பக்கங்கள்

சனி 20 2014

எட்டப்பனின் பரம்பரைக்கே நன்றிக்கடன் பட்டு இருப்பவர்கள்








இந்தியாவின் தென் கோடியில் இருந்த பாரதி, வட கோடியிலுள்ள சத்ரபதி சிவாஜி, கோகலே, தாதாபாய் ,திலகர், லாலா லஜபதி போன்றவர்களை பாடியிருக்கிறார்.

தான் கிணற்று தவளை இல்லை என்பதை நிருபிப்பதற்க்காக அயல்நாடுகளான இத்தாலி, பெல்ஜியம், ரசியா போன்ற நாடுகளை பற்றியெல்லாம் பாடியிருக்கிறார்.

இதோடு தான் இயற்கையை நேசிப்பவன் என்று பறை சாற்றிக் கொள்வதற்க்காக மரம், மட்டை, .மண்ணாங்கட்டி, காக்கை,குருவி,கிளி போன்றவற்றையெல்லாம் பாடியிருக்கிறார் பாரதி.

ஆனால் எட்டப்பனின் ஊரான எட்டையாபுரத்தில் பிறந்து,எட்டப்பனின் வாரிசான மன்னனுக்கு தோழனாக இருந்து, அவனை அண்டி பிழைத்த பாரதி

எட்டயாபுரத்து மன்னன் காசு கொடுக்காததினால் எட்டையாபுரத்து கட்டபொம்மனை பற்றி அவதூறு செய்து பாடவில்லை பாரதி.

அந்தத் தீமையிலிருந்து பாரதியை காப்பாற்றியவன் எட்டப்பனின் வாரிசான மன்னன். இதிலிருந்து எட்டப்பனின் பரம்பரைக்கே நன்றிக் கடன் பட்டு இருப்பவர்கள்.

 பாரதியை “ஆ” வென்று “ஓ ” வென்று தூக்கி கொண்டாடும்  பாரதி பக்தர்கள்.


நன்றி! ...விடுதலைப் போரின் வீர மரபு என்ற நூலிருந்து

வெள்ளி 19 2014

எல்லாவகையான காதல்களுக்கும் உதவுபவர் ...


டச் போன்




கல்லூரி காதலுன்னாலும் சரி, சினிமாவில் காட்டப்படும் சிறுசுகளின் காதலலுன்னாலும் சரி, உண்மைக்காதல், போலி காதல், திருட்டுக் காதல், கள்ளக் காதல்.... இப்படி எந்த வகையான் காதலுக்கும் நேரம் காலம், சாதி,மதம் பார்க்காமல் உதவுபவர்...........  

யார் தெரியுமா??? 



ஒரு தற்ப்புகழ்ச்சி காரரின் பொய்யும் புரட்டும்........

படம்.தினகரன்

சினிமா தொழில்ல இருக்கிற ஒரு குருப் இப்படித்தான் பீத்திக் கொண்டே இருக்கும்.அது என்னாதுன்னா அது இதுதான்.

“சிவாஜி சாயல் இல்லாமல் எந்த நடிகருமே நடிக்க முடியாது” என்று.

இதே மாதிரியை அடிப்படையாகக் கொண்டு ஒரு இசைமைப்பளார் ஒருவர் கதாநாயனாக நடித்த இரண்டாவது படத்தை இயக்கிய தோத்தாரி என்ற பெயரை தான் புதிதாக இயக்கிய படத்துக்காக நிர்மல் குமார் என்று மாற்றிக் கொண்ட தற்பெருமைக்காரர்.

கிராமத்தில் நிலவும் சாதி வெறியை மறைத்து அதை பற்றிய எதையும் காட்சிப்படுத்தாமல , அந்த சாதி வெறியர்களின் சாதி ஆதிக்கத் திமிரையே கிராமத்து வரலாறாக காட்சி படுத்தி .என் இனிய தமிழ் மக்களே!என்று அடைமொழியுடன்  படத்தை இயக்கியவரிடம்... பதிமூன்று ஆண்டுகளாக குப்பை கொட்டியவர்.

தன் குருவுக்கு செய்நன்றி காரணமாக அந்தக்குருவையே மிஞ்சும் அளவுக்கு பொய்யையும் புரட்டையும்   கலந்த கலவையாக  புகழ்ந்து தள்ளியுள்ளார்.

“இந்த இயக்குநரின் சாயல் இல்லாமல் எந்தவொரு இயக்குநரும் படமெடுக்க முடியாதாம்”

செத்துப்போன  இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் என்பவர். இந்த இயக்கு நரை பற்றி  சொல்லி விட்டு போய்விட்டார்.

