பக்கங்கள்

சனி 07 2014

பொது நல வாதியை விரட்டி அடித்த நீதி அரசர்கள்..






படம்.makkalaatsi.blogspot.com

ஒரு பேரரசு இருந்தது. அந்த பேரரசில் ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டில் ஒரு ஊரு இருந்தது. அந்த ஊரில உள்ள..

மக்களில் பெரும்பாலனோர். சிலர் நடத்திய தொழிலகங்களில் அத்தக் கூலிகளாக வேலை செய்து வந்து தங்கள் வாழ்ககையை  ஓட்டிக் கொண்டு இருந்தனர்.

ஒரு நாளு, நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் எல்லாம் சேர்ந்து தொழில் வளம் பெருகும் என்றும் அன்னிய நாட்டு பணம் வளரும் என்று சொல்லி, கொள்ளக்கார,கொலகார நாடுகளைச் சேர்ந்த  தொழில் அதிபர்களை வெத்திலை.பாக்கு வைத்து அழைத்து வந்தனர்.

அப்படி, அழைத்து வரப்படட்டவர்களால் ஏற்ப்பட்ட தொழில் பெருக்கத்தால் அந்த ஊரில் உள்ள சின்ன  தொழிலகங்கள் எல்லாம் தாக்கு பிடிக்க முடியாமல் திக்குமுக்காடி போய கதி கலங்கி நின்றன.

இத்தகைய புன்னியத்தால் அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை கிடைக்காமல் அவதிப்பட்டனர். கிடைக்கும் ஒரு சில வேலைகளில் முன்பு வாங்கிக் கொண்டு வந்த கூலியையும குறைத்தும் பெற்று வந்தனர்.

இந்தக் கொடுமையையும் நிலைமையும் கண்டு பாதிக்கப்பட்ட  அந்த ஊரு தொழிலாளர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நாடாளும் ஆட்சியாளர்களக்கு தெரிவிப்பதற்க்காக......

தங்கள் குடும்பத்துடன் “அரை ஆடை பக்கிரி ” என்பவரால் கண்டு பிடிக்கப்பட்ட போராட்டமான உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கினார்கள்.

கஞ்சிக்கு வழியில்லாமல், கஞ்சிக்கு வழிகேட்டு உண்ணாவிரதம் பேராட்டம் நடத்தும் கஞ்சிக்கு செத்தவர்களின் போராட்டத்தைக் கண்டு..

ஆட்சியாளர்களால் பயன் அடைந்துவருபவர்கள் சிலர் “ஏட்டிக்கு போட்டியாக” உண்ணாவிரதப் போராட்டத்தை கேலி செய்து அடக்கும் விதமாக..........

பெயரைச் சொன்னால் நாக்கில் எச்சில் ஊறும் விதமாக  விதவிதமான உணவு பதார்த்த வகைகளுடன் “ உண்ணும் விரதம்” என்ற புதுப்போராட்டத்தை கண்டு பிடித்து அவர்களும் குடும்ப சகிதமாக அந்த உண்ணும் போராட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தனர்.


இத்தகைய இரண்டு போராட்டங்களும் அந்த ஊரில் எதிரெதிரே நடந்து கொண்டு இருந்தன.

இதைக் கண்ட  அந்த ஊர் சமூக ஆர்வலர் ஒருவர். “உண்ணும் விரதம்” போராட்டம் நடத்தும் வக்கிரபுத்தி கொண்டவர்களால் “ உண்ணாவிரதம்” போராட்டம் கொச்சைப் படுத்தப்படுவதை சசிக்க மனமில்லாமல்...

அந்த ஊருக்கு தொலைவில் உள்ள நகரத்து உயர் நீதி அரசர்கள் கொலு வீற்றியிருக்கும் மன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.

