பக்கங்கள்

சனி 24 2015

காற்று வாங்கப்போனேன்.... ஒரு புலம்பல் கேட்டு வந்தேன்.

படம்-




தமிழ் நாட்டின்
புர்ச்சி நடிகனே!
தமிழ் நாட்டு
சிம்மா சனத்தில்
அமர்ந்து கோலோச்சி
செத்துப் போனவனே!!

நீ அமர்ந்து
இருந்த சிம்மா
சனத்தில்  ஒனக்கு
பொறவு  அதில்
அமர கன்னடத்து
பைங்கிளி ஆன
மோர்க் காரியை
உட்கார  வைத்து
பிறவு செத்து
இருந்தால் தமிழ்
நாட்டு குடிமக்கள்
அனைவருக்கும்
 இலவசமாக மோராவது
 கிடைத்து இருக்கும்  .


செத்தும் கெடுத்த
மலையாளத்து மேனனே
அந்த மோர்க்
காரிக்கு பதிலாக
அதே ஊரின்
சரக்கு விக்கிற
பீர் காரியை
உட்கார வைத்து
விட்டு சென்றாயே
பாவி .......மனுசரே..

சரக்கு விக்கிற
பீர் காரியிடம்
வம்பாடு  பட்டு
உழைத்த காசெல்லாம்
தினசரி கொடுத்தும்
வேல  இல்லா
நாளில் கடனுக்கு
கூட  ..பீர்
கிடைக்காமல்  செய்து
விட்டாயே அய்யா.
புர்ச்சி தலீவனே..
படம்-www.mayyam.com


வெள்ளி 23 2015

ரோஜா மலரும்....முல்லை மலரும்,,,,,,



பார்த்தேன்
 கேட்டேன் 
பாடிப் பார்த்தேன்.

பாருங்கள் 
கேளுங்கள்
பாடிப் பாருங்கள்

பழைய பாடல்களை கேட்க தூண்டிய
நண்பர் கில்லர்ஜீயின்
ஆடியோ கேஸட்க்கு நன்றி!




1.ரோஜா ...மலரே..ராஜகுமாரி



2. முல்லை மலர்.மேலே...

வியாழன் 22 2015

தமிழ்நாட்டு ரேசன் அரிசி..கேரளாவுக்கு கடத்தும் ரகசியம்...



படம்-cinema.maalaimalar.com
ஏன்டா....ப்பா...வர்ரேயிலேயே வயித்த புடுச்சுகிட்டு வர்ர.... என்ன ஆச்சு ஒனக்கு ” என்று  செல்லக்கன்னுவைப் பார்த்துக்கேட்டார் அய்யாவு.....

அது ஒன்னுமில்லண்ணே...வீட்டுல... ரைஸ்மில்லுல வாங்கீன அரிசியை  சோறாக்கி போட்டா..”   அந்த அரிசி மொச்சக் கொட்ட மாதிரி இருந்துச்சு,,.,அத சாப்பிட்டதிலிருந்து வயித்த வலிக்குதுண்ணே என்றார் .

ரைஸ்மில்லிலா..... ரேசன் அரிசியி திட்டி ..நல்ல அரிசின்னு வித்திருப்பான்... ஓம் பொண்டாட்டிககு அது  தெரியாம ... வாங்கி போட்டுருப்பா..... இந்தா...இந்த சோடாவைக் குடி என்று கடையிலிருந்து  மாப்பிள்ளை சோடாவை வாங்கி நீட்டினார் அய்யாவு...

ஏண்ணே...ரேசன் அரிசிக்கு மட்டும் இப்படி வயித்த வலி வருதுன்னு கெட்டார் செல்லக்கன்னு....

அடேய்....தமிழ்நாட்டுக்காரன்.. சோறு சாப்பிட்டா..... சோறு..பூ...பூ..வாக இருக்கனும் விரும்புவான்...  அதற்கு கர்நாடக பொன்னி அரிசிய சாப்பிட்டு பழக்கப்பட்டு போயிட்டான்... அதற்க்காக அங்கிருந்து வாங்கி சாப்புடுறான்.

கேரளாக்காரனுக்கு சோறு மொக்கை மொக்கையா பருக்கையா இருக்கனும் விரும்புவான்.. அதற்க்காக தமிழ்நாட்டு ரேசன் அரிசியை சாப்பிட்டு பழக்க மாயிட்டான்......


அய்யாவு பேசி முடிக்கிறதுக்குள்ள.... செல்லக்கண்ணு சொன்னார்.   சோத்து பருக்கை மொக்கையாக இருக்கிறது என்பதற்க்காகத்தான்  தமிழ்நாட்டு ரேசன் அரிசி கேரளாவுக்கு  கடத்தப்படுகிறதா.... ண்ணே.....???


