பக்கங்கள்

சனி 23 2017

கலவர நாயகனின் நம்பிக்கை துரோகம்.....

அன்று ஒருநாள்.......


“நாட்டை தூய்மை
படுத்தும் மகா
யாகத்தை தொடங்கி
இருக்கிறேன் இந்த
யாகத்தில் நாட்டு
மக்கள் ஒவ்வொருவரும்
பங்கு பெற
வேண்டும்  இதனால்
ஏற்படும் துன்பங்களை
எனக்காக ஐம்பது
நாட்கள் பொருத்துக்
கொள்ள வேண்டும்
என்று அறை
கூவல் விட்டார்
கலவர நாயகன்


இன்றோ.......

ஐம்பது நாட்கள்
முடிந்து பத்து
மாதங்கள் கடந்து
விட்ட நிலையில்

மகா. யாகத்தில்
பங்கு பெற்ற
நாட்டு மக்களுக்கு
சமையல் எரிவாயு
மானியம் ரத்து
தினசரி பெட்ரோல்
டீசல் உயர்வு
ரேசன் மீது
தொங்க விடப்பட்டுள்ள
கத்தி வங்கி
சேவை கட்டண
உயர்வு ஜிஎஸ்டி
வரிக் கொள்ளை
போன்ற பொருளாதார
தாக்குதல்தான் சன்மானம்

வாழ்க! வளர்க!!
மகா யாகம் நடத்தி
சன்மானம் அளித்த
கலவர நாயகனின்
நம்பிக்கைத் துரோகம்..................




வெள்ளி 22 2017

ஓரு வேட்டையாளனின் மூன்றாண்டு சாதனைகள்...

அந்தக் காடு
வேட்டை ஆடுபவர்களுக்கு
வேட்டைகள் நிறைந்த
வேட்டைக்காடு அந்த
வேட்டைக் காட்டில்
பலர் புதிது
புதிதாக வந்தார்கள்
வேட்டை ஆடினார்கள்
அந்த வேட்டையாளர்களிடையே
56 இஞ்ச மாா்பளவு
ஒரு வேட்டையாளன்
வந்தான் வந்த
வேட்டையாளின் மூன்று
ஆண்டுகால வேட்டையை

*வாருங்கள்... படியுங்கள்.
 தெளியுங்கள்.பரப்புங்கள்..

பா.ஜ.க மூன்றாண்டு ஆட்சி.
________________________________________

-பெட்ரோல் / டீசல் வரி 200% உயர்வு
-மருந்து பொருள் விலை உயர்வு
-ரயில் கட்டண விலை உயர்வு
-கேஸ் விலை உயர்வு
-புதிய வரிகள்
-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
-ரூபாயின் மதிப்பு
- மோடி வெளிநாட்டு பயணங்கள்
- வெளியுறவு கொள்கை
- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
- உதய் மின்திட்டம்
- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்
- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்
- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு
- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு
- சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு
- பலுசிஸ்தான் தலையீடு
- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்
- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்
- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்
-ஜி.டி.பி குளறுபடி
-புதிய வங்கி கட்டணங்கள்
-ஆதார்
-அந்நிய நேரடி முதலீடு
-தூய்மை இந்தியா திட்டம்
-மேக் இன் இந்தியா
-டிஜிட்டல் இந்திய திட்டம்
-அணு உலை
-புல்லட் ரயில்
-நில கையகப்படுத்தும் மசோதா
-ஸ்மார்ட் சிட்டி
-ஹிந்தி திணிப்பு
-காவேரி நீர்மேலாண்மை ஆணையம்
-நீதிபதிகள் நியமனம் தாமதம்
-ஜி.எஸ்.டி
-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்
-IT ஊழியர்கள் பணி நீக்கம் 
-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு
-கல்புர்கி கொலை
-ரோஹித் வெமுலா
-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
-வருண் காந்தி - ராணுவ ராணுவ ரகசியங்கள்
-ரகுராம் ராஜன் மாற்றம்
-ஜல்லிக்கட்டு
-உத்திரகாண்ட் சீனா ஊடுருவல் 15 கிமீ
-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி
-ஜியோ சிம் விளம்பரம்
-லலித் மோடி
-வியாபம்
-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
-சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா
-தனி விமானம் 2000 கோடி
-பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை
-15 லட்சம் ஆடை
-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்
-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு
-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்
-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்
-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.
-சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது
-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM
-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வி தகுதி
-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை
-தேச பக்தி நாடகங்கள்
-மேகாலயா கவர்னர் காம லீலை
-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி
-பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு
-சமஸ்கிருதம் திணிப்பு
-புதிய கல்வி கொள்கை
-பொது சிவில் சட்டம்
-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்
-மாட்டு கறி தடை
-மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்)
-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்
-அயோத்தி ராமர் கோவில்
-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு
-கட்டாய சூரிய வணக்கம் / யோகா
-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை
-டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்
-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்
-SBI மினிமம் பேலன்ஸ் 5000
-மாட்டு அரசியல் 
-நீட் தேர்வு

