பக்கங்கள்

சனி 02 2017

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஏன் நீதிபதியாகவில்லை?

சட்டத்துறையில் பேரறிஞராக திகழ்ந்த டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஏன் நீதிபதியாகவில்லை?

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களே அதைப்பற்றி கூறுகிறார்: 

"நான் தத்துவ இயலில் முனைவர் பட்டம் பெற்று, இங்கிலாந்திலிருந்து திரும்பினேன். அப்போது இந்தியாவில் யாருமே அந்த கல்வித் தகுதியைப் பெற்றிருக்கவில்லை. நான் பம்பாய் சென்று ஒரு குக்கிராமத்தில் தங்கியிருந்த போது, யாருக்குமே நான் இருக்கும் இடம் தெரிந்திருக்கவில்லை. இருப்பினும், பம்பாய் அரசு கடும் முயற்சிக்குப் பிறகு என்னுடைய இடத்தைக் கண்டுபிடித்து, அரசியல் பொருளாதாரத் துறையின் பேராசியர் பதவியை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என என்னை அணுகியது. நான் இந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டேன். நான் அந்த வேலையை ஏற்றிருந்தால், குறைந்தது இயக்குநராகவாவது (Director of Education) ஆகியிருப்பேன். ஒரு மாதத்திற்குக் குறைந்தது மூன்று அல்லது நான்கு ஆயிரம் ரூபாய்களாவது எனக்கு ஊதியம் கிடைத்திருக்கும்.

என்னுடைய சமூகத்திற்காகப் பணியாற்ற வேண்டும் என்ற மாபெரும் உணர்வுதான் நான் அந்தப் பணியை ஏற்காததற்குக் காரணம். நான் இந்தப் பணியில் இருந்திருந்தால், சமூகப் பணியாற்றியிருக்க முடியாது. ஓர் அரசுப் பணியாளர், அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்ப நடந்து அதன் கொள்கைகளைப் பின்பற்ற முடியுமே தவிர, தன்னுடைய சமூகத்திற்காகப் பணியாற்றிவிட முடியாது.

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் சிறிது பணத்தை சம்பாதித்துவிட்டு, நான் மீண்டும் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்று “பாரிஸ்டர்’ ஆகத் திரும்பினேன். நான் பம்பாய்க்குத் திரும்பியதும், மீண்டும் பம்பாய் அரசு மாவட்ட நீதிபதி பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தது. எனக்கு மாத ஊதியமாக 2,000 ரூபாய் அளித்து, சில காலங்கள் கழித்து என்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக்குவதாகவும் உறுதியளித்தது. ஆனால், நான் அதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பிற வருமானங்கள் மூலம் என்னுடைய வருவாய் அப்போது 200 ரூபாயாக இருப்பினும், நான் இப்பணியை ஏற்கவில்லை.

1942 இல் என் முன்பு இரண்டு கேள்விகள் எழுந்தன. ஒன்று, நான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றுவது; மற்றொன்று, இந்திய அரசின் “வைசிராய் நிர்வாகக் குழு’வில் உறுப்பினராக இணைந்து பணியாற்றுவது. நான் உயர் நீதிமன்றத்தில் சேர்ந்திருந்தால், ஒரு மாதத்திற்கு 5000 ரூபாய் ஊதியமாகவும், ஓய்வு பெற்ற பிறகு 1000 ரூபாய் ஓய்வூதியமாகவும் பெற்றிருப்பேன். ஆனால், நான் அதைச் செய்யவில்லை. அதற்கு பதில் அரசியலில் நுழைந்தேன். நான் தீண்டத்தகாத சமூகத்தில் பிறந்தேன். அந்தச் சமூகத்திற்காகவே சாவேன். என்னுடைய சமூகத்தின் நலனே வேறு எதைக் காட்டிலும் எனக்கு உயர்ந்ததாகும். நான் எந்தக் கட்சியிலும் எந்த ஓர் அமைப்பிலும் சேரவில்லை. காங்கிரஸ் அரசிலும் நான் யாரையும் சார்ந்திராமல் இருந்தேன்; என்னுடைய மக்களுக்கு நான் நேர்மையாக இருந்தேன்".

