பக்கங்கள்

சனி 30 2016

சாப்ளின் தந்த மீள முடியாத சோகப்படம்


எப்போதும் சாப்ளின் படங்களில் பேரன்பு பொங்கி வழியும். உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அள்ளிக் கொடுக்கும். இந்தப் படமும் அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை.

ஆனால், இதுவரை அவரின் எந்தப் படமும் தராத, மீள முடியாத சோகத்தை இந்தப் படம் தந்துவிட்டது.

இளம் பெண் தெரசா (Terry). சிறந்த நடனக் கலைஞர். தன் வாழ்க்கையின் துயரங்களைத் தாங்காமல் தற்கொலைக்கு முயற்சி செய்து, படுத்த படுக்கையாக இருந்தபோது பக்கத்து அறையிலிருந்த 65 வயதான Calvero (சாப்ளின்) அவளைக் காப்பாற்றி, தன் பேரன்பால் மிகச் சிறந்த நடனக் கலைஞராக மீட்டு விடுகிறார்.
Calvero வின் பேரன்பால் திக்குமுக்காடிய தெரசா. Calvero வை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொண்டால், உங்களைதான் செய்து கொள்வேன் என்று தன் கண்ணீரில் காதல் சொல்கிறாள்.
வயது வித்தியாசம் பொருந்தாது என்று பக்குமாகவும் கோபமாகவும் சொல்லியும் கேட்காததால், Calvero தலைமறைவாகி விடுகிறார்.

Calvero வும் ஒரு கலைஞன் தான். மேடைகளி்ல் கோமாளி வேடம் போடுகிறவர். அதைவிட அதிகமாகக் குடிக்கிறவர். தன் கலைக்கு வரவேற்பு குறைந்து விட்டதால் துயரம் அவருக்கும்.

ஒரு Bar ல் பாட்டுப் பாடி பிழைத்துக் கொண்டிருக்கும் Calvero தேடிக் கண்டுபிடித்து, மீண்டும் தன் காதலை உறுதி செய்கிறாள் தெரசா. புகழின் உச்சியில் இருக்கும் அவள், தன் குழுவிலே Calvero வின் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை மீண்டும் மேடை ஏற்றுகிறாள்.
‘Calvero… Calvero… Calvero…’ என்று அவள் ஒவ்வொரு முறையும் துடிக்கிற துடிப்பில், ‘இந்த உலகம் அன்பால் மட்டுமே இயங்குகிறது. மனிதர்கள் மகத்தானவர்கள்’ என்று அறிவித்துக் கொண்டே இருக்கிறது.
Calvero மேடை நிகழ்ச்சியின் போது காயம் பட்டுவிடுகிறார். அதோடு அவருக்கு ஹார்ட் அட்டாக்கும். தெரசா துடிப்பும், பதட்டமுமாய்த் துவண்டு போகிறாள். ஆனால், அடுத்து அவள் நிகழ்ச்சி. ஆடித்தான் ஆக வேண்டும்.
தெரசா ஆடிக் கொண்டிருக்கும்போது, Calvero (சாப்ளின்) அவள் ஆடுவதைப் பார்த்துக் கொண்டே இறந்து விடுகிறார். அது அறியாமல் ஆடிக் கொண்டிருக்கிறாள் தெரசா. படம் முடிகிறது.


நன்றி! வே் மதிமாறன்..



*

வெள்ளி 29 2016

மீசை..தாடிக்குள் ஒரு கதை......

அவரை பின் பக்கத்தில் இருந்து பார்த்தால்  இளைஞராட்டம் தெரிவார். முன் பக்கத்தில் நின்று பார்த்தால் மீசையும் தாடியும் கொண்ட வயோதிகர் போல்  காணப்படுவார்.

மீசையும் தாடியும் இல்லாமல் அவர் சேவ் செய்து   கண்ணாடி அணிந்து வீதி வழியில் செல்லும் போது அவர் வயதுக்கும் பத்து வயது குறைந்தவர் போல் காட்சி அளிப்பார்.

