பக்கங்கள்

சனி 24 2014

வாக்காளரின் அமெரிக்க டாலர் விழிப்புணர்வு

படம்tamizhan4u.blogspot.com








தேர்தல் ஆணையம் சார்பில்  வாக்காளர் விழிப்புணர்வு சுவரொட்டிகள் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டன.

தூத்துக்குடி எட்டயாபுர பகுதியில்  ஒட்டப்பட்டு இருந்த “சுவரொட்டியில்“விலையில்லா உங்கள் வாக்கை பணத்திற்க்காக விற்பது?? உங்கள் வாக்கை சரியாக பயன்படுத்துவீர்”  என்று குறிப்பிடப்பட்டதோடு, இந்திய பணத்திற்குப் பதிலாக அமெரிக்க டாலர் பணத்தை படமாக போட்டு இருந்தனர்.

அந்தச் சுவரொட்டியை படித்த வாக்காளர்களின் விழிப்புணர்வு இப்படி இருந்தது.

“ விலை மதிப்பில்லா உங்கள் வாக்கை இந்திய பணத்திற்கு விற்காதீர்கள்.!! அதற்கு மாற்றாக விலை மதிப்புடைய அமெரிக்க டாலருக்கு விற்றுக் கொள்ளுங்கள். என்று நாசூக்காக... அமெரிக்க டாலர் படம் போட்டு புரிய வைக்கப்பட்டது.

வெள்ளி 23 2014

கொலைகாரர் கையில் இருப்பதும, மருத்துவர் கையில் இருப்பதும் கத்திதான். பொன்னாரின் கண்டுபிடிப்பு

கொலைகாரர் கையில் இருப்பதும் கத்திதான்,மருத்துவர் கையில் இருப்பதும் கத்திதான் என்று பாஜகவின் தமிழகத் தலைவர் பொன் ராதா கிருஷ்ணன்  மோடி விழாவுக்கு  இலங்கை ராஜபட்சி வருகையை பற்றி கண்டு பிடித்து சொன்னது.

படம் தினகரன்.










அப்போது மண்மோகன் பிரதமர்,
இப்போது மோடி பிரதமர்,

கொலைகாரர் கையிலும் கத்தி இருக்கும்
மருத்துவர் கையிலும் கத்தி இருக்கும்

மண்மோகன் கையில் இருந்த கத்தி-
கொலைகாரர் கையில் இருந்த கத்தி

மோடி கையில் இருக்கும் கத்தி-
மருத்துவர் கையில் இருக்கும் கத்தி,

--கொலைகாரர் கையில் இருக்கும் கத்தியும்,
மருத்துவர் கையில் இருக்கும் கத்தியும் ஒன்றல்ல

..ஆக  பொன்னாரின் கத்திகள் வேறு வேறாக இருந்தாலும் .
(தமிழர்களின்)வயிற்றை ஒரு கத்தி குத்திக் கொல்லும்,

இன்னொரு கத்தி கீறி கிழித்துக் கொல்லும் இவைதான்
கத்திகளின் வேறுபாடு..


புரட்சி நடிகர்-நடிகர் திலகம் சாதிக்காததை சாதித்த காரிய கிறுக்கன்.

10336808_807551119277658_5662805368678859871_n
படம்.வே.மதிமாறன்.


















உலகம் தழுவிய பிசினஸ், கச்சிதமாக காய்களை நகர்த்தி தன்னையே “பிராண்ட” ஆக்கிக் கொண்ட நடிகன்.

உலகம் முழுவதும் 3,000 திரையரங்குகளில், தமிழகம் முழுவதும் 600க்கும் அதிகமான திரையரகுங்களில்................

கேளிக்கை வரி தொடர்பான  வழக்கில் பிரதான அரசானையின் மீது இடைக்கால தடை நீடிக்கும் நிலையில்................

தமிழக அரசு “கோச்சடையான்” னுக்கு  கேளிக்கை வரி விலக்கு. அளித்துள்ளது.

இதோடு. தமிழ்நாடு  உயர்நீதி மன்றமும், தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள கேளிக்கை வரி விலக்கை ஏற்றுக் கொண்டுள்ளது

வியாழன் 22 2014

பிரச்சாரத்தின்போது கேப்டன் சொன்னதும் பெற்றதும்...ஒரு வரலாற்று சுவடு.

படம்nadunadapu.com












மத்திய சென்னை  தொகுதி வேட்பாளர் ரவீந்திரனை ஆதரித்து பிரச்சாரத்தில்
ஈடுபட்டபோது  அவருக்கு வீரவாள், தலைப்பாகை மாலை மரியாதை போன்றவை தரப்பட்டது.

அதனைப்பார்த்த கேப்டன்,“என்னைய்யா இது” எந்த ஏரியாவுக்கு போனாலும் இதைத்தான் கொடுப்பீங்களா?? என்று அங்கலாயித்தார். பின்பு சரி என்று முனு முனுப்புடன் வாங்கி அணிந்து கொண்டு கூடி நின்றவர்களைப் பார்த்து கை அசைத்தார்.