வியாழன் 21 2017

தர்மகர்த்தா சோசலிசம் என்றால் என்ன...???.


உலக அழகி போட்டியில்
அழகிகள் கூறும்
விடைகள் அழகின்
 அபத்தம் என்றால்

தொலைக்காட்சியில  நடத்தப்படும்
கோடீஸ்வரன் நிகழ்ச்சி
அறிவின் அபத்தமாகும்

தர்மகத்தா சோசலிசம்
என்றால் என்ன?

அது என்னவெனில்

ஒரு கோடி
ரூபாய் கிடைத்தால்
என்ன செய்வீர்கள்
என்ற கேள்விக்கு...

மென் பொருள்
நிறுவனங்களில் முதலீடு
செய்து சமூக
முன்னேற்றத்துக்கு பாடுபடுவேன்
என்பது பதில்

அடுத்த கேள்வி
யாருடன் விருந்து
சாப்பிட விருப்பம்..??

அதுக்கு பதில்
“கம்யூட்டர் கடவுள்
பில்கேட்ஸ் உடன்
இதோடு அந்த
ஒரு கோடியில்
 பொருளாதாரத்தில் பின்
 தங்கிய ஏழை
மாணவர்களின் கல்விக்காக
அதாவது இட ஒதுக்கீட்டுக்கு
மறைமுகமாக எதிப்பு
தெரிவித்து உதவுவதாக
சொல்வதுதான் தர்மகார்த்தா
சோசலிசம் என்பது..


குறிப்பு. தனியார் தொலைக்காட்சியில்கோடீஸ்வரன் நிகழ்ச்சிய பற்றிய அறிவின் அவதாரங்களிலிருந்து.........


புதன் 20 2017

இ்ரண்டாவது வருட நிணைவு நாளில்............

இரண்டு வருடங்களுக்கு முன்பு 20/9/2015-ல் இரவு 8 to 8,30 மணியளவில் என்னை பெற்று பாதுகாப்பாக வளர்த்த என் தாய் இவ்வுலகை விட்டு பிரிந்தார்
அவர் பிரிந்த இரண்டாவது நிணைவு நாளாகும்.

என்தாய் இறந்தபின் இந்துக்குரிய எந்த மதச் சடங்குகளையும் செய்யாமல் எவ்வித சச்சரவு ஏற்படாமல் தகனம் செய்தேன்.. இடுகாட்டில் புதைப்பதற்கு இடம் இல்லாததால் எரியூட்டப்பட்டார்.

எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து..என் தாய் ஆனையிடும் வேலைகளை எனக்கு பிடிக்காமல் எதிர்மறையான கருத்து இருந்தாலும் அதை அவர் முன் வெளிக்காட்டாமல்அவர் இறக்கும் வரை அதை செய்து முடித்தேன் .இறப்பதற்கு முன்பு உடல் நலம் இல்லாமல் படுக்கையில் இருந்த போது அவர் அருகில் அதிக நேரம் இருப்பதை தவிர்த்து வந்தேன். அதற்கு காரணம் எனக்கு ஏற்பட்ட பயம்தான்..