இப்படி காட்சி அளித்தவர் திடிரென்று மீசையம் தாடியுமாக காட்சியளித்தபோது அவரின் முகம் களையிழந்து கவலைகள் நிறைந்திருந்தது..

அவர் வசிக்கும் தெருக்காரர்கள்  அவரின் அம்மா இறந்த பின்தான் அவர் இப்படி மாறிவிட்டார் என்றார்கள். வேறு சிலரோ... அவர் தெருவில் உள்ள சின்னப்பையன் என்ற தெரு கிழட்டு நாட்டாமை என்பவன். இவர் முகச்சவரம் செய்த  மறு நிமிடமே  அவனும் முகச் சவரம் செய்வானாம்..இவர் என்னென்ன செய்கிறாரோ அத்தனையும் இவன் செய்துவிட்டு அவன் வீட்டு வாசலில்  சேர் போட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு காட்சி அளிப்பானாம்.

தான் செய்வதையெல்லாம் செய்யும் கிழட்டு நாட்டாமைக்கு பதிலடி கொடுக்க..மீசையும் தாடியும் வைத்திருக்கார் என்றனர். இவர் மீசையும் தாடியும் வைத்தவுடன்.. கிழட்டு நாட்டமை முன்போல..  முகச்சவரம் செய்யாமல் பென்சன் வாங்கச் செல்லும் போதுதான்  செய்வானாம்...

முன்பு..எப்போதோ..... மோடி மாதிரி தாடி வைத்திருந்த ஒருவரிடம் “ நானும் உங்களைப் போல் தாடி வைக்கத்தான் ஆசை பட்டேன்... ஆனால் எனக்கு ஆங்கங்கே முடி வளர்வதால் தாடி வைக்க முடிவில்லை என்று சொன்னதாக கேள்வி,

இவர் சொன்னதைக் கேட்ட அவர். சொன்னார்.. “தாடி வைக்காதே” பேடி என்று ஏசுவார்கள் என்றார்.

உங்களை அப்படியா ஏசுகிறார்கள் என்று இவர் கேட்டபோது... நான் திருமணம் முடிந்து பி்ள்ள குட்டிகாரனாகிவிட்டேன். நீ அப்படி அல்லவே என்றாராம்.

இப்ப என்னவாழுது.... நான் திருமணம் முடிக்காத காரணத்தை சுட்டிகாட்டி சண்டையில் என்னை ஒன்பது என்றுதானே ஏசுகிறார்கள்... என்றார்.

பலர் பலவிதமாகவும் சிலர் சில விதமாகவும் அவர் தாடி வைத்திருக்கும் கதையைச் சொன்னார்கள். அவர் மீசையும் தாடியும் வை்திருக்கும் காரணம் என்ன என்று ஒருவருக்கும் தெரியவில்லை...அவர்களுக்கு பரிச்சயமானவர்கள் என்ன தாடி என்று  கேட்கும் போது  சும்மா   என்று சொல்வார்.

வெகுநாட்களுக்குப்பின்.. மீசையை முறுக்கி விட்டபடி பிரதான சாலையின் வழியே  நடந்து போய் கொண்டு இருந்தார். அவரிடம் மூன்று டூவுீலர்கள் இருந்தும்  அவர் அதில் பயணம் செய்வதில்லை..

அவர் குடியிருக்கும் தெருவில் முதன் முதலில் டூவுீலர் வாங்கியவர் அவரே... முதலில் டீவிஎஸ்50  வாங்கி ஓட்டிக் கொண்டு இருந்த போது அவரின் அக்காவின் கணவரரன மச்சான் வாங்கிக் கொண்டார். இரண்டாவதாக.. சூசிகி மேக்ஸ்100 வாங்கியபோது.. அக்காவின் மூத்தமகனான மருமகன் வாங்கிக் கொண்டார்.

