பக்கங்கள்

சனி 29 2015

நண்பரின் நிறைவேறாத ஆசை...!!!


Air Berlin B737-700 Dreamliner D-ABBN.jpg
படம்-https://ta.wikipedia.org/s/1qf0


நண்பரின் நண்பர் ஒருநாள் எனது செல்பேசியில் என்னை அழைத்தார்.

நண்பா... பணி ஓய்வு முடிந்து ஊருக்கு வருகிறேன். இப்பவாவதுஎன் ஆசையை நிறைவேற்றுவாய் என்று நிணைக்கிறேன். சொல் உனக்கு என்ன வேண்டும். நான் வாங்கி வருகிறேன். என்றார்.

தாங்கள் கேட்டதே எனக்கு மகிழ்வு..நண்பா... பணியின் பணப் பலன்ளைப் பெற்று பத்திரமாக ஊர் வந்து மணைவி மக்களை பாருங்கள். பிறகு..தங்களின் ஆசையை நிறைவேற்றுகிறேன் என்றேன்.

ஊறுக்கு வந்தவுடன் எனது மனம் மாறிவிடும் நண்பா.... உனக்கு பிடித்ததை சொல்லப் போகிறாய்யா..... இல்லை எனக்கு பிடித்ததை வாங்கி வந்து விடுவேன் என்றார் நண்பர்.

விருப்பமில்லாதவற்றை வாங்கி பாழாக்கி விடுவார் என்ற பயத்தில் நண்பரிடம் கூறினேன்.

நண்பா.. எனக்கு பிடித்தது கிடைக்கவில்லை என்றால்.. வேறு எதையும் வாங்கி வராமல் இருந்தால்..தங்களின் ஆசையை நிறை வேற எனக்கு என்ன வேண்டும் கூறுகிறேன் சம்மதமா...? என்றபோது..

சரி. சம்மதம். சொல்.  எனறார்.

நான் கேட்பது கிடைக்க வில்லை என்றால்  கண்டிப்பாக வேறு எதையும் வாங்கி வரக்கூடாது சரியா.?.. என்று விட்டு.. தங்கள் நண்பர்க்கு அதாவது நண்பரின் நண்பர்க்கு என்ன வாங்கி இருக்கிறீர்கள் என்று கேட்டேன.

அவன் உன்னைப்போல்தான் முதலில் ஊரு வந்து சேரும் என்றான். வற்புறுத்தி கேட்டபோது.. எனக்கு எதுவும் வேண்டாம்..ஆசைப்பட்டால் கிடைக்காது என்பதால் ஆசையே படாமல் இருக்கும் உனக்கு வாங்கி வருமாறு  கூறினான். சொல் உனக்கு என்ன வேண்டும்  என்று...... என்றார்.

சரி,தாங்கள் பயணம் செய்வது ரயிலிலா... விமானத்திலா...?????என்றேன்

விமானத்தில்தான்...--- எதுக்கு கேட்கிறாய்.... என்றார்

சும்மாதான்... கேட்டேன்..... தாங்கள் வரும்போது  ஒரு விமானம் ஒன்றை எனக்கு வாங்கி வாருங்கள்... அதில் நாம் மூவரும் அமர்ந்து பறந்து மகிழலாம்... என்றேன்.

என்ன.... விளையாட்டா..... என்றார் நண்பர்.

இல்லை..நண்பா... உண்மையைத்தான் சொல்கிறேன் ..எனக்கு பிடித்தது விமானம்தான்... அதை வாங்கி வாருங்கள்....என்றென்

அடப்பாவி...அத வாங்குவதற்கு..எனது முழப்பணமும் போதாதே..டா...என்றார் நண்பர்.

அதனால்தான்  நண்பா....முதலிலே சொன்னேன் பத்திரமாக ஊரு வந்து சேரும். பிறகு இங்கு வந்த பிறகு பார்த்துக்கிறலாம் ” என்றேன்.

படுவா..ரஸ்கல்.... வந்து வச்சுக்கிறேன்டா என்று விட்டு செல் பேசியை அணைத்துவிட்டார்.

நண்பரின் நண்பர்  உயிரோடு இருந்து கேட்ட ...  அவரின் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது...

