பக்கங்கள்

சனி 20 2017

பத்தாவதுல அஞ்சு வருசம் படிச்சது உண்மை பாஸ்

வணக்கம் பாஸ்

ஆ..ங்..வணக்கம் பாஸ்

நல்லா இருக்கிங்களா..?

ம்....இருக்கேன் பாஸ்

பாஸ் உங்கிட்ட
ரெம்ப நாளா
கேட்கனும் முன்னு
நிணச்சு கிட்டே
இருந்தேன் பாஸ்
இப்ப கேக்கட்டுங்களா.??

அப்படியா பாஸ்
கேளுங்க பாஸ்

பாஸ் உங்கள
பாத்தா ரெம்ப
படிச்சவங்க மாதிரி
தெரியுது பாஸ்
எவ்ளோ படிச்சு
இருக்கீங்க பாஸ்....!

என்னைய பாத்தா
அப்படியா பாஸ்
தெரியுது உள்
குத்து எதுவும்
இல்லையே பாஸ்

சேச்சே. அப்படி
எதுவும் நிச்சயமா
இல்ல பாஸ்

நா..ன் எவ்ளொ
படிச்சு இருக்கேன்
என்று தெரிஞ்சு
கொள்ள வேண்டும்
என்பதுதான் தலையாய
பிரச்சினையா பாஸ்

அப்படித்தான் வச்சுகங்களே



நல்லது பாஸ்
நான் பத்தாவது
அஞ்சு வருசம்
படிச்சு இருக்கேன்
பாஸ்.......

என்னங்க பாஸ்
பாக்கியாராஜ் படத்துல
வர்ர வசனத்த
சொல்றீங்க பாஸ்

இல்ல பாஸ்
நான் சொன்னதைத்தான்
அந்த ஆளு
வேறு மாதிரி
எழுதி சொல்லி
இருக்காரு பாஸ்

என்ன பாஸ்
புது கண்டு
பிடிப்பா இருக்கு

புதுசு இல்ல
பாஸ் பழையதுதான்
படிக்காத என்
அம்மா கிட்ட
இப்படித்தான் சொல்லி
ஏமாத்தி இருக்கேன்
பாஸ்...............

என்ன பாஸ்
இது கதைக்குள்
கதையா இருக்கு

ஆமா பாஸ்
அந்தக் கதைய
சொல்றேன் கேளுங்க
நான் பத்தாவது
பெயிலானதை
என் அம்மாவிடம்
சொல்லாமா நான்
பத்தாவது அஞ்சு
வருசமா படிக்கிறேன்மா
என்று சொல்ல
படிக்காத என்
அம்மா அடி
ஆத்தி எம்புள்ள
பத்தாவது அஞ்சு
வருசமா படிக்கறான்னு
பெருமையா தனக்கு
தெரிந்தவர்களிடம் பீத்த
அது  தீயாய்
காடு மேடெல்லாம்
பரவ அப்படி
பரவிய செய்தி
என்னை பசுமலை
உயர் நிலைப்பள்ளியில்
சேர்த்துவிட்ட அம்மாவின்
தோழியான ஆச்சிக்கு
தெரிய ஆச்சி
நான் அம்மாவை
ஏமாத்தின விபரத்தை
பூசனிக்காயைப் போல்
போட்டு உடைக்க
எங்கம்மா பீத்தின
பீத்தெல்லாம் சரிய
தன்னை ஏமாத்தின
மகனான என்னை
வெளுத்து கட்ட
என்னை தேட
இது தெரிந்த
நான் பயந்து
பக்கத்து ஊரில
உள்ள நண்பரின்
வீட்டில்  அடைக்கலம்
கேட்டு சில
நாட்கள் தங்கிய
போது நடந்த
கதையைச் சொல்ல
அதைக் கேட்ட
நண்பர் பாக்கியராசிடம்
உதவியாளராக வாயப்பு
கேட்டு செல்லும்
போது அவர்
பத்தாவது அஞ்சு
வருசம் படித்த
கதையைச் சொல்ல
அண்ணன் லவட்டியது
தெரியாமல் வசனமாக
பயன்  படுத்திக்
கொண்டார் பாஸ்

