பக்கங்கள்

சனி 01 2014

சாதிவெறி குல தெய்வத்தைப்பற்றி..பெரியார்......

முதுகுளத்தூர் கலவரத்தைத் தொடர்ந்து,சாதி வெறி குல தெய்வம் முத்துராமலிங்கம் கைது செய்யப்பட்ட போது பெரியார் விடுத்த அறிக்கை:


 திருவாளர் பசும்பொன் முத்துராம லிங்கத்தை ஆட்சியாளர் கைது செய்தது பற்றி ஒரு சில கும்பல்கள் முதலைக் கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருக்கின்றன. பார்ப்பன ஏடுகளான ‘தினமணி’, ‘கல்கி’ போன்றவைகள் அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று கசிந்துருகிக் கண்ணீர் மல்கி எழுதுகின்றன. கலவரப் பிரச்சினையோடு சம்மந்தமில்லாத பல்வேறு சங்கதிகளைக் கலந்து, முதலமைச்சர் மீது தவறான எண்ணங்களைக் கற்பித்து விஷமத்தனமாக எழுதியிருக்கின்றன.

‘சமாதானக் குழு என்ற பெயரினால் புறப்பட்டிருக்கிற எதிர்க்கட்சிக்காரர்களின் கலவரக் கும்பலும் கோவிந்தா! கோவிந்தா!’ என்று இம்மாதத்தில் சனிக்கிழமைக் காலையில் சிறுவர்கள் வீடு தோறும் சென்று கத்துவதுபோலக் கத்திக் கொண்டிருக்கிறது.

‘திரு. முத்துராமலிங்கத்துக்கு  கட்சியு மில்லை; கொள்கையுமில்லை. ‘சுபாஷ் போஸ் உயிரோடிருக்கிறார்’ என்பது மட்டும் ஒரு கட்சிக்குக் கொள்கையாகிவிடுமா? அவர் தம் சிறந்த பேச்சுச் சக்தியைப் பயன்படுத்தி, தம் ஜாதிக்காரர்களின் தனிப் பெருந் தலைவரா யிருந்துகொண்டு, அதன் மூலம் சட்டசபை அல்லது பார்லிமெண்டில் பதவி பெறுவது என்பதே அவரது பொதுத் தொண்டாயிருந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றிப் பெற்று மந்திரிசபை அமைக்க முடிந்தால் அதில் தமக்கொரு மந்திரி கிடைக்குமா என்பதற்காக 2, 3 பேர்களைச் சேர்த்துக் கொண்டு தனிக் கட்சியமைப்பவராதலால் அந்த வாய்ப்பு இல்லையென்றவுடனேயே பார்லிமெண்ட் உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு (அதிக ஊதியம் அதில் இருப்பதால்) எம்.எல்.ஏ. பதவியை உதறிவிட்டார். தன்னந் தனியாய்ப் பார்லிமெண்டில் போய் இவர் என்ன சாதிக்கப் போகிறார் என்பதைப் பற்றி அவரைத்தான் கேட்க வேண்டும்.

‘ஜாதி வெறியை வளர்த்து மற்ற ஜாதிகளை ஒடுக்கி வைத்துத் தான் ஒரு தனிக்காட்டு ராஜா மாதிரி இருந்து வந்தால் ஜாதி ஒழிப்புக் காரராகிய நாம் வருந்தாமலிருக்க முடிய வில்லை. ஜாதி வெறி வேரூன்றிவிட்டால் ஜன நாயகத் துக்கோ, பகுத்தறிவுக்கோ, பொதுநலத் தொண்டுக்கோ, ஒழுக்கத்துக்கோ, நீதிக்கோ இடமில்லை.

