பக்கங்கள்

சனி 12 2022

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...74




ஆட்டமா..?தேரோட்டமா...?
தெலங்கானா சட்டமன்றத்தில் கூட விருக்கும் சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆளுநர் உரை அவசியல் இல்லை என சந்திரசேகரராவ் அரசு முடிவெடுத்துள்ளது.ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் மட்டும் ஆளுநர் உரை போதுமானது என்கிற விதியைக் காரணம் காட்டி தமிழிசைக்கு முட்டுக்கட்டு போட்டுள்ளார்கள்.விதிகளைக் காரணம் காட்டி மாநில அரசுகளை ஏளனம் செய்தது பாஜக.இப்போது அதே விதி பாஜக தமிழிசைக்கு ஆட்டம் காட்டுகிறது!










ஞாயிறு 06 2022

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...72

  • கோகுல்ராஜ் ஆணவப்படுகொலையில் யுவராஜ் உட்பட 11 பேர் குற்றவாளிகள்- நீதிமன்றம் தீர்ப்பு!!
  • ஆணவம் அழிவைத்தரும் யுவராஜ் !
  • ஒரு பொறியியல் பட்டதாரியை திட்டமிட்டு படுகொலை செய்துவிட்டு எவ்வளவு திமிராக காலரை உயர்த்திவிட்டு பேசினாய்..சாதியும் ,பணமும்,செல்வாக்கும் காப்பாற்றும் என்ற ஆணவம்தானே,?
  • வருங்கால யுவராஜ்களின் எண்ணங்களின் மீது சம்மட்டி அடியாக இறங்கிய தீர்ப்பு. கோகுல்ராஜ்,டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவின் ஆன்மா சற்று இளைப்பாறுதல் கொள்ளட்டும் !
  • சுவாதி பிறழ்ந்தபோதும் நீதி பிறழவில்லை. கடவுளைப்போல கண்காணித்து சாட்சியம் அளித்த அறிவியலின் பிள்ளை சிசிடிவி காமிரா தனது கண்களுக்குள் உண்மையை சேமித்து வைத்திருக்கிறது.
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் தோழர் ப பா மோகனின் அறிவார்ந்த சட்டப்போராட்டம் இதை சாதித்திருக்கிறது. கண்ணகி - முருகேசன், உடுமலை சங்கர் போன்ற ஆணவ கொலை வழக்கினை தொடர்ந்து இதிலும் நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. ப பா மோகன் போல இரத்தினம் போல பலநூறு வழக்கறிஞர்கள் இந்த சமூகத்திற்கு வேண்டும். தமிழக அரசு ஆணவப்படுகொலைகளை தடுக்க உறுதியான சட்டங்களை உடனே இயற்றவேண்டும்



  • ஆணவம் அழியட்டும் அன்பு தழைத்தோங்கட்டும் !







                                                                   சாதிவெறியன்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...