(27.10.1951 அன்று, ஜலந்தரில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய உரை)

--Dr.Ambedkar Intellectuals Society, Chennai.

வியாழன் 31 2017

கிரிகெட்டில் இந்தியா தோற்றால் என்ன நடக்கும்...???


இந்திாயாவும்  பாக்கிஸ்தானும்
விளையாடும் கிரிக்கெட்டில்
இந்தியா தோற்றால்
என்ன நடக்கும்....???

அப்பாவி முசுலிம்
மக்களின் மீது
காவி வெறி
போலீசு தாக்குதலில்
வலது காதின்
செவித் திறனை
இழக்க வேண்டும்.


இந்தியா தோற்று
போனதற்க்காக இனிப்பு
வழங்கி பட்டாசு
வெடித்து பாக்கிஸ்தான்
ஜிந்தாபாத் என்று
முழக்கமிட்டதாக பொய்
வழக்கு போடப்பட்டு
சிறையில்தள்ளப்படும்
நிலைமை ஏற்படும்........................


மேலதிக விபரங்களுக்கு படிக்க....
பாகிஸ்தான் ஜிந்தாபாத்தின் உண்மைக் கதை !

புதன் 30 2017

பிள்ளையாரை போட்டுடைத்த பெரியார்

*பிள்ளையாரை போட்டுடைத்த பெரியார்:* *நீதிமன்ற விவாதம்*
*பிள்ளையாரை போட்டுடைத்த பெரியார்: நீதிமன்றத்தில் சுவையான விவாதம்!*

*பெரியார் பிள்ளையாரை போட்டுடைத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்…*

*நீதிபதி (கைது செய்த காவலரிடம்): இவர் என்ன குற்றம் செய்தார்?*

*காவலர்: இவர் பிள்ளையாரைப் போட்டுடைத்தார்.*

*நீதிபதி (பெரியாரிடம்): பிள்ளையாரைப் போட்டுடைத்தீர்களா?*

*பெரியார்: ஆமாம், போட்டுடைத்தேன்.*

*நீதிபதி: ஏன் அப்படிச் செய்தீர்கள்?*

*பெரியார்: கடைவீதிக்குப் போனேன். அங்கு பிள்ளையார் சிலையை விலைக்கு வாங்கினேன். யாருக்கும் இடையூறு இல்லாமல், தெரு ஓரமாகப் போட்டுடைத்தேன்.*

*நீதிபதி: ஒரு மதத்தவர் வணங்கும் கடவுளைப் போட்டுடைப்பது அவர்களது மனதைப் புண்படுத்தாதா? அது தவறல்லவா?*

*பெரியார்: நான் பிள்ளையார் சிலையை வாங்கும்போது, பலர் அதேபோல வாங்கினார்கள். அவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள் என்று கேளுங்கள்.*

*நீதிபதி (காவலரிடம்): மற்றவர்கள் என்ன செய்தார்கள்?*

*காவலர்: அவர்களும் போட்டுடைத்தார்கள்.*

*நீதிபதி: அவர்களை ஏன் கைது செய்யவில்லை?*

*காவலர்: அவர்கள் “கடவுள் உண்டு” என்று சொல்லி உடைத்தார்கள். ஆனால் இவரோ, “கடவுள் இல்லவே இல்லை” என்று சொல்லி உடைத்தார்.*

*நீதிபதி: இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? “கடவுள் இல்லை” என்று சொல்பவர் உடைப்பதில் அர்த்தம் உண்டு. “கடவுள் உண்டு” என்று சொல்பவர், அவர்கள் வணங்கும் கடவுளையே உடைப்பது நியாயமா? (பெரியாரை பார்த்து) அய்யா, நீங்கள் போகலாம்.*