அந்த பயத்துக்கு காரணம் இதுதான்....விபத்தால் இடையில் பார்வையிழந்த என் அக்காவையும் அக்காவின் குழந்தைகளையும்  பாதுகாக்க வேண்டிக் கொண்டமாதிரி வேறு எதாவது கோரிக்கை வைத்து வேண்டினால் என்ன செய்வது என்ற பயம்தான். என் தாயார் இறப்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் அவர் அருகில் சென்ற நான்... அவர் பூதவுடலை சுடுகாட்டில் எரியூட்டும்வரை அவர் உடலை விட்டு அகல வில்லை....

என் சிறு வயதில் அவரிடம் வாங்கிய அடி உதையினாலும்  என் உடலோடு பயம் ஒட்டிக் கொண்டுதான் இருந்தது. அந்தப் பயம் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

என்தாயார் இறந்த பின் எனக்கு  குளிர் விட்டு போச்சு என்ற கதையாக... என் அக்காவின் கணவராலும்.அவர்களின் பிள்ளைகளாலும் ஏகப்பட்ட கஷ்டத்தையும் துயரத்தையும் அனுபவித்த நான்... வேண்டாத செலவுகளையும் மூடநம்பிக்கைகளையும் களைய அவர்களுடன் போராடினேன். அவர்கள் என்னிடம் முரண்பட்டே வந்தார்கள்.... நானும் நிலக்கடலைக்கு ஆசைப்பட்ட குரங்குபோல  கடலையையும் விட முடியாமல் கையையும் எடுக்க முடியாமல் தவித்து வந்தேன்...

நான் செய்து வந்த தொழிலிலும் என்னோடு முரண்பட்டே வந்தார்கள்..கடுமையாக உழைத்து வந்தேன். என் தாயார் இறந்து இரண்டு வருடங்களில்      சலிப்பும் வெறுப்பும் புலம்பலும் அதிகமாகிக் கொண்டே வந்ததது...

முழுக்க நணைந்த பிறகு முக்காடு எதற்கு என்ற பழமொழிக்கேற்ப.. எனது தாயாரின் இரண்டாவது நிணைவு நாளில் பயத்தை விட்டொழித்து திடமான ஒரு முடிவு எடுத்து விட்டேன்...இந்த இரண்டாவது நிணைவு நாளிலிருந்து என் தொழின் அனைத்து நிலைகளையும்  வேலைகளையும்வரவு செலவு அணைத்தையும் என் மருமகன்களிடம் ஒப்படைத்துவிட்டேன்...விருப்பம் இருந்தால் உணவு கொடுங்கள்... இல்லையென்றால் ஆளை விடுங்கள்...என் தாயாரின் வேண்டுகோளின் படி உங்கள் விருப்பத்கேற்றபடி இதுநாள்வரை  நடந்து கொண்டேன்.. என் விருப்பத்திற்கு  வர நீங்கள் தயாராக இல்லாத போது  இனி நான் உங்கள் விருப்பதற்கு ஏற்றாற் போல் நடக்க முடியாது.

என்னைவிட்டால் உங்களுக்கு வேறு போக்கிடம் இல்லாததால் மேற்படி தொழிலை நீங்களே ! ஏற்று உங்கள் விருப்பபடி நடந்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு... அனைத்து பாரத்தையும் இறக்கி வைத்து விட்டேன் என் தாயார் இல்லாத தைரியத்தில்....குடும்பமே இல்லாத...சுதந்திரமனிதனாக  ஆகிவிட்டேன்.

என்னைக் கேன.... கிறுக்கன் ,லூசு ,மக்கு,என்று பலவாறு திட்டிய நண்பர்களுக்கும் தியாகி. உன்னைப்போல் எவனும் இல்லை என்று பாராட்டிய தோழமைகளுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்    நன்றி!



செவ்வாய் 19 2017

வாயை அடைப்பது இதுதானோ...????



இந்தியாவில்  ஆர் எஸ்எஸ்ன் நீட் தேர்வு வருவதற்கு முன்னாடி இந்தியாவின் முதல்  பெண் டாக்டர் ஆக ஆனவர் முத்து லெட்சுமி அவர்கள். அவர் எம்எல்சியாக  தேர்வு செய்யப்பட்டப் பின்..தந்தை பெரியாரை சந்தித்து, உங்களுக்காக நான் சட்டசபையில் எதாவது செய்ய வேண்டுமா ? என்று கேட்டார்.

