பக்கங்கள்

சனி 12 2012

அன்றே கொல்லும் பிரிட்டிஷ் காலனிய அரசு!!. நின்று கொல்லும் காந்தியின் அகிம்சை அரசு!

காந்தி அகிம்சை போராட்டத்தால்தான் கொடுங்கோலான பிரிட்டீஷ்
அரசயையே பணிய வைத்து இந்தியாவுக்கு சூதந்திரம் வாங்கித் தந்தாரு
ன்னு.யூ.கேஸிலிருந்து. கம்யூட்டர் சயின்ஸ் போன்ற ஒலக மகா படிப்பு
வரைக்கும் அச்சுக் குலையாமல் ஓதிக் கொண்டு இருக்கும் வாசகம்.
காந்தியின் “அகிம்சை போராட்டம் ”தவிர வேறு எந்த போராட்டமும்
வெற்றி அடையாதுன்னு ஒலக ஔறுவாயன்கள் பீற்றிக் கொள்ளும்
காலம் இது.


ஆனால் கண்ணுக்கு தெரிகின்ற நடைமுறைஉண்மைகளோ,  காந்தியின்.
அகிம்சை போராட்டத்தில். குசு விடுற வெற்றியக்கூட பெற முடியாது
இதோடு அகிம்சை போராட்டமான உண்ணாவிரதப்போராட்டத்தை
மத்திய.மாநில அரசுகளும் சரி,அரசு அதிகாரிகளும் சரி “ உலகிலே
உன்னதமான இந்தப்போராட்டாத்தை மண்டையிலிருந்து உதிர்ந்து
விழும் மயிர்க்குக்கூட மதிப்பதில்லை என்பதே நடைபெறுகின்ற
போராட்டத்தின் வயிலாக தெரிகின்ற மறுக்கமுடியாத உண்மைகள்

ஏகப்பட்ட சாடசியங்கள் இருந்தாலும். எல்லோருக்கும் தெரிந்த
போராட்டமான. கூடங்குளத்து உண்ணாவிரதப்போராட்த்தையே
எடுத்துக்கொள்ளுங்கள்.  மணிப்பூர்அயோரம் சாமிளா போரா
ட்டத்தையும்எடுத்துக்கொள்ளுங்கள் .காந்தியின் அகிம்சை
போராட்டத்தினைமதிக்கும் காந்தியஅரசின் யோக்கியதை புரியும்.


இந்த இரு போராட்டங்களும் இந்திய தேசிய அகிம்சா மமூர்த்தியால்
படைக்கப்பட்டு அவரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றிகொடி
நாட்டிய போராட்டம்தான



மணிப்பூரிலோ.சர்மிளாவுக்கு வலுக்கட்டாயமாக திரவ உணவை
ஏற்றுகிறார்கள். கூடங்குளத்திலோ, தேசிய அகிம்சாமூர்த்தியின் போராட்டத்தைகொச்சை படுத்தி உண்ணும் போராட்டம்
நடத்தியதோடு சிறுசு,பெருசு,பெண்கள் என்ற வித்தியாசம்
 இல்லாமல்பயங்கரவாதபொய்வழக்குகள்போட்டுஅகிம்சை
போராட்டத்தையே காயடித்துவிட்டார்கள்





காந்தி உண்ணாவிரத்போராட்டம் நடத்திய காலத்தில் பிரிட்டீஸ்
காலனிய அரசு உண்ணும் போராட்டம நடத்தியிருப்பார்கள்
போலிருக்கிறது. அதனால்தான் காந்தியின் வாரிசுகள் உண்ணும்
போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

காந்தி உண்மையிலே சுதந்திரம் வாங்கித்தருவதற்க்காக உண்ணா
விரதம போராட்டம் நடத்தியிருந்தால் அதனுடைய வலியும் தியாக
மும்.ஆடசிக்கட்டிலில் அமர்ந்து காலாட்டி கொண்டுஇருப்பவர்களு
க்கும்.ஆளும் அதிகாரஆட்சியாளர்க்கும் புரிந்திருக்கும்.



துரோகத்தின் விளைநிலத்தில் நேர்மையும்,தியாகமும் விரமுமா?
விளையும். துரோகமும்,மூடிமறைக்கும் பித்தலாட்டமும்,அடக்கு
முறையும்தானே விளையும்,




இன்னமும் பாருங்கள் தொடரும் கூடங்குள அகிம்சை
போராட்டத்தை கொச்சைபடுத்தும் விதமாக.கேவலப்படுத்தும்
விதமாக சுதந்திரம் பெற்ற ஆட்சியாளர்கள் படையை குவித்து
அணுஉலையில் மின்சாரம் தயாரிக்கும் கீழ்த்தரமான முயற்சி
களிலே செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அகிம்சாமூர்த்தி
யின் வாரிசுகள்.