‘அவரின் சிறைவாசத்தை நாமும் விரும்ப வில்லை என்றாலும், இந்தச் சூழ்நிலையில் அவரைச் சிறைப் பிடிக்காதிருந்தால் சாதிச் சண்டை நின்றிருக்காதென்பது உறுதி. அவர் வெளியிலிருந்த வரை கலவரம் நடந்து கொண் டிருந்ததும், கைது செய்யப்பட்ட பின் கலவரம் அடியோடு ஓய்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

‘இன்று அவருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்ற சி.ஆர். (இராஜகோபாலாச்சாரி), கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு ஒன்று நினைவூட்டுகிறோம். இதே சி.ஆர். அவர்கள் முதலமைச்சராயிருந்தபோதுதான் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திரு.முத்துராமலிங்கனார் கைது செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

2-வது உலகப் போரின்போது இவர் ஜாதிச் சண்டைக்குக் காரணமாயிருப்பார், போர் எதிர்ப்புப் பிரச்சாரம்  செய்வார் என்ற காரணத்திற்காகச் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.

‘இன்றைய நிலையிலுங்கூட முன்கூட்டியே அவரை தனிப்படுத்தியிருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகியிருக்குமா? இவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டிருக்குமா? இத்தகைய ஆதி திராவிடக் குடும்பங்கள் ஊரைவிட்டு வெளியேறி தவிக்குமாறு நேர்ந்திருக்குமா?

‘போலீஸ் நடவடிக்கை சிறிது தாமத மானதால்தான் இவ்வளவு சேதம் ஏற்பட்டது. இன்னும் பல மாதங்களுக்குப் போலீஸ் படை கலவரப் பகுதிகளில் காவல் புரிந்துதான் தீர வேண்டும். போலீஸ் துப்பாக்கிப் பிரயோகத் தினால் மாண்டவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றவர்கள், மாதா கோயிலுக் குள் புகுந்து ஏழை மக்களைச் சாதிவெறியர்கள் பதைக்கப் பதைக்கச் சுட்டுக் கொன்றும், அடித்தும், பெண்களை அவமானப்படுத்தியும் மிருகத்தனமாக நடந்துக் கொண்டதைக் கண்டிக்காமலும் வருந்தாமலும் இருப்பது ஏன்?

‘சமாதானக் குழு என்ற புதுக் கும்பல் இனிப் புதுக் கலகத்துக்கு விதை ஊன்றுவார்களோ என்று அஞ்ச வேண்டியதிருக்கிறது. இவர்கள் பேச்சும் நடத்தையும் அத்தகையதாயிருக்கிறது. ஆதலால் அவர்களைக் கலவரப் பகுதியில் நுழையவிடக் கூடாதென்று ஆட்சியாளருக்கு எச்சரிக்கின்றோம். குழம்பியுள்ள குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள் இக் குழுவினர். இவர்களுக்கு பஸ்ஸூல்லா ரோடுப் பார்ப்பனர் தலைவர் தூபம் போடுகிறார்.”

- பெரியார் - ‘விடுதலை’

பறந்து கொல்லும் பருந்து..(கழுகு)



கழுகுக்கும் உணவு பஞ்சம் ஏற்பட்டுவிட்டதுபோல..
அதான் பறந்து பறந்து  அடித்து தன் பசியை தீர்த்துக் கொல்கிறது.

வெள்ளி 31 2014

பிச்சை எடுத்த கீதாவுக்காக தண்டம் கட்டும் மீனாட்சி...!!!

வீதி வீதியாக பிச்சை எடுக்க
 பயன்படுத்திய யானை பறிமுதல்: 
 வனத்துறையினர் நடவடிக்கை
படம்--மாலைமலர்



மதுரை ..திருவாளர்கள் நிறைந்த பகுதிகளில் ஒன்றான அண்ணாநகரில் கீதா என்ற பெண் யானை, பாகனின் உதவியுடன் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தது.

இதைக் கண்ட வல்லரசு இந்தியாவை ஏலம் போட்டு கூவி கூவி விற்பனை செய்வதை பெருமையாக பீத்திக் கொள்ளும் நாட்டில் பிச்சை எடுப்பதை தேசிய அவமானமாக கருதிய திருவாளர்கள் கூட்டத்தில் உள்ள திருவாளர் ஒருவர்.

எங்கே..பத்த வைக்கனுமோ....அங்கே கச்சிதமாக பத்த வைத்தார்.

திருவாளர் பத்த வைத்த தகவலை அறிந்த வனத்துறையினர் மற்ற விபரங்களில்படி மணி ஆட்டிக் கொண்டு வராமல், சம்பவ இடத்திற்கு விரைவாக வந்து சேர்ந்தனர்.