அந்த வழக்கு விசாரனைக்கு வந்த போது, விசாரித்த நீதி அரசர்களோ.. அந்த உண்ணும் விரதத்தில் கலந்து கொண்டவர்களின் பெயர் மற்றும் அந்தஸ்களின் விபரத்தையும், உண்ணும் விரதம் போராட்டத்தின் போது என்னென்ன உணவு வகைகள் வழங்கப்பட்டன. எத்தனை பேர்கள் எவ்வளவு உண்டார்கள் என்ற அளவையும் உணவு வகைகளின் பட்டியலையும் அதனால் வழக்கு தொடுத்த பொது நல வாதிக்கு என்ன பாதிப்புகள் ஏற்ப்பட்டன.

என்பதையும் தாக்கல் செய்த மனுவோடு சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும் என்று பொது நல வழக்கு தாக்கல செய்தவரை “ படுவா ராஸ்கல் இந்தப் பக்கம் எட்டிப் பார்த்தே தொலச்சு புடுவோம் படுவா” என்று சொல்லாமல் சொல்லி அந்த பொதுநல வாதியை விரட்டி அடித்தனர்  உயர் நீதி அரசர்கள்.  

வெள்ளி 06 2014

பெண் பித்து தெளிந்து கவிஞரான பக்தன்.

படம்tamilnation.co



















பதினைந்தாம் நூற்றாண்டில் காவிரிப் பூம்பட்டணத்தில் பிறந்தவர். இல்லையில்லை அவதரித்தவர்.

சிறு வயதிலே தேவாரம், திருமந்திரம்,திருமுருகாற்றுப்படை போன்றவற்றை நண்கு கற்றார்.


















கற்றபடி கந்தனை நிணையாமல் இளமையின் முறுக்கு காரணமாக கண்டபடி மயக்கும் மங்கயரை நாடினார்.

இதனால் அவரின் அப்பன் சேர்த்து வைத்துவிட்டுப்போன பொன்னும் பொருளையும் இழந்தார்.

பொன் பொருளோடு தன்னுடைய இளமையின் மேனிப் பொலிவையும் இழந்தார்.

அன்றைக்கு, வசூல் ராஜாக்கள் எம்பிபிஎஸ்களும் அதி உயர் அப்போலோ மருத்துவ மனைகளும், போக்கத்தவர்களுக்கான அரசு மருத்துவமனையும் இல்லாததால்...........

மனம் நொந்த அவர், திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரின் அருளால் முருகனை உபாசிக்கத் தொடங்கினார்.

அங்கு முருகன் வேறு வேலையின் காரணமாக இருந்ததினால்..இவருக்கு தரிசனம் கிடைக்கவில்லை.

மீண்டும் வேதனை அடைந்து. கடைசி முயற்சியாக. அண்ணாமலையாரின் கோபுரத்தின் மேல் ஏறி, கோபுரத்தின் உச்சியிலிருந்து “ முருகா” எனக் கூவியவாறு கீழே விழுந்து தற்கொலைக்கு  துணிந்தார்.

இன்றைக்கு இருப்பதுபோல் தீவிரவாதி ஒழிப்பு படை, மெட்டல் டிக்டெட்ர் கண்காணிப்பு, போலீஸ பாதுகாப்பு எதுவும் அப்போது இல்லாததால் கோயில் நிர்வாகத்தின் அனுமதி அட்டை எதுவும் இல்லாமல் தங்கு தடையின்றி கோபுர உச்சிக்கு சென்று விட்டார்.

கோபுர உச்சியிலிருந்து கீழே விழுந்த பக்தரை “எந்த வேளையும் காக்கும் கந்தவேல” எனபதை நிருபிப்பதற்க்காக,.  செய்து கொண்டு இருந்த வேலையை ஒதுக்கிவைத்துவிட்டு, உடனே, கீழே விழுந்தவரை கைத்தாங்கலாக தாங்கிப் பிடித்து காப்பாற்றினார்.கந்தவேல்

பின்  அவருக்கு “சும்மா இரு........சொல்ற........” என்று கந்தவேல் உபதேசித்தார். அதோடு நில்லாமல் “ முத்து .........” என்றும் அடி எடுத்துக் கொடுத்தார்.

