பக்கங்கள்

சனி 20 2015

தீய சக்திகளின் சதி வீழ்ந்தது...!!!!!!!!!

படம்-tamilsnow.com

 நீதி வென்றது
தலைக் கவசம்
விற்பனை உயர்ந்தது
50 பேர் சென்ற
சாலையில் இன்று
5000 பேர்கள் தலை
கவசம் அணியாமல்
குண்டும் குழியும்
செம பள்ளமும்
இல்லாத  வழவழப்பான
சாலையில் இரு
சக்கர வாகனத்தில்
பகுமானமாக சென்ற
தீய சக்திகளின்
சதி வீழ்ந்தது.

தலைக் கவசதயாரிப்பு
காரனின் பிராத்தனை
பலித்தது சூது கவ்விய
தலை கவசம் சட்டத்தின
மூலம் வென்றது.

தலைக் கவச தயாரிப்பு காரனுக்கும்
காப்பீடு செய்தும் விபத்தில்
இழப்பீடு வழங்காமல் வித்தாரம்
பேசும் காப்பீட்டுக்காரனுக்கும்

சாலையின் நடுவே நின்று
வழி மறித்து 100ம் 200மாய்
வசூலித்த அங்கீகார வழிப்
பறிகாரனுக்கும்  கூடுதலாக
வழிப்பறி செய்வதற்கு
கிடைத்த வெற்றி!!!

வாழ்க! அடிமைகளின் தேசம்!!
வளர்க!!! கொள்ளையர்களின் ராஜ்ஜியம்!!!!

வெள்ளி 19 2015

அடிமைகளை உருவாக்கும் தேசம்

படம்-www.lawyersundar.com


தீர்ப்புகளை மட்டுமே சொல்ல
வேண்டிய நீதிமன்றங்கள் சட்டங்களை
உருவாக்குகின்றன....

சட்டங்களை உருவாக்கும்
ஆட்சி மன்றங்களோ...தீர்ப்பை
எழுதுகின்றன...

மேற்கண்ட இரண்டையும் அம்பல
படுத்த வேண்டிய பத்திரிக்கைகளோ
ஒரு பக்க சார்பாய் அம்மனமாக
நின்று ஜால்ரா தட்டுகின்றன.

இவற்றின் எல்லாவற்றுக்கும்  மரண
அடி கொடுக்க வேண்டிய உழைக்கும்
மக்களோ அடிமையைாய் உருவாக்கப்பட்டு
கிடக்கின்றனர்.........

ஆக...இந்தியா அடிமைகளை உருவாக்கும் தேசம்.!!!!

புதன் 17 2015

' வேங்கடகணபதி "

படம்-kadugu-agasthian.blogspot.com

உண்ட மயக்கம் தீர உறங்க முடியாத அவஸ்தையில் கல்லாப்பெட்டி முன் அமர்ந்து நெளிந்து கொண்டிருந்தேன்.  தலைக்குமேல் மின்விசிறி ரீங்காரத்துடன் சுற்றிக்கொண்டு இருந்தது.  வெளியே போய் ஒரு புகை போட்டு வரலாம் என எழுந்தபோது ,  கையில் கைத்தடியுடன் ஒரு பெரியவர் கடைக்குள் நுழைந்தார். 


யாரோ ஒரு வாடிக்கையாளர் என்ற நினைப்பில்,  "வாங்க சார்" என அழைத்து "என்ன வேணும்" என்றேன் .

அவரோ பதில் ஏதும் கூறாமல் ஓரமாக இருந்த ஒரு ஸ்டூலை கடை நடுவே இருந்த மின்விசிறிக்கு நேராக வைத்து அமர்ந்து கொண்டார்.
"கொஞ்சம் இந்த பேன போடுறீங்களா?" என்றார்.

சற்றே எரிச்சலுடன் கடைப்பையனுக்கு சாடை காட்டவும், அவன் மூலையில் உள்ள சுவிச்சை தட்டினான்.

