| கடவுளை
கடவுளாக பாவிக்காமல்,
கடவுள் லீலைகளில் காமுனாக இருந்தாலும்
, காதலனாக பாவித்து
புகழ்ச்சி மந்திரத்துக்கு
பதிலாக கடவுளை வர்ணித்து காதலாகி,
பின் காம்மாகி கசிந்து
உருகிய ஆண்டாள்
—மாத்தி யோசித்தாள்.
தங்கள்
தங்கள் வாழ்க்கை இருப்புகளை
மறந்து,
சாதிகளை துறந்து,
ஏழை- பணக்காரன் பேதங்களை கடந்து
காதலாகி.பின் காமமாகி
வாழத்துடிக்கும் காதலர்களை
பிரித்து,
முடியாதென்றால்
வெட்டி எறிந்து காதல்களையும்
காதலர்களையும் கொல்லுபவர்கள்
-
மாத்தி
யோசிக்காத சாதி வெறியர்கள்
|
சனி 24 2013
,மாத்தி யோசித்த ஆண்டாள்,மாத்தி யோசிக்காத சாதி வெறியர்கள்
வெள்ளி 23 2013
முன்னே.........பின்னே..............
டாஸ்மாக்குக்கு முன் யாராவது பிரியர் ஒருவர் சாராயக் கடை எங்கே இருக்கிறது என்று கேட்கும்போது,
“ முன்னே....பின்னே...........குடிச்சிருந்தா... தானேய்யா” சாராயக்கட எங்கயிருக்குன்னு தெரியும் என்று சொல்வார்கள்
டாஸ்மாக்குக்கு பின். எதுக்கான ஒரு பேச்சில்,“ முன்னே..........பின்னே செத்திருந்தா...........தானே” சுடுகாடு தெரியும் என்கிறார்கள்.
அப்படியானால், முன்னே..........பின்னே .........சுடுகாடு தெரிவதற்கு எத்தன தடவை செத்திருக்கனும்,
முன்னே...........பின்னே.......... செத்து சுடுகாடு தெரிந்தவர்கள் சொல்வார்களா?
புதன் 21 2013
சிவலோக பதவி அடைந்த சிவ பக்த பிகாரிகள்!!!
வருடத்தில் 364 நாட்களிலும் ஒருத்தன்,ஒருத்தியின் லீலைகள்.அவதாரங்கள் என்று கொண்டாடும் இந்து மத போதைவிழாவில்,முருகன்,அய்யப்பன், பெர்மாளு திருமாளு, ஆண்டாள், மீனாட்சீ சீசன் போல, ஆடிமாதம் சிவன் சீசன்
கண்ட கண்ட இடங்களில் கைநீட்டினால், வாகனத்தை நிறுத்தி ஆட்களை உள்ளே தள்ளி ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்துகள்,ஆட்டோக்கள் போல
80 கி்மீ வேகத்தில் வந்து கொண்டு இருந்த ரயிலை கைநீட்டி நிறுத்தி, கத்யானில் உள்ள சிவ பெருமான் கோவிலுக்கு சிவ பக்தர்களான பிகாரிகள் செல்ல முயல.........
பஸ் நிறுத்தத்தில் பாதுகாப்பாக நிற்பவர்களையே, எமலோகம் அனுப்பப்படும் நிலையில்.........
வைகுண்டத்தில் வீற்றியிருக்கும் சிவ பெருமானின் அருளால்,ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் புண்ணியத்தில் 40 சிவ பக்கதர்களான பிகாரிகள்(சவலோக) சிவலோக பதவி அடைந்தனர் .. வேறு எப்படி சொல்ல ..
செவ்வாய் 20 2013
இன்று ஒலக கொசு ஒழிப்பு நாளாம்.....மப்பே..............
எது எதுக்கோ ஒலக தினம் கொண்டாடுவது போல.இன்று ஒலக கொசு ஒழிப்பு தினமாம்,
மனிதர்களில் பெண்களின் பேரு காலத்துக்கு இரத்தசிந்துவது மாதிரி
பெண் கொசுக்கள் முட்டையிடுவதற்கு இரத்தம் தேவைப்படுவதால் மனிதர்கள் மற்றும் ஆடு.மாடு போன்ற விலங்குகளிடமிருந்து முன் அனுமதி இல்லாமல் எடுத்துக்கொள்கிறது.
இப்படி முன் அனுமதி இல்லாமல் இரத்தம் எடுக்கும் கொசுக்களினால் ஒரு ஆண்டில் ஒலக மக்கள் தொகையில் 250 மில்லியன்( இந்த கணக்கு எனக்கு புரியலப்பா) மக்கள் டெங்கு,சிக்கன்குனியா,மலேரியா, யணைக்கால் போன்ற நோய்களை பதிலுக்கு கொடுக்கிறது.