நடிகரை பற்றி சொல்ற குருப் மாதிரி...இயக்குநரப்பற்றி சொல்ற ஒரு குருப் இருக்கிறது என்பது தோத்தாரிஎன்ற நிர்மல் மூலமாக தெரியுது...




வியாழன் 18 2014

நிலையில்லா பேச்சு.......இவருக்கு தொடர்கதையா போச்சு..

vannimedia.com


ஆளை பார்க்காமல் ஒரு பேச்சு.., ஆளை பார்த்தா ஒரு பேச்சு. இப்படிபட்ட  பேச்சு இவருக்கு தொடர்கதையாகிவிட்டது

”பாஜக கூட்டணிக்கும் காந்திய மக்கள் இயக்கத்துக்கும் தொடர்பு இல்லை”-  என்று  இப்...  போதைக்கு பேசி உள்ளார்.

அடுத்து ........???????????????????


விஞ்ஞானத்தை பயன்படுத்தி அஞ்ஞானத்தை பரப்பும் தொலைக்காட்சிகள்.

vidhai2virutcham.com



சன் தொலைக்காட்சியில் செய்தியின் ஊடே “கொல்லிமலை இரகசியங்கள்” என்ற பெயரில் கடந்த மூன்று நாட்களாக  செத்துப்போன சித்தர்களின் வாரிசுகள் என்று குட்டி சித்தர்களின் அஞ்ஞானத்தை பரப்புரை செய்து வருகிறது.

அதில் காட்டப்படுவதெல்லாம் மூலிகைகள் தவிர மற்றவைகள் எல்லாம் மூட நம்பிக்கைகளே... வசூல் ராஜாக்கள் எம்பிபிஎஸ்கள் குணப்படுத்தும் மற்றும் குணப்படுத்த முடியாத வியாதிகளையெல்லாம் இதில் செலவு இல்லாமல்  குட்டிசித்தர்கள் குணப்படுத்தவதாக காட்சி படுத்தி பரப்புரை செய்கிறது.

அதில் தகரத்தை தங்கமாக மாற்றுவதாக சொல்வதும், குட்டிச்சித்தர் ஒருவர் எலும்பிச்சை பழத்தை செல்பேசியாக பயன்படுத்வுதையும்  அந்த எலும்பிச்சை செல்பேசியை பயன்படுத்தியே பக்தர்களின் நோயை குணப்படுத்தியாக குட்டிசித்தரின் பேட்டியையும் பரபரப்புரை செய்கிறது. இது மாதிரி  பல வகைகள்.

இந்த தொலைக்காட்சி மட்டுமல்ல...எல்லா  தொலைக்காட்சிகளுமே அதனதன் ரேஞ்சுக்கு விஞ்ஞானத்தை பயன்படுத்தி அஞ்ஞானத்தையே பரப்புகின்றன. பரப்பி வருகின்றன......


புதன் 17 2014

இந்தியா வல்லரசாயிருச்சு சார்...........

படம்-www.metronews.lk


முன்னோரு காலத்தில்.....
தனியாக பேசினாலும்
தனியாக சிரித்தாலும்
நீ என்ன லூசா என்று 
கேட்டவர்கள்......


இன்றைய காலத்தில்
தனியாக கத்தினாலும்
தனியாக சினிங்கினாலும்
தனியாக சிரித்தாலும்
தனியாக அழுதாலும்
அவன் லூசு என்று
சொல்வதில்லையே...

இதிலிருந்தே தெரிவது
 இந்தியா வல்லரசா
ஆயிருச்சு சார்..................

செவ்வாய் 16 2014

பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு விசாரணை...???




திருமணத்துக்குமன் மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்கலாமா.......???

இந்த விசாரணையில் மூத்த வழக்குரைஞர்கள், மருத்துவர்கள்,ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்பட பலர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இவர்களின் கருத்துரைகளை பதிவு செய்து கொண்ட மதுரை உயர் நீதி மன்ற நீதிபதி.. இது தொடர்பாக தமிழக அரசும் ஒரு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த பரபரப்பு விசாரணையை செப்பு-18க்கு தள்ளி வைத்தார்.




நாயகிகளுக்கு போட்டியாக நாயகர்கள்..!!

படம்-freepressjournal.in



திரைப்பட ஆண் ரசிக குஞ்சு மணிகளை கவர்ந்திழுக்க  நடிகைகளின் அங்க அவயங்களை அரை நிர்வாணமாகவோ..வாய்ப்பு உள்ளபோது முழு நிர்வாணமாகவே காட்டுவது போல..............