வந்த வனத்துறையினர் பிச்சை எடுத்த கீதாவின் உரிமையாளரைப் பற்றிய விபரத்தை கேட்டறிந்தனர்.

பிறகு. திருவாளர் ஏரியாவில் பிச்சை எடுத்த குற்றத்திற்க்காக...கீதாவின் உரிமையாளரான மீனாட்சி அம்மாளுக்கு ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதித்தனர்.

இதையடுத்து, அபராதம் விதிக்கப்பட்ட மீனாட்சி அம்மாளை பார்த்தபோது

“ அவனவன் தேர்தல நின்னு ஓட்டு பிச்சை எடுத்து, அதிகாரத்துக்கு வந்ததும் ஒவ்வொரு நாடாக  போயி பிச்சை கேட்டு வர்றது..தெரியல.....

கஞ்சிக்கு செத்த கீதா , ஆசீர்வாதம் செய்து துட்டு வாங்கினதுல.... இவிங்க  வல்லரசு பெரும கிழிஞ்சு தொங்குதாம்ப்பா.....

பத்தாயிரம் ரூபா.... இருந்தா... நாங்க ஏண்டா..ஒங்க பாஷையில பிச்சை எடுக்குறோம்..... என்று மீனாட்சி அம்மா கேட்டாலும் கேட்டுறும்  என்று கூடியிருந்த கூட்டம்.

ஆத்தாடி..ஆத்தா, நமக்கேன் இந்த வம்பு என்று நிணைத்து தலைதெறிக்க ஓடியது.

எப்படி.....!! .பிச்சை எடுப்பதை...தடுத்திட்டோம்ல...... மீஜையே இல்லாத திருவாளர் மீஜையை முறுக்கினார்.


வியாழன் 30 2014

கொள்ளைக்காரிகளை விட ..சிறந்த கொள்ளையர்கள்???

வங்கி எதிரேயுள்ள கட்டடத்தில் தோண்டப்பட்ட  சுரங்கப்பாதையை புகைப்படம் எடுக்கும் காவலர்.
படம்--தினமணி


வல்லரசாக போகிற இந்திய வரலாற்றில் முதன்முதலாக, வங்கிக் கொள்ளைக்காக கத்தி,அரிவாள், துப்பாக்கி போன்றவற்றை பயன்படுத்தாமல் எவரையும் கழுத்தறுத்து கொள்ளாமல் ,பெண்களை மானபங்கப்படுத்தாமல்,குறிப்பாக சொல்வதென்றால் ரத்தக் களறி ஏற்படாமல்...... செய்தி படித்த பலரும் வியக்கும் வண்ணம் சாதனை மிக்க ஒரு கொள்ளை நடந்துள்ளது.

முன்பு கேரளாவில் நடந்த 80 நீள சாதனையை முறியடித்து,ஒருகாலமாத சம்பளத்துக்கு வேலை பார்த்த மாதிரி திட்டமிட்டு.2.5 அகலத்துக்கும் 125 அடி நீளத்துக்கும் சுரங்கம் தோண்டி அரியாணவில்உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து சுமார் 100 கோடி மதிப்புள்ள நகை பணத்தை கொள்ளையடித்துள்ளார்கள்.

தேர்தலில் நிற்காமல், பொய்யான வாக்குறுதிகள் கொடுக்காமல்,  கிறுக்கு பய கேனப் பய மக்களை ஏமாற்றி மூன்று முறையோ அய்ந்து முறையோ முதலமைச்சர் ஆகாமல்... அடுத்தவர்களை மிரட்டாமல், பழி தூற்றாமல்,   மற்றவர்களுக்கு இம்சை கொடுக்காமல், தங்களை வருத்திக் கொண்டு சுரங்கம் தோண்டி   கொள்ளை அடித்தார்கள்  பலே கில்லாடி கொள்ளயர்கள்


 66கோடியே 65 லட்சம் கொள்ளையடித்த கொள்ளைகாரிகளைவிட....... 18 வருடமாக வாய்தா வாங்கிய  வாய்தா ராணிகளைவிட.......நீதிபதி திரு. மைக்கேல் குன்ஹா அளித்த சரியான தீர்ப்பை மதிக்காமல் , தண்டனை பெற்ற குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கிய உச்சி குடுமி நீதிமன்றத்தைவிட ...........இந்தக் கொள்ளைக்காரர்கள்  சிறந்த கொள்ளையர்களாத்தான் தெரிகிறார்கள்


சாதனை படைத்த படத்தின் நாயகன்-நாயகிக்கு பாதுகாப்பு...!!

