பக்கங்கள்

சனி 29 2016

பறவைகளுக்கு மனிதன் சொன்ன கதை..







ஒரு பக்கம் காக்கைளும் மறுபக்கம் குருவிகளும்  தங்களைவிட ஓரறிவு பெற்றவர்களால் தாங்கள் படும நிலைமைகளை  சொல்லி   தங்களுக்கு தொந்திரவு கொடுக்காத தங்களுக்கு பழக்கமான தாங்கள் வசிக்கும் இடத்துக்கு வீட்டுக்கு சொந்தக்காரனான அந்த மனிதனிடம் கரைந்தன கத்தின  கூப்பாடு போட்டன...

அவைகளின் கூப்பாடுகளை கேட்ட அந்த மனிதன்..உங்களை புரிந்தவர்களால் மட்டுமே அவர்களால் உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை.. மனிதர்களில் ஒரு பிரிவையை ஒதுக்கி கொன்று ரத்தம் குடிக்கும் காட்டேறி மனிதர்களால் உங்களை புரிந்து கொள்ளமுடியாது. அவர்களால் எந்த வகையிலும் உங்களுக்கு நண்மையே கிடையாது... இன்று ஒரு நாள் அல்லது நாளை ஒரு நாள் உங்களுக்கு ஏற்பட்ட இந்த இன்னல் முடிந்துவிடும் அதுவரையில் தாங்கள் அந்தக் கொடியவர்களால் ஏற்படும் இன்னல்களை தாங்கிக் கொள்வதைவிட இப்போதைக்கு வேறு வழியில்லை  என்று சொல்லி அவர்களுக்கு ஏற்படும் ஒலி இன்னல்கள் ஏற்பட்ட கதை என்ன என்பதை சுருக்கமாக சொன்னான். அந்த மனிதன்.

விஸ்னு என்ற பெயர் கொண்டவனாம் பூமியை பாயாய் சுருட்டும் சக்தி உள்ளவனாம்....நிணைத்த மாத்திரத்தில் பல்வேறு உருவம் எடுப்பவனாம்.

கரைந்த ,கத்திய காக்கைகளும், குருவிகளும் தங்கள் இன்னல்களை மறந்து ஒரு கணம் சிரித்தன.... என்ன சிரிக்கறீங்க...

அப்படித்தான் அந்த கெடுகெட்ட கயவர்கள்.  இல்லாததையும் பொல்லாததையும் எழுதி பரப்பி விட்டு உண்மை, வரலாறு என்று அடித்து சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்..  

அந்த விஸ்ணு என்பவன் நரகாசுரன் என்பவரை சண்டையில் வென்று கொன்று வெற்றி வாகை சூடியதால்.  தலைக்கு முழுகி,  புத்தாடை அணிந்து வெடி வெடித்து கொண்டாடுகிறார்கள். இந்த வெடி வெடிக்கிறதுக்கு பேரு தீபாவளியாம்... வெடி வெடிப்பதால் உங்களுக்கு வலியாக இருப்பது.. அவர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது.

வென்றவனின் கூட்டத்தோடு தோற்றவனின் கூட்டமும் சேர்ந்து  தன்மானம் இழந்து சுயமரியாதை கெட்டு கொண்டாடாடுவதால்தான் உங்களுக்கு ஏற்படுகிறது பெரும் பிரச்சனை.

தோற்றவனின் வம்ச வழியினர்களின் பெரும்  பகுதி தெரிந்தோ தெரியாமலோ கருப்பு ஆடுகளாக மாறிவிட்டனர். இந்த கருப்பு ஆடுகளும் ஒருநாள் வென்றவர்களால் வெட்டப்படும் என்பது அந்த கருப்பு ஆடுகளுக்கு தெரிந்தும்...பச்சோந்தி கூட்டமாக துரோக கூட்டமாக மாறிவிட்டது.

உங்களின் நரகாசுரன் வாழ்ந்த நாட்டை வெடி என்னும் கரும்புகையால் மாசு படுத்துகிறார்கள். உங்களை ..அதிர்ந்து  படபடத்து போகுமளவுக்கு வெடி வெடித்து கதற வைக்கிறார்கள்... நரகாசுரனின் உண்மையான வாரிசுகள் ஒருநாள் இதற்கு முடிவு கட்டுவார்கள்.. அப்போது உங்கள் சந்திதிகள் எந்த தொந்தரவும் இல்லாமல் காலத்தை கடப்பார்கள்.

