பக்கங்கள்

சனி 26 2014

கலெக்டர் அலுவலகம் பரபரப்பாய் செயல்பட்டது..!!!

படம்--ta.wikipedia.org


என்னாது!! கலெக்டர் அலுவலகம் பரபரப்பாய் செயல்பட்டதா?? நிஜமாகவா?? சத்தியமாய்தான் சொல்றீங்களா?? என்று  ஆச்சரியமாய் கேட்பவர்களுக்கு.....

மதுரை கலெக்டர்ர் அலுவலகத்தில், மக்கள் தொடர்பு அதிகாரி அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்துக்கு எதிரே,  சென்னை  பதிவு எண்ணைக் கொணட ஒரு வெள்ளை நிறக்கார் ஒன்று கடந்த ஐந்து நாட்களாக நின்று கொண்டு இருந்தது.

கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து ஒரு வருசம் ஆகியும் .மனுவைப்பற்றி கேட்டு நடையாய் நடந்தும் கண்டு கொள்ளாத, அல்லது கண்டும் கண் தெரியாத அதிகாரிகளுக்கு, ஐந்து நாட்களாக நின்று கொண்டு இருந்த கார் அவர்களின் கண்ணில் பட்டு உறுத்தோ உறுத்தென்று உறுத்தியது

அந்த மர்ம காரைப்பற்றி சம்பந்தபட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 போனுக்கு மேல் போன் செய்தாலும் சாதரணமானவர்களுக்கு  உதவிக்கு வராத போலீசு, விரைந்து வந்தது. காரை  சோதனை செய்தது. அது பற்றி உயர் போலீசுக்கு தகவல் தெரிவித்தது.

காரை நிறுத்தி இருப்பது கலெக்டர் அலுவலகமாச்சே.......... அலுவலகமே பரபரப்பாய்  செயல்பட்டது உடனே வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

காருக்குள்  வெடிக்கக்கூடிய வெடிபொருள்கள் ஏதும் இல்லை என்று தெரிய வந்தது.

காரின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபொது அந்தக்கார் மதுரையைச் சேர்ந்த போலீசுகாரர்க்கு சொந்தமானது என்று தெரிய வந்தது.

அவரிடம் விசாரித்தபோது,உறவினரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துவிட்டு பணி நிமித்தமாக சென்னை சென்று விட்டதாக கூறினார். காரின் ஆவணத்தை காட்டிய பின்பு காரை எடுத்துச் சென்றார்.

இந்த செய்தியை படித்தவர் ஒருவர்.பக்கத்தில் நின்றவரிடம் கேட்டார். “ஏப்பா, கலெக்டர் ஆபிஸில் மருத்துவமனை இருக்காப்பா என்று”

அதற்கு அவர்.பல தடவை போயிருக்கேன் ஆஸ்பத்திரி இருப்பதாக தெரியவில்லையே,.. ஆமா, எதுக்கு கேட்குறிங்கன்னு பதிலுக்கு அவர் கேட்க.

காருக்கு சொந்தக்காரான போலீசு சொன்னதை படித்துகாட்டினார்.

காரு வச்சிருக்கிருவங்க  என்ன இல்லாதவங்களா...என்ன என்று பொருள் பொதிந்தவாறு கேட்டார்.

வெள்ளி 25 2014

கில்லாடிக்கு கில்லாடிகள்





மதுரை மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரனை கைதிகள் என 1300க்கு மேற்பட்டவர்கள் ஆட்டு கிடை போல் அடைக்கப் பட்டுள்ளனர்.

இந்த ஆட்டுக்கிடையில் அடைக்கப்பட்ட கைதிகளை பார்க்க உற்றார் உறவினர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.

அப்படி அனுமதிக்கப்பட்ட உற்றார் உறவினர்கள் பார்க்க வரும்போது.,கைதிகளுக்கு வெளியிலிருந்து கஞ்சா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் கொடுக்கப்படுவதாக செய்தி ஏடுகளில் செய்திகள் வந்தன.

இதனை தடுக்கும் பொருட்டு, உற்றார்,உறவினர்களை சிறை போலீசு,கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னரே, கைதிகளை பார்க்க அனுமதிப்பார்கள்.

ஏற்கனவே, விசாரனை கைதிகளை அழைத்து வந்து வரிசையாக நிறுத்தப்பட்டு பார்க்கப்படும் இடங்களில் விரல்  என்ன ,அதாவது குண்டூசி கூட நுழையமுடியாதபடிக்கு கம்பி தடுப்பும்,பத்தாதிற்கு கண்ணாடி தடுப்பும் போடப்பட்ட அதி பயங்கரமான தடைகள் ஏற்ப்படுத்தப்பட்டு இருக்கும்.