Image result for நண்பர்
படம்-tamilnanbargal.com


வெள்ளி 28 2015

டாஸ்மாக்கை எதிர்த்து போராடிய போராளிகளுக்கு கவிஞன் ஷெல்லி போற்றிப் பாடிய ஒரு கவிதை,

படம்--மதுவுக்கு எதிராகப் போராடி சிறை சென்ற மாணவ போராளிகள்.

அதிமுக அரசின் காட்டாட்சிக்கு எதிராக ,டாஸ்மாக்கை ஒழிக்க ஓரணியில் திரண்டு போராடி சிறை சென்ற போராளிகளுக்கும்  முழு மதுவிலக்கை அமுல்படுத்தும் வரை டாஸ்மாக எதிர்ப்பு போராட்டத்தை தொடரும் போராளிகளுக்கும்


துயில் களைந்தெழும் சிங்கம் போல
வெல்லப்பட முடியா ஆற்றலுடன்
எழுக! வெகுண்டெழுக!!
உறங்குகையில் படிந்த பனித் துகளை
புழுதி மண்ணில் உதறி எறிவது போல்
எறிக உமதடிமைத் தளைகளை!
நீங்களோ  பலர்,
அவர்களோ, சிலர், மிகச்சிலர்.

(பெர்சி ஷெல்லி என்ற கவிஞன் 1819- ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இராணுவத்தை எதிர் கொண்ட மான்செஸ்டர் தொழிலாளர்களைப் போற்றிப் பாடிய கவிதை.)


madurai tasmac blokade (2)
படம்-வினவு..– மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் முற்றுகை





குடி கெடுக்கும் டாஸ்மாக்கை மூடு..என்று போராடும் மக்களை குதறும் ஜெயா போலீசு


நன்றி !! வினவு

வியாழன் 27 2015

வாங்க..மது குடிக்க வாங்க ! ஆளும் அரசின் கல்லாபெட்டிய நிரப்பிட்டு போதையிலே போங்க...


அய்யா... வாங்க..
அம்மா...வாங்க..
அண்ணே.. வாங்க...
அக்கா ... வாங்க..
தம்பி  ...வாங்க...
தங்கச்சி...வாங்க...
பொடிப்பய்யா..வாங்க
ஆளும் அரசின்
மதுவை குடித்துவிட்டு
காலியா இருக்கும்
அரசின் கல்லாவை
நிரப்பி விட்டு ...
போதையிலே போங்க
அப்பத்தான் இலவசமா
கோவணத் துணியும்
இடுப்புத் துணியும்
கிடைக்கும் முங்க...
வாங்க....வாங்க..... வாங்க.....



கோவை NDLF (4)


கோவை NDLF (5)




மேலும் படங்கள் பார்க்க.. செய்திகள் படிக்க..நன்றி வுினவு..



புதன் 26 2015

இரண்டு கால் நாய்களும் நாலு கால் நாய்களும்...



Image result for சாதி வெறியர்கள்

.அவர்கள் இருவரும் அந்தத் தெருவுக்குள் நுழைந்தவுடன் வரிசையாக நான்கு நாய்கள் படுத்திருந்தன. அந்த நான்கு நாய்களை பார்த்ததும் இருவரும் பயத்தில்  சற்று பின்வாங்கி நின்று எப்படிச் செல்வது என்ற யோசனையில் நின்றனர்.

பாம்புக்கு படையே நடுங்கும் போது... தாங்கள் இருவரும் நாய்களுக்கு பயந்து நிற்பதை அவர்கள் இழிவாகக் கருதவில்லை.. இப்படி இருவர் நாயைக்கண்டு பயந்துகொண்டு நிற்பதை கண்டு...“ சும்மா   போங்கள்..அதுகள் ஒன்றும் செய்யாது என்றார் அந்தத் தெரு வழியே வந்த ஒருவர்.

சும்மா..போங்கள்..அதுகள் ஒன்றும் செய்யாது என்று சொல்லிவிட்டு போனவரின் வார்த்தையை  நம்பி அவர்கள் செல்ல தயாராக இல்லை. மாற்று வழி எதுவும் இருக்கிறதா,? என்பதை தெரிந்து கொள்வதற்க்காக.. மீண்டும் அந்தத் தெருவழியே யாராவது வருகிறார்களா??? என்று எதிர்பார்த்து காத்திருந்த வேளையில்....