அதற்கு பெரியார் சொன்னார்“ எனக்கு ஒன்றும் செய்ய வேண்டாம். பெண்களை தேவதாசிகள் என்று சொல்லி கோவிலில் பார்ப்பான் விபச்சாரத் தொழில் செய்து சம்பாதிக்கிறான். முடிந்தால் அதை தடுக்க குரல் கொடுங்கள் என்றார்.

முதல் பெண் டாக்டர் முத்து லெட்சுமி அவர்களும் சட்டசபையில் அதைப்பற்றி கேட்டார்.

அதைக் கேட்ட காங்கிரசை சேர்ந்த சத்தியமூர்த்தி  என்ற பார்ப்பனர்.. அது கடவுளுக்கு செய்யும் தொண்டு, அதில் சட்டத்தில் இடமில்லை என்று வாதிட்டார்..

பின் டாக்டர் அம்மையார் பெரியார் சொல்லியதை சொன்னார். நல்லது அது கடவுளுக்கு செய்யும் தொண்டுதான்... இதுவரை எங்கள் வீட்டுப் பெண்கள் செய்தார்கள்..இனி மேல் உங்கள் வீட்டுப் பெண்கள் அந்தத் தொண்டை செய்யட்டுமே...? என்றவுடன் வாயடைத்து போனார் பார்பனர் சத்திய மூர்த்தி......

திங்கள் 18 2017

தோழர் பெரியார் பிறந்த தின சிறப்பு பகிர்வு

தந்தை பெரியார் - வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது அவரது கைத்தடி. அடங்கியிருந்தவர்கள் எழுந்து நிற்க ஊன்றுகோலாக இருந்ததும் அதுவே. 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சளைக்காமல் போராடியவரின் சரித்திரத்தில் இருந்து...

* ராமசாமி என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர்.பெண்ணடிமைத்தனம் குறித்துப் பெரும் பிரசாரம் செய்ததற்காக, மாநாடு கூட்டிய பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டம்தான் பெரியார். அதுவே அவரது பெயராக மாறிப் போனது!

* பெரியார் - நாகம்மை இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து 5-வது மாதமே இறந்து போனது. அதன்பிறகு குழந்தைகள் இல்லை. ஆனால் 20-க்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். படிக்கவைத்துத் திருமணம் செய்தது வரை இவரது செலவுதான். இவர்களுக்கு ஈ.வெ.ரா.ம. என்பது இனிஷியல்!

* தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் எடைக்கு எடை பொருட்கள் தரப்பட்டது இவருக்குத்தான். வெள்ளி, நெல் மூட்டைகள், பேரீச்சம்பழம், பெட்ஷீட் தொடங்கி வெங்காயம் வரை தரப்பட்டுள்ளது!

* தான் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது யாராவது மாற்றுக் கருத்து இருந்தால் உடனே எழுந்து சொல்லலாம் என அறிவித்திருந்தார். ''நான் இல்லாத இடத்தில் என்னைப்பற்றிப் பேசாதே, காணாத இடத்தில் குரைக்காதே'' என்பார்!

* வால்மீகி ராமாயணம், அபிதான சிந்தாமணி, தமிழ்ப் பேரகராதி ஆகிய மூன்று புத்தகங்களையும் எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சர்ச்சைக்குரிய புத்தகங்களின் அடுத்தடுத்த பதிப்புகளையும் விடாமல் வாங்குவார்!

* பதினைந்துக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்தார். பிரெஞ்சு தொடங்கி ராஜபாளையம் வரை பல வகைகள் இருக்கும். வெளியூர் பயணத்தின்போதும் அவை வேனில் ஏறி வந்து மேடைக்குக் கீழே உட்கார்ந்திருக்கும்!

* தான் செய்யும் சிறு செலவுக்குக்கூட கணக்கு வழக்கு வைத்திருந்தார். அதைச் சின்ன டைரியில் குறித்துவைத்திருந்தார். வருமானவரி பிரச்னை ஒன்று வந்தபோது, இந்த டைரிகளைப் பார்த்து நீதிபதிகளே ஆச்சர்யப்பட்டார்கள்!

* வாரம் ஒருமுறை, பத்து நாளைக்கு ஒருமுறைதான் குளிப்பார். ''குளிக்கணும்கிற ஞாபகமே எனக்கு வர்றதில்ல. அதை ஒரு தொந்தரவாக நினைக்கிறேன்'' என்பார்!

* தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தவர் பெரியார்தான். ணா, லை என்றெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவர் அவர்தான்!
* இளமைக் காலத்தில் தான் செய்த சேஷ்டைகளைப் பகிரங்கமாகச் சொன்னவர். ''மைனர் வாழ்க்கை நடத்தியவன்தான். ஆனால், இதுநாள் வரை மது அருந்தியதே இல்லை. ஆனால், பலருக்கும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நான் வியாபாரியாக இருந்தபோது பொய் பேசி இருப்பேன். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு ஒரு பொய்கூடச் சொன்னதில்லை. ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்ததில்லை'' என்று அறிவித்தவர்!

* உங்களுடைய அரசியல் வாரிசு யார் என்று கேட்டபோது, ''எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும் கருத்தும்தான் வாரிசு'' என்றார்!

* தன்னுடைய மனைவி நாகம்மை, அம்மா சின்னத் தாய் ஆகியோர் இறந்தபோது, தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பகிரங்கமாக அறிவித்தார். 'எனக்குஇருந்த குடும்பத் தொல்லைகள் ஒழிந்தன' என்று காரணம் சொன்னார்!

* இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்ப்யூட்டர், வாக்மேன், வெப்கேமரா, டெஸ்ட்டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப்பாடு... அனைத்தைப் பற்றியும் 65 ஆண்டுகளுக்கு முன்னால் 'இனிவரும் உலகம்' என்ற கட்டுரையில் எழுதி தன்னுடைய விஞ்ஞான அறிவை வெளிப்படுத் தியவர் பெரியார்!

* இரண்டு கவர்னர் ஜெனரல்கள் நேரில் வந்து சந்தித்து 1940, 42 ஆண்டுகளின் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னபோது மறுத்தார். ''நெருப்புகூடக் குளிர்ச்சி ஆகலாம், வேப்பெண்ணெய் தேன்ஆகலாம். ஆனால், பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது'' என்றார்!

* தனது மனதில் பட்டதைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார். வெற்றிலை பாக்கு கடை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவுக்கு பேசப் போனவர், ''உங்களால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை, எனவே, கடைகளைக் மூடி விட்டு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வேலையைப் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு வந்தார்!

* தன்னுடைய குடும்பச் சொத்தை எடுத்து வந்து பொதுவாழ்க்கையில் செலவு செய்தார். பொதுவாழ்க்கையில் கிடைத் ததை அனைவருக்கும் பயன்படுவது மாதிரி டிரஸ்ட் ஆக்கினார். அவரதுசேகரிப் பில் நயாபைசாகூடத் தனது குடும்பத்தினர் யாருக்கும் தரப்படவில்லை!

* முக்கியமானவர்கள் யார் வந்தாலும் தள்ளாத வயதிலும் எழுந்து நிற்பார். இளைஞராக இருந்தாலும் 'வாங்க, போங்க' என்பார். பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து பாடினாலும் எழுந்து நிற்பார் யாராவது திருநீறு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்!

* உலகம் முழுவதும் பெண்ணியவாதிகள் தங்களது வேதப்புத்தகமாகச் சொல்லும் 'செகண்ட் செக்ஸ்' வெளிவருவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே இவர் எழுதிய 'பெண் ஏன் அடிமையானாள்?' புத்தகம் வெளியாகிவிட்டது!

* 'நான் சொன்னதை அப்படியே நம்பாதீர்கள். உங்களுக்குச் சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். நான் கொள்கையை மாற்றிக்கொண்டே இருப்பேன். எப்போது மாறுவேன் என்று எனக்கே தெரியாது'' என்று எல்லாக் கூட்டத்திலும் மறக்காமல் சொல்வார்!

* அவருடைய நண்பர்களில் எட்டுப் பேர் 42 வயதில் இறந்துவிட்டார்களாம். தானும் 42 வயதில் இறந்து போவோம் என்று நினைத்தாராம். ஆனால், அதன்பிறகுதான் தீவிரப் பொது வாழ்க்கையில் இறங்கினார்!

* 'தோழர்' என்று கூப்பிடுங்கள் என்று முதன் முதலாக தமிழ்நாட்டில் அறிவித்தவர் இவர்தான்!

