பக்கங்கள்

சனி 11 2015

பள்ளிகூடத்துக்கு செல் என்று என்னை அடிக்காதே அம்மா....!!!!

படம்-blogintamil.blogspot.com




அம்மா...
இனி நான் பள்ளிகூடத்துக்கு
போகப்போவதில்லை யம்மா..

பள்ளிக்கூடம போகாததால்
என் மீது கோபம் கொண்டு
என்னை அடிக்காதே யம்மா..

நான் ஏன்? பள்ளிக்கூடம் போக
அடம் பிடிக்கிறேன் என்பதை
நீ முதலில் தெரிந்து கொள் அம்மா...


நான் என்ன சாதியென்று நீ
எனக்கு சொல்லித் தராதபோது
பள்ளிக்கூட ஆசிரியர்கள் நான்
இன்ன சாதியென்று சொல்லி
விட்டார்கள் அம்மா........

இன்ன சாதியினர்தான் பள்ளிக்கூட
கழிவறையை சுத்த்ம் செய்ய வேண்டும்
என்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள்
உத்தரவிட்டார்கள்  அம்மா..........

அந்தப் பள்ளிக் கூடத்தில் படிக்கும்
குடியானவர் வீட்டுப் பிள்ளைகள்
தவிர நம் தெருவிலுள்ள பிள்ளைகள்
அனைவரும் சேர்ந்து பள்ளிக்கூட
கழிவறையை சுத்தம் செய்தோம் அம்மா...


ஆசிரியர்கள் சொல்படி கழிவறையை
சுத்தம் செய்த பின்பு  நாங்கள்
சுத்தமில்லாமால் இருந்ததினால்
பள்ளியில் தனியே உட்கார
வைக்கப்பட்டோம் அம்மா...

குடியானவர்கள் எல்லாம் மேல்
சாதியாம்  கிழக்கு தெருவில்
இருப்பவர்கள் எல்லாம் கீழ்
சாதியாம்  அ்ம்மா........

படிப்பில் கெட்டிகாரனாக இருந்த
என்னிடம.. கழிவறையை சுத்தம்
செய்த பின் என் நோட்டைக்கூட
ஆசிரியர் தொடுவதில்லை யம்மா...

நான்  என்ன சாதியென்று நீ
என்னிடம்  சொல்ல மறுத்தாலு ம்
பள்ளிக்கூடத்தில் நான் இன்ன
சாதியென்று பட்டியல் போட்டு
சொன்னார்கள் அம்மா.....

படிக்கச் சென்ற என்னை
பள்ளி கழிவறையை சுத்தம்
செய்யும் வேலையை செய்யச்
சொல்வதால். எனக்கு படிக்க
மனம் வரவில்லை அம்மா..

அதனால்தான் அம்மா...
பள்ளிக்கூடத்துக்கு போகாமல்
உன்னுடன் வேலைக்கு    வந்து
உனக்கு துனையாக  வேலை
செய்கிறேன் அம்மா........

ஆகவே அம்மா..
பள்ளிகூடத்துக்கு செல் என்று
என்னை அடிக்காதே அம்மா....!!!!


செய்தி:- அன்மையில் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில்  பட்டியல் இன குழந்தைகளை பள்ளி கழிப்பிடத்தை சுத்தம் செய்ய வைத்தனர்...



வெள்ளி 10 2015

இந்திய தேசியக் கொடி மூவர்ணமல்ல..நால் வர்ணம்...!!!

படம்-tamil.thehindu.com


அய்யா..!

இந்திய தேசியக் கொடி
மூவர்ணக் கொடியா...?
நாலு வர்ணக் கொடியா..?

எல்லோரும் சொல்வார்கள்
அது மூவர்ணக் கொடி என்று
ஆனால் நடை முறையில்
தெரிவது நால் வர்ணக் கொடி
தான் தம்பி......அது இதுதான்

முதல்  வர்ணம் காவி.
இரண்டாவது வர்ணம் வெள்ளை
மூன்றாவது.. வர்ணம் பச்சை
நால் வர்ணம் ஊதா..
இந்த நால் வர்ணத்துக்கு
அடுத்து இடமில்லாததால்
அய்ந்தாவது வர்ணம் கருப்பு
......................

