பக்கங்கள்

வெள்ளி 11 2013

11மாத அயோக்கியர்களும் 1மாத யோக்கியர்களும்





 
  நான் வசிக்கும் ஏரியாவில் உள்ள பகுதி மக்களில் ஒரு பகுதி கேரள அய்ப்பனுக்கும் இன்னொரு பகுதி  பழனி முருகனுக்கும் செல்கின்றனர். கோவிலுக்கு செல்கின்ற இரு பகுதி மக்களில் யாருமே! சொந்த வாழ்க்கையிலோ, பொது வாழ்க்கையிலோ, நேர்மையாக இருந்ததில்லை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக அடுத்தவர்களை ஆதிக்கம் பன்னுவதிலும் ஏமாற்றுவதிலும்.தான் மட்டும் நல்லாயிருக்கவேண்டும் என்ற குறுகிய சிந்தனையிலும், அதை நிறைவேற்றுவதற்க்காக குள்ளநரித்தனத்திலும்,காலத்தை கடத்தி வந்துள்ளனர்.

வருடத்தில் 11மாதங்கள் உதிரித்தனமான சிந்தனையுடனும்.குடி.கூத்தி போன்ற ஊதாரித்தனமாகவும்.வாயில் வருவதெல்லாம் ஊத்த வசவுகளும் டாஸ்மாக் வாசனையுமாக இருந்தவர்கள் மார்கழி-தை  ஒரு மாதங்களில் மட்டும்  இந்தப்புலியும் பசித்தால் புல்லையும் தின்னும் என்ற கதையாக

இல்லீங்க சாமி, போங்க சாமி, சாமியோ....... சிகரெட்டாசாமி..... வேனாம் சாமி சரக்கா சாமி, மாலபோட்டுயிருக்கேன் சாமி.அடுத்த மாசம் பாப்போம்சாமி.......பேச்சுக்கும் மூச்சுக்கும் ஒவ்வொரு தடவையும் சாமி....சாமி..சாமி...... எல்லாரையும் சாமி.......சாமி.......சாமி..... என்றே அழைத்தார்கள்.

இது எப்படி இருக்குதுன்னா....................

கொள்ளைக்காரன் கொலைகாரன்  செய்த பாவங்கள் அநியாயங்கள் மறஞ்சு போகிறதுக்கு பரிகாரமாக  தான தருமம் செய்யிற மாதிரி.11மாத அயோக்கியர்கள் எல்லாம் ஒருமாதத்தில் யோக்கர்கள் ஆகிறார்கள்.

கல்வி ஆண்டு., கணக்கு ஆண்டு, காலண்டர் ஆண்டு மாதிரி,   இந்த ஒரு மாதம் யோக்கியர்கள் ஆண்டாகத்  எனக்கு தெரிகிறது.


புதன் 09 2013

பெருந்தரகர்கள் இருவர்......



 வாடகைக்கு வீடு
தேடி அலைபவர்களுக்கு
வீடு தேடி பிடித்து
வாடகை வீட்டில்
குடியேறுபவரிடம்
தொகை பெறுபவர்
வீட்டுத்தரகர்...

கறவை மாடோ?
உழவு மாடோ?
வேண்டுபவர்களுக்கு
மாட்டுப்பல் பார்த்து
மூடிய துணியில
விரல் பிடித்து
பேரம் பேசி மாட்டை
வாங்கியவரிடமும்
விற்றவரிடமும்
தொகையை பெருபவர்
மாட்டுத்தரகர்........

புதிய பழைய பொருளை
விற்பனை செய்து
கொடுத்து அதன்
மீது தொகையை
பெருபவர் விற்பனைத்
தரகர்...............

இந்தத் தரகர்கள்
வரிசையில்


பெருந்தரகர்கள் இருவர்...........

 ஒருவர்
இந்திய ரூபாய்
நோட்டில் சிரித்து
கொண்டு இருப்பவர்
பிரிட்டிஷ் உலக
 சாம்ராஜ்ஜியத்தின்
தரகர்.........என்றால்

இன்னொருவர்
மிஸ்டர் கிளின்
உலக வங்கியின்
முன்னால் அதிகாரி
அமெரிக்க ஏகாதி
பத்தியத்தின் தரகர்






செவ்வாய் 08 2013

பொங்கல் பரிசு வாங்கலீயோ!!!!!!!!!!!!

தமிழர்களே! தமிழர்களே!
தேங்காய்த்தமிழர்களே!
மாங்காய்த் தமிழர்களே!
பொங்கல் தமிழர்களே!

பொங்கல் பரிசாக 1.84 கோடி
குடும்ப அட்டை தமிழர்களுக்கு
ஒரு கிலோ பச்ச அரிசி...
ஒரு கிலோ சக்கரையுடன்
ஒரு 100ரூபாய்  நோட்டும்
தமிழகத்து தானத்தலீவி
பொங்கல் பரிசாக........
வழங்குகிறார்.

முன்னால் ஆண்ட
தானத்தலீவர்
1/2 கிலோதான்
கொடுத்தார்.
ரூபா கொடுக்கவில்லை.

ஓடுங்கள்....ஓடுங்கள்
அதிகாலை 4மணிக்கே
 கடையில வரிசை
போடுங்கள். முக்காமல்
முனகாமல் பொங்கல்
பரிசை வெல்லுங்கள்
 தமிழ்ப் பொங்கலை
கொண்டாடுங்கள்


ஞாயிறு 06 2013

அது அது ஏற்ப்பட்ட இடங்கள்...............

 படிமம்:Hitlermusso2 edit.jpg

ஜெர்மனியில் ஏற்ப்பட்டது நாசிசம்.
 இத்தாலியில் ஏற்ப்பட்டது பாசிசம்



ரஷ்யாவில் ஏற்ப்பட்டது சோசலிசம்


 


இந்தியாவில் ஏற்ப்பட்டது பார்ப்பனிசம்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...