பாஸ் நீங்க
பத்தாவது அஞ்சு
வருசம் படித்து
முடித்ததில் இவ்வளவு
மர்மங்கள் திருப்பங்கள்
இருக்கா பாஸ்

ஆமா பாஸ்
இப்ப உங்கட்ட
அதத்தானே பாஸ்
 சொல்லிகிட்டு இருக்கேன்
 இன்னும் இருக்கு
பாஸ் சொல்லட்டுமா

அய்யோ பாஸ்
போதும் பாஸ்

என்ன பாஸ்
நீங்கதானே பாஸ்
என் நெற்றியில்
அட்ச ரேகை
பூமத்திய ரேகை
 ஓடியதாக சொன்னீங்க

கண்ணாடி போடாம
பாத்ததில அப்படி
தெரிஞ்சது பாஸ்
தெரியாம கேட்டுட்டேன்
பாஸ் மன்னிச்சு
விட்டுங்க பாஸ்

பாஸ் நான்
பத்தாவதுல அஞ்சு
வருசம் படிச்சது
உண்மை பாஸ்


இப்ப அது
உண்மைன்னு தெரிஞ்சு
போச்சு பாஸ்

நல்லது பாஸ்
அப்போ நான்
வரட்டா பாஸ்


சரிங்க பாஸ்
.......ஃஃஃஃஃஃஃஃ



வெள்ளி 19 2017

தெரியுமா உங்களுக்கு...???

அகாலமாய் செத்துப்
போன அந்த
நீலி எப்படி
சாராய கடையை
திறந்து தமிழ்
குடியை தமிழ்
சமூகத்தை கரு
வறுத்து சீரழித்தது
போதாதென்று அந்த
சாராயத்தை கொண்டே
தனக்கு பின்னால்
இந்த ஆளு
தமிழ் நாட்டின்
முதலமைச்சராக வரக்
கூடாது என்று
தடுத்துவிட்டாள் அந்த
அந்த நீலீ

இது தெரியாத
இந்த நீலன்
தமிழகத்தின் அடுத்த
முதலமைச்சர் கனவை
தன் குடியாலே
கெடுத்துக் கொண்டான்
அது யாருன்னு
தெரியுமா உங்களுக்கு????

புதன் 17 2017

ஹெவிளம்பி பிறந்த கதை...

சார். வணக்கம்.....

வணக்கம்ப்பா....எப்ப வரச் சொன்னேன் ....இப்ப வந்து இருக்கீங்க....

உங்ககிட்ட வர்ரதுக்கு புறப்பட்டபோது.. சாமி கும்பிட ஒரு அம்பது பத்திரிக்கை வேனும்முன்னு ஒரு பார்ட்டி வந்துவிட்டார். எல்லாத்தையும் ஓட்டி முடிச்சாச்சு..உள்ளே ஒட்டுவது மட்டும்தான்..வந்த பார்ட்டி வற்புறுத்தியதால்..அம்பது பத்தரிக்கை ஒட்டி முடித்துவிட்டு வருவதற்கு நேரம் ஆகிவிட்டது. சார்.நீங்கள் மேட்டர் எல்லாம் எழுதி வச்சு இருக்கீங்களா சார்.

ஓ...எல்லாம் எழுதி வைத்துவிட்டு.உனக்காகத்தான் காத்திருக்கிறேன்ப்பா..

கொண்டாங்க..ஒரு தடவை உங்கள் முன் படித்து காட்டுகிறேன் கேட்டுக் கொள்ளுங்கள்..

சரி..படிப்பா......

அன்புடையீர்  நிகழும் மங்களகரமான திருவள்ளுவர் ஆண்டு2048 , வைகாசி...
சார், எல்லாரும்  ஸ்ரீஹேவிளம்பி வருசம்ன்னுதான் எழுதித் தருவாங்க..நீங்க மட்டும் திருவள்ளுவர் ஆண்டு 2048ன்னு எழுதியிருக்கீங்களே..சார்......

