பக்கங்கள்

வெள்ளி 22 2019

நினைவலைகள்-92.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை



Dharmar Dharmarr

தோழர் நீங்கள் அவசியம் இம்முறை ஓட்டுப்போடனும்.....
இல்லையென்றால் BJP-ADMK ஜெயிக்க நீங்களும் காரணமாவீர்கள்..!
களநிலவரம் அப்படித்தான் உள்ளது.
காவி -கார்ப்பரேட் பாசிஸ்டுகள் அனைத்து துறைகளிலும் கடந்த4ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் திட்டத்தை ஆளும் கட்சி என்ற முறையில் அனைத்துவித அதிகாரத்தையும் செலுத்தி வலுவான அடித்தளத்தை அமைத்து விட்டனர்.
அவர்களை இப்போது எந்த வழியில் அப்புறப்படுத்த முடியும்..?
ஆயுதம் தாங்கிய / நக்சல்பாரி வழிமுறையிலா..?
*தேர்தல் பாதை திருடர் பாதை* என முழக்கமிட்டுவிட்டு..,
*பாசிச பாஜக ஒழிக* என்பதோடு நின்றுவிட்டால் அரசியல் களத்தில் BJP யை அப்புறப்படுத்த முடியுமா.?
BJP -ADMK கட்சிகளை எதிர்த்து மீம்ஸ் போட்டுவிட்டு மாற்று அணிக்கு ஆதரவு தரலாமா..? வேண்டாமா...? என கூறாமல் மௌனமாக இருப்பது எந்தவகை அரசியல்...?
தேர்தலை புறக்கணிக்கும் புரட்சிகர அமைப்புகளின் நிலை என்ன..?திராவிடர் கழகம் போன்ற பெரியாரிய அமைப்புகள் Admk -Bjp யை எதிர்த்து திமுக-காங்கிரஸ் அணியை ஆதரிக்கிறார்கள்...புரட்சிகர அமைப்புகள்...?
மக்கள் அதிகாரம் பரந்து பட்ட கிளைகளை கொண்டு பல்லாயிரக்கணக்கில் மக்களை திரட்டி மாநாடு, பொதுக்கூட்டம் நடத்தி அதில் தேர்தல் களத்தில் நிற்பவர்களையும் பங்கெடுக்க வைத்து விட்டு தமது அணிகளுக்கு தேர்தலில் பங்கெடுப்பது பற்றிய சரியான நிலைப்பாடை அறிவிக்காமல் விடுவது Admk -Bjp க்கு சாதகமில்லையா..?
வெறுமனே ADMK -BJP யை எதிர்ப்பதும் மாற்று அணிபற்றி எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருப்பதை திமுக-காங்கிரஸ் அணிக்கு ஓட்டு போடலாம் என்று பிரச்சாரம் செய்வதற்கு சமம் தானே...?
இன்னும் நிறைய கேட்கனும் ...மேற்கூறியதிற்கு விடை தெறிந்தால்...கேட்போம்.




வியாழன் 21 2019

நினைவலைகள்-91.

பெண். என்பவர்.....







பெண்ணை
போகமாய்..
வணிகமாய்..
நிலவும்...
சமூகம்
நடத்துகிறது
என்பதற்கு
உதாரணம்
பொள்ளாச்சி
பாலியல்
கொடூரம்..






படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

புதன் 20 2019

நினைவலைகள்-90.

அந்த புத்தகத்தின் இரண்டாம் பக்கத்தில்...............???????????











 நான் ஏன்?
சன்றோர்கள் நாசமாக
போகட்டும் என்கிறேன்
என்றால்......


அந்த புத்தகத்தின்
முதல் பக்கத்தில்
சாதிகள் இல்லையடி
பாப்பா என்று
எழுதிவிட்டு அடுத்தப்
பக்கத்தில் ஈனப்
பறையரேனும் என்று
இந்து கல்விமுறை
எழுதி வைத்ததை
சொல்லி கொடுக்கும்
சான்றோர்கள் நாசமா
போகட்டும் என்றேன்




செவ்வாய் 19 2019

நினைவலைகள்-89.

வேடிக்கை மனிதர்களைப் பற்றியதல்ல இந்த கட்டுரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை


ரா கெளதம்


மனிதனுக்கும் மிருகத்துக்கும் என்ன வித்தியாசம்?அவனுக்குள்ள சிறப்பென்ன?