படம்-http://tamil.thehindu.com/

“ஹேப்பி நியூ இயர்” என்ற படம் தீபாவளிக்கு ரீலிசான  முதல் வாரத்திலே 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பாலிவுட்டில் புதிய சாதனை படைத்துள்ளது.

இதனால் பணப் கொழுப்பில் மிதக்கும் நாயகி-தீபிகாபடுவுக்கும் நாயகன் ஷாருக்கானுக்கும் தீடிரென்று போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


கிரீமினல்களிடமிருந்து இவர்களுக்கு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூற்ப்பட்டுள்ளது.


 இதோடு அரியானாவில் சுரங்கம் தோண்டி, 100கோடி மேல் அபேஸ் செய்து புதிய சாதனை படைத்த கொள்ளையர்களுக்கும் அங்கீகாரம் பெற்ற கிரீமினல்களிடமிருந்து மிரட்டல் வந்தால் அவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

புதன் 29 2014

கேப்...டனின் உத்தரவும்..பின் கவலையும்..


படம்- சினிமா நக்கீரன் 



இனிமேல் ஜெயலலிதாவை, மக்களின் முதல்வர் என்று சொல்லக்கூடாது. ஊழலின் முதல்வர், குற்றவாளிகளின் முதல்வர் என்றுதான் சொல்லவேண்டும.

...................................

“பால் விலை ஏறிடுச்சு.... அடுத்து தண்ணி விலை ஏறப்போகுது”

செவ்வாய் 28 2014

“பாரத ரத்னா” படும்பாடு......

யார் இந்த சு.சாமி – பொறுப்பே இல்லாதவர்க்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது - பொன் ராதாகிருஸ்ணன்:-
உலக தமிழ்ச் செய்திகள்

அங்க என்னப்பா .......ரெண்டு பேரு சண்டை போட்டுகிட்டு இருக்காங்க..

அது  சண்டை இல்லாப்பா........ விவாதம் பன்னிகிட்டு இருக்காங்க....

.அட இப்படியெல்லாம் குடி(கார) மக்கள் விவாதம் செய்யுறாங்களா...?

அத ஏன்? கேக்கறீங்க........ நீண்ட நேரமாக நடந்துகிட்டு இருக்கு..இன்னும் முடிவுதான் ஏற்ப்படல.......

எதப்பத்தின விவாதம்முன்னு தெரியுமா....?

“பாரத ரத்னா” விருதுன்னு ஒன்னு இருக்காமே..அத யாருக்கு கொடுக்கிறதுன்னு........

அதத்தான்..சுனா சாமி என்பவரு...ராஜபட்சேவ்வுக்கு கொடுத்திடலாமுன்னு மோசடிகிட்டே சொல்லி முடிவு பன்னியாச்சே.......

அதுலதான் குடி(கார) மக்களுக்கு விவாதமே நடக்குது... ஒருத்தரு...ராஜபட்சேவுக்கு கொடுப்பதற்கு முன் மொழிந்த சுனா. சாமிக்கு மொதல்ல கொடுத்த பிறகுதான் ராஜபட்சேவுக்கு கொடுக்கனும் என்றார் 

இன்னொருத்தர் ராஜபட்சேவுக்கு கொடுத்துட்டுதான் சுனா.சாமிக்கு கொடுக்கனுமுன்னு என்றார்.அவன் விடாக்கண்டன் என்றால்..இவன் கொடாக்கண்டன் என்கிறான்...........

அடப் பாவமே.....இதுக்கா ரெண்டு பேரும் இம்புட்டு நேரமா......விவதாம் பன்னிகிட்டு.,ஏப்பா.அது என்ன அவிங்க அப்பன் வுீட்டு சொத்தா.?.அந்த பாரத ரத்னா..எப்படியப்பா இருக்கும்

அது  மெடல்மாதி இருக்குமப்பா..............