பிரிட்டீஸ்காலனிய அரசு அன்றே கொன்றான்.(பகத்சிங்,சுகதேவ்
ராஜகுரு தோழர்களை ஒருநாளைக்கு முன்னமே கொன்றான்)
 ஆனால் காந்தியின்அகிம்சா மூர்த்தி அரசோ படையை குவித்து
பொய்வழக்கு போட்டு அலைக்கழித்து நின்று கொல்லுறான்.
இதற்கு நாலாவது தூண் முதலாளிகலாம் பக்க வாத்தியம்
தட்டுறான் காந்தி தேசமுன்னு.........




















































வியாழன் 10 2012

கூடும் வெயிலும்.குண்டி கழுவிடும் அரசும்

கடந்த மாதம் இந்தியா அக்னி-5யை ஏவி ஒலக வல்லரசு நாடுகளின்
வரிசையில் செர்ந்தது. அதன் எதிரொலியாக தமிழ்நாடும் அக்னி
வெயிலில் முதன்மை மாநிலமாக மாறும் என வானிலை ஆய்வு
மையம் அறிவித்தது.


சுட்டெரிக்கும் வெயில் அக்னி நட்சத்திரமாகமாறி மே மாதம்முதல்
4ந்தேதி தொடங்கி 28ந்தேதிவரை நீடிக்கும் என்றது.அதாகப்பட்டது
கூரியனில் இரந்து நீண்ட அலை,சிற்றலை என இரண்டு அலை(
சுனாமி அலைமாதிரி) வருகிறது. அதில் சிற்றலையானது பூமியில்
உள்ள உயர்ந்த இடங்களை தாக்குமாம். இதனால்தான் உயர்ந்த
இடங்களான ஊட்டி,கோடைகானல்களில் வெப்பம் அதிகமாக
இருப்பதில்லையாம்.

நீணட் அலையானது அலையானது தாழ்வான பகுதிகளையே
தாக்குகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் அதிக வெப்பமாக
இரக்கின்றன.. இது மே மாதத்தில் தொடங்கி சூலை யில் அதி
கரித்து ஆகஸ்டில் குறையமாம்.

இந்த நாலு மாதங்களில் காலையில் காற்று வீசினால் இடியுடன்
மழை பெய்து வெயிலின் தாக்கம் குறைந்து இயல்பு நிலையில்
இருக்கும். கடல்காற்று வீசுவதற்கு தாமதமானால் வெப்பம்
அதிகரிக்கும்.

இந்த வெயில் அலை கூடுவதற்க்கும் மழை வர மறுப்பதற்கும்
வந்தால் நாச காடாக்கவதற்கும் காரணம். மூட நம்பிக்கைகள்
நிறைந்த சுயநல மக்களும், இயற்கை வளங்களை அழித்து லாபம்
பார்க்கும் பெரும் தொழில் அதிபர்களும். இந்த உள்நாட்டு,பன்னாட்டு
தொழில் அதிபர்களுக்கு போட்டி போட்டு குண்டி கழுவும்
அரசுகளும்தான்.

ஞாயிறு 06 2012

கனவில் வந்த சிவன்.

மின்விசிறி நல்லா இருந்தபோது மின்சாரம் இல்லை.மின்சாரம்
கிடைக்கும்போது மின்விசிறி இல்லை.என நொந்து கொண்டு
புழுக்கத்தடன் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தேன்.
வேலை செய்த அசதியிலாவது தூக்கம் வரும் என்று எதிர்
பார்ப்பும் தோற்றுக்கொண்டு இருந்தது.

நாளைக்கு எப்பாடு பட்டாவது மின்விசிறியை பழுது பார்த்து
வாங்கிவிடவேண்டும் என்று உறுதிககொண்டு விடியும்
நேரத்தை எதிர்பார்த்து கொண்டு இருந்தபோது.......................

மதுரை ஆதினகர்த்தர் இளைய பீடம் என்று சொல்லப்படுகிற
நித்தி என்ற நித்தியானந்தா. ஆர்பீட் தின்று பல்லெல்லாம்
வெள்ளையாக மாறிய மாட்டு பற்களைபோல் வெண்மை
பளிச்சிட்ட பற்களால் சிரித்தபடியே ஒரு கணம் சினிமாவில்
வர்ர மாதிரி பிளாஷ் பேக்கில் வந்து சென்றார்.