பூமியில் வாழும் லட்சக்கணக்கான உயிர்களில் மனிதனும் ஒன்று. தனித்துவத்தை எடுத்துக்கொண்டோமானால் எல்லா உயிர்களுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது

தேனீயின் அறிவு,யானையின் பலம், எறும்பின் நுண்ணறிவு,நாயின் மோப்ப சக்தி,
ரஷ்யாவிலிருந்து வேடதாங்கல் வந்துவிட்டுப் போகும் பறவை என ஒவ்வொரு மிருகத்துக்கும் தனித்துவம் இருக்கிறது

அவை உயிர்வாழ்வதற்கான அறிவையும் அவற்றுக்குள் உரையாடுவதற்கான பிரத்யேக மொழியும் இருக்கிறது.

சிரிப்பதுதான் வித்தியாசமா என்றால் அதுவுமில்லை.எல்லா மிருகமும் தங்களது மகிழ்ச்சியை ஏதாவது ஒருவிதத்தில் வெளிப்படுத்துகின்றன.
நாய் வாலாட்டுவது திமிங்கலம் கடலுக்கு மேலே குதிப்பது,மயில் ஆடுவது இப்படி

இப்படி சிந்திப்பிலும் மொழியிலும் சிரிப்பிலும் தனித்தன்மையிலும் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் வித்தியாசமில்லை

வேறென்ன வித்தியாசமென்றால் சிந்தனை மூலம் இயற்கையை மிருகங்களைக் கட்டுப் படுத்துகிறான். சிந்தனை மூலம் உணர்வுகளை பிரதிபலிக்கிறான்,படைக்கிறான்.

அதன் மூலம் எல்லாவற்றையும் கட்டுபடுத்துவதால் மனிதகுலம் எண்ணிக்கை பெருகுகிறது அதனால் உழைப்பில் ஈடுபட்டு உற்பத்தியில் ஈடுபடுகிறான்.

மற்ற உயிரினங்களிடமிருந்து வேறுபடுத்துவது சிந்தனையும் உழைப்பும் மட்டுமல்ல முக்கியமானது வேறொன்றும் இருக்கிறது

சிந்தனையின் மேன்மை வெளிப்பாடான பிறருக்கென வாழ்தல் சமத்துவத்தை கோருதலாகும்

எந்த விலங்கும் தன்னைத்தவிர தனது இனமோ மற்ற இனங்களோ வாழவேண்டுமென நினைப்பதில்லை. அதற்காக தனது வாழ்வை தியாகம் செய்வதுமில்லை.

இந்த பிறருக்கென சமூகத்திற்கென வாழும் சிந்தனைதான் மற்ற உயிரினங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்துகிறது.

மனிதன் சமூக விலங்கு.பொதுநல சிந்தனையோ சுயநல சிந்தனையோ அவன் சமூகத்தோடுதான் இணைந்து வாழமுடியும்.

சிலர் மக்களுக்காக வாழ்வதை கடமையாகவும் பெரிமிதமாகவும் தனது சாதனையாகவும் நினைத்துத் கொள்கிறார்கள்.

பணமிருப்பவன் பணத்தை தானம் செய்வதன் மூலம் ஏதோ மக்களுக்காக வாழ்வதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

சிலர் மக்களுக்காக அல்லாமல் அஞ்ஞானமான பக்தி,கடவுள்,பரமாத்மாவுக்காக வாழ்வை தியாகம் செய்ததாக நினைத்துக் கொள்கிறார்கள். இவர்களால் மனிதகுலத்திற்கு நட்டமே.

சமூகத்தையும் குடும்பத்தையும் பிரிக்கமுடியாது.நமது வாழ்நாள் 65ஆண்டுகளென்றால் 23725நாட்கள்தான் உயிர் வாழ்கிறோம்

இதில் பெற்றோர் கட்டுப்பாட்டிலும் பள்ளி வாழ்க்கையிலும் 17ஆண்டுகள் போய்விடும்.அப்படி 6205நாட்கள் போய்விடுகிறது

கல்லூரி என்றால் 3,5வருடம் போய்விடும் அதில் 1825நாட்கள் போய்விடும். பல்கலை,மருத்துவப்படிப்பு, ஆராய்ச்சி என்றால் 28வயதாகி விடும்.அதை கணக்கில் சேர்க்க வேண்டாம்

மீதி வாழும் 43ஆண்டுகளில் 4ல் ஒருபங்கு உறக்கத்தில் போய்விடும்.அதாவது 10.75 ஆண்டுகள். அப்படி 3924நாட்கள் போய்விடுகின்றன

ஆண்டுக்கு 10நாட்கள் உடம்புக்கு சரியில்லை என்றால் அதில் 430 நாட்கள் போய்விடும்.