இப்போ..புரியுதா... இந்தீய
தேசியக் கொடி மூவர்ணம்
இல்லை நால் வர்ணம் என்று..




புரிந்தது அய்யா மூவர்ணமல்ல
நால் வர்ணம் என்று










வியாழன் 09 2015

செவ்வாய்க்கு மங்கள்யான் அனுப்பிய நாட்டில் நிழல் சாதி தீண்டாமை...


தீண்டாமைக் கொடுமை
நன்றி! வினவு...எல்லை மீறுவதுதான் தீண்டாமைக் கொடுமையா ?
ந்தக் காலத்தில் இப்படியொரு கொடுமையா என்று நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, இந்துவெறி பா.ஜ.க. ஆளும் ம.பி. மாநிலத்தில் நடந்துள்ள (நிழல்) தீண்டாமைக் கொடூரம்.
ம.பி.யின் சத்தர்பூர் மாவட்டத்திலுள்ள கணேஷ்புரா கிராமத்தில் கடந்த ஜூன் 13 அன்று, பொதுக் குழாயில் ஒரு தாழ்த்தப்பட்ட சிறுமி தண்ணீர் பிடிக்கச் சென்றபோது, அந்த வழியாகச் சென்ற புரான் யாதவ் என்ற ஆதிக்க சாதிவெறியனது டிபன் பாக்ஸ் மீது அந்தச் சிறுமியின் நிழல் விழுந்ததாம். அதனால் அவனது உணவு தீட்டுப்பட்டுவிட்டதாம். அதைத் தொடர்ந்து, அந்த ஆதிக்கசாதி வெறியனின் மனைவியும் குடும்பத்து பெண்களும் திரண்டு அச்சிறுமியை நடுத்தெருவில் இழுத்துப்போட்டு மிருகத்தனமாகத் தாக்கி, இனிமேல் தண்ணீர் எடுக்க பொதுக்குழாய் பக்கம் வந்தால் உன்னைக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இத்தாக்குதலின்போது, அமைதியான பார்வையாளர்களாக இருந்த அப்பகுதிவாழ் ஆதிக்க சாதியினருக்கு இது சமூகக் கொடுமையாகவே தெரியவில்லை. அதன் பிறகு, ஆதிக்க சாதியினரின் அச்சுறுத்தலையும் மீறி அச்சிறுமியுடன் அவரது தந்தை போலீசில் புகார் கொடுத்ததாலேயே இந்த கொடுஞ்செயல் வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளது.
இது ஏதோ விதிவிலக்கான விவகாரமல்ல. நாடெங்கும் தொடரும் தீண்டாமைக் கொடுமையின் துலக்கமான வெளிப்பாடுதான் இது. தாழ்த்தப்பட்ட பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவங்கள் கடந்த மே மாதத்தில் உ.பி, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் அடுத்தடுத்து நடந்துள்ளன. மகாராஷ்டிராவின் அஹமத் நகர் மாவட்டத்தின் ஷிரடி நகரில், கடந்த மே மாதத்தில் சாகர் ஷேஜ்வால் என்ற ஒரு தலித் இளைஞர், அம்பேத்கரைப் போற்றும் பாடலை செல்போனின் ரிங்டோனாக வைத்திருந்த குற்றத்துக்காக மராத்தா சாதிவெறியர்களால் அடித்து உதைக்கப்பட்டு, மோட்டார் சைக்கிள் ஏற்றி கொல்லப்பட்டார். உயர் கல்விக்கான இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் நுழைவுத் தேர்வில் தாழ்த்தப்பட்ட கூலித்தொழிலாளியின் இரண்டு மகன்கள் தெரிவு செய்யப்பட்டதைச் சகித்துக் கொள்ள முடியாமல், உ.பி. மாநிலத்தின் பிரதாப்கார் கிராமத்திலுள்ள அவர்களது வீட்டின் மீது ஆதிக்க சாதிவெறியர்கள் கல்லெறித் தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.
இவற்றையெல்லாம் அதிர்ச்சியூட்டும் விவகாரமாகப் பார்க்கும் சமுதாயம்தான், கோயில்களில் பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருப்பதையும், சவ ஊர்வலத்திற்கு தாழ்த்தப்பட்டோரை பறையடிக்கச் சொல்வதையும், சவ அடக்க வேலைகளை தாழ்த்தப்பட்டோரைச் செய்ய வைப்பதையும், வாடகைக்கு வீடு கேட்டால் நீங்கள் சைவமா, அசைவமா என்று வீட்டு உரிமையாளர்கள் நைச்சியமாக விசாரிப்பதையும் இயல்பான சமூகப் பழக்கவழக்கங்களாக ஆதிக்க சாதி மனோபாவத்துடன் அணுகுகிறது. நவீன காலத்திலும் இத்தகைய சாதியாதிக்கத்தை சகஜமான சமூகப் பழக்கவழக்கங்களாகவும் பாரதப் பண்பாடாகவும் போற்றி, அதனைக் கட்டிக்காக்கும் வேலையை இந்துவெறி ஆர்.எஸ்.எஸ் செய்து வருகிறது.
சாதியத்துக்கும் தீண்டாமைக்கும் எதிராக நிற்க வேண்டிய அரசோ, துப்புரவு வேலைகளை தாழ்த்தப்பட்டோர் மட்டுமே செய்ய வேண்டுமென நிர்பந்திப்பதோடு, மாட்டுக்கறிக்குத் தடைவிதித்து சாதியாதிக்கத்தை மேலிருந்து சட்டபூர்வமாக நிலைநாட்டுகிறது. ஒரு அளவுக்கு மேல் சாதிய அடக்குமுறைகள் போகக்கூடாது என்றும், அந்த அளவைத் தாண்டுவதைத்தான் அதிர்ச்சியூட்டும் தீண்டாமைக் கொடுமையாகவும் அரசும், ஓட்டுக் கட்சிகளும், ஊடகங்களும் பார்க்கின்றன. அளவோடு தொடரும் தீண்டாமையை இயல்பான சமூக பழக்கவழக்கமாக அங்கீகரிக்கும் மனோநிலைக்கு மக்களைப் பழக்கப்படுத்தி, மிதவாத சாதியத்தைக் கட்டிக் காக்கின்றன. இந்நிலையில், தொடரும் தீண்டாமையை இயல்பான சமுதாயப் பழக்கவழக்கமாக அங்கீகரித்துக் கொண்டு, இதனை நாகரிகமிக்க சமுதாயம் என்று நாம் இன்னமும் பெருமைப்பட்டுக் கொள்ள முடியுமா?
_____________________________