இவரை அடிக்கடி எங்கயோ பார்த்தமாதிரி இருக்கே.....என்று
யோசித்தபோது............ஆத்தாடி....அவ்வள லேசுல மறக்க
முடியமா?..... அண்ணனையும்,அண்ணியையும் காண்பிச்சு
  ஒலகம்பூராவுக்கும் புகழ்பரப்பி கல்லா கட்டிய சன்டீவியத்தான்
மறக்கத்தான் முடியுமா??..............

நித்தியாணந்தாவும்,ரஞ்சிதாவும் எனக்கு அண்ணனா? ரஞ்சிதா
என்ன அண்ணியா?  நான்தான் மூத்தவன். எனக்கு அம்பத்திரண்டு
ஆச்சு!  தம்பி நித்தியும் கொளுந்தியா ரஞ்சியும் பளிச்சிடும் பற்கள்
தெரிய வந்து சென்றார்கள். அவர்கள் தரிசனம் கொடுத்து சென்ற
சிறிது நேரத்தில் விளம்பர இடைவேளை வந்தவுடன் அவர்கள்
மறைந்தார்கள்.

சிறிது நேர இடைவேளைக்குப்பின் என் பெயரைக்சொல்லியபடி

“என்ன தோழர் நல்லாயிருக்கீங்களா”.என்று கேட்டபடியே ஒருவர்
வந்தார்...

“யாரென்று அடையாளம் கண்டுபிடிக்கமுடியவில்லை. தோழராக
இருக்கவும் வாய்பில்லை.” யோசிக்க அவகாசம் கொடுக்காமல்
வந்தவரே பேசினார்.

“யாருன்னு தெரியலையா”? நான்தான் சிவன்”...............

”சிவனா,எந்த சிவன். ஏட்டையாவ இருந்து சப்பு இன்ஸ்பெக்ட்ரா
மாறி என் வீட்டுப் பிரச்சினையில பொய்ப்புகார் கொடுத்தவங்களுக்கு
சார்பா....என் மீது பொய் வழக்கு போடுவேன்னு மிரட்டிய சிவனா....???

திரும்பவும் சிவனே பேசினார்.. மதுரை மீனாட்சி வீட்டுக்காரன்
சுந்தரேஸ்வரன்.”....என்றார்.

பிரிண்டிங் வேலை கொண்டு வந்திருப்பாருன்னு நெணச்சு..“ வாங்க
சார்.வாங்க, சார், இந்த சேர்ல உட்காரங்க சார்” என்றேன்.

வர்ர ,மே இரண்டாம்தேதி எனக்கும் மீனாட்சிக்கும் கல்யாணம்.....

உடனே, நான் இடைமறித்து, ரெண்டாதேதி கல்யாணத்த வச்சுகிட்டு
ஒன்னாந்தேதி வந்து பத்திரிக்கை அடிச்சு கொடுன்னா அடிக்க
முடியாது சார்., டைப் அடிச்சு முடிக்குறதுக்கள்ள ஒங்க கல்யாணம்
முடிஞ்சுரும் சார்”....

பொருங்க, பொருங்க,பத்திரிக்கையெல்லாம் பொண்ணு வீட்டுக்
காரங்க. அடிச்சுட்டாங்க.......... நா...... அதுக்கு வரலீங்க........வேறு
விசயமாக ஒங்கள பாத்துட்டு போகலாம்முன்னு.....இழுத்தார்.

அவரே சொல்லட்டமுனு பேசாமல் இருந்தேன்.....

 “வேற ஒன்னுமில்லை,நித்தியானந்தாவை தெரியுமில்ல”,

தெரியும்சார்,நேரில பாத்தது இல்லை, நித்தியும்ரஞ்சிதாவும்
ஒன்னாக இருந்ததை சன்டிவீயில பார்த்தபிறகுதான் நித்திய
தெரியும். இப்பக்கூட உங்க வீட்டுக்காரம்மா இருக்கிற தெருவுக்கு
பக்கத்தில இருக்கிற ஆதீனம் மடத்துக்கு குரு மகா சந்நிதானமாக
.நியமித்ததப்பத்தி சின்னத்திரயிலும் இணையத்திலும் வெளிவந்து
கிட்டு சார். நெருக்கமா வேறு சங்கதி எதுவும் தெரியாது சார்.......
.....
”சரி,இந்த விவகாரத்த பத்தி ,என்ன நிணைக்கிறிங்க!..வலி........

” நான். நிணைக்கிறது இருக்கட்டும், நீங்க என்ன நிணைக்கிற
சொல்லுங்க சார். நான் தெரிஞ்சுக்கிறேன்”...