அடுத்ததாக காத்திருப்பது வேலைக்காக, வாகனங்களுக்காக ஒவ்வொரு தேவைக்கும் வரிசையில் காலைக்கடன், சில நேரங்களில் 
வெட்டியாக பொழுது போவதில் 5ஆண்டுகள் போய்விடும். அப்படி 1825 நாட்கள் வீணாகும்

இதில் அடிமை புத்தியுடைய பெண்கள் பாவாடை சேலையை காலில் தட்டித்தடையாமலிருக்க தூக்கிப் பிடிப்பதிலும் மாராப்பு சேலையை இழுத்து விடுவதிலும் மேக்கப்பிலும் தலைமுடியை கோதி விடுவதிலும் முடியை பராமரிப்பதிலும் வாழ்நாளில் 9ஆண்டுகளை வீணடிக்கிறார்கள். இதை கணக்கில் வைக்க வேண்டாம் மனிதில் வைத்தால் போதும்.

மேலும் லிங்கா, மொட்டசிவாகெட்டசிவா, உத்தமவில்லன்,மாரி,கத்திச்சண்ட போன்ற வெட்டிப்படங்களை பார்ப்பதன் மூலம் வீணாகும் நாட்கள் பல.

சிலர் இலக்கிய அறிவை வளர்த்துக் கொள்வது என்ற பெயரில் உலக இலக்கியங்கள் இந்திய இலக்கியம் ஆண்டுக்கு 1000புத்தகம் வெளியானால் 400புத்தகங்களைப் படிப்பது மேலும் சமஸ்,ஜெயமோகன்,பாலகுமாரன், இறையன்பு புத்தகங்களைப் படிப்பது சிலர் பக்தி புத்தகங்களைப் படித்து ஜென்மம் பாழாக்கிக் கொண்டிருப்பார்கள்.

இவர்கள் கடைசிவரை மக்களுக்காக எதையும் செய்யாமல் புத்தகம் படித்தே சாவார்கள் அல்லது மேட்டிமைத்தனமான உபதேசங்களைப் பேசிப்பேசியே சாவார்கள். இவர்கள் வாழ்நாளில் பாதியை வீணாக்குவார்கள்.

குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு நாட்டுக்காக வாழ்பவர்கள் 40ஆண்டுகளில் தினம் 8மணிநேரம் வேலை பார்ப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

இப்படியாக 23725நாட்களில் மேற்கண்ட எல்லாம் போக ஒரு 3000 அல்லது 4000நாட்கள்தான் நாட்டுக்காக மக்களுக்காக வாழ முடியும்.

அதுவும் மக்களுக்காக வாழும் எண்ணமிருந்தால். இது கடைசிவரை தான்,தனது குடும்பமென வாழ்ந்து வீழும் வேடிக்கை மனிதர்களைப் பற்றியதல்ல இந்த கட்டுரை.

4000நாட்கள் மக்களுக்காக வாழ்ந்து விட்டு வாழ்நாளையே தியாகம் செய்வதாகச் சொல்வதில் ஒரு அர்த்தமுமில்லை.

சமூகவரலாறு என்பது வர்க்கப் போராட்ட வரலாறே. சமூகம் என்பது முதலாளி தொழிலாளி என இரு வர்க்கமானது இதில் தொழிலாளி வர்க்கத்திற்காக வாழ்வதே போராடுவதே மனிதனின் வரலாற்றுக் கடமை

அப்படி வாழ்ந்தவர்களில் ஒரு மகத்தான உதாரணம்தான் மாமேதை காரல்மார்ஸ்.

தொழிலாளி வர்க்கப் போராட்டத்திற்காக விஞ்ஞானப்பூர்வமான கம்யூனிசத் தத்துவத்தை உருவாக்கி அதற்காக தன்னை தன் குடும்பத்தை துறந்து வாழ்நாள் முழுவதும் உழைக்கும் வர்க்கத்தைப் பற்றியே மரணம் வரை சிந்தித்தவர்தான் மார்க்ஸ்.