திரைப்பட பெண் ரசிசைகளை குசிபடுத்த  பெண் நடிகைகளுக்கு போட்டியாக ஆண் நடிகர்களும் தங்களின் அங்கங்களை முழு நிர்வாணமாகவோ ,பாதுகாப்புடன் அரை நிர்வாணமாகவோ காட்டத் துவங்கி விட்டார்கள்.

இதை ஆரம்பித்து வைத்தவர் அமீர்கான். படம் .PK.

திங்கள் 15 2014

ஒரு தியேட்டருல ரெண்டு படம்.......

படம்-www.jackiesekar.com


தமிழ்நாட்டில் பெரிய வெங்காயங்களின் படங்கள் வெளியீட்டின் போதோ, பாடல் வெளியீட்டின் போதோ,திரைபடத்திலுள்ள சூரப்புலிகள் கோபம் கொப்பளிக்க கர்ஜனை செய்வார்கள்.

அவர்களுடைய கர்ஜனையை பூனை உருமுவதாக எடுத்துக் கொண்டு,  அவர்கள்     கர்ஜனை மறு நாளே திருட்டுவிசிடியை வெளியீட்டு விடுவார்கள் திருlடனுக்கு திருடனான திருட்டு தயாரிப்பாளர்கள்.

சூருப்புலிகளுக்கோ, பூனைகளுக்கோ தான் எவ்வளவுதான் கர்ஜனை செய்தாலும்    மியாவ் என்று கத்தினாலும் திருட்டு விசிடியை ,டாஸ்மாக்கைப்போல்  ஒழிக்கவே முடியாது. என்று நன்றாக அவர்களுக்கே தெரியும்.

எப்படியென்றால்... தியேட்டரும் குறைந்து போச்சு, இருக்கிற தியேட்டரிலும் டிக்கெட் விலையும் ஏறிப்போச்சு, இதில தியேட்டர்காரன்களும் அம்பது ரூபா டிக்கெட்ட நூறு ரூபாய்க்கு விற்கிறாங்கே.... உள்ளே அஞ்சு ரூபா கோன் ஐஸ்சை பத்து ரூபாக்கும், வண்டி நிறுத்தத்துக்கும்  நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக கொள்ளையடிக்கிறாங்கே...

ஏறின விலை வாசி குறைந்ததாகவோ அல்லது குறைத்தாகவோ சரித்திரம் கிடையாது.

 சினிமாவில் அடுத்தவன் கதையை திருடியவர்கள் மற்றும்  கதை விட்டவர்கள் இதை தெரிந்து கொண்டதால்தான். என்னவோ. டி.டி.ஹெச் என்றும்,ட்விடி,சிடி, கேபிள் ஒளிபரப்பு, என்றும், பல தியேட்டர்ல ஒரு படம் என்ற நிலைக்கு போட்டியாக ,ஒரு தியேட்டரில் ரெண்டு படம் என்றும்  என்று புதுசு புதுசாய் தொழில் நுட்பங்களை அறிவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

மட்டையை பிடித்த கடவுளும் பேனாய் பிடித்த கடவுளும்!!!

படம்-www.tamilinfo.in


 கடவுளின்  அவதாரங்களை சிஷ்யர்களோ,அல்லது பக்த கேடிகேளோ, அல்லது கடவுளுக்கு ஏஜென்டாக அதாவது மாமா வேலை பார்த்தவர்கள்தான் எழுதுவார்கள். அந்த வழக்கத்தை மாத்தி..

மட்டையை பிடித்த கடவுளே!, தன் பக்தர்களான கிரிகெட் வெறியர்களுக்கு பேனாயை பிடித்து  “ பிளேயிங் இட் மை வே” ன்னு தன்னுடைய திருவிளையாடல்கள் மற்றும் அவதாரங்களை எழுதியிருக்கிறார்.

நவம்பர் முதல் வாரத்தில் வெளி வரவிருக்கும் கடவுளின் திரு விளையாடல்கள் மற்றும் அவதாரங்கள் நிரம்பிய அந்த சுயசரிதை குறைந்த விலையான ரூ899/-க்கு பக்தர்களுக்கு  காணிக்கையாக்கப்படுகிறது.

அது வெளி வந்த பிறகுதான்  மட்டையை பிடித்தகடவுளின்   கைகளுக்கு “பாரத ரத்னா” விருது கொடுத்தது மாதிரி பேனாய் பிடித்த கடவுளின் கைகளுக்கு “சாகித்திய அக்காதெமி” விருது கொடுக்கப்படுமா?? என்பது தெரியவரும்.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...