பக்கங்கள்

சனி 31 2015

இனி சாராயம் குடிக்காதவர்களும் கைது செய்யப்படுவார்கள்

தோழர் கோவன்



தமிழ்நாட்டு தெரு வீதிகளில் காட்டாற்று வெள்ளமாக  மம்மி ராணியின் டாஸ்மாக் சாராயம் பெருக்கெடுத்து ஓடி பெரும்பாலான குடும்பங்களும் மாணவ -மாணவிகளும் சிறுவர்களும் சாராய வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருந்தனர்

இந்த காட்டாற்று வெள்ளத்தை தடுத்து நிறுத்த பலரும் போராடினார்கள்  அவர்களில்.   காந்திய வழியில் போராடிய சசிபெருமாள்..  மம்மி ராணியின் தர்பாரில் கொலலப்பட்டார்.

அடுத்து ஜனநாயக வழியில் போராடிய மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராசு மற்றும் முன்னணியினருடன்,பொதுமக்கள் பலரும கைது செய்யப்பட்டனர்.

சாராய மம்மியின் தர்பாரை எதிர்த்து பச்சையப்பன் கல்லூரி மாணவ-மாணவியர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர். அடங்க மறுத்த ம்ம்மியை எதிர்த்து போராடிய போது... மம்மியின் காலாட் படையால் அடித்து பூட்சால் மிதிக்கப்பட்டு , சிறையிலும் சித்திரவதை செய்யப்பட்டனர்.

இப்படி மம்மியின் சாராய வருமானத்தை எதிர்த்தவர்களின் உயிர் பறிக்கப்பட்டும்,  போராடியவர்கள் அனைவரும் செருப்பாலும் . இரும்பு கம்பியாலும் அடிக்கப்பட்டும், பினை மறுக்கப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டப் பின்னரும்......

மம்மியின் சாராய சீரழிவை எதிர்ப்பை.. திசை திருப்ப.. பெரியாரின் பேரன் வெளியிட்ட கருத்தை எதிர்த்து மம்மியின் அடிமைப் படை  குதியாட்டம், குத்தாட்டம் போட்டும்...

மம்மியின் சாராய எதிர்ப்பும்  போராட்டமும் எதிர்ப்பும் .. அடங்காமல், ஒடுங்காமல் பம்மாமல்   பெரும் வீச்சாக இருப்பதை கண்டு மனம் பொறுக்காமல் வெதும்பியது . மம்மியும். சாராய மமமியின் காலாட்படையும் ..

 இந்நிலையில் மம்மியின் சாராய விற்பனை வருமானத்தை  எதிர்த்து பாடல் பாடியதற்க்காக. மக்கள் கலை இலக்கிய கழகத்தின் .. கலைக்குழு கலைஞர் தோழர் கோவனை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில்  சிறையில் அடைத்துள்ளதின் மூலம்.  சாராய மம்மி..  சாராய தேசத்தின் தலைவியாக காட்டிக் கொள்கிறார்.

அடுத்த கட்டமாக.. இனி... சாராய மம்மியின்  தர்பாரில் அரசு சாரயம்  குடிக்காமல் டேக்கா கொடுத்து தப்பிப்பவர்களும், காசில்லாமல் மம்மியின் சாராயம் குடிக்காமல் வழியில்லாமல் ஓடி ஒளிந்து கொண்டு இருப்பவர்களும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில்  மட்டுமல்ல இருக்கும் அனைத்து வகை சட்டத்தின்படியும் கைது செய்யப்படுவார்கள்..


பாடியவரைக் கைது செய்து விட்டார்கள்.
இனி பரப்பியவர்களைக் கைது செய்யட்டும்.
பாடலைக் கேட்பவர்களையும் கைது செய்யட்டும்.
நமது பாடல் கோட்டையை எட்டும்
கொடநாட்டையும் எட்டும்.
மூடு டாஸ்மாக்கை என்ற மக்கள் குரல் அவர்களை செல்லுமிடமெல்லாம் விரட்டும்.







மேலும் பார்க்க.....தோழர் கோவன் கைது.......