உங்களுக்கு ஏற்ப்படுகின்ற  தொந்தரவுகள் யாரால். எவரால் உண்டாக்கப்படுகின்றன என்று உங்கள் சந்நதியினர்களுக்கு சொல்லி வையுங்கள்..அவர்களை அடையாளம் காட்டுிவிட்டுச் செல்லுங்கள்...... என்று மனிதன் சொல்லி முடிக்கும்வரை அமைதியாக மனிதனை பார்த்துக் கொண்டியிருந்த அந்தப் பறவைகள்   தொடர்ச்சியாக வெடிச் சத்தம் . கேட்டதால் எல்லாம் பற்ந்து அந்த மனிதனின் வீட்டுக்குள புகுந்து தங்கள் வீடுகளில் ஓடி ஒளிந்தன.


வெள்ளி 28 2016

தீபாவளியை துறக்கச் செய்த தாய்.........







நாற்பது வருடங்களுக்கு முன் நடந்தது. அப்போது..எனக்கு பதிணைந்தோ,பதினாரோ வயது இருக்கும். என்வீடு பனை ஓலையால் வேயப்பட்ட கூரைவீடு.. மழை பெய்தால்  வீட்டினுள் ஒதுங்குவதற்குகூட  இடமிருக்காது. அந்தளவுக்கு ஒட்டை ஒடிசலும் நிறைந்த வீடு . அந்த வீட்டை திரும்பவும் வேயமுடியாமல் அல்லல்பட்ட நேரம். அப்படிபட்ட நேரத்தில் வந்தது தீபாவளி..

திருமணம் முடித்து சென்ற என் ஒரே அக்காவுக்கு தலை தீபாவளி என்று சொல்லப்படுகின்ற முதல் தீபாவளி. அந்த சமயங்களில்  என் அம்மா மட்டுமே வருமானம் ஈட்டும் உழைப்பாளி.. வருகிற பணத்தில் நானும் என் அம்மாவும் வாழ்நாட்களை கடத்திக் கொண்டு இருக்கின்ற நேரத்தில் வந்தது தீபாவளி.

என் அக்காவும் மச்சானும் தலை தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன்னரே என் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். என் அம்மா தீபாவளிக்கு கையில் காசு இல்லாத குறையை நிணைத்து கவலைப்பட்டாலும் அந்தக் கவலையை எனக்கு முன்னால் காட்டாமல.. தெரிந்தவர்களிடம் கடன் கேட்டு பார்த்தார்கள் கடன் எதுவும் கிடைக்கவில்லை.

சோர்ந்து போயிருந்த நேரத்தில் என் அம்மா வீட்டு வேலை பார்க்கும் முதலாளி அம்மா வீட்டிலிருந்து என் அம்மாவுக்கு இரண்டு சேலைகள் கொடுத்தார்கள். ஒருமாத சம்பளத்தை இனாமாக கொடுத்தார்கள்..

மகிழ்ந்து போன என் அம்மா... தனக்கு கிடைத்த சேலையை என் அக்காவுக்கும், கிடைத்த பணத்ததில் என் மச்சானுக்கு வேட்டி சட்டையும் எடுத்துக் கொடுத்து பெண்ணை பெற்றெடுத்த இல்லாத வீடுகளில் தொன்று தொட்டு விடாது துரத்தி  வந்த தலைத் தீபாவளி பழக்கத்தை ஒரு வழியாக நிறைவேற்றி முடித்தார்கள்.

நான் தீபாவளிக்காக புதுத்துணிகள் கேட்காமால இருந்த போதிலும். என் அம்மா. என்னிடம். உன் அப்பா இறந்த நாள்டா.. அதனால் நீ தீபாவளியை கொண்டாடக் கூடாது. புதுத் துணி அணியக்கூடாது  என்றார்கள்..

அம்மாவிடம் இருக்கும் பயத்தில் சுருதி குறைந்த குரலில் ,“ அக்கா் மட்டும் புதுத்துணி அணியலாமா என்று கேட்டபோது சொன்னார்கள். அக்கா அடுத்தவர் வீட்டுக்கு வாக்கப்பட்டுபோன பொண்ணு, அவர்கள் நம்ம வீட்டு துக்கத்தில் பங்கெடுப்பார்களா..? என்று பதிலும் கேள்வியுமாக கேட்டபோது.. புரியாமல்  சரிம்மா... தங்கள் சித்தம்மா என்று விட்டு,  முகம்மறியா என் அப்பாவின் இறந்த நாளுக்காக தீபாவளியை புறக்கணிக்க என் அம்மா சொல்லியதை ஏற்றுக் கொண்டேன்.