அது என் மகன் சொன்னது ப்பா....இந்தா அவனிடமே கேட்டுக் கொள். தம்பி  அவரிடம் அமைப்பிதழ் அடிக்க வருவரங்க எல்லாம் ஹேவிளம்பிதான் அடிக்கிறாங்களாம்...நாம மட்டும் திருவள்ளுவர் ஆண்டு 2048ன்னு போட்டுஎழுதி தந்ததில் இந்த பிரிண்டிங் தம்பிக்கு சந்தேகம் வந்திருச்சுாம் அது என்னான்னு அவருக்கு சொல்லுப்பா....

அண்ணே.... உங்களுக்கு தெரியாததா..எனக்கு தெரியப் போகுது....

தெரிஞ்சு என்ன செய்ய..அப்பப்ப ஞாபத்துக்கு வரனுமே...அப்படி வருவது கிடையாது  நீங்க சொல்லுங்க  சார். தெரிஞ்சுக்கிறேன்..

தமிழனா இருப்பவன் அழைப்பிதழ் அடிக்கும்போது  கண்டிப்பா திருவள்ளுவர் ஆண்டுன்னு பொட்டுத்தான அடிக்கனும் ஆனா..அப்படி யாரும் அடிப்பதில்லைண்ணே... நமக்கு தமிழ் மொழிப் பற்று இருப்பதால் மஙக்காமல் அய்யன் ஆண்டை தொடருகிறோம்ண்ணே..... ஆமண்ணே..உங்களுக்கு இந்த ஹேவிளம்பி ஆண்டு பிறந்த கதை தெரியுமாண்ணே......

தெரியாது சார்,தெரியாமல்தானே  உங்களச் சொல்லச் சொல்கிறேன்..

இரத்தின சுருக்கமா  சொல்றேன்ணே...

சரி, சொல்லுங்க... நேரங்கிடைக்கும்போது  நெட்டுல தேடி படிச்சுருக்கிறேன் சொல்லுங்க   ..

ரெண்டு ஆண்களுக்கு பிறந்த 60வது குழந்தைகளில் 31 வதுதாக பிறந்த குழந்தைதாண்ணே  இந்த ஹேவிளம்பி..இது ஆரிய புத்தாண்டுண்ணே....ஆரிய புத்தாண்டைத்தான் பல,சில்லு வண்டுகள்..புத்தாண்டா ஆக்கி விட்டு..அதையும் காலண்டருல அடிச்சுட்டாங்களா.....பாவி மக்க  அதப்பாத்துதான் எல்லாரும் ஹேவிளம்பி வருடம்ன்னு எழுதுதுகண்ணே

அப்படியா......

ஆமண்ணே.....

சரி..அந்த ரெண்டு  அம்பள யாரு  சார்......

அது கிருஸ்ணனும் நாரதருமுண்ணே....

ஹா......ஹா......ஹா.....ஹேவிளம்பி வருட பிறந்த கதை இப்படித்தானா.... சொன்னதுக்கு நன்றி!! சார்,  ரெண்டு மூன்று நாள்ல புருப்ப தந்துடுறேன் சார்... வரட்டுங்களா...

சரி..வாங்கண்ணே....




ஞாயிறு 14 2017

இது ரெம்ப... ஓவரா..இல்ல......???


மூட்டு வலியால்
அவதி பட்ட
பாட்டி மூவ்
 தடவியதால் உடனே
அந்த பாட்டி
சைக்கிள் ஓட்டுவதாக
தொலைக்காட்சி காட்டுகிறது
இது கருப்பானவர்கள்
ஃபேரன் லவ்லி
கிரீம் தடவினால்
சிவப்பா ஆகிவிடுவது
மாதிரி காட்டுவது
போல காட்டுவது
இது ரெம்ப
ஒவரா  இல்ல.....???????????

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...