இருவரைக் கடந்து டூவீலரில் ஒருவர் வேகமாய் சென்றார். படுத்திருந்த நாய்களும் சத்தம் கேட்டு பதறியடித்து  டூவீலரில் சென்றவரை நான்கும் நான்முந்தி நீ முந்தி என்றாவாறு விரட்டிக் கொண்டு சென்றன....

டூவீலரில் சென்றவரை கடித்து குதறியதோ... அல்லது அவர் அதுகளிடமிருந்து  தப்பித்து விட்டாரோ என்று தெரியாத நிலையில் விரட்டிச் சென்ற நாய்கள் உருமியபடி மீண்டும் தங்கள் பழைய இடத்துக்கே வந்து சேர்ந்தன...

இருவரில் ஒருவர் தன் செல்போனில் ஒரு நம்பரைத் தொடர்பு கொண்டார்.. அந்தத் தொடர்புக்காரர்.. தொடர்பு எல்லைக்குள் வெளியில் இருப்பதாக அந்தச் செல்போன் பதில் கூறியது. உதட்டைப் பிதுக்கிய வண்ணம்  யோசனையில் இருந்தனர்...

அந்தத் தெருவிலிருந்து ஒரு மாணவன் வந்தான்.கையில் சாமி பக்தியின் பெருமையைப் பறைசாற்றும் பெரிய கயிறு கட்டியிருந்தான். அவனிடம் அந்தத் தெருவுக்கு செல்வதற்கு மாற்று வழியைக் கேட்டபோது... ரெண்டு மூன்று தெருவை சுற்றி வர வேண்டியதிருக்கும் என்று விட்டு..அப்படிச் சுற்றி வந்தாலும் அங்கேயும் நாய்கள் இருக்குமே?.... என்று பயமுறுத்தினான்.....

எதுக்கும் போய் பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் மாணவன் சொன்ன தெருவைச் சுற்றி வந்த போது.. தெருவின் மூலையில் ஊன்றியிருந்த தெருப் போர்டை பாத்ததும். இருவரில் ஒருவர் தயங்கி நின்றார்.

தெருவில் உள்ள போர்டில் குடியானவர் தெரு என்று இருந்தது. குடியானவர் என்றால் விவசாயிகள் என்றுதான் அர்த்தம் என்றார் ஒருவர். அடுத்தவர் அது ஏட்டிலும், புத்தகத்திலும்தான்..  நடப்பில் குடியானவர் தெரு என்றால் மேல் சாதியினர் வசிக்கும் தெரு என்றுதான் அர்த்தம், பொருள். அப்படித்தான் அவர்கள் புரிய வைத்திருக்கிறார்கள். புரிய வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆகையினால்..தாங்கள் மட்டும் சென்று வாருங்கள்...பிரச்சினை வேண்டாம். தாங்கள் திரும்பி வரும்வரை நான் இங்கேயே காத்திருக்கிறேன் என்றார்.  மறுப்பு தெரிவித்து இருவரும் பேசிக் கொண்டு இருப்பதைப் பார்த்து அந்தத் தெருவைச் சேர்ந்த ஒருவர் இவர்கள் அருகில் வந்து நின்றார்.

நீங்க யார்..? என்ன சாதி???  கண்டவர்கள் எல்லாம். இந்தத் தெருவுக்குள் நுழைய முடியாது. தெரியுமா?? உயர் வகுப்பைச் சேர்ந்தவரகளாகவோ... இந்தத் தெருவில் இருப்போரின் உறவினர்காளக இருந்தால்தான் செல்ல முடியும் என்றுவிட்டு ஒருவரிடம் உன் சாதி என்ன என்று கேட்டார்.

நாங்கள் மனிதர் வகுப்பை சேர்ந்தவர்கள். ஆனால் சாதிமுறைகளை பயன்படுத்துவதில்லை , சாதியையும் சொல்வதில்லை.. எங்கள் இருவரின் உறவுக்காரரை பார்ப்பதற்க்காக இங்கு வந்தோம் என்றபோது.. வந்தவரை தொடர்ந்து மேலும் மூன்று பேர்கள் வந்து இருவரையும் சுற்றி நின்றார்கள்.

சாதியைச் சொல்லத் தயங்குபவர்களும், சாதியை மறைப்பவர்களும். சாதியை சொல்லாதவர்களும் கீழ்ச் சாதியை சேர்ந்தவர்கள்தான். இந்தத் தெருவுக்குள் இருவரும் போக முடியாது என்றார்கள் இருந்த நால்வரில் இருவர்.