இப்போதாவது என்ன வேண்டும் என சொல்வார் என அவரை நோக்கினேன். படிய வாரிய பாதிக்கும் மேல் வெளுத்த தலை, தினமும் மழிக்கும் முகம், கண்ணாடி, சற்று பூசினாற்போல உடம்பு.  65 - 70 வயது இருக்கும்.  அரைக்கை சட்டையும் பேண்டும்.இரண்டு நிமிடங்களில் எழுந்த அவர், "ரொம்ப தேங்ஸ் சார்" எனசொல்லியபடி நடையை கட்டினார்.

வியாபாரம் செய்யாமல், தம்மடிக்கவும் விடாமல் , வெறுமனே காற்று வாங்கிச் சென்ற அவர் மீதான கடுப்பில் "யார்டா இது" என பையனிடம் எரிந்து விழுந்தேன்.

பேன் சுவிச்சை அணைத்த படியே, "தெரிலணே, அப்பாவுக்கு தெரியும் போல.  வந்து பேசிட்டுருப்பாரு"  என்றான்.

அதற்கு பிறகும் ஒருசில முறைகள் அந்த பெரியவர் வந்தார்.  வரும் போதெல்லாம் நடப்பவையும் ஒரே விசயம் தான்.  அதே போல மதியம் 2 - 3 மணி உச்ச வெய்யிலில் தான் வருவார்.  இரண்டு நிமிடங்கள், அதிகபட்சம் மூன்று நிமிடம் நன்றி சொல்லிவிட்டு கிளம்பி விடுவார்.  வேறு எதுவும் -அப்பா எப்படி இருக்கிறார், வியாபாரம் எப்படி இருக்கு -  எதுவுமே பேச மாட்டார்.

பிறகெல்லாம் அவர் வரும்போது "வாங்க" என அழைப்பதைக் கூட விட்டுவிட்டேன். வருவார், ஸ்டூலை எடுத்துப் போட்டு அமர்வார், பையன் பேன் போடுவான்,  காற்று வாங்கிவிட்டு "தேங்ஸ் சார்" கூறிவிட்டு போய்விடுவார்.

ஒரு முறை அவர் வந்த போது, வழக்கம் போல் ஸ்டூலை எடுக்காமல் நேரே கல்லாவில் இருந்த என்னிடம் வந்தார்.

"என் பாக்கி எவ்ளோன்னு பாருங்க" என்றார்.

ஒன்றும் புரியாமல் விழித்த என்னிடம் , "போன வாரம் அப்பாட்ட சாமான் வாங்கினேன்.  பாக்கி கொடுக்கணும்.  எழுதி வெச்சுருப்பாரு பாருங்க.  நாப்பது ரூவான்னு நெனைக்கிறேன்.  எம் பேர போட்டு சீட்ல எழுதி வெச்சுருப்பாரு.  பேரு வேங்கடகணபதி" என்றபடி ஸ்டூலில் அமர்ந்தார்.
அவர் கூறியபடி சீட்டு இருந்தது.  அவர் வாங்கிய பொருட்களின் விபரம், அவற்றின் விலை, மொத்த தொகை ரூ.390/-, வாங்கிய பணம் ரூ.350/-, பாக்கி ரூ.40/- என எல்லா விவரங்களும் சீட்டில் இருந்தது.

சீட்டை பார்த்துவிட்டு பணத்தை எண்ணிக் கொடுத்தார்.  "டவுன் பஸ்ஸுக்கும் காப்பி சாப்பிடவும் அன்னிக்கி பணம் வேண்டி இருந்திச்சி.."
என சொல்லிவிட்டு, வழக்கமான "தேங்ஸ் சார்" கூறிச் சென்றார்.

பிறகெல்லாம் அவரது வருகை அரிதாகி விட்டது.  மாதம் இரண்டு மூன்று முறைகள் வந்து கொண்டிருந்தவர் , மாதம் ஒருமுறை வருவதே பெரிது என்றானது.