கடைசியாக, இவருக்காக  ஸகூட்டி பெப் வாங்கி ஓட்டிக் கொண்டு இருந்த நாளில் இரண்டாவது மருமகன் வாங்கிக் கொண்டார்.. அதே நேரத்தில் ஒரு விபத்தில் கொடுக்கப்பட்ட  நஷ்ட ஈடு பத்தாது என்ற வழக்கில்  வரப்பில்  உள்ள புல்லை மேயாமல்  வயிலில் உள்ள நாற்றில் வாய் வைத்த கதையாக  எல்லோரும் தலைக் கவசம் அணியவேண்டும் அணியா விட்டால் வண்டியை பறிக்க வேண்டும் என்று ஆனையிட்ட புன்னியவானின் மேல் இருந்த கோபத்தாலும்   வண்டியே வேண்டாம் என்று விட்டு  எங்கு சென்றாலும் நடை ராஜாவாகி விட்டார்.

அப்படி அவர் நடந்து சென்று கொண்டு இருந்தபோது...எதிரில் வந்த ஒருவர் சைகையால் என்ன மீசை தாடி என்று கேட்டார். இவர் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி மெல்ல புன்னகைத்தார்.

அந்தப் புன்னகை ஆயிரம் அர்த்தங்களை சொல்வது போல் இருந்தது. “வயதாகிவிட்டதல்லவா...? முன்போல் முகவரம் செய்ய முடியவில்லை அதனால் என்றார்.

அவர் சொன்ன பதிலைக் கேட்டவரும் பதிலுக்கு புன்னகைத்து விட்டு,“ இருக்கட்டும் மீசை..தாடி இரகசியத்தை சொல்லவேயில்லையே என்று கேட்டபோது...

தங்களுக்கு எப்படித் தெரிகிறது என்று கேட்டார்.

முன்ன..பின்ன தாங்கள் தாடி வைத்திருந்தால் தெரிந்து வைத்திருப்பேன்..எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து தாங்கள் தாடி மீசை வைத்து நான் பார்த்ததில்லை.... இப்போ திடிரென்று மீசையும் தாடியமாக திரிவதைப் பார்த்தால்... எனக்கு என்னவென்று தெரியவில்லை....ஒரு வேளை தாங்கள் அந்த வலையில...... என்று இழுத்தார்.

காதலுக்கும் எனக்கும் வெகு தூரம்.. ஆகையால்..இது காதல் தோல்வியால் வளர்ந்த..வளர்த்த மீசை..தாடி அல்ல...என்பது மட்டும்  உறுதி.... அப்பவே என்னை யாரும் காதலிக்கவில்லை... இப்போ வயதான காலத்திலா அதுவும் சொத்து பத்து என்று எதுவுமில்லா  என்னை காதலிக்க போகிறார்கள்.என்றார்


அது இல்லையென்றால்..தங்கள் அம்மா இறந்த துக்கத்தினால் என்று சொல்லலாமா...???

என் அம்மா என்னை சிறுவயதிலே என் அக்காவிடம் விட்டுட்டு வேலைக்கு சென்று விடுவார்கள்  என்ற போதும் நிரந்தமாக என் அம்மா என்னை விட்டு போன துக்கம் இருந்தாலும்....அந்த துக்கத்திற்க்கான வைக்கவில்லை....

பிறகு எதற்கு இந்த..கோலம்....??????

அவர் கண்கள் கலங்கி அந்தக் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது.. அதை எதிரே நிற்பவர்க்கு தெரியாமல் மறைப்பதற்க்காக சட்டென்று கழட்டிய  பிரவுன் கண்ணாடியை கண்களில் மாட்டிக் கொண்டு பேசலானார்.

உண்மையைச் சொல்வதென்றால்.... மீசை வைத்தால் வீரம் வரும் தாடி வைத்தால் அறிவு வளரும் என்று யாரோ சொன்னதை நிணைத்துக் கொள்ளுங்களேன். என்றார்.

சட்டென்று கண்ணாடி அணிந்த காரணத்தை அறிந்த அவரும். அவரின் துக்கத்தை கலைக்கும் விதமாக  அது சரி..? மீசையும் தாடியும் வளர்ந்துவிட்டதே! அதனால் , தங்களுக்கு வீரம் விளைந்ததா??? அறிவு வளர்ந்தத??? என்று கேட்டார்.