அன்று முதல் இன்றுவரை என் தந்தையார் இறந்த துக்க நாள் என்பதை மனதிலே ஏற்றுக் கொண்டு. கூடுதலாக அம்பேத்கர், பெரியார், மற்றும் தோழர்கள் எழுதிய, வாசித்த. கேட்டறிந்த உண்மைகளை தெரிந்து கொண்டு எம்பாட்டன் நரகாசுரன் இறந்த வஞ்சக கதைகளை காரணகாரியங்களோடு கேட்டும் தீபாவளியை அந்நிய தீபாவளியை கொண்டாடியதே இல்லை.


அன்று தீபாவளியைப் பற்றி எதுவுமே தெரியாத காலத்தில்... இருந்த எனக்கு முதன் முதலில் தீபாவளியை துறக்கச் செய்த என் தாய்க்கு எனது முதல் வணக்கமும் நன்றியும்....


வியாழன் 27 2016

அதிகாலை இரவு


                     


இருபதாம் நூற்றாண்டின் நடு காலத்தை கடந்து கடைசி கால கட்டத்தை நெருங்கி கொண்டியிருக்கும் ஒரு ஆண்டின் ஒரு காலத்தில் ஒரு நாள்..

தன் வீட்டீற்கு குடிப்பதற்கும் பொழங்குவதற்கும் தேவையான தண்ணீரை சற்று தூரத்தில் உள்ள பொது அடி குழாயில் உறுப்பினர் எண்ணிக்கை அதிகமுள்ள வலுத்த குடும்பங்கள் சில தண்ணீர் எடுத்து முடிக்கிற வரைக்கும் வரிசையில் காத்திருந்து பிறகு

இரவு பணிரெண்டு மணிக்குமேல்..  சதை பிடிப்பு இல்லாத ஊதி விட்டால் பறந்து போய் விழும் அளவுக்கு  சிறுவன் என்று சொல்லக்கூடிய  உடல்வாகு பெற்றுள்ள இளைஞன் என்ற பதவிக்கு தகுதியில்லாத அந்த இளைஞன் தன் தாயின் உத்தரவுக்கு பணிந்து, தாய் அடி குழாயில் தண்ணீர் அடித்துவிட தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் குடத்தை தூக்கி கொண்டு வீட்டை நோக்கி ஓடினான்.

வீட்டில் இருக்கும் குறைந்த பட்ச பானை, குடம், சட்டி முட்டிகளில் தண்ணீரை சிந்தாமல் சிதறாமல் நிரப்பி விட்டு திரும்பவும் ஓடினான் அடி குழாயை நோக்கி...

குழாயில் வரும் தண்ணீர் இரவு ஒரு மணிக்கெல்லாம் நின்றுவிடும் அதற்குள் தங்களைப் போன்று ஆள்பலம் பொருள்பலம் இல்லாதவர்களுக்கும் வழிவிட்டு தங்கள் வீட்டீற்கும் தண்ணீர் எடுக்கு வேண்டும் என்பதால் வீட்டிற்கும் குழாய்க்குமாக வேகமாக இயங்கி கொண்டு இருந்தான் அவன்.

ஒருவழியாக மணி ஒன்று ஆவதற்கு முன்னரே குழாயில் தண்ணீர் நின்றுவிட்டது.ஒரு சில பாத்திரங்களில் மட்டும் தண்ணீர் நிரப்ப முடியாமல் போய்விட்டது. அடுத்து குழாயில் தண்ணீர் வருகிற வரையில் சிக்கனமாக பயன் படுத்த வேண்டும். குழாயிலிருந்து அடி குழாயை கழற்றி விட்டு குழாயை வீட்டிற்கு தூக்கி வந்து பாதுகாப்பான் இடத்தில் வைத்தான்.

அவனின் தாய், தன்மகன் தண்ணீர் நிரப்பிய பானை குடங்களை பார்வையிட்டு, நிரம்பாமல் உள்ள தண்ணீரை வேறு குடங்களில் மாற்றி தண்ணீரை பாதுகாப்பாக வைத்துவிட்டு, தாயும் மகனுமாக சாப்பிட் ஆரம்பித்தனர். அவன் சாப்பிட்டுவிட்டு படுக்க போகும் சமயத்தில் இவனது வீட்டின் முன்  வந்து நின்ற இரண்டு காக்கி சட்டைகள் இவன் பெயரைச் சொல்லி அழைத்தது.

குரல் கேட்டு வெளியே வந்தவன். காக்கி சட்டைகளை கண்டதும் என்ன விசயம் என்றான். அதுகள் இவனை விசாரிக்க அய்யா அழைத்து வருவதாக சொன்னது. அவன் அம்மாவிடம் விபரத்தை சொல்லி பயமில்லாமல் இருக்குமாறு கூறிவிட்டு, வந்திருந்த காக்கி சட்டைகள பரபரக்க அதுகளுடன் சென்றான்...

வீட்டைவிட்டு ரோட்டுக்கு வந்த போது  நின்றிருந்த ஜீப்பில் ஏறினான் அது பல இடங்களுக்கு சென்று சில பேர்களை கவ்விக் கொண்டு ஜீப்பில் அடைத்து கொண்டு, அதிகாலை அந்தப் பகுதி காவல் நிலையத்தில் வந்து நின்றது.

வழக்கத்தையும் பழக்கத்தையும் மற்றாமல் பொழுது புலர்ந்தது. இரவில் அழைத்து வந்தவர்கள் அனைவரும் பூட்ஸ் சத்தமும் குரல் சத்தமும் கேட்டு அதிர்ச்சி அடைந்து கண்விழித்த போது.. காக்கி சட்டைகள் பல அட்டென்ஜ் போட்டு சான்டாட்டியில் நின்று கொண்டு இருந்தார்கள்... அதுகளுக்கு முன்னால் ஏழு அடி உயரமும் பெருத்த உருவம் ஒன்று நின்று கொண்டு கத்திக் கொண்டு நின்றது.

உத்தரவுக்கு ஏற்றபடி வரிசையாக நின்று இருந்த காக்கிகள்...காலால் தரையை உதைத்து கையால் துப்பாக்கியை டப்டப்டப் வென் அடித்து காட்டியது. சிறிது நேரங்கழித்து  எல்லாம் ஓய்ந்து மீண்டும் அமைதியானது.

காலை மணி பத்தாகிய போது, ஏழு அடி உயரமுள்ள அந்த உருவம் வந்தது. இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தவர்களை பிடித்து வரப்பட்டவ்கள்.அவர் முன் . நிறுத்தப்பட்டனர். இரு காக்கிகளிடம் அந்த பெரிய  காக்கி அதிகாரி உத்தரவு இட்டார்.

இரவில் அழைத்து வரப்பட்ட ஆறு பேர்களில் ஐந்து பேர்களின் வீட்டார்கள் போலீஸ் நிலையத்தில் குவிந்துவிட்டனர். நான்கு பேர் செல்வாக்குள்ள மேல் இடத்து சிபாரிசுகளால் விடுவிக்கப்பட்டனர். ஒருவர்  வக்கீல் மூலம் ஜாமீனில் சென்றார். இரவில் தன் தாய்க்கு தண்ணீர் எடுத்தவன் மீது மட்டும் வழக்கு பதியப்பட்டது.

வழக்கு பதியப்பட்டு காக்கி ஒருவரின் எழுத்து வேலை முடிவதற்கு இரவு ஏழு மணி ஆகிவிட்டது. அதன் பின் வழக்கு கட்டுடன்  இரு காக்கிகள் சூழ ஒரு ஆட்டோவில் ஏற்றப்பட்டு ஒரு பங்களா முன் அவன் இறக்கப்பட்டான், பின் வெள்ளைசட்டை வெள்ளை பேண்ட் அணிந்திருந்த குட்டையான ஒருவர் முன. நிறுத்தப்பட்டான்.

சில நேரம் காத்திருக்குபின்  வெள்ளை சட்டை அணிந்திருந்த  அந்த நீதபதி, இரு காக்கிகளை பார்த்து கோபம் கொண்டார் அவரின்  சில வசவுகளை ஏற்ற காக்கிகள் மௌனமாக கையெழுத்து போட்ட குறிப்புகளை பெற்றுக் கொண்டு மத்திய சிறைச்சாலையை நோக்கிச் விரைந்தனர்

விரைவாக வந்தும் இரண்டு மணி நேரத்து மேல் காக்க வைக்கப்பட்ட பின்

இந்தியாவின் இளைய தலைமுறையின் இளைய பிரதமர். கன்னியாகுமரியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டுவதற்க்காக இந்த வழியில் செல்வதால் முன்னெச்சரிக்கையாக காக்கிகள் ரோந்து சென்ற போது.. பாலத்துக்கு அடியில் அமர்ந்து சதித்திட்டம் தீட்டிக் கொண்டு இருந்த அந்த இளைஞனை சுற்றி வளைத்து“லபக்கென்று பிடித்துவிட்டதாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் கொண்டுவரப்பட்டான்...அவன்..