                                      மூடு டாஸ்மாக்கை மூடு
பாடு அஞ்சாதே பாடு – மக்கள்
தாலி அறுக்கும் டாஸ்மாக்கை
மூடும் வரை பா…டு
பாடு அஞ்சாதே – பாடு
எத்தனை கைது… எத்தனை சிறை…
எத்தனை அடி… எத்தனை உதை…
எத்தனை பெண்கள் கண்ணீரு
எத்தனை வீடுகள் சுடுகாடு
எதிர்த்துக் நிற்க ஏன் தயங்கணும்
இப்பவே கேளு ஏன் நடுங்கணும்
போதை தெளிய தமிழனுக்கு
பாட்டு ஒண்ணு பாடினதுக்கு
தேசத்துரோக வழக்கெதற்கு
தேடித்தேடி கைது எதற்கு
எங்க பாட்டை நிறுத்த முடியாது
வாய் பூட்டு  போட முடியாது
பூட்டணும்னா கடைய பூட்டு
மிடாஸுக்கு விலங்கை மாட்டு
பாடல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

வெள்ளி 30 2015

இந்தீ...யனின் மூளையை பற்றி ஆசான்..

hindutva-beef-cartoon



hindutva-dalith-murder

ban-on-beef-in-maharashtra-cartoon
படங்கள்--வினவு.


“உலகத்தில் மனிதனின் மூளை என்ற கருவியே ..பிற சமூகத்தோடு தொடர்பு கொள்ளவும் , தொடர்புகளை விரிவாக்கம் செய்து கொள்ளவும்.மனிதனுடைய அறிவின் வளர்ச்சிக்கு அடையாளமான கருவியாக உலகமெங்கும் இருந்த போது...

இந்தியாவிலே..பரம்பரை வழக்கம், சடங்குகள், சம்பிராதாயங்கள் என்ற குறுகிய பரப்பிலே  மிகவும் பகுத்தறிவற்றதாக உலகத்தோடு தொடர்பை துண்டித்துக் கொண்ட ஒரு மூட நம்பிக்கையின் கருவியாக இருக்கிறது என்றார் ஆசான் தோழர் மார்க்ஸ்

 அவர் சொல்லியது போலவே..

இந்தீ யாவில்தான் விலங்குகள் மனிதர்களை ஆட்டி படைத்துக் கொண்டு இருக்கின்றன.

மாடு, குரங்கு,பன்னி,நாய் போன்ற விலங்குகள் கடவுகளாக வழிபட்டுக் கொண்டு.    அந்த விலங்களுக்கு  மனிதர்களளை பலி கொண்டு இருக்கிறார்கள்.

வியாழன் 29 2015

உலகம் அறிந்திராத வியக்கத் தக்க சோவியத் சாதனைகள்

நன்றி! கலையகம்

சோவியத் யூனியன் ஸ்தாபிக்கப் பட்ட பின்னர், உலகில் வேறெந்த நாட்டிலும் வாழும் மக்கள் அறிந்திருக்காத வசதி வாய்ப்புகள், சோவியத் பிரஜைகளுக்கு வழங்கப் பட்டன.மேற்கத்திய நாடுகளில் கூட, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தான் அவை நடைமுறைக்கு வந்தன. அந்த வகையில், இன்றைக்கு மேற்குலகில் வாழும் மக்கள் அனுபவிக்கும் சலுகைகளை, சோவியத் யூனியன் தான் முதன் முதலாக அறிமுகப் படுத்தியது. 

சோவியத் மக்கள் அனுபவிக்கும் வாழ்க்கை வசதிகளைப் பற்றிக் கேள்விப்படும் தமது மக்கள், புரட்சி மூலம் ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்கள் என்று மேற்குலக அரசுகள் அஞ்சின. அதனால் தான், எதிர்காலப் புரட்சியை தடுக்கும் நோக்கில், தாமும் அதே மாதிரியான வசதிகளை தமது மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்தனர். மனித சமுதாயம் முழுவதற்கும் சோவியத் யூனியன் வழங்கிய நன்கொடைகளின் விபரம்: 



 1. உலக வரலாற்றில் முதல் தடவையாக, சோவியத் யூனியனில் மட்டும் தான், எட்டு மணி நேர வேலை நடைமுறைக்கு கொண்டு வரப் பட்டது. 