மொட்டை வெய்யிலில் ஒரு நாள் தன் மனைவியுடன் வந்தார்.  அவர் மனைவிக்கு அவரைவிட உடல் உபாதைகள் அதிகம் போலும்.  கணவரின் கையை பிடித்துக் கொண்டு தள்ளாடி நடந்து வந்தார்.   வழக்கம் போல அமர்வதற்கு இரண்டு ஸ்டூலை எடுத்து வைத்தார் பெரியவர்.  அந்த அம்மாள் பெரியவர் போன்று இல்லை.  நொய் நொய் என  வாய் ஓயாமல் எதையாவது கேட்டுக் கொண்டே இருந்தார்.  உங்க கூட பொறந்தவங்க எவ்வளவு பேர், ஏன் இன்னும் கல்யாணம் முடிக்கல ,  கடைக்கு கரண்டு பில் எவ்வளவு வருது,  இந்த பொருள் என்ன விலை, இது, அதை கொஞ்சம் எடுத்துக் காட்டுங்களேன் .

காட்டினேன்.  அதற்கான விலையைக் கேட்ட போது, பேரம் பேசுவதற்கு உதவியாக  விற்பனை செய்து வரும் விலையில் இருந்து 50/-ரூபாய் அதிகமாக கூறினேன்.  அந்த அம்மாள் பெரியவரை பார்த்து , "இத எடுத்துக்கலாமாங்க" என கேட்டார்.  பெரியவரோ பதில் ஏதும் கூறாக கூறாமல் மணிப்பர்ஸில் இருந்து பணத்தை எடுத்து என்னிடம் கொடுத்துவிட்டார்.

என்னால் மெல்லவும் முடியவில்லை, துப்பவும் முடியவில்லை.  தேவையின்றி விலையை அதிகமாக சொல்லி விட்டோமே என்று குடைந்தது.  எனினும் கூடுதலாக விலை சொன்னதை ஒப்புக்கொள்ளும் மனமில்லை.  நம்பிக்கை போய்விடுமே , அடுத்து வர மாட்டார்களே என்ற கவலை.  அமைதியாக பணத்தை கல்லாவில் போட்டேன்.

"ரொம்ப தேங்ஸ் சார்" போய்விட்டார்கள்.   வேலைகளின் ஊடாக ஒரு சில மணிகளில் ஏமாற்றிய உறுத்தல் காணாமல் போனது.
நெடு நாட்களுக்குப் பின் அதிசயமாக மாலை வேளையில் பெரியவர் வந்தார

கையில் ஒரு கிப்டு பார்சலை திணித்து , "அப்பா கல்யாண பத்திரிகை கொடுத்தாரு ,  உடம்பு சரியில்ல , வர முடியல.  வாழ்த்துக்கள் .  அப்பாட்ட சொல்லிருங்க." சென்று விட்டார்.

பார்சலை பிரித்துப் பார்த்தேன்.  சுவிச்சை போட்டால் 'ஓம், ஓம்' என ஜெபிக்கும் மிசின் .   நமக்கு இது எதற்கு என உடனிருந்த வேறு ஒரு நண்பருக்கு கொடுத்து விட்டேன்.

சிறிது நேரத்திற்கு பிறகு தான் மண்டையில் உரைத்தது ,  ஒரு டீ கூட வாங்கிக் கொடுக்காமல் அனுப்பி விட்டோமே என்று.  கல்யாணத்திற்கு வந்திருந்தால்,  சாப்பாடு போட்டிருப்போம்.   ச்சீ..  நம்மை பற்றி என்ன நினைப்பார் என தோன்றியது.

அடுத்த முறை கடைக்கு வந்த பெரியவர்,  நேராக என்னிடம் வந்து, தயங்கித் தயங்கி ," இங்க, பக்கத்துல ரேடியோ ரிப்பேர் செய்ய வந்தேன்.  50/- ரூவா கொறையுது.  தந்தீங்கன்னா அடித்த வாட்டி வரும்போது திருப்பித் தந்துர்றேன் " என்றார்.