_____________________________

புதன் 08 2015

அல்லாவின் பக்தர், அல்லாவின் பக்தரை விரட்டி பிடித்த கதை...

படம்-tamizhvirumbi.blogspot.com
அல்லாவின் பக்தர் ஒருவர். அல்லாவை தொழுவதற்க்காக அருகிலுள்ள பள்ளி வாசலுக்கு சென்றார். தொழுவதற்கு முன் தன்னுடன்  கொண்டு  வந்திருந்த லேப்டாப்பை.. அல்லாவின் பள்ளி வாசலின் வளாகத்தில் வைத்துவிட்டு தொழுதார்.

அப்போது.அல்லாவை தொழுது கொண்டு இருந்த இன்னொரு அல்லாவின் பக்தர் தொழுகையை சட்டுபுட்டுனு முடித்துக் கொண்டு. அல்லா நமக்கு  அருளிவிட்டார் என்ற எண்ணத்தில் வளாகத்தில் இருந்த லேப்டாப்பை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.

தொழுது கொண்டிருந்த லேப்டாப்புக்கு சொந்தக்காரான அல்லாவின் பக்தர் தொழுகையின் ஊடே..தன் லேப்டாப்பை கவனித்தபோது.. அல்லாவின் பக்தர் ஒருவர் தனது லேப்டாப்பை தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடிப்பதை கண்டார்.

உடனே. அல்லாவை தொழுவதை  பாதியிலே நிறுத்திவிட்டு ஒட்டம் பிடித்துக் கொண்டிருந்த அந்த அல்லாவின் பக்தரை விரட்டிக் கொண்டு இந்த அல்லாவின் பக்தர் ஓடினார்.