அதிலிருந்து பெண் பித்து தெளிந்து  பக்தனாகி  “ முத்தைத்திரு பத்தி....” என முருகன்  மேல் கவி பாடத் துவங்கி எண்ணற்ற திருப்புகழ்களை இயற்றி பேறு பெற்ற  அருணகிரிநாதர் என்ற பெயருடன் கவிஞரானார்.

குறிப்பு.

அருணகிரி நாதர் திரைப்பட்த்தில் டி.எம் சௌந்தராஜன் பாடிய பாடலை, தம்பி சைக்கோ சேது பாலா இயக்கிய “பிதாமகன்” திரைப்படத்தில்  பல வண்ணப் தேனகின்னம் பாடலில் முதல்வரிப் பாடலாக வருகின்றன.

தனயனுக்கு பிடித்த அப்பனின் குத்தாட்டம்




சன்  தொலைக்காட்சி லைப்பை எதார்த்தமாக பார்த்தபோது ராதாரவி தனக்கு பிடித்த தந்தையின் குத்தாட்ட பாடலை பற்றி தனது விருப்பமாக பட்டியலில்... டிவியில் பார்க்கும்போது கருப்பு வெள்ளையாக இருந்தது. யூடிப்பில் பார்க்கும்போது மட்டி கலராக இருந்தது. தனயனுக்கு பிடித்ததை உங்களுக்கும் பிடிக்கும் என்ற எண்ணத்தில் இந்தப்பதிவு.....

இன்றை குத்தாட்டத்துக்கும் அன்றை ஆட்டத்துக்கும் என்ன வித்தியாசம் என்ற எனது எண்ணத்தில்

இந்த எண்ணத்தில் மண்னை அள்ளி போடுவதும் குப்பையை கொட்டுவதும் உங்கள் ரசனையைப் பொருத்தது.

குமுதம் திரைப்படத்தில் கள்ளபார்ட் நடராஜன், நடிகவேள் ராதா ஆடும் பாடல் காட்சி
  • வகை

  • உரிமம்

    நிலையான YouTube உரிமம்








வியாழன் 05 2014

கோவணத்துணிக்காக பக்தனின் சொத்தை அபகரித்து அருள் பாலிக்கும் கடவுள்.

படம்.ta.wikipedia.org

















அமர்நீதி நாயனார் என்பவர். பக்தர்களிலே சிறந்த சிவ பக்தர்.

சிறந்த பக்தர்களை சோதிப்பதுதான் கடவுளின் வேலை. அப்படித்தான் எல்லா கடவுள் புரட்டு நூல்களும் கூவிவிட்டுச் சென்று உள்ளன. அந்தத் தவப்படி கடவுளின் வேலையாக................

சிறந்த சிவ பக்தராக விளங்கிய அமர்நீதி நாயனாரை சோதிக்க எண்ணிய பரமன்.

முனிவர் வேடத்தில் வந்து ஒரு கோவணத்துணியை அமர்நீதியிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருக்கும்படியும், சில நாட்கள் தான் திரும்ப வந்து கொளவதாகவும் கூறிச் சென்று உள்ளார்.

 அமர்நீதி நாயனாரோ  கோவணம் கட்டாததால், கோவணத்துணியின் பயன்பாடு தெரியாததால்   முனிவரின் கோவணத்துணியை மூக்கைப் பிடித்து அருவருப்பு அடையாமல்   பய பக்தியுடன்  அந்த கோவணத்துணியை வாங்கி வைத்து பாதுகாத்தார்.

முனிவர் வேடத்தில் வந்த கடவுள் கொடுத்த கோவணத்துணி கடவுளின் கைங்கரியத்தால் மயமாய் மறைந்துவிட்டது.