* புத்துலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டுப் பத்திரம் கொடுத்தபோது, ''இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வெட்கப்படுகிறேன்'' என்றார்!

* பெரியார் அதிகமாக உச்சரித்த வார்த்தை-வெங்காயம். ''வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. ஒன்றும் இல்லாத பூஜ்யப் பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்'' என்றார்!

* நேரடி விவாதங்களின்போது, ''சொல்றதுக்காக என்னை மன்னிக்கணும்'' என்று சொல்லிவிட்டுத்தான் பதில் சொல்வார்!

* 95 வயது வயதில் மொத்தம் 98 நாட்கள் வாழ்ந்தார். அதில் 35 நாட்கள் வெளியூர் பயணம் சென்று 42 கூட்டம் பேசினார். கடைசியாக அவர் பேசிய இடம் சென்னை தியாகராயர் நகர். அந்த இடத்தில்தான் பெரியார் சிலை கம்பீரமாக நிற்கிறது!

நன்றி!   -ப.திருமாவேலன்

90-வது வயதில் 180 கூட்டம்.
91-வது வயதில் 150 கூட்டம்.
93-வது வயதில் 249 கூட்டம்.
94-வது வயதில் 229 கூட்டம்.
வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்) 42 கூட்டம்.
இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன். ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார். சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட்டிருந்தது.

அவர்தாம் பெரியார் !!!

ஞாயிறு 17 2017

“பிராமணாள்” என்ற சொல்லின் பொருள் தெரியுமா?


“பிராமணாள்” என்ற
 சொல்லின் பொருள்
  தெரியுமா..? உங்களுக்கு..!!


தங்களை பிராமணர்
என்றும் சிலரை
சூத்திரர்கள் என்றும்
அவர்களே எழுதி
வைத்துக் கொணட
சாஸ்திரங்கள் ஒன்றில்

அவாளே சொல்லிய
விளக்கங்களை பாரீர்
படித்துப் பாரீர்....!!


பிராமணன் இந்த
லோகத்தில் உள்ள
சகல வர்ணத்தாரின்
பொருள்களையும் தானே
தானம் வாங்க
பிரபு ஆகிறான்     (மனு தர்ம சாஸ்திரம் அத்1-சு100)


பிராமணனுக்கு மங்களமான
பெயரும் சூத்திரனுக்கு
தாழ்ந்த பெயரையும்
 சூட்ட வேண்டும்  (அத்.2 சு.33)

பிராமணனின் உணவை
சூத்திரன் பாத்தாலும்
தொட்டாலும் உணவு
அசுத்தமாகி விடும்.  (அத் 3.சு.251)

உண்மையை அறிந்து
கொள்ள சூத்திரன்
பழக்க காய்ச்சிய
இரும்பை தொட்டால்
கை வேகாமலும்
தண்ணரில் அமிழ்த்தப்
பட்டால் சாகாமலும்
தன் மனைவி
பிள்ளை ஆகியோரின்
தலையில் அடித்தால்
துன்பம் இல்லாமலும
இருந்தால் சூத்திரன்
சொல்வது உண்மை
என்று உணரலாம் (அத் 3 சு.115)

சூத்திரன் பிராமணைப்
பெண்ணை புணர்ந்தால்
அவனை துண்டு
துண்டாக வெட்டி
கொலை செய்து
அவன் பொருளை
கொள்ளையிட வேண்டும்.  (அத் 8 சு374)

பிராமணன் பிற
வர்ணத்தாரை் பெண்களை
புணர்ந்தால் அது
உலக தர்மம்  (அத் 8 சு 13)

சூத்திரன் பிராமணனை
திட்டினால் அவன்
நாக்கை அறுக்க வேண்டும் (அத் 8 சு 270)

பிராமணனை சாதியைச்
சொல்லி திட்டினால்
கம்பியை காய்ச்சி
எரிய எரிய
சூத்திரன் வாயில்
திணிக்க வேண்டும்  (அத்3 சு 271)

இப்படி பலப்பல
பாரீர் படித்து
பார்த்து விட்டு
ஆரியம் ஒழிக்க
வாரீர் வாரீர்....

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...