நால்வரிடம் பேசிப் பயனில்லை என்று தெளிவாகத் தெரிந்த பின்  அந்தத் தெருவில் பார்க்க வந்தவரின் பெயரைச் சொன்னார்கள் ம்ம்...ம் அவனா...என்றபடி. சரி. அவனை எங்களிடம் சொல்லச் சொல்? என்றார்கள்.

இருவரில் ஒருவர் தன் செல்போனில் தொடர்பு கொண்டு அதை தன் காதில் வைத்த வண்ணம், வழி மறைத்து நின்ற நால்வர்களுக்குப் பின்னால் தன் பார்வையை செலுத்தி அந்தத் தெருவைப் பார்த்தார். நாய்கள் இருப்பதாக தெரியவில்லை. ..ஆனால் அங்கும் நாய்கள் இருக்குமே என்று மாணவன் சொன்னது நிணைவுக்கு வந்தது.

நெடு நேரமாக ரிங் செய்தும் நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளரின் செல்போன் சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்றே செல்போனில் அமைதியாக பதில் வந்தது.. இருவரும் நாலுகால் நாய்களை கண்டு பயந்ததுபோல் இரண்டுகால் நாய்களுக்கும் பயந்து சத்தமில்லாமல் நகர்ந்தனர்.


செவ்வாய் 25 2015

ஆசான்களாகவும் தோழர்களாகவும் நண்பர்களாகவும் இருந்த இருவர்...

படம்-வினவு--

மாபெரும் ஆசான்களான கார்ரல் மார்க்சும். எங்கெல்சும்  அவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவரகளாக இல்லை.

1818-ஆம் ஆண்டு பிறந்தவரான காரல் மார்க்ஸ், தனது காலத்தைச் சேர்ந்த பல்வேறு விதமான த்த்துவங்களை அனு அனுவாக, நுணுக்கமாக, விமர்சனக் கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்தார். “ ரெய்ன்ஷ் செய்டுங்  என்ற முற்போக்கு நாளேட்டின் ஆசிரியர் என்ற முறையில், காரல்மார்க்ஸ். தமது காலத்திய அரசியலையும்,வர்க்க மோதலையும்- குறிப்பாக குறிப்பாக ஜெர்மனியின் ரைன் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்க்கையை- விரிவாக ஆய்வு செய்யத் தொடங்கினார்.

 இளைஞரான காரல் மாக்ஸ் “ ஆளுமைமிக்கவராக, விரைந்து பணியாற்றுபவராக ,உணர்வு கொந்தளிப்புமிக்கவராக. எல்லையற்றத் தன்னமபிக்கைமிக்கவராக விளங்கிய அதே வேளையில், ஆழ்ந்த நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும், மேதமைமிக்கவராகவும், ஓய்வு ஒழிச்சலற்ற இயங்கியலாளாராகவும் விளங்கினார்.

எங்கெல்ஸ். ஜெர்மனியின் செல்வமிக்க முதலாளித்துவக் குடும்பத்தில் 1820-ஆம் ஆண்டு   பிறந்தார். அவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் கைவிட்ட போதிலும், சுயமாகவே கல்வி கற்றுக் கொண்டார். தமது குடும்பத்தின் நூற்பு ஆலையை  நிர்வகிப்பதற்க்காக 1842-ஆம் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் மாநகர்க்கு அனுப்ப்பட்டபோதும். அவரது மனதில் பிரெஞ்சுப் புரட்சியின் பாடல்கள் நிறைந்திருந்த்தாகவும், பாரிசின் புகழ்மிக்க சிவப்பு பயங்கரத்தின் அடையாளமான “கில்லட்டின்மீண்டும் தோன்றாதா என்று தன் மனம் எங்கியதாகவும் பிற்காலத்தில் அவர் நிணைவு கூர்ந்தார்.

எங்கெல்ஸ் இங்கிலாந்தில் முதலாளித்துவ வளர்ச்சியின் அதி உன்ன முன்னேறிய நிலையை நேருக்கு நேராகக் கண்டார். வல்லமைமிக்க பிரம்மாண்டமான தொழில் உற்பத்தி சாதனங்கள், புதிய ஆலை நகரங்களின் துன்பங்கள் நிறைந்த தொழிலாளர் சேரிகள், கொள்ளை நோய்கள் ஆகியவற்றை கண்கூடாகப் பார்த்தார்.