மீண்டும் கடவுள்  பழைய முனிவர் வேடத்தில் வந்து,  தான் கொடுத்த கோவணத்துணியைக் கேட்டார்.

பத்திரமாக வைத்த இடத்தில் போய் தேடிப்பார்த்த அமர்நீதி நாயனார். கோவண்த்துணி மயமானதை கண்டு அதிர்ச்சியுற்று.... முனிவரிடம் வந்து உண்மையைச் சொல்லி மன்னிக்க வேண்டினார்.

முனிவர்  வேடத்தில் இருந்த கடவுளோ.... தொலைந்த கோவணத்துணியை போன்ற ஒரு துணியைக் காட்டி.., அதற்கு ஈடாக துணியைக் கேட்டார்.

அமர்நீதி நாயனாரோ அந்தத் துணிக்கு ஈடாக தராசில் எடைக்கு எடையாக தன்னிடமுள்ள பொன் பொருள்  என எவ்வளவு வைத்தும் அந்த துணிக்கு ஈடாகவில்லை.

கூமுட்டை பக்தர்க்கோ.. கோவணத்துணி உள்ள  தராசின் கீழ் வெயிட்டான் காந்தம் மற்றும் வேற்றுப் பொருளை கடவுள் வைத்தள்ளாரா என்று சோதிக்கத் தெரியவில்லை.. “கடவுள்தான் பக்தரை சோதிக்கலாம், பக்தர்கள் கடவளை சோதிக்க விதி இல்லாததும் ஒரு காரணமாக இரந்ததால் பக்தர் அமர்நீதி நாயனார் சோதிக்கவில்லை..

கடைசியாக.. அமர்நீதி நாயனார் தன் குடும்பத்துடன் தராசில் அமர்ந்தவுடன் தராசு  கோவணத்துணிக்கு சமமான எடையாக வந்தது.

சிவ பக்தரான அமர்நீதி நாயனாரின் பொன். பொருளை சுருட்டியதோடு அல்லாமல் பகதனின் குடும்பத்தை தனக்கு அடிமையாக்கிய பூரிப்பில்... .

“மெச்சினேன் பக்தா... உன் பக்தியைக் கண்டு” என்று ஒரு பொன் மொழியை உதிர்த்து, முனிவர் வேடத்தை கலைத்து கடவுள் பரமனாக காட்சி தந்து அருள் பாலித்தபடி   கம்பி நீட்டி விட்டு மறைந்தார்.


புதன் 04 2014

இப்படியும் ஒரு வியாபாரம்......


மனித வாழ்க்கையில் சிக்கல்களும்.பிரச்சினைகளும் ஏற்படுவது சகஜம்தான். ஆனால், சிக்கல்களே வாழ்க்கையானால்???

குடும்பத்தில் பிரச்சினை.தொழிலிலும்,உத்தியோகத்திலும் சிக்கல்கள், கல்வியில்தடை, பில்லி சூனியம் போன்றவைகளால் கெடுதல்கள் ஏற்படுதல  மற்றும் பூர்வ ஜென்ம கர்மாவின் பயனாக ஏற்ப்படக்கூடிய பிரச்சினைகளுக்கும் உரிய பரிகாரமாக (தீர்வாக) திகழ்வது “ குடும்ப கலச தேங்காய்”

கண் திருஷ்டி ,மற்றும் காரிய சித்தி போன்ற எந்திரங்களை வைத்து கேரள நம்பூதீரீகளால் உரிய மந்திர தந்திர பிரோயோகங்களுடன் பூசிக்கப் பெற்ற குடும்ப கலச தேங்காயை பக்தியுடனும் நம்பிககையுடனும் பெற்று

மற்றவர்களின் பார்வையில் படும்படி வீட்டு வாசல்களில் கட்டி பூசித்து வந்தால், கடன்களால் கலக்கம், பகைவர்களால் அச்சுருத்தல் போன்ற சகல பிரச்சினைகளுக்கும் தீர்ந்து குறைவற்ற மகிழ்ச்சியுடனும் குடும்ப வாழ்க்கை அமையும்.