இத்தகைய கொசுக்களை கட்டுப்படுத்த(ஒழிக்க அல்ல) 1887 ஆகஸ்டுல் மருந்து கண்டுபிடித்த பிரிட்டனைச்சேர்ந்த டாக்டரு சர்ர்ரொனால்டு
ரோஸ்க்கு 1902ல் நோபல் பரிசு வழங்கப்பட்டதாம்,
கொசுவை ஒழிக்க அவரின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 20யை ஒலக கொசு ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று உலகில் இருபதுக்கு மேற்ப்பட்ட வகைகளில் நோபிளஸ்,க்யூலக்ஸ்,ஏடி,ஏசிஸ“ போன்ற நோய்களை கொசுக்கள் பரப்புகின்றன.
கொசுவ ஒழிக்கிறாங்கலோ இல்லீயோ, நம்மல ஒழிச்சுருவாங்க போலிருக்கு...................
ஞாயிறு 18 2013
தலைவா வும்.. தலைவி...யும்...........
“ தலைவா” என்ற ஒரு பொழுது போக்கும் படம், அதில் நடித்தவர் வருங்கால முதல்வர் பதவிக்காக ரெண்டு சைக்கிள்,மூன்று அயன்பாக்ஸ், நாலு தையல் மிஷின் அன்பளிப்பாக முன்கூட்டியே அச்சாரம் கொடுத்து வைத்திருக்கும். கதாநாயகன் விஜய்.
வருங்கால முதல்வருக்காக கதை,திரைக்கதை,வசனம் .இயக்கம் என எல்லாவற்றையும் முன்னெடுப்பவர் கதாநாயகனின் தந்தை,
இந்த வருங்கால முதல்வருக்காக இப்பவே பரப்புரை செய்வதற்கு 50கோடி போட்டு படமெடுத்து நெஞ்சுவலிக்கு ஆளான தயாரிப்பாளர்.ஜெயின்
தமிழ்நாட்டின் வருங்கால முதல்வரை உலகுக்கு காட்ட ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி போயி வருங்கால முதல்வரை ஆடவிட்டு சுட்டுட்டு வந்த இயக்குநர் விஜெய்
அய்யோ, அய்யயோ, வருங்கால முதல்வரால் தம் பதவிக்கும் ஆட்சிக்கும் ஆபத்தென்று அஞ்சி, இஞ்சி தின்ற குரங்காக,தலைவாவை,மடக்கி ,முடக்கி தனியொரு ஆளாக, பத்து பேரை பந்தாடும் வீராதி வீரரை பந்தாடு்ம் வில்லாதி வில்லி.
சொந்த தொழிலில் ஏற்ப்படும் பிரச்சினையை தீர்க்க வக்கற்று எட்டு அடிதூரம் ஓடுபவர்களையெல்லாம் சூராதி சூரனாக,வீராதி வீரனாக பிலீம் காட்டினால் அவர்கள் பதினாறு அடி பாய்ந்து ஓடுவார்கள் என்பது விஸ்வருபத்துக்கு பின் தலைவாவில் தெரிந்த அனுபவ உண்மையாகும்.
மாதத்தில் ஒரு நாளேனும் காவல் நிலையம் செல்லாத நாள் இல்லை...???
செவ்வாய்
வெள்ளி கிழமைகளில் கோயிலுக்கு செல்வது மாதிரி. அவனுக்கு மாதத்தில் ஒரு நாளாவது
காவல்நிலையம் செல்வது..........
இத்தனைக்கும்
அவன் காவல்நிலையத்தாரால் அங்கீகரிக்கப்பட்ட தாதாவோ. குரு நில மன்னரோ.தெரு நில
மன்னரோ அல்ல,
போக்கிரியோ, திருடனோ, அல்லது அடிக்கடி தேடப்படும் குற்றவாளியோ, பொய்
வழக்குக்காக பயன் படுத்தும் குற்றவாளியும் அல்ல,
ஏதாவது ஒரு வழக்கில்
சிறையிலிருந்து நிபந்தனை ஜாமினில் வந்து காவல்நிலையத்தில் கையெழுத்து போடும்
விசாரனை குற்றவாளியும் அல்ல............
ஆனாலும் மாதத்தில் ஒரு நாள் காவல் நிலையம்
செல்லாமல் இருக்க விடமாட்டார்கள் அவன் வசிக்கும் தெரு வாசிகள்..தெருக்காரர்களுக்கும்
அவனுக்கும் அப்படி ஒரு பாச பினைப்பு.
தெரு வாசிகள் அவன் மீது அப்படியான அன்பு வைத்திருக்கிறார்கள் அதுவும் அந்தத் தெருவின் நாட்டாமையும், தெருவின் முகப்பில்
உள்ள கோயிலின் பூசாரியும் ஆன. தெரு நிலமன்னனுக்கும் அவனுக்கும் அப்படியோரு பாசப்
பினைப்பு,
அதுவும் அவனின் குடும்பத்தில் மூன்று தலைமுறையாக அப்படியோரு பாசம
அவனின்
இடத்தை தெரு நில மன்ன்ன் ஆக்கிரமிப்பு செய்து வீட்டைக் கட்டிய தோடு இல்லாமல்
மீண்டும் கட்டிய வீட்டுக்கு பாதை வேண்டி மீண்டும் அவன் இடத்தை ஆக்கிரமிப்பு
செய்வதால் உண்டான பாசம் பினைப்பு.