யோசிக்காமல் கல்லாவில் இருந்து பணத்தை எடுத்தேன்.  முன்பே அவரிடம் 50/- ரூபாய் கூடுதலாக வாங்கியதும் நினைவிற்கு வந்தது.
பணத்தை நீட்டினேன்.  " எம்பேரு வேங்கடகணபதி. எழுதி வெச்சுக்கங்க.  அப்பாக்கு தெரியும்" .  பணத்தை வாங்கிக் கொண்டார்.  "ரொம்ப தேங்ஸ் சார்".

நான் எழுதி வைக்கவில்லை.  

அந்த பணம் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி என விட்டுவிட்டேன்.   வந்தால் சிரமம்.  மீண்டும் மீண்டும் பணம் கேட்கக்கூடும்.  வராவிட்டால்,  50/- ரூபாயோடு போய்விடும் என்ற எண்ணமும் ஒரு காரணம்.

அதே போல பெரியவரை கொஞ்ச நாட்களாகவே காணவில்லை.  அவரை மறந்தே கூட போய்விட்டேன். 

அன்று ஏதோவொரு வேலையாக கடையில் கணக்குப்பிள்ளையை அமர்த்திவிட்டு வெளியே போய்விட்டு, மாலை  கடைக்கு வந்தேன்.

நடந்த வியாபாரம், கொடுக்கல், வாங்கல் வரவு விபரங்கள் எல்லாம் என டீ  குடித்துக் கொண்டிருக்கும் போது கணக்குப்பிள்ளை, "வேங்கடகணபதிங்குறது யாருய்யா?" என்றார்.

"கட கஸ்டமர் தான் கணக்குப்பிள்ளையா.  வந்துருந்தாரா.  50/-ரூவா அவர் தரணும்"

"அவர் சன் வந்துருந்தாரு.  பணத்த குடுத்துட்டாரு.  அவரு இல்லியாம்யா".
"என்ன கணக்குப்பிள்ளையா"

"கிட்னி பெயிலியராம்.  4 மாசம் ஆஸ்பத்திரில  இருந்தாராம்.  அப்பத்தான் கடைல காசு வாங்குனத சொன்னார். கொஞ்சனா முன்ன முடிஞ்சுருச்சாம்." 

டீ தொண்டைக்குள் இறங்க மறுத்தது.  கணக்குப்பிள்ளை பேசிக்கொண்டே இருந்தார்.

"பற்று சீட்டு எதுவும் காணல .  அதான் பணத்த தனியா கிளிப்புல வெச்சுருக்கேன்........


---பால்ராஜ்


திங்கள் 15 2015

கடன் என்றால் என்ன? அதனால் நன்மை அடைவோர் யார்? பாதிக்கப் படுவோர் யார்?

கடன் என்றால் என்ன? அதனால் நன்மை அடைவோர் யார்? பாதிக்கப் படுவோர் யார்? இது பற்றிய ஆவணப் படம் ஒன்று, நெதர்லாந்து தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்டது. பொது மக்களுக்கு அறிவூட்டும் நோக்கில்,Zembla ஊடகவியலாளர்கள் தயாரித்தளித்த நிகழ்ச்சியில் பேசப் பட்ட விடயங்களை இங்கே சுருக்கமாகத் தருகிறேன்.

பண்டைய காலத்தில், மெசப்பத்தோமியா நாட்டில் பணம் புழக்கத்தில் இருக்கவில்லை ஆனால் கடன் இருந்தது. கடன் பத்திரங்களை கல்வெட்டுகளில் பொறித்து வைத்தார்கள். மத்திய காலத்தில், போர்ச் செலவுகளுக்காக, மன்னர்கள் வணிகர்களிடம் கடன் வாங்கும் வழக்கம் இருந்துள்ளது. அது நவீன கால கடன் வழங்கும் வங்கிகளின் தோற்றத்திற்கு வித்திட்டது.