மேலும் தொடர்புக்கு---------------என்ற எண்ணிலும்,மற்றும்  www.---------இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.


குறிப்பு...

இந்தியாவுக்கு  எதிரிகளால் அச்சம் இருப்பதாலும் உலக வங்கி கடன்கள் இருப்பதாலும்,  இந்திய பாராளுமன்ற வீட்டு வாசலில்  கும்பகலச தேங்காயை  கட்டலாமா ??? என்று என்னை கேட்கக்கூடாது

செவ்வாய் 03 2014

நிழலைக் கண்டு குதுகாலிக்கும் கூமுட்டைகள்....

படம்












அன்றும் சரி இன்றும் சரி என்றும் சரி  நிழலைக் கண்டு குதுகாலிக்கும் கூமுட்டைகள் நிறைந்தது தமிழ்நாடு என்பதை மறக்கவும் முடியாது. மன்னிக்கவும் முடியாது.

இன்றும் அப்படித்தான் அன்றும் இப்படித்தான் அதற்கு  பல சான்றுகளில் இது ஒன்று.

எம்ஜியார் என்ற நடிகனின் நிழலைக்கண்டு குதுகாலித்தது.


ஒரு படத்தில் எம்ஜியார். கஷ்டப்பட்டு  வேர்வை சிந்தி உழைத்து கூலியாக ஒரு ரூபாயை பெற்றுக் கொண்டு வருவார்.

வரும் வழியில் வில்லன்கள் அவரை வம்புக்கு இழுத்து தகராறு செய்து ஒரு ரூபாய் கூலியை அருகிலுள்ள குளத்தில் விழும்படி தட்டிவிடுவார்கள்.

 முதலில் பொறுமையாக இருந்த சூரப்புலி, கூலியாகப் பெற்ற ஒரு ரூபாயை தட்டிவிட்டதும் கோபம் வந்து வில்லன்களை  மாங்கு மாங்குன்னு அடித்து துவைத்து தண்ணிரில் விழுந்த காசை எடுக்க வைக்கும்

 இதை திரையில் பார்த்துக் கொண்டு இருக்கும் கூமுட்டைகள் தன் வாழ்வின் நிஜத்தோடு ஒப்பிட்டு பார்க்க திராணியில்லாமல். ரெம்பவும் அக மகிழ்ந்து கைதட்டி  மகிழ்ச்சியை தெரிவித்து ரெம்பவும் அளப்பரை பன்னும்.

நிழலைப் பார்த்து அளப்பரை பன்னும் ரசிகர்கள் என்ற பெயர் கொண்ட
 இந்த கூமுட்டைகள் . நிஜத்தில் அப்படியான ஒரு நிகழ்ச்சி நடந்தால் பாராமுகமாகவோ,   அல்லது பயந்தாங் கொள்ளித்தனத்தாலோ  அஞ்சி நடுங்கி வீண் வம்பு எதற்குன்னு ஒதுங்கி ஓடும். ஆனால் தங்கள் வீடுகளிலோ,தெருக்களிலோ. கூட்டமாக சேர்ந்து கொண்டு அளப்பரை பன்னும்

நிழலில் சாதிக்கும் நடிகரைப்போல் நிஜத்தில் சாதிப்பவர்கள் ஒரு சிலராக இருந்தாலும்  அவர்களைப் பற்றி உள்ளொன்றும் புறமொன்றும் வைத்து இல்லாததை பற்றி கதைக்கும்.“ இவருக்கு பெரிய ஹீரோ நிணப்பு” என்று கேலி பேசி தன்னை பெரிய வென்னையாக  பீத்திக் கொள்ளும்.