 2. வேலை செய்யும் அனைவருக்கும், வருடத்திற்கு ஒரு தடவை ஒரு மாத விடுமுறை வழங்கப் பட்டமை இன்னொரு சாதனை ஆகும். சில தொழிற்துறைகளில் ஒரு மாதத்திற்கும் மேற்பட்ட விடுமுறை கிடைத்தது. அது மட்டுமல்ல, விடுமுறைக் காலம் முழுவதும் முழுச் சம்பளம் வழங்கப் பட்டது. இதுவும் உலக வரலாற்றில் முதல் தடவை என்பது குறிப்பிடத் தக்கது.

3. ஒவ்வொரு தொழிற்துறைக்கும் ஏதாவதொரு தொழிற்சங்கம் பொறுப்பாக இருக்கும். அதில் அங்கத்தவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், தொழிற்சங்கப் பாதுகாப்பு கிடைத்து வந்தது. உதாரணத்திற்கு, தொழிற்சங்கத்தை கலந்தாலோசிக்காமல் எந்த நிறுவனமும் தமது ஊழியரை பணி நீக்கம் செய்ய முடியாது. 

4. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படித்து முடித்த ஒவ்வொரு பட்டதாரிக்கும், வேலை தேடிக் கொடுக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டது. அனைவருக்கும் வேலை வாய்ப்பு உறுதிப் படுத்தப் பட்டது. 

5. பாடசாலைக் கல்வியில் திறமைச் சித்தி பெற்ற அனைவரும், தாம் விரும்பிய கல்லூரிக்கோ, அல்லது பல்கலைக்கழகத்திற்கோ செல்ல முடிந்தது. தரப்படுத்தல் கிடையாது. கல்விக் கட்டணமும் அறவிடப் பட மாட்டாது. 

6. பாலர் பாடசாலை தொடங்கி, ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரையில், முற்றிலும் இலவசமாக வழங்கப் பட்டது. உலகிலேயே இலவசக் கல்வியை அறிமுகப் படுத்திய முதல் நாடு சோவியத் யூனியன் தான். 

7. உலகிலேயே முதல் தடவையாக, சோவியத் குடிமக்கள் தான் இலவச மருத்துவ வசதியை அனுபவித்தனர். மருத்துவ ஆலோசனை முதல் சத்திர சிகிச்சை வரையில் அனைத்தும் இலவசம். எங்கேயும், எப்போதும், காலவரையறை இன்றி இலவச மருத்துவ வசதி வழங்கப் பட்டது. எந்த மருத்துவமனையிலும் நோயாளிகள் வரிசையில் காத்திருக்கவில்லை. காலந் தாமதித்து சிகிச்சை வழங்கவில்லை. ஒவ்வொரு நகரத்திலும் பத்துக்கும் குறையாத மருத்துவ மையங்கள் (poliklinikas)இருந்தன. அந்த இடங்களுக்கு எவரும் சென்று வைத்திய ஆலோசனை பெறலாம். எக்ஸ் ரே படம் பிடித்தல், பற்களை கட்டுதல் அனைத்தும் இலவசம். 

8. ஒவ்வொரு உழைப்பாளியும், தனது நிறுவனத்தை சேர்ந்த முகாமையாளரிடம் சுற்றுலா பயணம் கோரி விண்ணப்பிக்க முடிந்தது. கடற்கரைக்கோ அல்லது வேறெந்த விரும்பிய சுற்றுலா ஸ்தலத்திற்கோ சென்று வர அனுமதி கோர முடிந்தது. ஒவ்வொரு வருடமும், தமது தொழிலாளரின் சுற்றுலா செலவுகளை, அந்த நிறுவனம் முழுமையாக பொறுப்பெடுத்தது. அதாவது, தொலைதூர பிரதேசத்திற்கான சுற்றுலா பயணமும் முற்றிலும் இலவசம். 

9. உலக வரலாற்றில் முதல் தடவையாக, ஒவ்வொரு சோவியத் பிரஜையும் இலவச வீட்டுக்கு உரிமை உடையவராக இருந்தார். வீட்டு வாடகை கிடையாது. முற்றிலும் இலவசம். உங்களது பெயரில் வீடு எழுதித் தரப் படும். அதை நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். உங்களுக்குப் பின்னர் உங்களது பிள்ளைகள் அங்கே வசிக்கலாம். வீடு கிடைப்பதற்காக காத்திருக்க வேண்டி இருந்தமை உண்மை தான். ஆனால், ஒவ்வொரு மாதமும் நாடு முழுவதும் ஆயிரக் கணக்கானோருக்கு புது வீடுகள் வழங்கப் பட்டன. இன்றும் கூட, ரஷ்யாவிலும், முன்னாள் சோவியத் குடியரசுகளிலும் பெரும்பான்மையான மக்கள் சொந்த வீடுகளில் வாழ்கிறார்கள் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது. 