உழைக்கும் மக்களுக்காக வாழ்வோருக்கு ஒரு முன்னுதாரணம். இதுதான் மனிதனின் அடையாளம் பருப்பொருளின் உயர்ந்த வடிவமான சிந்தனையின் உயர்ந்த வடிவம்தான் பிறருக்காக வாழுதல் சமத்துவமாக வாழுதல் இதுதான் மனித அடையாளம்

அதற்கொரு உயர்ந்த எடுத்துக்காட்டுதான்  மாமேதை காரல்மார்க்ஸின் வாழ்க்கை.

இது வர்க்கப் போரில் வீரமரணமடைந்தவர்கள், ஆயுதமேந்தி போராடிக் கொண்டிருப்பவர்கள், கட்சியில் முழுநேர ஊழியர்கள்,சிறையில் கிடப்பவர்கள், கட்சியின் எல்லாப் போராட்டத்திலும் கலந்து கொள்பவர்களைப் பற்றியதல்ல

2ஆண்டுக்குள் கட்சியில் இருந்து ஓடியவர்கள் "எவனும் திருந்த மாட்டான் சார்"
 "தோழர் மக்கள் இன்னும் தயாராகல தோழர்" "எந்தக் கட்சியும் சரியில்ல தோழர்"
"நிறைய படிக்கவேண்டிருக்கு தோழர்" "இலக்கியபணியும் கட்சிவேலைதானே தோழர்" "ஏதோ முடிஞ்சத செய்யிறேன் தோழர்" என புலம்புவோருக்காகத்தான் இந்த பதிவு.

கம்யூனிசம் என்பது வரவிருக்கும் சமூகம். மார்க்சியம் என்பது அதை எளிதில் விரைவில் அடைவதற்கான சூத்திரம்,வழிகாட்டி.

ஆக நமது வாழ்க்கையானது கம்யூனிசம் என்கிற சிந்தனைக்கும் முதலாளித்துவ வாழ்க்கைமுறைக்கும் ஆனப் போராட்டமாகும்

இதில் ஜெயிப்பவன் கம்யூனிஸ்ட்டாகிறான் தோற்றபவன் முதலாளித்துவ வாதியாகிறான் ஊசலாடுபவன் குட்டி முதலாளியாகிறான்.

இதில் கட்சியிலிருந்து வெளியேறும் பலரும் குடும்ப வாழ்க்கையில் தஞ்சமடைகிறார்கள் இந்த குட்டி முதலாளித்துவ நிலைபாட்டை அவர்களது ஈகோ ஏற்றுக்கொள்ள மறுக்கிறது

அதை மறைக்க கட்சியை ஏசுகிறார்கள் மக்களைப் பழிக்கிறார்கள். தனது வாழ்க்கை கட்சிக்காக வீணானதாக புலம்புகிறார்கள்.

தனது அறிவாளி மேட்டிமைத்தனத்தை காட்டி கட்சியைவிட மேலானவர்களாகக் கருதிக் கொள்கிறார்கள்.
இவர்கள் ஒருமுறை மார்க்ஸ்,ஏங்கெல்ஸ், லெனின்,ஸ்டாலின்,மாவோவின் வாழ்க்கையை கட்சிப்பணியை படித்தால் புரிந்துகொள்வார்கள்.
"என்றோ வரப்போகும் புரட்சிக்காக 'அற்புதமான' இந்த ஒரே பிறவியை வீணடிப்பதா" என நழுவுகிறார்கள்
இன்று கட்சி இருக்கிறது,தத்துவம் இருக்கிறது,வளர்ந்து விட்ட பாட்டாளிவர்க்கம் இருக்கிறது, ஆயுதம் இருக்கிறது, ஊடகமிருக்கிறது, செயல்தந்திரமிருக்கிறது
அப்படியிருந்தும் கட்சியிலிருந்து ஓடியவர்கள் சலித்துக் கொள்கிறார்கள்

ஆனால், இது எதுவுமே இல்லாத காலத்தில் நாடு கடத்தல், வறுமையிலும் "எப்போதோ" வெற்றி பெறப்போகும் கம்யூனிசத்துக்காக தன்னை "தோற்றுகொடுத்து" ஆவேசமாக ஒரு தத்துவத்தை படைத்த காரல்மார்க்ஸ் மேதைதான்..மாமேதை..மாமனிதன்.

புஷ்கின்

திங்கள் 18 2019

நினைவலைகள்-88.


மகளிர் தினத்தை பற்றி ராஜசங்கீதன்.....