இங்கிலாந்து தொழிலாளர் வர்க்கத்தின் முதல் மக்கள் திரள் இயக்கமான சாசனவாதிகளைப் ( சார்ட்டிஸ்டுகள்) பற்றி அவர் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டார். எங்கெல்ஸ், முதலாளித்துவத்தை உளமார வெறுத்த அதேபொழுதில், முதலாளித்துவம் பழைய உலகை விரைவாக மாற்றியமைப்பதையும் தெளிவாக்க் கண்டார்.

அரசியல், பொருளாதாரம், வரலாறு மற்றும் த்த்துவத்தை ஆழமாகக் கற்று ஆய்ந்த்தன் அடிப்படையில், ஒரு புதிய, நறுக்கான, முற்றொருமை கோட்பாடுகளை உருவாக்க மார்க்சும், எங்கெல்சும் இணைந்து செயல்பட்டனர். அவர்களுடைய அறிவியல்பூர்வ அணுகுமுறை கம்யூனிசத்தைக் கற்பனாவாதப் பகற்கனவுகளில் இருந்து மீட்டு, எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட நடைமுறை அரசியல் உலகுக்குத் தகவுடையதாக மாற்றியது.

அந்த நாட்களில் மார்க்சையும் எங்கெல்சையும் நன்கு அறிந்த தோழர் பின்வருமாறு விவரித்தார். 

மார்க்ஸ் அப்போது 28 வயதேயான இளைஞர்: அவர் எங்களை மிகவும் ஈர்ப்பவராக இருந்தார்.. அவர் நடுத்தர உயரம், அகன்ற தோள்கள், நல்ல உடற்கட்டு, வேலைகளில் சுறுசுறுப்பு,..... அவருடைய பேச்சு நறுக்குத் தெறித்தாற்போல் சுருக்கமாக இருந்தது. அவருடைய தர்க்கம் அனைவரும் ஏற்கும் விதமாகவும், மறுக்கவியலாத்தன்மையோடும் இருந்தது. மார்க்ஸ் தம்மைப் பற்றி கனவு காண்பவராக இல்லாமல் எதார்த்தமானவராக இருந்தார்.

மார்க்சின் உயிருக்குயிரான சகோதர்ர் பிரடெரிக் எங்கெல்ஸ்- மெலிந்தவராக, கம்பீரமானவராக,அழகான தலைமுடி- மீசையுடன் காணப்பட்டார். ஒரு அறிவாளிக்குரிய தோற்றத்தோடு அல்லாமல் மிடுக்கான இளம் படைத் தளபதியைப் போல் இருந்தார்.


நன்றி!!----கம்யூனிஸ்டு அறிக்கையின் கதை.. யிலிருந்து.......


,

திங்கள் 24 2015

தமிழக போலிசாரின் மிருகவெறி--பார்க்காதவர்களுக்காக

இளங்கோவனை எதிர்த்து.அதிமுக அராஜக  போராட்டம் நடத்தும்போது போலீஸின் பவ்யமான செயலையும் பாருங்கள்




குடிமக்களின் குடியை கெடுக்கும் சாராயக்கடை( டாஸ்மாக்)  பொதுச் சொத்தாம் அதைக் காக்கத்தான்.அரசின் காவல்படை அதாவது அரசின் ஏவல்படை  சாராயகடையான பொதுச் சொத்தைக் காக்கத்தான் மிருகவெறியாக மாறியது.. இது   தெரியாதவர்களுக்காக பார்க்காதவர்களுக்காக    பதிவு.


குடிமக்களின் குடியை கெடுக்கும் சாராயக்கடை எதிர்த்து மாணவர்கள் போராடியபோது   போலீசின்  மிருக வெறியையும் பாருங்கள்.

நன்றி!  பார்க்காதவர்கள் .. போலீசின் மிருக வெறியையும் பாருங்கள்.





இளங்கோவனை எதிர்த்து.அதிமுக அராஜக  போராட்டம் நடத்தும்போது போலீஸின் செயலையும் பாருங்கள்.
படம்-www.ns7.tv



நன்றி! வினவு.....& புதிய தலைமுறை..





https://youtu.be/mYs3t63_yeYஇளங்கோவனை எதிர்த்த அதிமுக போராட்டத்தில் போலீசின் நரித்தனம்.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...