அத ஒடச்சு ரெண்டு பேருக்கும் பாதி பாதியாக கொடுத்தா..
விவாதம் முடிஞ்சு போயிரும்ல...... என்னப்பா...நாஞ் சொல்ற அய்டியா எப்படி?

சூப்பருப்பா..............இதுகூட தெரியாம....... அவிங்க விவாதம் பன்னிகிட்டு இருக்காங்கே......முட்டாப்பசங்க....................


திங்கள் 27 2014

அங்கே நடந்தது..இங்கே (தமிழ்நாட்டில்) நடக்காதது.




மக்களின் தீர்ப்பு:
உக்ரைன் நாட்டில், ஊழல் புரிந்த அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் பிடித்து, குப்பைத் தொட்டிக்குள் வீசியெறியும் பொது மக்கள். நம்நாட்டு மக்களுக்கு எப்போது இது போன்ற அரசியல் விழிப்புணர்வு தோன்றும்?

பிற்குறிப்பு: இணையத்தில் உலாவும் இந்தப் படங்களை, ஒரு நெதர்லாந்து தினசரிப் பத்திரிகை பிரசுரித்திருந்தது (NRC, 25-26 oct. 2014). இந்தப் படங்கள் உக்ரைனின் எந்தப் பகுதியில் எடுக்கப் பட்டன என்ற விபரங்கள் கொடுக்கப் படவில்லை.

LikeLike ·  · பகிர்







ஞாயிறு 26 2014

ஒரு லிட்டர் பாலில் சிறு துளி விஷம்....!!!


http://ta.wikipedia.org/s/dr7
தமிழ்நாட்டில் பால் விலை விஷம் போல் ஏறிப்போய்விட்டது. விஷம் போல் ஏறிவிட்ட பாலில் உண்மையிலே சிறு துளி விஷம் கலந்தால் அந்தப் பாலே விஷமாகிவிடும் அல்லவா......

அப்படித்தான் லட்சிய நடிகர் என்று பெயரெடுத்து செத்துப்போன நடிகர் ஆரம்பகாலத்தில் இருந்து..அதாவது முன்னணி நடிகராக பரிணமித்து வந்த காலத்திலிருந்து தன் கடைசி காலம்வரை பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உறுதியாக இருந்தார்.

தனது திருமணத்தை ஜாதி மறுப்பு திருமணமாக செய்து கொண்டது போன்ற பல சிறப்புக்களை பெற்று  ஒரு லிட்டர் பாலாக இருந்தார்.

ஆனால் ஒரு லிட்டர் பாலாக சுத்த்மாக இருந்த நடிகர். தன் வாழ்நாளில் இடைப்பட்ட காலத்தில் கட்சி மாறியாக இருந்தவர். ஆதிக்கச்சாதி வெறியின் குலதெய்வம் தன் சாதிக்காரர் என்பதால் சாதி வெறி உணர்வு கொண்டவராக மாறிப்போனார். 

ஒரு லிட்டர் சுத்தமான பாலில் கலந்த சாதி வெறி உணர்வு என்ற சிறு துளி விஷம் கலந்ததால் ..கடவுள் மறுப்புக் கொள்கை, சாதி மறுப்பு திருமணம் போன்ற சிறப்புகள் எல்லாம் அழிந்தவராக போனார்.

இதோடு தள்ளாத காலத்தில் கொள்ளக்காரிக்கு ஆதரவாக அம்மா அடிமைகளில் ஒரு பிரிவான திரைப்படத்துறையினர் நடத்திய உன்னாவிரத போராட்டத்தில்.. கலந்து  கொண்டு மொத்தமாக விஷமாகிப் போகி லட்சிய நடிகர் பெயருக்கே அர்த்தமற்றவராகி ஆகிப்போனார்.

 ஆதிக்கசாதீய உணர்வால் பெரியார் கொள்ளை உடையவர்களிடமும் ஜனநாயவாதிகளிடமும், முற்போக்ககளார்களிடமும் சாதித்..தீயை எதிர்ப்பவர்களின் மனங்களில் இல்லாமல் செல்லாக் காசிப்போனார்.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...