நாங்கள் எல்லோரும் கடன் வாங்குகிறோம். தனி மனிதர்கள் கடன் வாங்குவது போல, அரசுகளும் கடன் வாங்குகின்றன. அரசு என்பதற்காக, கடன் கொடுப்பவர்கள் தமது நிபந்தனைகளை தளர்த்திக் கொள்வதில்லை. ஒரு சாதாரண மனிதன், அளவுக்கு மிஞ்சி கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிக் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டால் என்ன நடக்கும்? அவனது செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும், பட்டினி கிடந்தாயினும், கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று ஆலோசனைகள் கூறுவார்கள். 

அதையே தான், நாடுகள் விடயத்திலும் பின்பற்றுகிறார்கள். கடன் வாங்கிய அரசுகள், தமது செலவுகளை சிக்கனப் படுத்தி கடனை அடைக்க வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். அதை நாங்கள் அரசியல்-பொருளாதார கலைச்சொல்லில் சிக்கனப் படுத்தும் கொள்கை (Austerity) என்று சொல்கிறோம். ஆனால் விஷயம் ஒன்று தான். "உன்னுடைய செலவுகளை குறைத்து, மிச்சம் பிடித்து, வாங்கிய கடனை வட்டியோடு திருப்பிக் கொடு."

இன்று கிரீஸ் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையும் அது தான். ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப் பட்ட காலத்தில் ஒரு சட்டம் இயற்றினார்கள். ஒரு ஐரோப்பிய நாடு அந்த அமைப்பில் உறுப்புரிமை பெறுவதற்காக, கடன்களை குறைவாக வைத்திருக்க வேண்டும். அது அந்த தேசத்தின் மொத்த பொருளாதார உற்பத்தியின் அளவுக்கு கீழே, அதாவது 60% க்கும் கீழே இருக்க வேண்டும். 

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், மொத்த பொருளாதார உற்பத்தியையும் (BNP), மொத்த கடன்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். கடன் தொகை BNP யை விட அதிகரித்து விட்டால், அந்த நாடு திவாலாகி விடும். கிரேக்க நாட்டில் அது தான் நடந்தது. மொத்த கடன் தொகை, மொத்த பொருளாதார உற்பத்தியை விட, 129% அதிகமாக இருந்தது!

கடன் வழங்கும் வங்கிகள், நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதை விட, அரசாங்கங்களுக்கு கடன் கொடுப்பதை பெரிதும் விரும்புகின்றன. கடன் வாங்கிய நிறுவனம் ஒன்று திவாலாகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். கடனை திருப்பி வாங்க முடியாத நிலைமை ஏற்படும். ஆனால், நாடுகள் விடயத்தில் அப்படி அல்ல. ஓர் அரசு கடன் வாங்கினால், அந்த நாடு கடனை குறுகிய காலத்தில் திருப்பிக் கொடுக்கா விட்டாலும், வங்கிகள் கவலைப் படப் போவதில்லை. ஏன்?

இலங்கை, இந்தியா போன்ற ஏழை நாடுகள் மட்டுமல்ல, அமெரிக்கா, பிரிட்டன், போன்ற பணக்கார நாடுகளும் கடன் வாங்குகின்றன. கடன் விடயத்தில், ஏழை நாடு, பணக்கார நாடு என்ற பாகுபாடு கிடையாது. அதாவது, கடன் வழங்கும் வங்கிகளை பொறுத்தவரையில் எல்லா அரசுகளும் ஒன்று தான். வாங்கிய கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்தால் சரி.

இந்தக் கடன்களை யார் அடைக்கப் போகிறார்கள்? நிச்சயமாக, வரி கட்டும் சாதாரண மக்கள் தான். ஒவ்வொரு நாளும் இலட்சக் கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன. வருங்காலத்தில் அவர்கள் வரி கட்டுவார்கள். அதாவது, தனது சொந்த நாட்டு மக்களை பிணை வைத்து தான், அரசுகள் கடன் வாங்குகின்றன. எமது அரசுக்கள் வாங்கிய கடன்களையும், வட்டிகளையும் நாங்கள் தான் கட்டிக் கொண்டிருக்கிறோம். 