இதோ வந்து விட்டது சர்வதேச மகளிர் தினம். இந்த நாளுக்கான வரலாறை எந்த வெகுஜன ஊடகமும் பதிவு செய்யாது என்ற அபரிமிதமான நம்பிக்கையுடன் இப்பதிவை எழுதுகிறென். அதிகபட்சம் போனால் துப்பட்டா பறக்கவிட்டு, அழகை மட்டுமே பெண்ணின் அடையாளமாக ஆக்கும் நிகழ்ச்சிகளும் தனிமனிதவாதம் ததும்பும் பேட்டிகளும் இந்த நாளை நிரப்பக்கூடும். ஆனால் இவை எதுவுமல்லாத காரணங்களுக்குத்தான் மகளிர் தினம் அனுஷ்டிப்பு தொடங்கப்பட்டது.

மகளிர் தினம் தோன்றியது பெண்களின் போராட்டம் ஒன்று அமெரிக்காவில் 1857ம் ஆண்டு முறியடிக்கப்பட்டதன் நினைவாகத்தான் என இணையமெங்கும் தகவல் பரப்பப்படும். நம்பாதீர்கள். வழக்கம் போல் கம்யூனிச வரலாறை மறைக்க விரும்பும் அமெரிக்க வருடிகளின் கட்டுக்கதை அது. ஆனால் பெண்ணுக்கான தினமென முதலில் கொண்டாடப்பட்டது 1909ம் ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்காவில்தான். கொண்டாடியது அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சி. பெண்களுக்கான ஓட்டுரிமையையும் சமூக அங்கீகாரத்தையும் வேலை நேர குறைப்பையும் வலியுறுத்தி திரண்ட கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பெண்ணுக்கான தினம் கொண்டாடப்பட வேண்டிய தேவை ஐரோப்பாவுக்கும் பரவியது. 1910ம் ஆண்டு சர்வதேச சோஷலிச மகளிர் மாநாடு நடந்தது. க்ளாரா ஜெட்கின் போன்றோரின் முன்னெடுப்பில் சர்வதேச உழைக்கும் மகளிர் தினமென ஒரு நாள் கொண்டாடப்பட வேண்டுமென்ற முடிவெடுக்கப்பட்டது. ஓட்டுரிமை மற்றும் வேலையில் பாலின சமத்துவம் ஆகியவை வலியுறுத்தப்பட வேண்டும் எனவும் முடிவுகள் எடுக்கப்பட்டன. பாரிஸ் கம்யூன் அரசை நினைவு கூறும் வகையில், மார்ச் 9, 1911ம் ஆண்டில் முதல் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது, லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். எல்லாம் சரி, ஏன் மார்ச் 8 என்று கேட்கலாம்.

ரஷியாவில் புரட்சியின் தொடக்ககாலத்தில், பிப்ரவரி 23, 1917 அன்று பிரம்மாண்டமான போராட்டம் ஜார் மன்னனின் அரசை எதிர்த்து பெண்கள் தொடுத்தனர். தலைமை தாங்கியது அலெக்சாந்த்ரா கொலந்தாய். முதல் உலகப்போர் நடந்துகொண்டிருந்த காலகட்டம் அது. ஜார் மன்னனின் அரசு உணவு விநியோகத்தை போரின் காரணமாக கட்டுப்படுத்தியது. அன்றாட உணவுக்கே திண்டாடும் நிலை. உழைக்கும் பெண்களின் தலைமையில் மொத்த ரஷ்ய பெண்களும் ஜார் மன்னனுக்கு எதிராக வெகுண்டெழுந்து ‘Bread and peace' என முழங்கினர். போர் தேவையில்லை என்றும் உணவும் அமைதியுமே தேவை எனவும் கோஷங்கள் எழுப்பினர். ஜாரும் வீழ்ந்து, அக்டோபர் புரட்சியும் வெல்லப்பட்ட பின், சோவியத் யூனியனில் அலெக்சாந்த்ரா கொலந்தாய் மற்றும் லெனினால் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் அங்கீகரிக்கப்பட்டது, மட்டுமல்லாமல் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஊதியம் உறுதிப்படுத்தப்பட்டது. கருக்கலைப்பு உரிமையும் வழங்கப்பட்டது. பெண்ணுக்கான முதல் அரசு பதவிகள் வழங்கப்பட்டன. பிப்ரவரி 23 என்பது ஆங்கில காலண்டரில் மார்ச் 8 ஆகும்.