இப்படியான,பாதுகாப்பும், தடையும் உள்ளேயும், வெளியிலிருந்து கஞ்சா பொருட்களை வீசும் நபர்களை பிடிக்க 24 மணி நேர பாதுகாப்பும் போடப்பட்டும் இவற்றையும் மீறி சில கில்லாடிகள் தங்களது கில்லாடி தனத்தை காட்டி வருகிறார்கள்.

அப்படி ஒரு கில்லாடியான ஒருவர். சிறையில் உள்ள தன் நண்பரை பார்க்க வந்தபோது, டூத் பேஸ்ட்க்குள் கஞ்சாவை மறைத்து கொண்டு வந்ததை கில்லாடிக்கு கில்லாடியானவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்.

டூத்பேஸ்ட்டுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வந்த கஞ்சாவையும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வந்த கஞ்சாவையும் இந்தக் கில்லாடிகள் கண்டுபிடித்துவிட்டனர்.

கண்டுபிடித்த கஞ்சா இத்தனைக் கிராம் என்று தாரசு வைத்து நிறுத்தியோ அல்லது தங்களது அனுபவத்தில் பழக்கபட்டதால்  துல்லியமாக சொல்கிறார்கள்.

டூத்பேஸட்க்குள்ள கஞ்சா 5 கிராம், உள்ளாடைக்குள் மறைத்து  வைத்த கஞ்சா
15 கிராம் என்று, கஞ்சாவை கொண்டு வந்த கில்லாடியே வியக்கும் வண்ணம் கில்லாடிக்கு கில்லாடிகள் தெரிவிக்கிறார்கள்.

கெட்டதுகளை துல்லியமாக கண்டுபிடிக்கும். கில்லாடிக்கு கில்லாடிகள். நல்லதுகளை கண்டுபிடித்து நல்லதுகளை நிலைநிறுத்துவதற்கு  இவ்வளவு மெனக்கெடுவார்களா???

வியாழன் 24 2014

சிவகாசியில் பார்த்த சீதக்காதி..........

படம்--keelakaraitimes.com

அன்மையில் சிவகாசியில் மாஸ்டர் பிரிண்டிங்  அசோசியசன்  சார்பில் நடந்த பிரிண்ட்டெகஸ்  கண்காட்சிக்கு சென்று இருந்தேன்.

பிரிண்டிங் கண்காட்சியை சுற்றிப்பார்த்துவிட்டு வெளியே வந்தபோது மூன்று மணிக்கு மேல் ஆகிவிட்டது.  அன்று ஞாயிற்றுக் கிழமையாதலால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் சாப்பாட்டுக் கடையைத் தேடி சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது.

அப்படிச் செல்லும்போதுதான் சீதக்காதி  தெரு என்று  சிவகாசி நகராட்சி போர்டு ஊன்றி இருந்தததைப் பார்த்தேன்.

செத்தும் கெடுத்த சீதக்காதியா...? செத்தும் கொடுத்த சீதக்காதியா..ன்னு ஒரு தொடர் குழப்பம்.. தெருவைப்பார்த்தால்   ஒரே அமைதியாக இருந்தது.

முதலில் இரையை போட்டு விட்டு வரலாம் என்று சாப்பாட்டு கடையை தேடி  தொழில் நண்பர்களான சீனி. மணி, மற்றும் ஒருவருடன் நடந்து கொண்டு இருந்தோம்.

 வழியில் குடிமகன் கடையை பார்த்துவிட்டார்கள். தொழில் நண்பர்களான மூன்று குடிமகன்கள் என்பதை நிருபணமாக்க அவர்கள் சென்று விட்டார்கள்.

குடிமகன்களிடம் விடைபெற்றுவிட்டு.. திரும்பவும் சிவகாசி வீதியிலே நடந்து வந்தபோது..

.  சீதக் காதியைப்பற்றி விசாரித்தபோது தெரிந்தது.

புலவர்களுக்கும், கஞ்சிக்கு செத்தவர்களுக்கும் கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களை கொண்டவர் சீதக்காதி என்ற இஸ்லாமிய மதத்தைச்சேர்ந்தவர்.