 அப்படியே மத்திய சென்னையிலிருந்து தென் சென்னைக்கு சென்றபோது கூட்டணிக்கட்சியான் பாஜகவின் சார்பில் மீண்டும் வீரவாள்,தலைப்பாகை, மாலை வழங்கப்பட்டது. வேறு வழியின்றி எந்த முனு முனுப்பு இல்லாமல் கேப்டன் அவற்றை ஏற்றுக் கொண்டார்.


புதன் 21 2014

அந்த காலத்து சாதனை தியேட்டரும் சாதனை படமும்.

52 ஆயிரம் சதுர அடி கொண்டதும் 2,563 இருக்கைகள் கொண்டதும் அக்கம் பக்க கிராமத்திலிருந்து வண்டி கட்டிக் கொண்டு வந்த பெருமை உடையதும். ஹவுஸ்புல் போர்டே மாட்டாத அதிசியமுள்ளதுமான இந்தியாவின் பெரிய என்ற பெருமையை தாண்டி ஆசியாவின் பெரிய என்ற பெருமையை பெற்றது


படம்poonaikutti.blogspot.com















ஆசியாவிலே பெரிய தியேட்டரான இது கட்டி முடிக்கப்பட்டு முதன்முதலாக தீபாவளியன்று திறப்பு விழா வைத்து.அந்தத் திறப்பு விழா அன்றே. தெய்வங்களை வணங்கி அதனைப்போற்றும் விதமாக புராணபடங்களை வெளியிடாமல்.

கடவுளை நிந்தித்து, சாதியத்தை எதிர்த்த ஒரு சமூகப்படத்தை,அந்தச சமூகப்படத்தின் வசனங்களை கேள்விப்பட்டு, அன்று  தமிழ்நாட்டில் முதலமைச்சராகஇருந்த, குலக்கல்வியினை கொண்டு வந்த ராஜாஜி என்பவரை எதிர்த்தும் வெளியிடப்பட்டது.

17.10.1952ல் தீபாவளி வெளியீடாகவும் ஆசியாவின் பெரிய தியேட்டரின் முதல் திரைப்படமாகவும்.தமிழ்சினிமாவின் தலை எழுத்தை புரட்டி போட்ட படமாகவும் இருந்தது.

அந்த திரையரங்கத்தின் முதல் படமே நூறு நாட்களுக்கு மேலாக ஓடி சாதனை புரிந்தது.

முதன்முதலாக கடவுளை  நிந்தித்த படமாக வெளியிட்டு “ஆசியாவின் தங்கம்  என்ற பெருமையை பெற்ற.. அந்தத் தியேட்டரில் வெளியான படம்தான் “பராசக்தி”

அதிசியமா...? அவதாரமா.....??

படம்












ஜெ.யின் சொத்து குவிப்பு வழக்கில்

ஜெ வீட்டில் பறிமதல் செய்யப்பட்டதில்

914 பட்டுச்சேலைகளும்

6,200 இதர சேலைகளும்

இருந்தனவாம்.

இவற்றின்  மொத்த மதிப்பு

ரூ 88 லட்சமாம்.

செவ்வாய் 20 2014

போகுமிடத்தை மறந்த அறிவி(ய)லார்........


திரு.ஆல்பர்ட ஐன்ஸ்டீன்



















ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்த பயணிகளிடம் ரயில் சீட்டு பரிசோதகர் பயண சீட்டை பரிசோதனை செய்து கொண்டு வந்தார்.

பரிசோதகர் ஒவ்வொரு பெட்டியாக பரிசோதித்துக் கொண்டு வரும்பொழுது ஒரு பெட்டியிலுள்ள ஒரு பயணி. தன் பயணசீட்டை தன் மேல் சட்டைப் பையிலும், கால்சட்டைப் பையிலும் தேடிக்கொண்டு இருந்தார்.

அந்தப் பயணி .பயணசீட்டை தேடிக் கொண்டு இருப்பதை கவனித்த ரயில் பயணசீட்டு பரிசோதகர். அந்த பயணியின் அருகில் வந்து.“நீங்கள் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்ய மாட்டீர்கள் என்பது எனக்கும் உங்களோடு பயணம் செய்து கொண்டு இருக்கும் பயணிகளுக்கும் நன்றாகவேத் தெரியும். என்று சொல்லிவிட்டு அந்தப் பயணிடம் பயணச்சீட்டை கேட்காமல் அடுத்தப் பெட்டிக்கு சென்றுவிட்டார்.

பயணசீட்டு பரிசோதகர் அடுத்த பெட்டிக்கு சென்ற பிறகும் அந்தப் பயணி தன்னுடைய பயணசீட்டை விடாமல் தேடிக் கொண்டு இருந்தார்.

