பக்கங்கள்

வெள்ளி 14 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-86.

உலகத்தை சுற்றி வந்த மண்ணும் மன்னாங்கட்டியும்....!!!!!!

Image result for பிள்ளையார்



Image result for மோடி









கம்பை சுற்றியபடி
சிலம்பு வாத்தியார்
கேட்டார் இந்த
உலகத்தை சுற்றி
வந்தவர்கள் யாரடா...
என்று.....கம்பு
சுற்ற வந்த
மாணக்கர் ஒருவர்
மெதுவாய் சொன்னார்
ரெண்டு பேர்
ஒன்று மண்ணும்
மற்றொன்று மன்னாங்கட்டியும்

புதன் 12 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-85.

கொலைகள் செய்யாத அபிராமிகள்.................


Image result for நாட்டுக்கட்டை







வெறும் ரோசம்மா என்றால் ஒருவருக்கும் தெரியாது.. நாட்டுக்கட்டை ரோஸ் என்றால்தான் பலருக்கும் தெரியும்.  கிராமத்திலிருந்து நகரத்தின்  சேரிப்பகுதிகளுக்கு குடி வந்ததுதான்.. சேரிப்பகுதியிலுள்ள  தெரு நாட்டாமைகள்  மற்றும் நாட்டாமையின் அளவுக்கு தகுதியிலுள்ளவர்களுக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். இந்த நாட்டுக்கட்டை ரோசம்மாவை சைடாக..அதாவது வைப்பாட்டியாக வைத்துக் கொள்வதற்கு தெரு நாட்டாமையும் தெருக் கோயிலின் பூசாரிக்கும்  வீடு வாங்க,விற்க தொழில் செய்யும் புரோக்கருக்கும்  உசிலம்பட்டி சாதிவெறியர்களின் வெட்டு குத்து கதையை மிஞ்சிய தெருப்போரே நடந்தது..

அந்தளவுக்கு கள்.சாராயம் , குடிக்காதவர்களைக்கூட போதையேற்றும் உடல் வாகு அமைப்பை பெற்றவர் அந்த நாட்டுக்கட்டை..

இந்த நாட்டுக்கட்டை  அய்ந்து பெண் பிள்ளைகளும் ஒரு ஆணும் பெற்றெடுத்தது.. பெரும்பாலும் கிராமத்திலிருந்து நகரப் பகுதிக்கு வருபவர்களுக்கு உத்தரவாதமான வேலை ஒன்று உண்டென்றால் அது கட்டிட சித்தாள் வேலைதான்..நிரந்தரமாக ஒதுக்கப்பட்டுருக்கிறது. நாட்டுக்கட்டையும் அவரது கணவரும்  இந்த வேலையை பார்த்துதான் ஆறு குட்டிகளையும் பெற்று  வளர்த்துவிட்டனர்.

முதல் பெண் குட்டியானது... தன்னுடன் வேலை பார்க்கும்  வேலை பார்த்த கொத்தனாருடன் பழக்கம் ஏற்பட்டு..வயிற்றில் ஏற்றிக்கொண்டது தெரிந்ததும். கொத்தனார் ஏற்கனவே மணம் முடித்தவர் என்று தெரிந்ததும் தங்கள் உறவுக்கார பையனுக்கு மணம் முடித்துவிட்டனர்.. அது இரண்டு குட்டிகளை ஈன்று அது குடியிருக்கும் தெருவிலே.. தன் கணவனுக்கு. தெரிந்தே ஒரு பெரிய புள்ளிக்கு துணையாக இருந்து  தன் கணவனு்டன் பெரிய வட்டி தொழில் செய்து வருகிறது.

இரண்டாவது பெண் குட்டியும் சித்தாள் வேலைதான்... இந்த குட்டி முதல் குட்டியை போல் ஏமாறமல்... வீட்டார் ஏற்பாடு செய்த கணவனை விரட்டி விட்டு  திருமணமாகி நாலு குழந்தைக்கு தந்தையான கொத்தனாரையே   போலீஸ் ஸ்டேசன் மூலம் கரம்பிடித்து  ரெண்டு ஆண் குட்டியை ஈன்றது.

மூன்றாவது குட்டியும்  மேலே கூறியது போன்றே... ஆனால் சிறிது மாற்றம்  தன்னுடன் நிமிந்தால் வேலை செய்தவனை காதலித்து  திருமணம் முடித்தது. அந்த திருமணத்தை முடித்து வைத்தவரு கட்டிட காண்ட்டிராக்டர்.  ரெண்டு ஆண் குட்டிகளை ஈன்றது. ஒருநாள் கட்டிட காண்டிராக்டருடன் சேரந்து இருப்பதை பார்த்த கணவன் தற்கொலை செய்துவிட்டபடியால்..சுதந்திரமா கட்டிட காண்டிராக்ருடன் நட்பாய் இருந்து வருகிறது.