செவ்வாய் 25 2016

மாலை விழும் இடம்.....

அந்த பிரபலமானவர்
உயிரோடு இருந்தபோது
அவரது கழுத்தில்
விழுந்தன மாலைகள்..

அந்தப் பிரபலமானவரின்
மூச்சு நின்ற
பிறகு அவர்
கழுத்தில் விழ
வேண்டிய மாலைகள்
அவர் காலில்
விழுகின்றன.......

திங்கள் 24 2016

மிஸ்டர்க்கு எப்படி வசதி......

வாங்க மிஸ்டர்
நீங்கதான் கணேசனா...
பரவாயில்லையே  கூப்பிட்ட
உடனே வந்திட்டீங்க
உட்காருங்க மிஸ்டர்
.......................................
மிஸ்டர் ஒங்கள
பத்தி எனக்கு
எல்லாமே தெரியும்
மிஸ்டர்   நா....ன்
சொல்வதை கவனமா
கேளுங்க  இதோ
இவுங்க  உங்க
மேல புகார்
கொடுத்து இருக்காங்க
இவுங்க  புதிதாய்
கட்டிய வீட்டுக்கு
மின்  இணைப்பு
கொடுப்பதை நீங்க
தடுக்கக்கூடாது.
இவுங்க உங்க
மேல இடத்து
சம்பந்தமா வழக்கு
போட்டு இருக்காங்கன்னா.
நீங்க கோர்ட்லதான்
பாத்துகனும் இவுங்க
மின் இணைப்பு
கொடுப்பதை நீங்க
சண்டியர் ஆட்டமா
தடுக்க கூடாது.

அதனால இவுங்க
வழக்கு நடக்கும்
உங்க இடத்து
வழியாகவோ உங்க
வீட்டுக்கு முன்
மின்  பைப்பு
ஊண்டு வதையோ
நீங்க தடுத்து
சண்டை போடக்
கூடாது.  புரியுதா
 மிஸ்டர் சாக்கடை,
தண்ணி குழாய்
மின் இணைப்பு
கொடுப்பதை யாரும்
தடுக்கக்  கூடாது..
மாநகராட்சி பாதையில
உங்களுக்கு பாதாள
சாக்கடை இணைப்பு
கொடுப்பதை  பக்கத்து
வீட்டுக்காரன் தடுத்தான்னா..
நீங்க கோர்ட்டிலதான்
பாத்துக்கனும் மிஸ்டர்


உங்க தொழிலக்கு
ஆடர புடுச்சேமா.
வேலையை முடிச்சு
கொடுத்தோ  மான்னு
இருக்கனும்  அதவிட்டு
புட்டு    இவுக
உங்க வீட்டு
வழியாக மின்
இணைப்பு பெறுவதை
தடுக்கக் கூடாது.
என்னங்க மிஸ்டர்
நான்  சொல்றது
................................
நீங்க எதுவும்
சொல்ல வேணாம்
எனக்கு தெரியும்

இப்ப நீங்க
என்  வீட்டு
முன் இவுங்க
மின் பைப்பு
ஊண்டு வதையோ
வழக்கு நடக்கும்
என் இடத்து
வழியாக மின்
இணைப்பு கொடுப்பதையோ
 நான் தடுக்க
மாட்டேன் கோர்ட்டு
மூலமா.. பார்த்துக்
கொள்வேன் என்று
நான்  சொல்றதை
எழுதி கையெழுத்து
போட்டு கொடுங்க
மிஸ்டர்...... சொல்றத
கேட்டு அறிவா
நடந்து கிட்டா
எப்படி வந்தீங்களோ
அப்படியே மரியாதையா
நீங்களும் கூட
வந்தவனும் திரும்பி
போகலாம் மிஸ்டருக்கு
எப்படி வசதி..............


ஞாயிறு 23 2016

ஏய்..மிஸ்......டர்ர்.........


ஏய்...மிஸ்டர்
........................
............................
.............................

நான் யார் தெரியுமா..?

தெரியாதுங்க.....!

சொன்னால் புரியுமா....??

புரியாதுங்க......!!

அடிச்சு சொன்னால் ஏறுமா.....???

ஏறாதுங்க.....!!!

போடா  ......முட்டாள்...

சரிங்க.......

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...