அதனால் தான், எந்த நாட்டு அரசு கடன் கேட்டாலும், அது இலங்கை மாதிரி போரினால் அழிந்து கொண்டிருக்கும் ஏழை நாடாக இருந்தாலும், வங்கிகள் தயங்காமல் கடன் கொடுக்கின்றன. அதற்குக் காரணம், அந்தப் பணத்தை எந்தக் காலத்திலும் திருப்பி வாங்கலாம். நூறு வருடங்களுக்குப் பிறகு அங்கு பிறக்கும் பிள்ளைகளிடம் இருந்தென்றாலும் வட்டியோடு வாங்கலாம். 

கடன்களுக்காக கட்டப் படும் வட்டித் தொகையினால், வங்கிகளின் சொத்துக்கள் அதிகரிக்கின்றன. வங்கிகளைப் பொறுத்தவரையில், கடன் என்பது பணம் பெருக்கும் இயந்திரம். இதனால், உலகின் ஒரு மூலையில் பெரும் கோடீஸ்வரர்களிடம் உள்ள பணம் பெருகிக் கொண்டே செல்கிறது. அதே நேரத்தில், ஏழைகள் மென்மேலும் வறுமைக்குள் தள்ளப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ளும் அரசுகள், வங்கிகளின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு சிக்கன நடவடிக்கைகளை எடுக்கின்றன. அதனால் பொது மக்கள் நலன் பேணும் திட்டங்களை கைவிடுகின்றன. அதன் விளைவு என்ன? மக்கள் தமது அரசுகள் மீது நம்பிக்கை இழக்கின்றனர். அதற்குப் பதிலாக, ஒரு பலமான தலைவருக்காக ஏங்குகிறார்கள். 

அந்தப் புதிய அரசியல் தலைவர் ஒரு பாசிஸ்டாக இருந்தாலும், மக்கள் அதைப் பற்றி கவலைப் படப் போவதில்லை. சாதாரண மக்களின் பிரச்சனைகளை பற்றி எவர் பேசினாலும், அவரது அரசியல் பின்னணி பற்றி ஆராயாமல் ஆதரிக்கிறனர். ஜெர்மனியில் நாஸிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பிருந்த நிலைமையில், இன்றைய ஐரோப்பா உள்ளது. அந்த ஆபத்து குறித்து அரசியல் தலைவர்கள் மத்தியில் எச்சரிக்கையுணர்வு இல்லை. இருந்தாலும் அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது.

இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவில்லையா? இருக்கிறது. புரட்சி மட்டுமே தீர்வைக் கொண்டு வரும். ஒரு நாட்டில் புரட்சி நடந்து புதிதாக ஆட்சியமைக்கும் அரசு புரட்சிகர மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அதன் மூலம் கடன்களை இரத்து செய்ய முடியும். அது மட்டுமல்ல, உலகப்போர்களும் கடன்களை இரத்து செய்வதற்கான காரணங்களை வழங்குகின்றன. 

உதாரணத்திற்கு, இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர், ஜெர்மனியின் பழைய கடன்கள் யாவும் இரத்து செய்யப் பட்டன. அதனால் தான் ஜெர்மனி ஒரு பொருளாதார வல்லரசாக வளர்ச்சி அடைய முடிந்தது. அன்று கடன்களை இரத்து செய்தபடியால் நன்மை அடைந்த ஜெர்மனி, இன்று கிரீசுக்கு தான் வழங்கிய கடன்களை இரத்து செய்ய மறுத்து வருகின்றது!

ஆவணப் படத்தை பார்ப்பதற்கான இணைப்பு: 
De schuldenmachine; http://www.npo.nl/zembla/20-05-2015/VARA_101372895

 நன்றி!!!http://kalaiy.blogspot.in/  கடன்கள் : வங்கிகளின் பணம் பெருக்கும் இயந்திரம்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...