பக்கங்கள்

வியாழன் 23 2016

வாக்குரிமையால் என்ன பயன்..?


அந்தக் கருத்தரங்க கூட்டம் முடிந்ததும். அவருடைய சிந்தனையில் இவைதான் நிகழந்தது.

என்ன பயன்? அவற்றால் என்ன பயன்? என்றுதான் அவர் மனது அசை போட்டது. வீட்டிற்கு சென்றவுடன் மறந்துவிடக்கூடாது என்பதற்க்காக வாயினால் சொல்லி பார்த்துக் கொண்டார். மேலும் மறக்காமல் இருப்பதற்க்காக பேப்பரில் எழுதியும் பார்த்துக் கொண்டார்.

அவர் எழுதிய பேப்பரில்  எழுதி .இருந்தது.

1.. மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு எழுத்தறிவே இல்லாத போது எழுத்துரிமையால் என்ன பயன்?

2. கல்வி அறிவு  இருந்தும்  லட்சகணக்கில் பணமின்றி பத்திரிகை நடத்த முடியாதபோது கருத்துரிமையால் என்ன பயன்??

3. வேலை வாய்ப்பே இல்லாத போது இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்யும் உரிமையால் என்ன பயன்???

4. இருக்கும் தொழிலே நசிந்து கொண்டு இருக்கும் பொழுது எங்கு வேண்டுமானலும் தொழில் நடத்தும் உரிமையால் என்ன பயன்????

5. பட்டினியால் சுருண்டு கிடப்பவர்க்கு வாழ்வுரிமையால் என்ன பயன்?????

6. உணவு. தண்ணீர், மின்சாரம், சாலை, கல்வி, மருத்துவம், வேலை போன்றவற்றில் எதுவுமே வழங்க முடியாத போது வாக்குரிமையால் என்ன பயன்??????..

நானும் படித்தபோது எனக்கும் அதேதான் எனது மனதிலும் தோன்றியது.


புதன் 22 2016

வசை புராணம் பாடுவதில் இரட்டை வேடம்.



நான் முதல்வராக இருந்த காலத்தில்
எந்த அளவுக்கு கச்சத்தீவினை மீண்டும்
பெறுவதற்காகப் போராடமுடியுமோ,
வாதாட முடியுமோ, அந்த அளவுக்கு
போராடி இருக்கிறேன் வாதாடி இருக்கிறேன்.
எனவே ஜெயலலிதா அவ்வப்போது
நினைத்துக்கொண்டு என்மீது
வசைபுராணம் பாடுவதை
இனியாவது நிறுத்திக் கொள்வது நல்லது

-திமுக தலைவர் கருணாநிதி.

செவ்வாய் 21 2016

அப சகுனமா.இல்ல நல்ல சகுனமா???




வேலையின் இடையே
தொலை காட்சியில்
ரெட்ட சுழி
படம் பார்த்துக்
கொண்டு இருந்த
வேளையில்  நண்பர்
ஒருவர் வந்தார்.
படம் பார்த்தபடியே
என் காதருகில்
எரட்டச் சுழியில்
நடித்த சிகரம்
போய் விட்டது
இமயம் எப்போ
போகும் என்று
கேட்ட போது
கரண்ட் கட்
ஆகி விட்டது
இது அப
சகுனமா.இல்ல
நல்ல சகுனமா???



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...