 ஓடிய ஓட்டத்தின் முடிவாக..லேப்டாப்பை தூக்கி கொண்டு ஓட்டம்பிடித்த அல்லாவின் பக்தரை பொது மக்களின் உதவியுடன் விரட்டிச் சென்ற அல்லாவின் பக்தர். பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.


இத்துடன் அல்லாவின் பக்தரை., அல்லாவின் பக்தர் விரட்டி பிடித்த கதை முடிவற்றது.

நாங்க யாரு தெரியுமா...???

 


அரசு போக்குவரத்து பஸ் ஒன்று வளைவாக உள்ள ரோட்டின் திருப்பத்தில் சென்று திரும்பியது. பஸ் மெதுவாக சென்றதை பயன்படுத்தி மூன்று பேர்கள் ஓடும் பேருந்தில் ஏறினார்கள்.ஒருவன் சற்று தடித்தவன். அடுத்தவன் ரெண்டு கெட்டனாக இருந்தான். இன்னொருவன் ஒல்லியனாக இருந்தான்.

காலியாக இருந்த இருக்கையில் அம்ந்த சிறிய இடைவெளிக்குப்பின் பஸ்ஸின் பயணசீட்டு கொடுப்பவர். அவர்கள் அருகில் சென்று பயணசீட்டு எடுக்க பணம் கேட்டார்.

அதில் ஒருவன் கவனிக்காமல் இருப்பது போல் நடித்தான். கண்ட்க்டர் திரும்பவும் வலியுறுதிக் கேட்டார்... கோபம் கொண்ட அவர்கள்..
ஏய்....? என்னா??  எங்ககிட்டயா..டிக்கெட் கேக்குற..... நாங்க யாரு தெரியுமா...? பெரிய ரவுடிக.....??? போ....போ.... என்று சவுண்டு விட்டனர்.
பஸ்ஸில் கூட்டமும் குறைவாக இருந்த்து.

அவர்கள் எச்சரிக்கையை கேட்ட சில வினாடிகளில் கண்ட்க்டரும்...“ ஏய்..... என்னா.....? நான் யாரு தெரியுமா...? டிக்கெட் எடுக்கலைன்னா.....உங்களை பஸ்ஸ விட்டு , இறக்கி விட்டுறுவேன்... தெரியும்ல.....என்றார்.

டேய், இவன் நமக்கு போட்டியா.... வர்ரான்டா? என்று கோபமடைந்த  மூவரும். தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயதமான கத்தியை எடுத்து கண்ட்டகடரை குத்தினர்.


பதிலுக்கு சவுண்டு விட்ட கண்ட்க்டர் கவனமாக இல்லாமல் இருந்த்தால்.அவ்ர்களின் கத்தி குத்தால் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் படுத்து கிடக்க... நாங்க பெரிய ரவுடிங்க என்று நிருபித்த அவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டு..ஓய்வு எடுத்து வருகின்றனர்.

செவ்வாய் 07 2015

ஒரு தமிழ் மொழி ரெண்டுக் கெட்டான் மொழியான கதை...!!!




படம்-vannimedia.com



மகள் தன் தாயிடம்:-   

மம்மி வர்ர சண்டே எனக்கு பர்த்டே, பட் நீங்க எனக்கு      இன்னும் பர்த்டே டிரஸ் எடுக்கவில்லையே.....

தகப்பனிடம்:-

வொய் ..டாடி! என்னோட பிரனட்ஸை எல்லாம் நம்ம வீட்டுக்கு வரச் சொல்லி கால் பண்ணியிருக்கேன்.

தாய் தன் மகளிடம்-

சண்டே வர்றதுக்கு இன்னும் ஸிக்ஸ்டேஸ் இருக்குதே....

தகப்பன் தன் மகளிடம்:-

டோண்ட் வொர்ரி டூமாரோ ஈவீனிங் ஷாப்பிங் போகலாம்.

தாயும் தந்தையும்:-

இப்போ உனக்கு ஹேப்பி தானே...

மகள்:-    தேங்க்ஸ் மம்மி,... தேங்க்ஸ் டாடி...

திங்கள் 06 2015

நகர மேயரின் கோபத்துக்கு..பத்தாயிரம்....! ! !