”யோசித்தவறாக,தலையில் இருந்த முடியை ஒதுக்கி உச்சந்
தலையை சொரிந்தார்..சிவனுக்கு உச்சந்தலை வழுக்கையாக
 இருந்ததைக்கண்டு.....வாயைப்பிளந்தேன். சிவனக்கே மண்டை
வழுக்கையப்பா.......ம்ம்..ம்.. இருக்கட்டும் .... இருக்கட்டும்.....

சிவனே சொன்னார்.. என்கூட்டாளி மும்மூர்த்திகளில் ஒருவனான
பிரம்மன் இருக்கானே!  அவன் செய்யாத லீலையா?... ஊருப்பய
பொண்டாட்டியெல்லாம் தன் பொண்டாட்டின்னு நிணச்சுகிட்டு
நடந்தவன். அவன் செய்யாத அயோக்கிய தனமா??.. அவனையெ
படைக்கும் கடவுளாக தொழும்போது.,நித்தியும் ரஞ்சியும் செய்த
 லீலைகளா பெரியது. சரி.இதவிடு,நானே.என் கூட்டாளி விஷ்னு
வோடு ஓரினசேர்க்கை புரிந்தனே.. மும்மூர்த்திகளின் களவாளித்
தனத்தையெல்லாம் அவதாரம்.திருவிளையாடல் .புண்ணாக்கு
அது இது என்று வணங்கும்போது.....  சன்டீவீயும்.நக்கீரனும்
தங்கள் கல்லா பெட்டியை நிரப்புவதற்க்காக நித்தி- ரஞ்சி
லீலைகளை வெளியிட்ட விளம்பரத்தை பெரிதெனக் கொள்ளலாமா?

நித்தி நியமனத்தை எதிர்த்து என் லீலைகளைச்சொல்லி பொழுப்பு
ஓட்டுற பண்டார பரதேசி மடா திபதிகள் நீதிமன்றததுக்கு போவதற்கு
அருகதையிருக்கா......... ஞாயத்த சொல்லு .நா,,,,,ன் நித்திக்கு சார்பா
பேசுறதா தப்பா நெணைக்கக்கூடாது.

நாடே. தனியார்மயமா,தாராளமயமா போய்கிட்டு இருக்குது. இவிங்க
மதுரை ஆதினத்தை அரசுடமையாக்குன்னு கத்துறாங்க....

”பார்ரா ,சிவனுக்கு தனியார்மயம்,தாராளமயமெல்லாம் தெரிஞ்சு
இருக்குன்னு” வியந்தேன்.

”சே, மூவுலகையும் கட்டி அழுற சாமிக்கு அதெல்லாம் தெரியாமா
இருக்காதுன்னு சமாதானம்அடைந்து.”ஏஞசார், ஒங்க பவர காட்டி
எல்லாத்தையும் ஒரு வழிக்கு கொண்டு வர்ரதுதானே” சார்.....

ஏற்கனவே. பவர்கட்டா இருக்கு, இந்த லட்சனத்துல எனக்கு
பவரு இருக்கன்னு நம்பிக்கை வேறய்யா?..

இநநேரத்தில் சிவனின் செல்போன் சினுங்கியது.. அலோ,அலோ
என்றார். பதில்லை, நெட்ஒர்க் பிராபளமா இருக்குது. பட்டரு
அடிக்கிறான்.என்னைய தேடிக்கிட்டு இருக்காங்கே, நா...ன்
அவிங்க கண்ணுக்கு தென்படலேன்னா காணமேன்னு சொல்லி
இருக்கிற அப்பிராணி சப்பிராணியெல்லாம் புடுச்சு சாமி எங்கடான்னு
ஒதைப்பாங்கே....... நான் வர்ரென்னு சிவன் ஓடினார்...

பதறியடித்து சிவன் ஓடிய பின்னும் செல்போன மணி விடாமல்
அடித்தது........ அய்யோய்யோ,,,,,,,,,செல்போன வச்சுட்புட்டு
ஓடிட்டாரே........ செல்போனை எடுத்து .................................


ஆன் செய்தபோது.”தோழரே, சிவகங்கையில்.மேதின.பேரணியும
ஆர்ப்பாட்டமும் இருக்கு,  முன்கூட்டியே கிளம்பனும் ரெடியா
இருங்கன்னு தோழர் ஒருவர் பேசினார்.

மணியைப்பார்த்தால் பத்தை நெருங்கிக்கொண்டு இருந்தது.
அட,  நல்ல தூக்கத்துக்கு அடையாளம் கனவுன்னு சொல்லுறது
சரியாகத்தான் இருக்கிறது. என்று நிணைத்து எழுந்தேன்.




 .





ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...