வீரம் எங்கே? விளைந்தது..? .. உங்களுக்குத்தான் தெரியுமே?? என் இடத்துப் பிரச்சினையில் என் சித்தப்பனின்  மனைவியும்  சித்தியின் சேத்தாளியான தெரு நாட்டாமையும் சேர்ந்து காவல் நிலையத்தில்  பொய் புகார் கொடுத்தபோது நடந்த சம்பவத்தில்  இன்ஸ்பெக்டர்  அவர்களுக்கு ஆதரவாக வந்த சிபாரிசின் மூலம் என்னை பயமுறுத்தியபோது... நீட்டிய பேப்பரில் கையேழுத்து போட்டுவிட்டு வந்தது.

“ அப்போ  அறிவு????

அறிவு எங்கே? வளருகிறது..... தாடி மயிறுதான் வளர்கிறது என்று சொல்லித் சிரித்தார். அப்படிச் சிரித்ததின் காரணமான அவர் கண்களில் தேங்கி நின்றிருந்த கண்ணீர் கண்ணங்களில் வழியாக விரைந்தோடி வந்தது...

கடைசியாக அவரிடம்... உங்களைப்போல் நானும் மீசை தாடி வைக்கப் போகிறேன்“ எனற்போது.... காசா பணமா..? தாரளமாக வைத்துக் கொள்ளுங்கள் இப்போ வருகிற நடிகர்கள் எல்லாம் மீசை தாடியோடுதான் காட்சி அளிக்கிறார்கள் என்றுவிட்டு தன் நடையை தொடர்ந்தார்.




fea68-babybeard
படம-ctbc.com






வியாழன் 28 2016

உள்ளாடை தேர்வு நடத்தியவர்கள் அறிக்கை..

இந்திய ராணுவத்திற்கு ஆட்களை் தேர்வு செய்யும் பணிக்கு கடந்த பிப்ரவரி 2ம் தேதி  முசாபர்நகரில் எழுத்துத் தேர்வு நடந்தது. அப்போது  நடந்த தேர்வில் அப்போது காப்பி அடிப்பதை தவிர்க்கவும், எல்லோரையும் சோதனை நடத்தும் போது ஆகும் நேரத்தை தவிர்க்கவும் விண்ணப்பதாரர்களை் அனைவரையும் ஜட்டி மட்டும் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.


இது தொடர்பாக பாட்னா உயர் நீதி மன்றம்  நாட்டின்  எல்லையில் உள்ள  ஆளில்லாத பனி மலையை காக்கும் முக்கிய பிரச்சினை என்பதால் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு விசாரனைக்கு வந்தபோது..

ராணுவத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் உள்ளாடையுடன் தேர்வு எழுத வைத்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது.. எதிர்காலத்தில் உள்ளாடையுடன் தேர்வு எழுதாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று உறுதி கூறப்பட்டது....

(அப்படின்னா... நிர்வாணத் தேர்வு நடத்தும்போது வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று புரிந்து கொல்லக்கூடாது..)

புதன் 27 2016

ஏன்? நெளிகிறேன் என்றால்........

ஆற அமர
அமர்ந்து சிறு
உணவை உண்டு
முடிக்கும் கடைசி
நேரத்தில் உடலை
ஏன் நெளிககிறாய்
என்று  நீங்கள்
என்னிடம் கேட்டால்
.
நான்...
என்ன செய்வது
நான் உண்ணும்
உணவின் மீதியை
எதிர் பார்த்து
காத்திருக்கும் என்
தாய்   இல்லை

கடைசி சிறு
உணவை உண்ண
முடியாமல் தவிக்கும்
என் தவிப்பைப்
பார்த்து கோபத்துடன்
திட்டி  மீதி
உணவை உண்ணும்
துணை இல்லை

நான் உண்ணும்
உணவை  பாதியாக
குறைக்க உதவ
என் உணவினை
உண்ண சண்டை
போடும் மகளோ.
மகனோ இல்லை.