படம்-www.clipartpanda.com


டேய்..மாப்ள, இன்னிக்கு பேப்பர் பாத்தீயா...???

“இல்லடா..மாப்ள.....என்னா விசயம் சொல்லுடா.....????

நம்ம நரகத்தின் ..மேயரின் கோபத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுடா...?

“ ......????....”

“பத்தாயிரம்...டா”


“என்னடா.....! நரக மேயரு   மதிப்பு பத்தாயிரம்.....கொஞ்சம் விளக்கமா சொல்லேன்டா....”

சே..... நேத்து..அடிச்ச சரக்கு,  இன்னும் தெளியலாக்கும், தெளிவா, விளக்கமா சொல்கிறேன் கேளு....

நம்ம நகரத்து மேயரு..நகர்வல உலா போயிருக்காரு... அவரு போகும் ரோட்டில இருந்த ரெண்டு வீட்டுக்காரர்கள் தங்கள் வீட்டுக்கு போர் போட்ட போது  வெளியான தண்ணீரை ரோட்டில விட்டதால, தேங்கி இருந்திருக்கு..

அப்போ, அந்த ரோட்டில  உலா போன மேயரு....இத பாத்து நான் வரும் ரோட்டில் துண்ணீர் தேங்கி நிற்பதா? என்று  கோபம் கொண்டார். கோபம் அடங்காமல் தான் வரும் ரோட்டில் தண்ணீரை தேங்கவிட்டவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்குமாறு அந்தப் பகுதி உதவி கமிசனரிடம் உத்தரவு போட்டாரு..

நகர மேயரின் உத்தரவுக்கிணங்க உடனே.உதவி கமிசனரும், உதவி பொறியாளரும் அவ்விடத்திற்கு ஆஜராகினர். நகர மேயரின்  கோபத்துக்கு ஆளான இரு வீட்டாருக்கும் தலா அய்ந்தாயிரம் வீதம் பத்தாயிரம் அபராதம் விதித்தனர்.-- என்று கூறிமுடித்த பின் திரும்பவும் அவன் சொன்னான்.

 இந்த செய்தியை போட்ட பேப்பர்காரன்   இன்னொரு பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் பீச்சி அடித்து வீணாய் வெளியேறுவதை படம் பிடித்து போட்டு  நம்ம நரக.....சே.... நகர மேயரின் கடமை உணர்ச்சியை வெளிக்காட்டி இருக்காங்கேடா........


ஆமாடா....மாப்ள... மேயரின்  கோபத்தின் மதிப்பே பத்தாயிரம்ன்னா.... அமைச்சரின் கோபத்துக்கு  மதிப்பு எவ்வளவு......டா.......


அமைச்சரின் கோபத்தின் மதிப்பாடா..... கறிச்சோறு திண்ண வாங்கடான்னு
கூப்பிட்டுவிட்டு... விரட்டி அடிக்கிற மதிப்புடா..... அதையும் போட்டு இருக்கான் படிச்சுப்பாருடா......

அப்படியாடா..மாப்ள....நீ சொன்ன பிறவும் நான் படிக்கலைன்னா... இம்புட்டு படிச்சதுக்கு அர்த்தமே இல்லாம போயிடும்..டா மாப்ள.....

 உடனே, பக்கத்தில்  கிரிகெட் விளையாடி கொண்டு இருந்த ஒருவனை கூப்பிட்டு. பக்கத்து கடையில போயி இந்த பேப்பரை வாங்கிவிட்டு வர பணித்தான்



அன்றும் இன்றும்..சாதி..

படம்-periyarpinju.com



அன்று:-

வடக்கே இருந்த ஒருவர்
தெற்கே இருந்த ஒருவர்
இந்த இருவர் இணைந்து
இடைவிடாது உழைத்தினால்
சாதி என்னும் பாறை
உடைந்து சுக்கு நூறாகியது.



இன்று:-


அன்று சுக்கு நூறாக
உடைந்த துகள்கள் எல்லாம்
ஒன்றிணைந்து மீண்டும் சாதி
என்னும் பாறையை கட்டி
எழுப்புகிறது வெறி கொண்டு......

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...