நாலாவது..குட்டி ரெம்ப மாநிறம் போதாகுறைக்கு உடலெல்லாம் மஞ்சுள் பூச்சு.. பார்ப்பதற்கு நாட்டுக்கட்டையைவிட ரெம்பவும் தூக்கலாக இருக்கும். இதுக்கு யாரிடமும் காதல்கீதல் எதுவும் இல்லை... இது வேலை செய்யும் பில்டிங் ஒனர் முதல் ஒனரின் மகன் வரை பயன்படுத்திக் கொண்டார்கள். அதன் பயனமாக வயிறு பெருத்து.கலைக்க முடியாத தரணத்தில் பில்டிங் ஓனர் நாட்டுக் கட்டையையும் அவரது வீட்டுக்காரரையும் அழைத்து பேசி .ஒரு  குறிப்பிட்ட ஒரு தொகையை கொடுத்து போலீஸ் அது இது என்று செல்லாமல் பிரசவ செலவு எல்லாவற்றையும் அவரே பாரத்துக் கொண்டார்.

நாலாவது குட்டி ஈன்ற குட்டி ரெம்பவும் கொழு கொழுவென்றும் ரத்தக் கலரில் இருந்ததால். அந்த குழந்தையை வாங்க பலர் போட்டி போட்டதாக செய்தி.. கடைசியில் பிரவசம் பார்த்த மருத்துவமனை மூலமாக நல்ல விலைக்கு விற்கப்பட்டதாக தகவல்...சில மாதங்கள் கடந்து மாப்பிளை பார்த்து திருமணம்
முடித்து அவருக்கு ஒரு பிள்ளையை பெற்றெடுத்து.. அவனை வேண்டா மென்று துரத்திவிட்டு, மீண்டும் சித்தாள் வேலைக்கு சென்ற இடத்தில்... திருமணமாகி ரெண்டு பெண் குழந்தைகளை விட்டு ஓடிவந்த கொத்தனார் ஒருவனை சேரத்துக் கொண்டு அவனுக்கு ரெண்டு குட்டிகளை ஈன்றது.

அய்ந்தாவது ஆண்....அவன் தன் உறவுக்கார பெண்ணுடன் சிநேகமாய் இருந்து ஓடிப் போக இருந்தவனை  பெண் வீட்டார்கள் விரட்டி பிடித்து அவனுக்கே கட்டி வைத்துவிட்டனர். அந்தப் பெண் இரண்டு பெண் குட்டிகளை ஈன்றவுடன் அவுக ஊரிலுள்ள பெரிய புள்ளிகளுடன் சிநேகமாய் இருப்பதை கண்டும் காணாமல் தண்ணியடித்த பொளந்து கிடக்கிறான்..

ஐந்தாவது பெண்... இதுதான் படித்தப் பெண்.... இது படிக்கும் காலத்தில் தெருவில் உள்ள பையனுடன்  காதல் மொழி பேசிக் கொண்டு இருந்ததை.பையனுடைய வீட்டாளுக்கு தெரிந்ததால் பையனுக்கு தடை போட்டு விட்டார்கள்.... பத்தாவது வரை படித்துவிட்டு,  மாங்கல்ய திட்டத்தில் நூற்பாலைக்கு வேலைக்கு சென்றதில்.. எப்படியோ வயிற்றில் ஏறிவிட கலைப்பதற்கு முடியாமல்  பிறந்த குழந்தையை  குழந்தையில்லாதவர்களுக்கு கொடுத்துவிட்டனர்...பின் ஊனமுற்ற ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து .. ஒரு பிள்ளை பிறந்தவுடன்.  அந்தப்பிள்ளையை அவனிடமே கொடுத்துவிட்டு... அவனின் உறவுக்கார  ஒருவனுடன் குடும்பம் நடத்தி.. ஆண் ஒன்று பெண் ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்று  காலத்தை ஒட்டிக் கொண்டு இருக்கிறது.

இந்த லட்சணத்தில்.. கொலை செய்யாத அபிராமியான நாட்டுகட்டை ரோசம்மாவும்..அது ஈன்ற குட்டிகளும்.. தன் ஒழுக்கத்தைப் பற்றியும் தன் குட்டிகளின் ஒழுக்கத்தைப் பற்றியும் தெரியாதவர்களிடம்.. தான் அப்படியாக்கும்... இப்படியாக்கும் என்று தப்படிப்பதோடு நில்லாமல்..மற்றவர்களின் ஒழுக்கத்தை பற்றி புறம் பேசி  வருகிறதுகள்....

செவ்வாய் 11 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-84.

 நண்பர் சொன்னதில் தாமதமாக  ரசித்தது........