சிறு வயதில்
எதிலும் பாதியாக
பங்கு போட்ட
நண்பர்கள் வளர்ந்து
விட்ட நாகரிகம்
கருதி அந்த
பழக்கதை்தை கை
விடா நண்பர்கள்
இன்று இல்லை


உணவு கிடைக்காத
பல நேரங்களில்
பட்ட பாட்டினால்
உணவின் கடைசி
சிறு உணவோ
எந்த உணவும்
கூட எதுவும்
வீணாகக் கூடாது
என்ற எனது
தொட்டில் பழக்கத்தால்

சாப்பிட முடியாமல்
தவிக்க விடும்
அந்த உணவை
எப்படியும்  சாப்பிட்டு
முடிக்க வேண்டும்
என்ற முடிவால்
உடலை நெளிக்கிறேன்
..





செவ்வாய் 26 2016

மீசையில் ஒட்டாமல் கூழ் குடிப்பது எப்படி?.....

அனலாய் கொளுத்து கொளுத்தென்று கொளுத்தியது வெயில். கொளுத்திய வெயிலில் வெந்துபோன நண்பர்கள் இருவர். டூவிலரில் பயணம் செய்து கொண்டே வந்த  வழியில் இருந்த கடை ஒன்றின் முன் வண்டியை நிறுத்தினர்.

ஒருவர் இருக்கையைவிட்டு அந்தக் கடையில் கூல்டிரிங்ஸ் கேட்டார். அந்தக் கடைக்காரரோ கூல்டிரிங்க்ஸ்க்குப் பதிலாக... அந்நியனின் மூத்திரமான கோகோலாவையும் செவன் அப்பையும் பெப்சியையும் நீட்டீனார். இருவரும் வேண்டாம் மூத்திரம் குடிப்பதில்லை என்று மறுத்துவிட்டு...மீண்டும் வறுத்தும் வெயிலில் பயணத்தை தொடர்ந்தனர்.


சிறிது நேரம் பயண தூரத்தை கடந்து வந்தபோது.. ஒத்தை மர நிழலில் கீழ் ஒரு தள்ளு வண்டியில் “ கம்மங்கூழ்” விற்பனை செய்து கொண்டு இருந்த இடத்தில் வண்டியை நிறுத்தினார்கள். ஏற்கனவே.. ஐந்தாறு டூவிலர்களுடன் .. நான்கு சக்கர வாகனம் கார் ஒன்றும் அந்த “ கம்மங்கூழ்” கடையின் முன் நின்று கொண்டு இருந்தது.

நண்பர்கள் இருவரும் ஆவலுடன்  வண்டியை விட்டு இறங்கினர். அவர்களுக்கு முன் ஒருவர் பெரிய மீசை வைத்திருந்த ஒருவர் “கம்மங்கூழ்” குடித்துக் கொண்டு இருந்தததை நண்பர்கள் இருவரும் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர். எப்படி மீசையில் கூழ் ஒட்டாமல் குடிக்கிறார் என்று.

அந்த மீசை்க் காரர் தன்னை அலட்டிக் கொள்ளாமல் நிமிர்ந்து நின்று தலையை மட்டும் பின் பக்கமாக சற்று வளைந்து கொடுத்து, கம்மங்கூழ் நிரம்பிய செம்பு பாத்திரத்தை உயரே தூக்கியபடி..ஒரே சீராக தன் அகன்றபடி  திறந்த வைத்துள்ள வாய்க்குள் ஊற்றினார். விழுங்கும் அடையாளமாக..தொண்டையில் உள்ள சங்கு மேலும் கீழுமாக அசைந்தாடி ஓடியது..

கம்மங்கூழ் மீசை படாமல் குடித்து முடித்ததும்.  தான் குடிப்பதை வேடிக்கையாக பார்த்தவர்களை  மீசையை தடவியபடி வெற்றிப்  புன்னகையுடன் பார்த்தார்.

மீசையில் படாமல் அன்னாந்து கூழ் குடிப்பது அவர் வழி முறையாக இருந்தாலும். அதில் ருசித்து குடிக்க முடியாததால். நண்பர்கள் இருவரும் அந்த மீசையின் வழிமுறையை பின்பற்றவில்லை..

