பக்கங்கள்

சனி 01 2013

கொடை உள்ளம் கொண்ட நாவலாசிரியர்......


தீவிர முஸ்லீகளால் அடிக்கடி கல்லெறியப்பட்டு,கொலை தண்டனை விதிக்கபட்டு தேடப்படும் குற்றவாளியாக பிரபலமானவர் சல்மான்  ருஷ்டி என்ற நாவலாசிரியர்.

இவர் எழுதிய “மிட்நைட்சில்ரன்என்ற நாவலை ,தீபமேத்தா என்பவர் படமாக்க விறும்பி அது சம்பந்தமாக அவரிடம் கேட்டபோது

சல்மான்ருஷ்டி-தீபமேத்தாவுக்குவுக்கு தன்நாவலை படமாக்க உரிமை அளித்ததோடு, தீபமேத்தாவிடம் ஒரேஒரு டாலர் மட்டும் இந்திய ரூபாயில் 54.43யை மட்டுமே தொகையாக பெற்றுக்கொண்டாராம்.


வெள்ளி 31 2013

ஒரு தீர்ப்பும் அதனுடான கருத்து வதையும்.......

 
உச்சி(குடுமி) நீதிமன்ற நீதிபதிகளான அல்டாப்ஆலம்,ரஞ்சன்பிரகாஷ் தேசாய் இவர்களிடம் விசாரனைக்கு வந்த வந்த விவகாரத்து வழக்கில் ஆந்திரா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து,அந்த வழக்கில் விவகாரத்து வழங்கி தீர்ப்பளித்தனர்.


அந்த வழக்கின் தீர்ப்பின்போது நீதிபதிகள் கூறியது.

கனவன்-மனைவி ஒருவருக்கொருவர் அவதூறான புகார்களை கூறுவதும் சித்ரவதைதான். கனவனும்-மனைவியும் ஒன்றாக வசிக்காவிட்டாலும் இதேபோல் சித்ரவதை செய்ய முடியும் என்று கூறினார்கள்.

இந் தீர்ப்பை  முன்மாதிரியாகக் கொண்டு, சரியான ஆதாரங்களை கணக்கில் எடுக்காமல்,தீர விசாரிக்காமல், சட்ட வழிமுறைகளை பின்பற்றாமல் தூக்கில் போடுவதும் சித்ரவதைதான்.

தாக்கல் செய்த வழக்குகளை குறித்த காலக்கெடுவுக்குள் முடிக்காமல் ரப்பரே அறுந்து போகமளவுக்கு இழுத்தடிப்பதும்  சித்ரவதைதான்.
பயத்தின் காரணமாக அநியாயத்துக்கு எதிராக தீர்பளிக்காமல் ஒதுங்கி கொள்வதும் சித்ரவதைதான்.

போலீசு,ஈராணுவம் கொடுமைகள்,அத்துமீறல்களுக்கு எதிராக தீர்ப்பு சொல்லாமல் நழுவிக்கொள்வதும் சித்ரவதைதான்.

ஆக.சஞ்சய்தத் மாதிரி ஆட்கள் கிடைத்து தண்டித்துவிட்டால். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்ன்னு புழுகுவதும் சித்ரவதைதான்.

இவற்றையெல்லாம் பதவியில் இருக்கும்போது சொல்ல பயந்து மறந்து ஓய்வு பெற்ற பிறகு சொல்லாமல் இருப்பதும் சித்ரவதைதான்.


புதன் 29 2013

ஒரு பிராமணரை நான் வரவேற்கிறேன்........

இந்த நாட்டில் தொழிலாளர் வர்க்கத்துக்கு இரண்டு எதிரிகள்,ஒன்று பிராமணியம்,இன்னொன்று முதலாளித்துவம்.

சுதந்திரம் சமத்துவம்,சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படைஉரிமை,உணர்வை மறுக்கும் பிராமணியத்தை வெறுக்கிறேன்.

முதலாளித்துவம் தொழிலாளர் வர்க்கத்தின் உயர்வை நலிவுறச்செய்யும் இந்தக் கொள்கையையும் வெறுக்கிறேன்.

பிராமணியம் என்பது-மேல்சாதி,கீழ்சாதி- உணர்வு கொண்டுள்ள மற்றும் உயர்வு தாழ்வு கற்ப்பிக்கிற சிந்தனைகளைக் கொண்ட பிராமணர்களையும் பிற சாதியினரையும் வெறுக்கிறேன்.

இத்தகைய அந்தஸ்துகள் மற்றும் அநீதியான அதிகாரம் என்னும் உணர்விலிருந்து விடுபட்ட ஒரு பிராமணரை நான் வரவேற்கிறேன்

--டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்



செவ்வாய் 28 2013

செப்டம்பர்11 அமெரிக்க அரசின் உள்ளீட்டு சதி!!


ஒவ்வொரு நாட்டுக்கும் அனைத்து அதிகாரமும் பெற்ற ஒரு உளவு நிறுவனம் இருக்கும். இந்தியாவுக்கு ரா...என்றால் அமெரிக்காவுக்கு சி.ஐ.ஏ.,

இந்தியாவில் ரா உளவு அமைப்பானது தனது எஜமான விசுவாசத்துக்கேற்க தனது கைங்கரியத்தை செயல்படுத்தி இந்திய மக்களுக்கு பீதியூட்டி போராட்ட திசைகளை திருப்பிவிட்டு மாற்றுகிறதோ,அதேப்போல....

உலகத்தையே தன் ஆளுகைக்குள் கொண்டுவர அடாது பாடுபட்டு வரும் அமெரிக்க எஜமான்னுக்கு பக்கபலமாக இருப்பது சி.ஐ.ஏ

அமெரிக்காவின் அடாது செயலை மறைக்கவும்.உலக வர்த்தக மையத்தின் மேல் உள்ள கோபத்தை திசை திருப்பவும்.உலக போலீஸ்காரனாக நிரந்தர அங்கீகாரம் பெறவும் நடத்தப்பட்ட சதிதான் செப்டம்பர்11.

மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் மக்களிடையே ஒரு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில்..........

செப்டம்பர்11 என்பது அமெரிக்காவின்  அரசின் உள்ளீட்டு சதிதான் என்று தெரியவருகிறது.


செப்டம்பர்11 தாக்குதல் சம்பவம்,அல்கைதாவின் வேலையல்ல என்றும் அது அமெரிக்க அரசின் உள்ளீட்டு சதிதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இதை பாமர மக்கள் மட்டுமன்றி.படித்தவர்களும் நம்புகின்றனர்.

 கலையரசன் கலை-ன் பேஸ்புக்லிருந்து.......

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...