அருகில் இருந்த பயணி ஒருவர்.“ நீங்கள் பயணசீட்டு வாங்கியிருப்பது அவருக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு அடுத்த பெட்டிக்கு போய்விட்டாரே” பின்ன எதுக்கு பயணசீட்டை தேடுகிறீர்கள் என்று கேட்டார்.

பயணசீட்டை விடாமல் தேடிக் கொண்டு இருந்த அந்தப் பயணியோ,அந்தப் பயணிடம் சொன்னார்.

நான்,பயணசீட்டு வாங்கியது உண்மைதான். எங்கே போவதற்கு வாங்கினேன் என்று தெரியவில்லை.. போகுமிடத்தை தெரிந்து கொள்வதற்குத்தான் அந்தப் பயணசீட்டைதேடுகிறேன் என்றார். அந்தப்பயணி.

போகுமிடத்தை மறந்த அந்தப்பயணிதான்..

மதங்களையும் கடவுள்களையும் அருங்காட்சியகத்துக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்  என்று தன் கண்டுபிடிப்பால்  வலியுறுத்திய  ஆல்பர்ட்ஐன்ஸ்டீன் என்ற அறிவியலார்.

ஞாயிறு 18 2014

இந்தியாவின் மகாத்மா...............



படம்.வினவு.

















முதன் முதலில் மனுஸ்மிருதியை எரித்தவர். இந்திய வரலாற்றில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் கல்விக்கூடத்தை ஏற்ப்படுத்தி கல்வி கொடுத்தவர்.

இந்தியாவில் முதன்முதலாக பெண்களுக்கும் கல்வி கற்பித்தவரும். இந்தியாவில்  முதல் பெண் ஆசிரியருமானவர்  இவருடைய  மனைவியான சாவித்திரிபாய்பூலேதான்..

முதன் முதலாக விதவைகளுக்கும்,கர்ப்பிணிகளுக்கும் ஆதரவற்ற பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் காப்பகம் எற்படுத்தி சமூக சீர்திருத்தம் செய்தவர் .புரோகிதர்களின் பொய் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தி, மூட நம்பிக்கையிலிருந்து மக்களை விடுவித்து. பகுத்தறிவை வளர்த்து,மக்களிடம் முற்போக்கு சிந்தனையை தூண்டியவர்.

சாதிஇந்துக்கள் பொதுக் குளத்தில் நீர் எடுக்க தீண்டத்தகாதவர்களை அனுமதிக்காதபோது, தன்வீட்டுக் குளத்தில் தண்ணீர் எடுக்க அளித்து சாதி இந்துக்களின் சமூக புயக்கணிப்பக்கு ஆளாவனவர். கடவுளை வணங்க இடைத்தரகர்கள் தேவையில்லை என்று ,புரோகிதர்களின் பொய்,புரட்டுகளிலீ ருந்து மக்களை விடுவிக்க  முயன்றவர்.

1848ல் முதன்முதலாக பெண்களுக்கு கல்விக்கூடத்தை ஏற்ப்படுத்தி பெண்கள் கல்வி கற்கும் உரிமையை நிலை நாட்டியவர். முதன்முதலாக விதவை மறுமணத்தை நடத்தியவர்.

1873- செப்24-ல்சத்திய சோதக் வமாஜ் என்ற இயக்கத்தை எற்படுத்தி பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு கல்வி கூடங்களை ஏற்பப்படுத்துவது.புரோகிதர்களின் பொய்ப் புரட்டகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது. விதவைகளுக்கு மறுமணம் செய்து வைப்பது. புரோகிதர்களை அழைக்காமல் கருமகாரியங்களை செய்து கொள்ள தனிப்பயிற்சிப்பள்ளியை ஏற்ப்படுத்தி வீட்டுக்கு ஒருவர்தன் வீட்டுக்குக் கரும காரியங்களை செய்து கொள்ள பயிற்சி அளிப்பது போன்ற சீர்திருத்த புரட்சிகர செயல் திட்டங்களை நடை முறைப்படுத்தியவர்..

1882இல் முதன்முதலாக ஆங்கில அரசிடம் மாவணர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கவும் முதன்முதலாக அணைவருக்கும் உயர் கல்வி வழங்க கோரிக்கை வைத்தவர்.

சூத்திரர்களும்.ஆதி சூத்திரர்களும் காந்தியின் காங்கிரஸில் சேரககூடாது என்று அறித்தவர்.பாபாசாகிப் அம்பேத்காரின் தலைவர் இவர்.

 இன்னும் சொல்லபடாத பல  நிகழ்வுகளின்  பெருமைக்குரியவர் ஜோதிராவ் பூலே.... இவர்தான் இந்தியாவின் உண்மையான மகாத்மா.............ஆட்டுப்பாலை குடித்து அரைஆடையுடன் ஆடையில்லா பக்கியுடன் படுத்திருந்தவர் அல்ல.......மகாத்மா......

நன்றி! சமத்துவக் கல்வி திங்கள் இதழ்.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...