கம்மங்கூழ் விற்பனையாளரிடம் சின்ன ஸ்பூன் கரண்டி வாங்கி சிறிது நேரம் பருகிப் பார்த்தனர். அது அவர்களில் ஒருவருக்கு  சரிபட்டு வரவில்லை.. மீசைக்காரர் சாப்பிட்ட முறையில் சிறிது மாற்றம் செய்து மீசையில் கூழ் படாமல் சாப்பிட்டு முடித்தார். கம்மங்கூழும் அதனுடன் கொடுத்த வத்தல்களும் மிகவும் சுவையாக இருந்ததால் அதிகமாகவே சாப்பிட்டனர். நண்பர்கள் இருவரும்..

கரண்டியால் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவரும். நண்பர் சாப்பிடும் முறைபை்படியே மீசையில் கூழ்படாமல் சாப்பிட்டு முடித்தனர். கொளுத்தும் வெயிலுக்கு அது இதமாகவும்  இருந்தது..

படம்-skprasanna.blogspot.com

திங்கள் 25 2016

இவர்தான் தோழர் லெனின்...........!!!

சோவியத் பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சியின் போது... பாட்டாளிகளின் தலைவர். தோழர் லெனினை சந்திக்க பத்திரிகையாளர் ஒருவர்.  சோவியத் தலைவரின் அறைக்கு முன்பு இருந்த எதிர்பார்ப்பு அறையில் அமர்ந்திருந்தார்.

அவர் சந்திப்பதற்க்கான  குறிப்பிடப்பட்ட நேரம் தாண்டிய பிறகும் தோழர் லெனினுடைய அறைக்கதவு திறக்கப்படவில்லை. வந்திருந்த பத்திரிகையாளர்க்கு ஒரே ஆச்சரியம்.. அது என்னவென்றால் நேரம் தவறாமல் இருப்பதில் லெனின் மிகவும் கறாராக இருப்பவர். என்பது அவருக்கு தெரிந்து இருந்தது.

யாராவது மிக மிக முக்கியமான பிரமுகர் உடன் லெனின் விவாதித்துக் கொண்டு இருக்கலாம் என்று அவரும் அவருடன்  வந்து காத்திருந்தவர்களும் நிணைத்துக் கொண்டார்கள்.

அரைமணிநேரம் கடந்தது ,ஒருமணி நேரம் ஆகியது. அந்த ஒரு மணி நேரமும் கடந்து ஒன்றரை மணியும் ஆயிற்று.. கதவு திறக்கபடவேயில்லை.. தோழர் லெனினுடன இவ்வளவு நேரம் நீண்ட பேட்டிக்கு அனுமதிக்கப் பட்டு இருக்கும் அந்த முழு அதிகாரம் பெற்ற தூதர்  யாரோ? என்று யோசித்தார். சந்திப்புக்காக காத்திருந்த அந்த பத்திரிக்கையாளர்.

கடைசியாக சோவியத் தலைவரின்  அறைக் கதவு திறந்தது.. பிரதமர் அறையிலிருந்து  வெளியே வந்தவரை பாா்த்ததும் காத்திருந்த  அனைவரும் அசந்து போய்விட்டார்கள்.

அவர்கள் அசந்து போனனதுக்கு காரணம் வெளியே வந்தவர். பரட்டை தலையும், அழுக்கு உடையுமாக காட்சியளித்த ஒரு ஏழை விவசாயி..

தோழர் லெனினுடைய அறைக்குள் அந்த பத்திரிக்கையாளர் உள்ளே சென்றவுடன். லெனின் சொன்னார். “ உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வந்தவர் ஏழை விவசாயி. அவர் தம்போவ் பகுதியைச் சேர்ந்தவர். மின்சாரமயமாக்கல், கூட்டு பண்ணை அமைப்பு, புதிய பொருளாதார கொள்கை போன்றவற்றைப் பற்றி அவருடைய கருத்துக்களை கேட்டேன். உரையாடல் மிகவும் சுவையாக இருந்தது. அதனால் நேரத்தை மறந்து விட்டேன. என்று சொன்னார்  ரைஸ் வில்லியம்ஸ் என்ற அமெரிக்க பத்திரிக்கையாளரிடம்...





ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...