10. ஒவ்வொரு சோவியத் பிரஜையும், தங்கியுள்ள இடத்தில் இருந்து வேலை செய்யும் இடத்திற்கு சென்று வர இலவச பயணச் சீட்டு வழங்கப் பட்டது. பஸ், மெட்ரோ, ரயில் எதுவாக இருந்தாலும், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு இலவச பயணச் சீட்டுகள் கொடுத்தனர். இதுவும் உலகிலேயே முதல் தடவை. 

11. தாயாகப் போகும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மூன்று வருட மகப்பேற்று விடுமுறை வழங்கப் பட்டது. ஆமாம், மூன்று வருடங்கள்! முதலாவது வருடம், அவர் சம்பாதித்த அதே சம்பளம் வழங்கப் பட்டது. இரண்டாவது, மூன்றாவது வருடங்கள் அரசு உதவித் தொகை கொடுக்கப் பட்டது. அது மட்டுமல்ல, மூன்று வருடங்கள் முடிந்ததும், அவர் முன்பு செய்த அதே வேலையை திரும்பவும் பெற்றுக் கொள்ள முடிந்தது. 

12. ஒவ்வொரு தாய்க்கும் குழந்தைகளுக்கான பால் அல்லது பால்மா இலவசமாக வழங்கப் பட்டது. பிறந்த குழந்தை ஒவ்வொன்றும் மூன்று வயதாகும் வரையில் இலவசப் பால் கிடைத்தது. இதற்காக, ஒவ்வொரு ஊரிலும் பால் நிலையங்கள் இருந்தன. பெற்றோர்கள் எந்த நேரத்திலும் அங்கே சென்று, தமது குழந்தைகளுக்கான பாலை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். 



செவ்வாய் 27 2015

டாடாவின் “ பேரரசி ஆலை” பெயர் வந்த கதை..

படம்-https://ta.wikipedia.org/s/hre


பார்சி சமூகத்தை சேர்ந்தவர் ஜாம்ஷெட்ஜி டாடா.,.. இவர் 1877ல் தனது நூற்பாலை ஒன்றை நிறுவினார். அந்த நூற்பாலைக்கு “பேரரசி ஆலை” என்று பெயரிட்டார்.

அந்த பேரரசிஆலை என்று பெயரிட்டதற்கு காரணம் இதுதான்.

கிழக்கிந்திய கம்பெனிக்காக சீனாவுக்கு கப்பல் மூலம் அபினி கடத்தியதில் கிடைத்த தரகு பணத்தையும், 1857-ல் ஈரான் மீதும் 1868-ல் எத்தியோப்பியா மீதும் பிரிட்டிஸ் இராணுவம் போர் தொடுத்த போது, பிரிட்டிஸ் படைகளுக்கு உணவு சப்ளை செய்த “ காண்டீன் காண்டிராக்ட் ” மூலம் கிடைத்த பணத்தை  வைத்து இந்த நூற்பாலையை தொடங்கியதால்...பிரிட்டிஸ் காரர்களின் நன்றிக் கடனுக்காக... அன்றைய அரசிக்கு விசுவாசத்தை நிருபிக்கும் முகமாக தான் தொடங்கிய நூற்பாலைக்கு “ பேரரசி ஆலை” என்று பெயரிட்டார் ஜாம்ஷெட்ஜி டாடா...

இப்படி போதை பொருள் கடத்திய  பணத்தில் வைத்து தொழில் தொடங்கிய டாடாவைத்தான் “ தொழில் தந்தை” என்று  பெருமையாக குறிப்பிடுகிறது சுதந்திர இந்தீ  யா....

திங்கள் 26 2015

தோழர் ஜூலியஸ் ஃபூசிக் ஓர் அதிசியக் கலைஞன்..மாவீரன்..