இப்படித்தான் இந்தக் கூமுட்டைகள் அன்றிலிருந்து இன்றுவரைதங்களுடைய கூமுட்டை தனத்தை மன்னோடு தோண்டி புதைப்பதை விட்டுட்டு பால் அபிசேகம், கட்வுட்டு, வுாழ்த்து போஸ்டர் அடித்து ஒட்டுவது. போன்ற வழிகளில்  கூமுட்டைகள்  கூட்டம் வளர்ந்து
கொண்டே செல்கிறது.

இந்த கூமுட்டைகளால்தான்  நிழல் ஹீரோக்கள் எல்லாம் நிஜஹீரோக்களாக மாறி அரசியலிலும் சமூகத்திலும் வலம் வந்து. கூமுட்டைகளில் பொச்சுகளிலும் அவர்களில் குடும்பங்களிலும்தார்குச்சி குத்து விழும்போதும் அதைப்பற்றி எந்த எதிர்ப்புமும்இல்லாமல் இந்த கூமுட்டைகள் விதிவிட்ட வழி என்ற சந்தோசமாக ஏற்றுக் கொண்டு குதுகாலிக்கின்றன.............

திங்கள் 02 2014

சிகரெட்டை பற்ற வைக்கும் மாமா..........

படம்.Homai Vyarawalla / Alkazi Collection of Photography

படத்தை நன்றாகப் பாருங்கள் .மாமா ஒரு சிகரெட்டை வாயில் வைத்தபடி .ஒரு பெண்ணுக்கு சிகரெட்டை பற்ற வைக்க லைட்டரை நீட்டுகிறார்.

பெருசுகளுக்கும் நடுத்தர வயதினருக்கும் மாமாவைப் பற்றிய செய்திகள் தெரிந்திருந்திருக்கும. அவர்கள்  நாகரிகமாக “மாமாவின் சின்ன வீடு” என்பார்கள்.

நானும் அப்படித்தான் நிணைத்து செய்தியை  படித்தேன். படித்தப்பின்தான் தெரிந்தது.. இந்தியாவின் ஜெனரல் மௌண்டபேட்டன் பிரபுவின் மனைவி அல்ல என்று.

பின் ..யார் என்றால் திருமதி பேட்டன் பிரபுக்கு  முன் மாமாவுக்கு  பழக்கமான திருமதி சைமன் என்று.   1930-40 களில் பிரிட்டனுக்கான இந்தியாவின் ஹை கமிஷனராக இருந்த சைமன் என்பவரின் மனைவியே திருமதி சைமன்.

காந்தி காங்கிரசின் வழிப்படி நடந்து ,.காந்தி குல்லாவை விரும்பி அணிந்த காசுமீர் பண்டிதர் அல்லவா மாமா..... 






ஞாயிறு 01 2014

பழித்தும் இழித்தும் வாழும் ஆறறிவு பிராணிகள் ....



Image
படம் (பூச்சரம்) ஆறறிவு பிராணிகள்

















கொட்டடி கொலை
ஆறறிவு பிராணி





சிறுமிகள் கற்பழித்து கொலை




















நகர முடியாத
புல்லும் மரமும்
ஓரறிவு ஆகின.

நகரக்கூடிய
சிப்பியும் சங்கும்
ஈரறிவாகின..

பறக்க முடியாத
கறையானும் எறும்பும்
மூவறிவாகின...

பறப்பதால்
தட்டானும் வண்டும்
நாலறிவாகின...

கண்டும் கேட்டும்
உண்டும் வாழும்
நாலுகால்களெல்லாம்
ஐந்தறிவாகின.....

 சக பிராணிகளை
பழித்தும் இழித்தும்
ஏமாற்றியும் படை
கொண்டு அடக்கியும்
 தூக்கில் ஏற்றி
கொன்றும் வாழும்
ரெண்டு கால் பிராணிகள்
ஆறறிவாகின......

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...