பரவாயில்லையே   ..அந்த ரகசியத்தை கண்டுபிடிச்சிட்டேயடா.... ஆச்சரியமாய்  கேட்டார்   அய்யாவு அண்ணன்....

புதன் 21 2015

இது விளம்பரம் அல்ல....!!!!

படம்-www.dinamani.com


இலவசமாக வரன்
பதிவு செய்யுங்கள்

முப்பதே ரூபாயில்
பொருத்தமான வரன்களை
தேர்வு செய்யுங்கள்

 வரன்களை  உடனடியாக
முடிவு செய்யுங்கள்

போட்டோ கொடுத்தவர்களுக்கு
மட்டுமே திருமணங்கள்
நிச்சயிக்கப் படுகின்றன..




செவ்வாய் 20 2015

தெய்வம் இல்லாத கோயில்....

படம்-தமிழச்சி --



படிக்காத  தாய்
தன் மகனை
படிக்க வைத்தார்.

படிக்க பள்ளி
சென்று வந்த
மகனோ ஒரு
நாள் வந்து

அம்மா கடவுள்
என்னை காப்பார்
என்று சொன்னது
தப்பு அம்மா..

கடவுள் என்று
ஒன்று  இல்லையாம்
அம்மா..  என்னை
காப்பது நீதான்
அம்மா.. எனக்கு
நீதான் தெய்வம்
அம்மா.. என்றான் ......

தன் மகனின்
அறிவை கண்டு
மகிழ்ந்த அந்தத்
தாய்  தன்
மகனுக்கு தெய்வமாக
திகழ்ந்தார்  ஒரு
கட்டத்தில்  அந்தத்
தாய் மறைந்தார்.


அந்தத் தாய்
வாழ்ந்த வீடு
இன்று தெய்வம்
இல்லாத கோயிலாக
காட்சி அளிக்கிறது.
அந்த மகனுக்கு....

திங்கள் 19 2015

இவர்கள் ஏமாறுவதும் .... அவர்கள் ஏமாற்றுவதும்...ஏனோ.???

படம்-www.lksri.com


1) .உசிலம்பட்டியைச் சேர்ந்த மதிவாணனும் அவரது மனைவி ஷிலா மற்றும் 5 பேர்கள் , மதுரை ஆலங்குளத்தை சேர்ந்தவர் சுரேஷ் குமாரை. அனுகி ஆஈஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 3 லட்சத்து 20 ஆயிரத்தை பெற்றனர்.

ஆனால் சொன்னபடி அவருக்கு ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தரவில்லை.. கொடுத்த பணத்தை கேடடபோது  கொலை மிரட்டல்தான் கிடைத்தது.

2) மதுரை கொட்டாம்பட்டி அருகே வயிரவன்பட்டியைச் சேர்ந்தவர் மாயழகன் இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா, ரமேஷ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சேர்ந்து 

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக..ஆசை காட்டி1 லட்சத்து 37 ஆயிரத்தை பெற்றனர். இவர்களும் சொன்னபடி மாயழகனுக்கு சிங்கப்பூரீல் வேலை வாங்கித் தரவில்லை.. வேலைக்காக கொடுத்த பணத்தையும் கொடுக்க வில்லை...

3)  வாடிபட்டி பக்கத்தில் உள்ள கச்சிராயிருப்பை சேர்ந்தவர் பாரத்.. இவரை கூடல் புதூர்க்கு  அருகிலுள்ள அதலையைச் சேர்ந்தவர் ஆண்டிவேலன்.சந்தித்து உனக்கு இந்து அறநிலையத் துறையில் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறினார்.

இதனை நம்பிய பாரத் இரண்டு தவனையாக 60 ஆயிரத்தை தந்தார். பணத்தை வாங்கிய ஆண்டி வேலன் இதுவரை  பாரத்துக்கு வேலை வாங்கித் தரவில்லை.. தந்த பணத்தையும் தரவில்லை...

ஆக..இப்படியாக சின்னத்திரை தொலைக்காட்சியின் தொடராக போய் கொண்டு இருக்கிறது..

இதில் இவர்களை ஏமாற்ற சொன்னதும் .. அவர்களை ஏமாறச் செய்ததும் எதுவோ..???




ஞாயிறு 18 2015

அது உண்மையா....???? எது உண்மை..!!!

Image result for காதல் பாசம்
படம்-ta.wiktionary.org

காதல் பாசம்
இருந்து இருந்தால்
தாய் பாசம்
இழந்த போது
ஏற்படும் துக்கமும்
சோகமும் குறைந்து
இருக்குமாம்....

--- ஒரு அறிஞர் சொன்னது...
                  .....................................


தாயை இழந்தவன்
சிந்தையை இழந்தான்
                                            ..ஒரு குடி மகன் அனுபவமாம்.


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...