செவ்வாய் 29 2017

போதி மரத்து 'புத்தனை' விநாயகனாக்கிய ஆரிய வரலாறு

போதி மரத்து 'புத்தனை'  விநாயகனாக்கிய ஆரிய வரலாற்று திருட்டு சூழ்ச்சி :- 

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொல்லுவார் 
"The history of India is nothing , the battle between Buddhism and Brahmanism
.என்று,  அதாவது இந்திய வரலாறு என்பது எதுவுமில்லை.ஆரியத்துக்கும், பௌத்தத்திற்குமான போரே இந்த இந்திய வரலாறு என்று..., இந்திய வேத ,பூத, பார்ப்பன, புலுகு மூட்டைகளான வேதங்கள், ஷ்மிருதிகள், ஆரண்யங்கள், உபநிஷத்துக்கள் , என சமஸ்கிருத்த்திலுள்ள புராண குப்பைகள், வரலாற்று திருட்டுகளையெல்லாம் , சமஸ்கிருதத்தில் பட்டம் பெற்று ஆராய்ந்தறிந்து  கற்றுணர்ந்து சொன்னவர்தான் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள்.

விநாயக சதுர்த்தி தினத்தன்று,  ஒரே ஆரவாரம், கேளிக்கை, கொண்டாட்டம் என இந்த பைத்தியக்காரத்தனங்கள் வழக்கத்திற்கும் மாறாய் இந்துவெறியர்களின் ஆட்சியில் பலமடங்கு அதிகரித்துள்ளது.

சரி யார் இந்த விநாயகன்...? ஆரியம் சொன்ன அதே கதைகளை வைத்து அழுக்கில் உருவானவன், யானைத்தலைகளை பொருத்தியவனென்றெல்லாம் அவர்கள் சொன்ன கதைகளை வைத்தே நாம் நையாண்டிகள் செய்வது ஒரு புறம் இருக்கட்டும்...! புத்தன் தன் அரச வாழ்வைத் துறந்து அதன் மரத்தடியில் அமர்ந்த காரணத்தினாலே.. அது அரசமரம் என்றாயிற்று...!ஆங்கிலத்தில்(Bothi tree) என்றழைக்கப்படுகிறது.பின்நாளில் பௌத்த பண்பாட்டு வாழ்வியல் முறைகளை அழிக்கத் துவங்கிய இந்துஆரியம், நம் மக்களின் பழக்க, வழக்கங்களாய் ஊரிப்போன செயல்களை மாற்ற இயலாத காரணத்தினால், பௌத்தமுறை பழக்க வழக்கங்களை தன்பால் ஈர்த்துக்கொண்டு கபளீகரம் செய்ய ஆரம்பித்தது, பௌத்த அடையாளங்களை தமதாக்கிக்கொள்ள அதில் சில இடைச்சொறுகள்கள் கட்டுக் கதைகள், அடையாளச் சிதைப்பு ஆகியவற்றை கொண்டுவந்தது, மக்கள் அரசமரத்தடியில் அமர்ந்த குருவான புத்தரிடம் சென்று அறநெறிகருத்துக்கள், தம்ம போதனைகள் கேட்டுவந்த மக்களிடம்,புத்தருக்குப் பின் அவரது நினைவைப் போற்றும் விதமாக மரியாதையின் நிமித்தம் அரசமரமருகே சென்றுவந்த இடத்தில் புத்தரின் உருவம் பொரித்த சிலைகளை அழிக்க ஆரம்பித்திருதிருக்கின்றனர். 

விகார் + நாயகன்= விநாயகன் ; அதாவது எங்களின் விகாரின் நாயகனான புத்தனே இங்கு விநாயகநாக்கப்பட்டார்....! இதன் இன்னொரு பெயர் 'பிள்ளையார்' என்றழைக்கப்படுகிறது      

திருச்சியில் கூட உச்சிபிள்ளையார் கோவில் உள்ளது .அதன் உச்சியில் இருந்ததும் புத்தர்தான். 

திரி+ சரணம்+ பள்ளி = திரிசரணப்பள்ளி , இப்பொழுது திருச்சிராப் பள்ளி என்று வழக்கானது. (திரிசரணங்கள் என்பது புத்தம், தம்மம், சங்கம் என்பதுதான்) இந்த மூன்று அறநெறிகளை போதித்த பள்ளி (பாலி சொல்) தான் அங்கு இருந்திருக்க வேண்டும் .