இரண்டு
தலைமுறையாக தெரு நில மன்னனின் குடும்பத்தின் ஆள் பலத்தினாலும் பணபலத்தினாலும், அவனின் தந்தை குடும்பம் அடிவாங்கியதால்,எந்த எதிர்ப்பும் காட்டாமல், பின்வாங்கி
அமைதியாகிவிட்டது.
மூன்றாவது
தலைமுறையான அவன் காலத்தில்தான், ஆள்பலமும், பணபலமும் இல்லாதபோதும் தெரு நில
மன்ன்னை எதிர்த்து தனது இடத்தை மீட்க போராடி வருகிறான். அவன் தந்தை வழி சொத்து என்பதற்கும் தனக்கும் அது ஒன்றுதான்.
சரியான,முறையான
தன் இடத்துக்கான ஆதாரங்களை அலைந்து தேடிபிடித்து கைவசம் இருந்தும் .தெரு நில மன்னனிடம் பலமுறை தோல்வி அடைந்தான் . விடாப்பிடியாக தெரு நில மன்ன்னை எதிர்த்து வருகிறான். இந்தப் போராட்டமத்தோடு அவனோடு அவன் தலைமுறையும் முடிவுக்கு வருகிறது.
அவனின்
தலைமுறை தொடர்வதற்கு மனைவி,
குடும்பம்,வாரிசு எதுவும் அவனுக்குஇல்லை. அவன்வாழ்நாளில் பெரும்பகுதி இடம், தெருவாசிகளை எதிர்த்த போராட்டத்திலே கழிந்துவிட்டன.
இத்தனைக்கும் அவன் எதிர்க்கும் தெருநிலமன்னன் மற்றும் தெரு வாசிகள் அனைவரும் இந்தியாவின் தந்தை என்று போற்றப்படும் காந்தியி னால் அரிசனங்கள் என்று அழைக்கப்படுபவர்கள்.
இத்தனைக்கும் அவன் எதிர்க்கும் தெருநிலமன்னன் மற்றும் தெரு வாசிகள் அனைவரும் இந்தியாவின் தந்தை என்று போற்றப்படும் காந்தியி னால் அரிசனங்கள் என்று அழைக்கப்படுபவர்கள்.
சின்னமீனை
தின்னும் பெரிய மீனைப்போல தெருவின் நாட்டாமையான தெரு நில மன்னன். நடந்து வருகிறான்.
பன்னி
ஒரு ஈத்துக்கு பல குட்டி போட்டது மாதிரி தெரு நிலமன்னனும் ரெண்டு
பொண்ணும்,நான்கு ஆணுமாக சட்டபூர்வ வாரிசாக பெற்றான். சட்டப்பூர்வம் இல்லாமல் சின்னவீடு,வைப்பாட்டிகளுக்கும்
ரெண்டு மூணுமாக............சேர்த்து தெரு நில மன்னனின் குடும்பமே ஒரு படையாக
பட்டாளமாக அந்தத் தெருவில் இருக்கிறது.
இது
போதாக்குறைக்கு, தெரு நிலமன்னனின் மாமன் மருமகன் உறவு முறைகளோட,. அவனின் தந்தைவழி
உறவுமுறைகளான சித்தப்பன்களும் தெரு நில மன்னன் பக்கம் சேர்ந்துள்ளதால் அந்தத் தெருவில் அவன்
மட்டும் தனி.
ஒண்டிக் கட்டையான அவன் மீது தெரு நில மன்னனான தெரு நாட்டாமையும்
அவனின் உறவுகளும் அடுத்தடுத்து இவன் மீது அந்தக் காவல்நிலையத்தில் பொய்ப்புகார்
கூறுவதால். அவன்.
” மாதத்தில் ஒரு நாளேனும் காவல்நிலையம் செல்லாத
நாள் இல்லை.
சென்ற மாதத்தில் அவன் மீது யாரும் புகார் எதுவும் கொடுக்கவில்லை .இ தனால் காவல் நிலையம் செல்ல வேண்டிய
நிலை இல்லை என்று நிணைப்பில் ஓய்ந்திருந்த நிலையில்............
அவன் புகாருடன் காவல்நிலையம் செல்ல வேண்டிய நிலை
ஏற்ப்பட்டது.
இவன்
வீட்டிலிருந்த 5கிலோ பெருமானமுள்ள பித்தளை அண்டா, 2கிலோ சருவப்பானை, சில்வரான இட்லி சட்டி,2கிலோ அரிசி
வேக வைக்கும் அளவிலான சோத்துப்பானை ஆகிய பொருட்கள் மொத்தமாக திருடு போனது..
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
ஒரு திருமண விழாவில்..........
சார், வணக்கம்.. தங்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். விருந்து சிறப்பாக இருந்தது விருந்து உண்ட பின்தான் தங்களுக்கு கால் பன்னுகிறே...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- makkalnanpan.com அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார...