பக்கங்கள்

வியாழன் 25 2019

அதிகாலை கனவு-45.

அன்றொரு நாளும் இன்றொரு நாளும்....

தேசிய கல்வி கொள்கை 2019 க்கான பட முடிவு





அழுக்கான ஒரு மஞ்சள் பை..அந்தப் பைக்குள் ஒரு பழைய சிலெடு மற்றும் கிழிந்த மூலையெல்லாம் மடங்கிய ஒரு புத்தகம் அடியில் சின்னச்சின்னதான சிலெட்டு குச்சிகள்...மேல் சட்டையில் பட்டன் இல்லாததால் ஊக்கால் மாட்டபட்ட சுறுக்கங்கள் நிறைந்த வெள்ளை சட்டை.. கால் சட்டையோ ஒரு கால் பக்கம்  ஏற்றமும் இன்னொரு பக்கம் இறக்கமும் உள்ள காக்கி டவுசர்.. 1965-66 ஆண்டில்  ஒரு கிராமத்தில் உள்ள ஏழை மாணவன் அரசு பள்ளியில் கல்வி கற்க பள்ளிக்கூடம் சென்ற நிலை..

  புதிய கல்வி கொள்ளை என்ற தனியார் தாரள கொள்கையால் புற்றிசீலாக பெருகிவிட்ட  ஆங்கில நர்சரி. பள்ளிகளில் படிக்கும்போகும் பிள்ளைகள் காலில் பாலீஸ் போடப்பட்டு பளபளவென்ற சூ சாக்ஸ், அயன் செய்யப்பட்ட சுத்தமான யூனிபாரம். கழுத்திலே..டை...  அதி நவீன பேக். அதிலே.. பலவண்ண புத்தகம்,  புத்தம் புதிய சிலேட், பென்சில் தண்ணீர் பாட்டில்...கைக் குட்டை.. டிபன் பாக்ஸ் உணவு... எண்ணெய் தேய்த்து வாரப்பட்ட தலை.., வெள்ளையாக பவுடர் .பூசப்பட்ட முகம், நெற்றியில் மெல்லிய  பொட்டு இத்யாதி இந்த நிலை 2001ம் ஆண்டில் கிராமம் என்றாலும் நகரம் என்றாலும்  ப்பிரிகேசி, யூகேசி, எல்கெசி யிலிருந்து...


அடுத்த மாதத்தில் வரப்போகும் தேசிய கல்வி கொள்கையால்..    காசு உள்ளவனுக்கே கல்வி.. அப்படி காசு இருந்தாலும் உயர்மட்ட வர்ணத்தாருக்கே   போன்றவர்கேகல்வி.. அதாவது ஓராசிரியர் கல்வியான குலக் கல்வியே. பஞ்சமன் சூத்திரன்கள்  அவனவன் குலத் தொழிலையே செய்யும் வகையில் மூன்றாவது வகுப்பில் தேர்வு. ஐந்தாம் வகுப்பில் தேர்வு தேர்வு நடத்தி தேர்வுில் தோல்வியடைய செய்து  கல்வியை கற்பதைவிட்டு விரட்டி அவனவன அப்பன் மூதாயையர் செய்த தொழிலை செய்ய வைப்பது
இந்த நிலை2019ம் ஆண்டு ஆகஸ்டில் தொடரும்...

உன் அப்பன் செய்த வேலை என்ன? பன்னையடிமையாக இருந்தது. .. நீ தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாய்... உன் மண்டையில் படிப்பு ஏறாது.. ?  போ..போ..... போயி  உன் அப்பன் செய்த வேலையை தொடரு.... போடா....

திடுக்கிட்டு விழித்தவன்....சொன்னான்....சரிடா... நான் என் அப்பன்  வேலையை செய்வதற்கு...   முன்னால்   “நீ ஏழைத்தாயின் மகன் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்றியே.... நீ டீ விற்கிற தொழிலை முதலில செய்டா .....நான் அப்பன்  வேலையை செய்கிறேன். 



.

திங்கள் 22 2019

அதிகாலை கனவு-44.

மதுரை வைகை பெருவிழாவால் நாசமாகப்போகும் தொன்மையான மதுரை










மதுரை நகர்  ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை அடுத்து கிழக்கு பக்கமாய் போனால் ஆரப்பாளைம் கிராஸ்ரோடு. அதற்கு அருகில் புட்டுத்தோப்பு...புட்டுத்தோப்பில் சிவன் கோயில் உள்ள காலி இடத்தில்  பிராண்டமான கொட்டகை..அதில் எப்படியும் ஐய்யாயிரம் பேர் வரை உட்காராலாம்...புட்டுதோப்பை ஒட்டி வறண்டு கிடக்கும் வைகையில் 40 அடி நீளத்திற்கு பெரும் பள்ளம் தோண்டப்பட்டு அதில் துறவியர்கள், பூசாரிகள்,அய்யொ அப்பா பக்தர்கள். வைணவாச்சாரியர்கள், சிவனடியார்கள் பசு பாதுகாப்பு குண்டர்கள்,.  குண்டு வெடிப்பு, கொலை வழக்கில் உள்ளே இருக்கும் அபிநவ பாரத், சனாதன சன்ஸ்தா போன்ற இன்னும் பலர்..ஆடிப் பெருக்கு என்று சொல்லி தண்ணியில்லாத வைகையில் புனித நீராடல் செய்யப் போகிறார்கள்.  இதுக்கு பேரு  வைகை பெருவிழாவாம்....பத்து நாட்கள் நடைபெறுமாம்.....


என்னடா....சொக்கா....இது மதுரைக்கு வந்த சோதனை
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

.ஆட்ட கடிச்சி, மாட்ட கடிச்சி கடைசியா மனுசனை கடித்த கதையா போச்சு...

வைகை நதியை காக்க என்று கதைவிட்டு காவி மத அடிப்படைவாத அமைப்புகள் தங்கள் மதவாத கொலை அரசியலை நடத்த முற்படுகின்றனர். இந்த விழாவில் கலந்து கொள்ள  தலையாரி முதற்  மாவட்ட ஆட்சியர் வரைக்கும், கான்ஸ்டபில் தொடர்ந்து நகர போலீஸ் கமிசினர் வரைக்கும், மாநகராட்சியில் பியுன்லிருந்து ஆணையாளர் வரைக்கும் விழா அழைப்பிதழ் கொடுத்து அழைப்பு விடுத்து அதை அவர்களன் முகநூல் பக்கத்தில் போட்டோ பிடித்து போட்டு தங்கள் வலிமை காட்டியுள்ளனர்.

ஏற்கனவே  வைகையில் தண்ணீர் கொண்டுவர உண்மையான சுற்றுச்சூழல் அமைப்புகள் பாடுபட்டு கொண்டிருக்கும் வேளையில் வைகைநதி பாதுகாப்பு இயக்கம் என்ற  முகமுடியில் உள்ள காவி..சங்- பரிவார மத வாத அமைப்புகள்  நதியை சாக்காக வைத்து சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை நாசமாக்காமல் விடாது..

ஏற்கனவே கங்கையை . தாமிரபரணியை நாசமாக்கியவர்கள்.... மோசமாய் கிடக்கும் வைகையை நாசமாக்காமல் விடமாட்டார்கள். மூவாயிரம்ஆண்டுகளுக்கு மேலாகவே “யாதும் ஊரே- யாவரும் கேளிர்” மதச் சார்பின்மை, மதநல்லிணக்கம், மத ஒற்றுமை போன்றவற்றின் சின்னமாக விளங்கிய மதுரையை வட மாநிலங்களில் நடப்பது போல மதக் கலவரங்களை தூண்ட  இந்த வைகை பெருவிழா ஒரு காரணியாகும்,

பூகம்பமே வந்தாலும் இடிந்து விழாத கோட்டை கட்டி ஆண்ட மன்னாதி மன்னர்களெல்லாம் இருந்த இடம் தெரியல..போனஇடம் தெரியல....இனி என்ன மாவட்ட நிர்வாகமும் சரி, சாதரண பக்த கோடிகளும்  வைகை பெருவிழா என்ற முகமுடி விழாவுக்கு தெரிந்தே போனாலும், தெரியாமல் 
போனாலும்.. வடநாட்டில் நடக்கும் கொலை. கொள்ளை..மதக் கலவரங்கள் நடப்பதற்கு  முன் தேதியிட்டு அனுமதி கொடுத்ததாகும்...

அய்யோ..அம்மா... பழம் பெருமை வாய்ந்த மதுரை நாசந்தானா..? என்று வாய் ஒழம்பி விழித்தபோது...  மதுரை வைகைப் பெருவிழா-வின் அழைப்பிதழ்  என் கண்ணில்பட்டது..


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...