சீலம் என்றால் பாலி மொழியில் ஒழுக்கம் எனப்படும், பழைய சீலமே பின்னாளில் சேலமாகியுள்ளது.திருப்பதியிலுள்ள சாமிக்கு திருவேங்கடன் என்ற பெயருண்டு திரு+ வேங்கட+ மலையான் திரி புத்தம், தம்ம, சங்கம்  என்ற திரிரத்தினங்கள் திரு என்றாகி , வேங்கடம் என்றால் மலை, அதாவது திரி பீடகத்தில் மலையின் உச்சத்தை அடைந்தவன் ஆக இதுவும் பௌத்த பெயர்தான்.பகவான் என்பதும் பாலிச்சொல்தான், அதன் பொருள் ஆசைகளை அருத்தெரிந்தவன் என்று வள்ளுவர் கூறிய ஆதி பகவன் புத்தர்தரைத்தான்  அதன் பொருள் ஆதி-என்றால்= முதல் ; பகவன்என்றால்= பற்று அற்றவன்.என்பதாகும்.

 இன்று திருமணங்களில் கூட அரசங்கால் நடுவது வழக்கமாக உள்ளது.இதனை இந்துக்கள் பின்பற்றுவதால் அதனை மூடநம்பிக்கையாக நாமும் எதிர்கிறோம், ஆனால்  அது நமது வழக்கமாக முன்பு இருந்துள்ளது , நமக்கெல்லாம் அறகருத்துக்களை போதித்து நல்வழிப்படுத்திய புத்தரின் தலைமையின்பால்  எங்களின் திருமணம் நிகழ்கிறது என்பதைக் குறிக்கும் மானசீக அன்பின், மரியாதையின், நன்றியுணர்வின் வெளிப்பாடுகளைக் குறிக்கும் செயல்கள்தான் என்பதை  நாம் அனைவரும் உணர்தல் வேண்டும். வரலாறு மீண்டெழும்.தம்மச்சக்கரம் சுழலும்...!                  

  தோழமையுடன் :- Cpms Cpms சவிதா.

திங்கள் 28 2017

மேதகு திக்விஜயம் வெற்றி பெற்ற இரகசியம்.!


ஐரோப்பிய நாடுகளுக்கும்
அமெரிக்கா........வுக்கும்
அரசு முறை
பயணமாக சென்று
திரும்பிய மேதகு
மோடியின் திக்விஜயம்
மாபெறும் வெற்றி


மேதகு மோடியின்
உற்ற நண்பரான
பரம பூஜனிய
டொனால்ட் ட்ராம்ப்
அவர்களின் சமூகம்
மோடியை மூன்று
முறை கட்டி
பிடித்ததாலும் ஐந்து
முறை கைகுலுக்கியதாலும்
திக்விஜயம் வெற்றி!

பெற்றி பெற்று
வரும் வழியில்
டச்சு பிரதமர்
மானனீய மார்கரூத்தே
அவர்களின் சமூகத்திடம்
இருந்து மாபெரும்
பரிசான சைக்கிள்
ஒன்றை பெற்று
பெருமிதத்துடன் திரும்பி
உள்ளதால் மேதகு
மோடியின் திக்விஜயம்
வெற்றி !வெற்றி!!

ஞாயிறு 27 2017

இதற்கு காரணம் யார்....???



தெரியுமா உங்களுக்கு?

புனிதத்திற்கு..........
மாட்டு மூத்திரம்.


கொல வெறிக்கு........
சோமபானம்.


மாட்டு மூத்திரம்
குடிக்கும் மாநிலங்களை
விட மாட்டுக்கறி
சாப்பிடும் மாநிலங்களான
தமிழகம் கேரளாவில்
குழந்தை திருமணங்களை
தடுப்பதில் முன்னேறி
இருக்கிறது தெரியுமா..!!!


இதற்கு காரணம்
யார்  தெரியுமா..???
அவர்தான்  பெரியார்........!!!!!!!!!!!!!!.



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...