1970கள் வரை மகளிர் தினம் சோஷலிச நாடுகளான ரஷியா, சீனா ஆகியவற்றில் மட்டும்தான் கொண்டாடப்பட்டது. 1975 வாக்கில்தான் ஐ நா அங்கீகரித்தது. அமெரிக்கா செய்தது என்ன? சீனாவிலும் ரஷியாவிலும் உழைக்கும் மகளிர் தினம் என கொண்டாடப்படும் நாளை, சர்வதேச மகளிர் தினம் என மட்டும் சுருக்கி கொண்டாட காரணம் அமெரிக்காதான். அப்படித்தான் பெண்ணை ஒரு சந்தைப்பொருளாக மீண்டும் ஆக்க முடியுமல்லவா?

சோவியத்தின் காலத்தில் வெளியிடப்பட்ட உழைக்கும் மகளிர் தின படங்களை இங்கு இணைத்திருக்கிறேன். இன்றின் பெரும்பான்மையான மகளிர் தின படங்களை பாருங்கள், இவற்றில் இருக்கும் பெண்களின் அரசியலுணர்வை பெற்றிருக்காது. ஏனெனில் இன்று கொண்டாடப்படுவது சர்வதேச மகளிர் தினம்தான். உழைக்கும் மகளிர் தினம் அல்ல. சர்வதேச மகளிர் தினத்தில் தாய்மையை, காதலை, அன்பை எல்லாம் கொண்டாடலாம். உழைக்கும் மகளிர் தினத்தில் அரசியலுணர்வை, அதிகார பிரதிநிதித்துவத்தை, சமத்துவத்தை வலியுறுத்த வேண்டியிருக்கும்.

மகளிர் தினம் கொண்டாடப்படுவதன் காரணமும் தேவையும் என்ன தெரியுமா? அது கொண்டாடப்படும் காலத்தில், சமூகரீதியாகவும் கலாசார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெண் சந்திக்கும் பிரச்சினைகளையும் கடக்க வேண்டிய பாதையையும் அடையாளப்படுத்திடத்தான்.

இங்குள்ள படங்களாகத்தான் இன்று நீங்கள் கொண்டாடும் மகளிர் தினம் தொடங்கப்பட்டது என்பதை ஞாபகத்தில் இருத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு அருகில் இருக்கும் பெண் சமூக, கலாசார, அரசியல் மற்றும் பொருளாதார தளங்களில் எங்கே இருக்கிறார் என்பதை ஆராய்ந்து அறிந்து அவருக்கும் அதை அறிவுறுத்துவதிலிருந்து இன்றைய கொண்டாட்டத்தை நீங்கள் ஆரம்பிக்கலாம்

ஞாயிறு 17 2019

நினைவலைகள்-87.


காந்தி உயர் சாதிக்காரர்களின் தந்தை...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இந்திய பணம் க்கான பட முடிவு





காந்தியைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் கூற்று..

நீதி உணர்வே இல்லாத பாவியாகத்தான் இருந்தார் காந்தி. என்னைத் தோற்கடிக்க வேண்டும்
என்பதற்காக வஞ்சகமான கோழைத்தனமான ‘சாகும்வரை உண்ணாவிரதம்’ என்கிற கருவியைப் பயன்படுத்தினாரே அல்லாமல்அறிவுக்கூர்மையை அவர் பயன்படுத்தவில்லை.

 இதன் மூலம் இந்துக்களின் நிலையான அடிமைகளாகத் தீண்டப்படாதவர்களை ஆகும்படி செய்தார்.

இந்தியாவின் பணக்கார மனிதர்களே ஏழைகளின் அறங்காவலர்கள் என்றார் காந்தி. 

அந்த நிலையிலேயே இந்தியாவின் செல்வங்களை யெல்லாம் ஏழைகளின் அறங்காவலர்கள் என்ற முறையில் அவர்கள் வைத்திருப்பதாகவும் அவர் கூறினார். 

எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும் பொருளாதார சமநிலைக்காக காந்தி அழைப்பு விடுத்ததே இல்லை. வறுமை ஒழிப்புக்காக இயக்கம் நடத்தவும் இல்லை.

காந்தி தீண்டப்படாதவரைப் பலிகொடுத்து இந்து மதத்தைக் காப்பாற்றியவர்.

காந்தி நூற்றுக்கு எண்பத்தைந்து விழுக்காடு இந்தியர்களுக்கு ‘இந்தியாவின் தந்தை’ ஆகமுடியாது.

 பதினைந்து விழுக்காடாக உள்ள ‘உயர்சாதி மக்களின் தந்தை’ என்கிற பட்டத்தையே அவர் பெற முடியும்..

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...