்தோலிக்க கிறிஸ்தவராக மதம் மாறி ஞானஸ்நானம் எடுத்து, Dona Anna de Sousa எனும் போர்த்துகேய பெயரை சூட்டிக் கொண்டார். ஆயினும், போர்த்துகேய காலனியாதிக்கவாதிகள் ஒப்பந்தத்தை மீறியதுடன், மீண்டும் போருக்குள் இழுத்து விட்டனர். பல வருடங்களாக தொடர்ந்த போரில், நிசிங்காவின் சகோதர்கள் கொல்லப் பட்டனர். இறுதியாக, மீண்டும் ஒரு சமாதான ஒப்பந்தம் போடப் பட்டது.

இதற்கிடையில், அங்கோலாவின் இன்றைய தலைநகர் லுவாண்டா உட்பட பல கரையோர பிரதேசங்கள், போர்த்துகேயரின் கட்டுப்பாட்டில் வந்து விட்டிருந்தன. ஏனைய உள்நாட்டுப் பிரதேசங்களில், நிசிங்கா தனது இராசதானியை கட்டியெழுப்ப விரும்பினார். ஆயினும், நீண்ட காலமாக நீடித்த போர் ஏற்படுத்திய அழிவுகள், விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, பழைய நிலைமைக்கு திரும்ப முடியவில்லை.

நிசிங்கா தனது 80 வது வயதில், 17 டிசம்பர் 1663, மதங்கா எனுமிடத்தில் காலமானார். அவரது மறைவுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் காலனிய ஆட்சியதிகாரம் விரிவடைந்தது. பல்லாயிரக் கணக்கான அங்கோலா குடிமக்கள், அடிமைகளாக ஏற்றுமதி செய்யப் பட்டார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அங்கோலா முழுவதும் போர்த்துகேயரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

அங்கோலா இராணி நிசிங்காவின் வரலாறு முழுவதும் ஏற்கனவே எழுத்தில் ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. தற்போது அது சினிமாப் படமாக தயாரிக்கப் பட்டுள்ளது. போர்த்துக்கேய மொழி பேசும் இந்தத் திரைப்படம், உலகம் முழுவதும் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது


நன்றி!    கலையகம்

ஞாயிறு 08 2015

அய்யா.... அவன் ஒரு...........

படம்-tamil.oneindia.com2

அவன் எனக்கு வணக்கம்
சொல்வதும் இடக்கைதான்
 மற்றவர்களுடன் கை
குலுக்குவதும் இடக்கைதான்.
கூட்டத்தைக் கண்டு
கை ஆட்டுவதும் இடக்கைதான்.
அமர்திருக்கும்போது கன்னத்தை
 தடவுவதும் இடக்கைதான்
பொருள்களை கொடுப்பதும்
வாங்குவதும் இடக்கைதான்
 மலம் கழித்த இடத்தை
கழுவதும் இடக்கைதான்
எல்லாச் செயல்களுக்கும்
அவன் பயன் படுத்துவது
 இடக்கை என்பதால்
அவனை நாங்கள்
லெப்ட்டன் என்று அழைக்கிறோம்

ஏனோ.. தாங்கள் சொல்வது
போல் உண்ணுவதற்கு  இடக்
கையை பயன் படுத்தாமல்
இருந்தாலும் அவன்
இடக்கைதான்..ஆகையால்
அய்யா  .....அவன் ஒரு
லெப்ட்டதான்.......................

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...