படம்-  ஜூலியஸ் ஃபூசிக்



ஜூலியஸ் ஃபூசிக் செக்கோாஸ்லாவாகியா நாடு உலக பாட்டாளி வர்க்கத்துக்கு ஈந்த ஒப்பற்ற மாவீரன்

இரண்டாம் உலகப்போரில் செக் நாடு இட்லரின் கோரப்பிடியில் சிக்கித் திணறியபோது, அப்பாசிச இருள் கிழிக்க ஆவேசத்தோடு எழுந்த கம்யூனிசப் போராளி..

இளம் வயதிலேயே கம்யூனிச இயக்கத்துடன் தொடர்பு கொண்டு மாணவர் அமைப்புகளை கட்டவதிலும் தொழிற்சங்கப் போராட்டங்களிலும் ஈடுபட்ட அவர், “ த்வோர்பா“ ( படைப்பு) என்ற இலக்கிய பத்திரிக்கையின் ஆசிரியராகத் தொடங்கி “ரூத் பிராவோ” என்ற கம்யூனிஸ்டு கட்சி அரசியல் ஏட்டின் ஆசிரியராக உயர்ந்தார். தனது வர்க்கக் கனல் மூட்டும் எழுத்துக்களால பாசிச எதிர்ப்புப் போராட்டத் தீயை பற்றிப் படரச் செய்தார்.

1938-ல் நாஜி அடக்குமுறை கோரத்தாண்டவமாடிய போது கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் பத்திரிகைகளும் தடை செய்யப்பட்டன.. ஃபூசிக்கும் மற்ற தோழர்களும் தலை மறைவாக இயங்கி. தடை செய்யப்பட்ட பத்திரிகைகளை இரகசியமாக  வெளியிட்டு தொடர்ந்து புரட்சி பணியாற்றினர்.

ஐரோப்பிய கண்டத்தில் அன்று பெரும்பாலான எழுத்தாளர்களும், அறிவுத் துறையினரும் பாசிச அடக்கு முறைக்கு அஞ்சி அதனுடன் சமரசமாகிவிட்ட நிலையில், பாசித்துக்கு எதிராக உறுதியாக நின்று மக்களைத் திரட்டி போராடினார்.

உண்மையான மனிதனுக்கு எடுத்துக்காட்டாக,உண்மையான கம்யூனிஸ்டுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த  தோழர் .பூசிக் ஒர் அதிசியக் கலைஞன், மாவீரன்.

1942--ல் .ஃபூசிக் பாசிச இட்லரின் “கெஸ்டபோ” எனப்படும் இரகசியக் கொலைப்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறைக் கொட்டடியில் கொடூர சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார். எஃகுறுதிமிக்க அம்மாவீரனிடமிருந்து எந்த இரகசியத்தையும் பெற முடியாததால், அப்பாசிசக் கோழைகள் 1943 செப்டம்பரில் . தோழர் ஃபூசிக்கை தூக்கிலிட்டு கொன்றனர்.

சித்திரவதை முகாமில் இருந்த போது அவர் எழுதி, இரகசியமாக அனுப்பிய குறிப்புகள் தான் பிற்காலத்தில் ”தூக்கு மேடைக் குறிப்புகள்” என்ற நுலாக வெளிவந்து  உலகப் பெற்று விளங்குகிறது.

உலகப் பாட்டாளி வர்க்கத்துக்கும் இளைஞர்களுக்கும் நாட்டுப் பற்றும் ஜனநாயகப்பற்றும் கொண்டோர்க்கும் அந்நூல் புரட்சிகர உணர்வூட்டும் வீர காவியமாக இன்றும் திகழ்கிறது.




ஞாயிறு 25 2015

சின்ன மருதுவின் திருச்சி பிரகடனம்.....

மருதிருவர் குருபூசை: அல்லக்கை சாதிச்சங்கங்கள்! ஒத்தூதும் அரசு!!
படம்--மருதிருவர் (வினவு)



ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால், 

மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரை யொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரி டம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தா ராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர். 

ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும்… ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும். 

அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்… 

ஆதலால்….. மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். 

ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்… இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்… இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது… இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!…. 

இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்… எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமாகங்களை பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்…

இப்படிக்கு,
மருது பாண்டியன்
பேரரசர்களின் ஊழியன், ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி
                                                                                    
                                                                                                                              

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...