அவர் செத்தது தெரியாத புலவர் ஒருவர் இவரைப்பாடி பரிசு பெற்று செல்ல வந்தவர். வந்தவுடன் சீதக்காதி செத்துப்போன செய்தியைக்கேட்டு நொந்து போனார் புலவர்,  சரி வந்ததும் வந்தோம் சீதக்காதியை புதைத்த சமாதியை   பார்த்துவிட்டு செல்வோம் என்று நிணைத்து அவரின் சமாதிக்குச் சென்றார்..

அவரின் சமாதிக்கு அருகில் சென்ற புலவர் , சீதக்காதியே ,உன் வள்ளல் தன்மையை கண்டு உன்னைப்பாடி பரிசில் பெற்று செல்ல வந்தேன். நீயோ.எனக்கு பரிசில் வழங்காமல் சென்றுவிட்டாயே அய்யா...என்று தன் சோகத்தை சொல்லி பாடியுள்ளார்.

புலவரின் புலம்பல் பாடலைக் கேட்ட சமாதிக்குள் இருந்த சீதக்காதி , தன் கையை   மட்டும் சமாதியிலிருந்து வெளியே நீட்டி , பாடிக் கொண்டுருந்த புலவனை , இந்தாய்யா, லேட்டா வந்ததுமில்லாம இப்படி ஒரு புலம்பலா...ன்னு சொல்ற மாதிரி,ஒரு தட்டு தட்டி,  ஒரு மோதிரத்தை கொடுத்துவிட்டு .மீண்டும் சமாதிக்குள் கையை இழுத்துக் கொண்டாராம்.

இதைக் கண்டு திடுக்கிட்ட புலவர். மோதிரத்தை பெற்றுக் கொண்டு.. செத்தும் கொடுத்த சீதக்காதியே !!! என புகழ் ந்து பாடல் பாடினாராம்.

இந்தக்கதை பழைய விட்டாலாச்சர்யா கதை மாதிரி இருக்கேன்னு  . நீங்கள் கேட்கக்கூடாது.  எனக்கு சொன்னதை,நான் கேட்டதை  நான் உங்களுக்கு சொல்கிறேன்.

இதுவும் ஒரு வகை பதிவுதானே................


புதன் 23 2014

அதே சனிக்கிழமை,அதே மூன்று மணி...........

படம்..www.ujiladevi.in


மதுரை  மாவட்டத்துக்கு அருகே உள்ள ஒரு ஊரு. அந்த ஊரில் நடப்பு மாதத்தில்  ஒவ்வொரு வாரமும் சரியாக ஒருவர் சாப்பாடு வேண்டாமென்று சொல்லாமல் போய் சேர்ந்து விடுகிறார்கள்.

என்னவென்று  விளக்கமாக விசாரித்தால்..  வியப்பாகத்தான் இருக்கிறது.

முதல் வாரம் சனிக்கிழமை மாலை மூன்று மணிக்கு நன்றாக இருந்த ஒரு பெருசு ..திடிரென்று சோறு வேண்டாமென்று  போய்ச் சேர்ந்தார்.

அந்த பெரியவரின்  மகன் வழி பேரன். பேராசிரியராக இருந்ததால் அதிக செலவு செய்து ஆட்ட பாட்டத்துடன் கொண்டு போய் அடக்கம் செய்தார்.

அடுத்தவாரம் அதே சனிக்கிழமை, அதே மூன்று மணிக்கு  நடுத்தர வயதுள்ள ஒருவர் . அவரும் திடிரென்று சோறு வேண்டாமென்று போய்ச் சேர்ந்தார். அவருடைய குடும்பம் ஏழ்மையுடையதாக இருந்தாலும் சடங்கு, சாத்திரங்கள் எதையும் புறந்தள்ளாமல் செய்து அவரையும் மயானத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்துவிட்டு வந்தனர்.

மூன்றாவது வாரம் அதே சனிக்கிழமை.அதே மூன்று மணிக்கு ஒரு வயதான பெண்மணி அவரும்  தனக்கு சோறு வேண்டாமென்று அவரும் போய்ச் சேர்ந்தார்.அந்த ஊரில் உள்ள செத்தவர்களின் உற்றார் உறவினர்கள் பயபீதியில் உரைந்து போயினர்.

அதே சனிக்கிழமை, அதே மூன்று மணி மூன்றுபொணம் என்று அடுத்த சனிக்கிழமை யாருடா?? என்று பயம் கலந்த எதிர்பார்ப்புடன் சனிக்கிழமையை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

சனிப்பொணம் விழுந்தா தனியா போகதாம், துணைக்கு ஒரு பொணத்தை கூட்டிட்டு போகுமாம்.  அதுதான் அந்த ஊரில் நடந்திருக்கிறதாம்.

சனிக்கிழமை செத்த பொணத்துக்கு சடங்கு சம்பிராதயப்படி  அடக்கம் செய்யும்போது துணைக்கு ஒரு பொணம் கேட்கக்கூடாதுன்னுதான் உயிரோடு ஒரு கோழிக்குஞ்சை அதனோடடு சேர்த்து புதைப்பாங்க...........

அதையெல்லாம் மீறி... சடங்கு சம்பிராதயங்களை எல்லாம்  தூக்கி எறிந்துவிட்டு, சனிப்பொணம். துணைக்கு ஒரு பொணத்த  கேட்குதாம்.

 ஒரே தெருவில ஒரே உறவினர்களில் ஒரே நட்பு வட்டத்தில் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் சாவு நடப்பது,  அந்தந்த உறவுக்காரர்களின் மத்தியில் செய்முறை செலவுகளை அதிகப்படுத்தி கடன் கேட்டு அலையும் நிலையை ஏற்படுத்துகிறதாக புலம்புகிறார். செய்முறை செய்தே ஓஞ்சு போன ஒருத்தர்.

அடுத்த சனிக்கிழமை ஏதாவது நடந்தா நா... என்ன பன்றதுன்னு சனிக்கிழமையை எதிர்பார்த்து காத்துக் கிடக்கார்.

செவ்வாய் 22 2014

கிரிகெட்டுக்குள் வேட்டி தடை ஏன்???

படம்..kalapam.ca


21/ 7/ 14 ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு வழக்கின் வாய்தாவுக்கு சென்று இருந்த போது  மாவட்ட கோர்ட்டின் வக்கீல் அய்யாமார்கள் எல்லாம் “பாய்காட் செய்து இருப்பது தெரிய வந்தது.

எதற்கு வெளிநடப்பு என்று விசாரித்தபோது, வேட்டி கட்டி சென்ற நீதி அரசரை கிரிகெட்டு கிளப்புக்குள் அனுமதிக்க மறுத்ததை எதிர்த்து வெளிநடப்பு செய்வதாக தெரிந்தது. 

வக்கீல் அய்யாக்கள்  எல்லாரும் இனி கோர்ட்டுக்கு வரும்போது வேட்டி கட்டி வந்து தமிழரின் வீரப் பெருமையை நிலை நாட்டினால்தான் கிரிகெட் மட்டையர்களுக்கு புரியும்.

நீதி மன்றங்களில் வழக்கு விசாரனைக்கு வரும் மனுதாரர்களைவிட , வழக்கு நடத்தும் வக்கீல்களின் கூட்டமே அதிகமிருப்பதாக  தெரிந்தது. அது இந்த வெளி நடப்பின் காரணமாக அந்தக் கூட்டம் வெகுவாக குறைந்து இருந்தது.

வழக்குகளின் போது வக்கீல்கள் யாரும், தமிழனின் வீரப்பெருமையை நிலை நாட்டுவதற்க்காக வெளிநடப்பு செய்தபடியால் ஆஜராகவில்லை.அதனால் எங்களை.. மூன்றாதவதாக கூப்பிட்டுவிட்டு வெளியே காத்திருக்கச் சொன்னார்கள்.

அதனால்  கோர்ட்டுக்குள்   உள்ள சில திண்டில் உட்கார்ந்து ஒவ்வொரு தோழர்களும் கதை அளக்கத் தொடங்கினார்கள்.

அப்போது ஒரு தோழர் இந்த வேட்டி பிரச்சினை இன்னுமா தீர வில்லை!!. அதான் அம்மா, பாஞ்சாலிக்கு கண்ணன் சேலை கொடுத்து மானத்தை காப்பாத்தியது போல...........

தமிழகத்தை நிரந்தரமா..ஆளும் அம்மா..... கண்ணனாக உருவெடுத்து  பாஞ்சாலிகளான தமிழக வேட்டி கட்டிய ஆண்களுக்கு அதாவது வீரத்  தமிழர்களின் மானத்தை காப்பத்திவிட்டாரே......  தமிழகத்து வேட்டியை மதிக்கதாவர்களின் கிளப்புகளுக்கு தடை விதிக்கப்படும் என்று ஆணையிட்டுள்ளாரே , ..........

வேட்டியை மதிக்காத அந்த துரியோதணர்களும், அம்மாவின் ஆணைக்கு பணிந்து விட்டார்களே....பின் என்ன பிரச்சினை என்றார்.

அப்போது வேறு தோழர். கிரிகெட்டுக்குள் ஏன்? வேட்டியை அனுமதிப்பதில்லை என்று தெரியுமா? என்றார்.

அப்போது நான் ,இருபது வயசு வரையில் டவுசர் பேண்ட்தான் அணிந்திருந்தேன் தோழர். வேட்டி கட்டிய பழக்கமே  இன்றுவரை எனக்கு இல்லை தோழர்.என்னுடைய முதலாளிகூட.  டவுசர் போட்ட காலத்திலிருந்தே என்னைத் தெரியும்  என்று கிண்டலடிப்பார் தோழர்.. பிற்பாடுதான் கைலி கட்ட ஆரம்பித்தேன். அதனால் எனக்கு வேட்டின் அருமை பெருமை மற்றும் கிரிகெட்டுக்குள் வேட்டி கட்டியவரை்களை அனுமதிமதிப்பதில்லை என்பதும் எனக்கு தெரியவில்லை. அந்த வரலாற்று சம்பவத்தை சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன் என்றேன்.

அந்தத் தோழர் சொல்ல ஆரம்பித்தார். அது வந்துத் தோழர்.    தொலைக் காட்சியில் கிரிகெட் விளையாட்டை நேரடி ஒளிபரப்பை பார்த்து இருக்கீங்களா? என்றார். 

பக்கத்தில் இருந்தவர் ஓ....பாத்திருக்கிறோம் தோழர் சொல்லுங்க என்றார்.

கிரிகெட் விளையாட்டின் போது  விளையாடுபவர்கள் ரன்னு எடுத்தாலோ, கோட்ச் பிடித்தாலோ....அப்போது கிரிகெட் ரசிகர்களின் கூச்சல் பெரிய ஆரவாரமாக இருக்கும் அப்போது நேரடி ஒளிபரப்பும் கேமரா அந்த ரசிகர்களை படமெடுக்கும் ரசிகர்களும் அந்த கேமராவைப் பார்த்து ஆ....ஆ..ஊ...ஊ என்று ஊளையிடுவார்கள்  பார்த்து இருப்பீர்கள்.

அப்போது அந்த கிரிகெட் மட்டை ரசிகர்களை பார்த்தீர்கள் என்றால்.அவர்கள் காட்டவாசியைப் போலவோ, ஆதிவாசிகளைப்போலவோ, வல்லரசு இந்தியாவின் நாகரிகத்துக்கு பொருந்தாத வேசங்களுடன் காட்சி அளித்துக் கொண்டு இருப்பார்கள்.

ரன்னு எடுத்த போதும்,அவுட் ஆன போதும் ஊளையிடும் காட்டுவாசி ரசிகர்களை   நேரலை ஒளிபரப்பில் கேமரா படம் பிடித்து வரும்போது   வேட்டி கட்டிய ஆதிவாசி ரசிகர் என்னசெய்வார்......

என்ன செய்வார்................. என்ன செய்வாரா???

விளையாட்டு பரவசத்தில் விளையாட்டு வீரர்களின் நாட்டு கொடியை பிடித்து அங்கிட்டும். இங்கிட்டும் ஆட்டுவது மாதிரி தான் கட்டியிருக்கும் வேட்டியை அவிழ்த்தோ,அல்லது வேட்டி கட்டிய மற்ற ஆதிவாசி ரசிகரின் வேட்டியை உருவியோ, கேமராமுன் ஆட்டிவிட்டால் அது நேரடி ஒளிபரப்பாகி விடுமல்லவா............



ஆரம்பத்தில் இப்படித்தான்  கிரிகெட்டின் போது வேட்டி கட்டி சென்ற ரசிகர்கள் கொண்டாட்டம்  இன்றைய டாஸ்மாக் குடிமகன் கொண்டாட்டம் மாதிரி  கட்டிய வேட்டியை உருவி  நேரடி ஒளிபரப்ப முன் கொடி அசைத்தார்களாம். அதிலிருந்துதான்  கிரிகெட் மைதானம்,கிளப் போன்றவற்றிக்கு வேட்டிகட்டி வருவதற்கு தடை விதித்தார்களாம்.

அந்தத்தடைதான் பிரிட்டிஸ்காரன் போன பிறகும். அவன் போட்ட.சட்டம் கோர்ட்டு, அங்கி போன்றவற்றை மாற்றாமல் பின்பற்றி ஒழுகி வரும் வீரப்பரம்பரைகள்  மாதிரிதான். இந்த கிரிகெட் கிளப்புகளும்  பரம்பரையாக ஒழுகி வந்தன.

அந்த வீர நடைமுறை சட்டத்தை பின்பற்றித்தான். வேட்டி கட்டி சென்றவர்களை தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்து இருக்கிறார்கள்.

இது தெரியா ... வெங்காயங்கள்தான் தமிழ் கலாச்சாரம், தமிழ் பாரம்பரியம் , தமிழ் மரபு ,மசிறு,மட்டைன்னு பீத்தீதுகள் என்றார்.

இதோடு கூடுதலாக ஒரு தகவலையும் சொன்னார். வேட்டி என்பது ஆதிக்கச் சாதிகளின் அதிகாரச் சின்னம் என்றார்.

எப்படி என்று கேட்டபோது சொன்னார்.  வேட்டி கட்டிய நீங்கள், கட்டிய வேட்டியை மடித்து கட்டியபடி இந்தக் கோர்ட்டின்  மாஜிஸ்ரேட் முன்னால் நிற்க முடியுமா..??? மடித்து கட்டிய வேட்டியுடன் காவல் நிலைய ஆய்வாளர் முன் நிற்க முடியுமா??... திங்கள் கிழமைதோறும் மனு நீதி நாள்ன்னு மனு வாங்கும் மாவட்ட ஆட்சியாளாரிடம் மடித்து கட்டிய வேட்டியுடன் மனு கொடுக்க முடியுமா??? உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள் என்றார்.

அது மரியாதைக்கு என்றேன் நான்.

என்ன மரியாதை, அவர்கள் மக்களின் ஊழியர்கள் என்றுதானே சொல்கிறார்கள். பேண்ட்  அணிந்துள்ள நீங்கள் மரியாதைக்காக பேண்ட்டை தூக்கிக் கொண்டு நிற்க முடியுமா?? என்றார்.

எனக்கு அவர் சொல்வது அப்பட்டமான உண்மைகள் என்று தோன்றியது எனக்கு மறுப்பு எதுவும் சொல்ல தோன்றவில்லை.

வேறு  தோழர் மறுப்பு சொல்ல முயன்றபோது .எங்களை கோர்ட்டிலிருந்து  “ குருசாமி வகையாற” என்று அழைத்தார்கள் வாசலில் நின்ற தோழர் விரைவாக வரும்படி அழைத்தார்.

எல்லோரும் ஓடி , மாஜிஸ்திரேட் முன்  “உள்ளேன் அய்யா”என்று சொல்லாமல் ஆஜராகினோம்.



இதன் தொடர்ச்சி அடுத்த வாய்தாவின் போது தொடரும்.


திங்கள் 21 2014

டாஸ்மாக் குடிமகன் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை.

படம்..pusuriyan.wordpress.com

என்னாது, அரசு அலுவலர்கள் எல்லாம் வாயை ஊதி காண்பித்து அலுவலகத்துக்குள்ளே செல்கிறார்கள்.


அது வேற ஒன்னுமில்லப்பா.... இனிமேல் டாஸ்மாக் குடிமகன்கள் என்று அங்கீகாரம் பெற்றவர்கள்தான்  அலுவலகத்துக்கு உள்ளே செல்ல முடியுமாம். அதான் ஒவ்வொருத்தரும் வாயை ஊதிகாட்டி நிருபித்துகிட்டு போறாங்க......

அடப்பாவிகளா.........இனி போற போக்க பாத்தா குடிக்காதவன் எல்லாம் குடிமகன் இல்லேன்னு சொல்லிருவாங்கே போல.............

ஞாயிறு 20 2014

படுத்துகினும் குந்திகினும் ஜெயித்தவர்கள்.

ஒருவர் அமெரிக்காவில் படுத்துக் கொண்டு தமிழ்நாட்டு தேர்தலில் பிரச்சாரமே  செய்யாமல் தன் உருவப் படத்தை காட்டியே ஜெயித்தார். 


இன்னொருவரோ நடக்க முடியாத நிலையிலும் உட்கார்ந்து கொண்டே பிரச்சாரம் செய்து ஜெயித்தார்.

இவர்கள் எல்லாம் ஜெயிக்கும்போது, மோடி ஜெயித்ததில் வியப்பு வேறு உண்டா  சாமீ...........

படுத்தக்கொண்டே ஜெயித்தவர்.(www.mayyam.com)




உட்கார்ந்து கொண்டெ ஜெயித்தவர்(www.athishaonline.com)

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...