எனது படம்
தமிழ் வலை தளத்தில் பிரபலமாக உள்ள மீசைக்காரர்









 தமிழ் வலை தளத்தில் பிரபலமாக உள்ள மீசைக்கார நண்பரின் ஊர்க்காரர் அவர்..   ராமநாதன்னு  பேரு.. தற்கொலைக்கு  முயன்று சாகப் போனவரை தன் நகைச்சுவையால் தடுத்து காப்பாற்றியவராம். அப்படிப்பட்ட நகைச்சுவைக்காரரின் நகைச்சுவை சொற்பொழிவை...

முன்னோரு காலத்தில்  வேலை செய்த காலத்தில்  நண்பராக இருந்தவர் ஒருவர் . என்னைப்பற்றி நன்கு அறிந்தவர். அவர் மதுரையில் நடந்த பிரிண்டிங் கண்காட்சிக்கு சென்று...அலைந்த களைப்பில்  ..குளிருட்டப்பட்ட அரங்கத்தில் நடந்து கொண்டிருந்த  சொற்பொழிவை கேட்க அல்லாமல் ஓய்வுக்காக உள்ளே சென்றவர்.

நகைச்சுவை சொற்பொழிவை ஏதேச்சையாக கேட்டுருக்கிறார். தேவகோட்டை ராமநாதன் பேசப் பேச...கேட்டுக் கொண்டிருந்த நண்பருக்கு சிரிப்பு தாள முடியவில்லை.... பேசிய நகைச்சுவையை கேட்டபோது நண்பருக்கு எனது ஞாபகம்தான் வந்தது என்று எண்ணிடம்  ராமசத்தியம் அடித்துச் சொன்னார்.....

அவர் சொன்னதை உங்களுக்குச் சொல்கிறேன் சிரிப்பு வந்தால் சிரியுங்கள்.. சிரிப்பு வரவில்லை என்றால் என்னை கோபிக்காதீர்கள்.

வாழ்க்கையில் துனை எவ்வளவு முக்கியமோ...அதுபோல்  எழுதுகிற எழுத்திலும் அந்த துனை எவ்வளவு முக்கியம் என்று விளக்கியதோடு அந்த துனை ஆனது இடம்மாறி வந்தால் எவ்வளவு சிரமம் என்று எடுத்துரைத்தார்.

பத்திரிக்கைகளுக்கு மாத சந்தா அனுப்பாமல் இருக்கிறவர்களுக்கு அந்த பத்திரிகை அலுவலகத்திலிருந்து நிணைவூட்டும் கடிதம் அனுப்புவதில்..  எங்களின் இதழ்களை தொடர்ந்து படித்து வருவதற்கு நன்றி!.. தங்களுக்கு தொடர்ந்து இதழ் கிடைக்க, எங்கள் மனம் குளிர  விரைவில் எங்கள் அலுவலக முகவரிக்கு  சாந்தாவை அனுப்பி வைத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்...என்று இருந்தால் எப்படி இருக்கும்” என்று சொல்லி கலகல வென்று சிரிக்க வைத்தாராம்...ராமநாதன்.

நண்பர் சொல்லி விட்டு அவராக சிரித்தார்..முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை... என்னது..நுீண்டநாள் கழித்து சந்திக்கும் நண்பர் என்னை இப்படி இம்சைக்குள்ளாக்குறாறே... என்று தோன்றியது.....

நண்பரும் நான் சிரிக்காததை...என்னடா இவர் ரசிக்கத் தெரியாதவரா இருக்காரே.. இவரிடம் சொல்வதற்காக இவ்வளவு மெனக்கெட்டோம. என்று யோசித்தார்.....

எமக்கு...அப்பேயிலிருந்து..இப்பேல வரைக்கும் எதுவும் சட்டென உடனே புரியாது... சில நேரம், சில நாள், சில மாதம், ஏன் பல வருடங்களுக்குப் பின்புதான் விசயம் புரியும்...


அதுமாதிரிதான்.. தேவகோட்டை ராமநாதனின் துனை..அதாவது எழுத்தின் துனைக்கால்கள் பற்றி இந்தப் பதிவுக்கு முன்புதான் புரிந்தது..... பத்திரிகை அலுவலகத்துக்கு விரைந்து சாந்தாவை அனுப்பி வைக்கவும் என்ற பொருள்.

பொருள் புரிந்தவுடன் சிரித்தேன் நண்பருக்கு போன் போட்டு, பொருள் புரிந்ததை சொன்னேன்... நண்பரோ...“அடேங்கப்பா அருணாசலம்” என்று தொனியில் வெளுத்து வாங்கி விட்டார்.....

என்ன செய்ய ....நான் விரும்பாவிட்டாலும் எனக்கு கிடைப்பது/ கிடைத்தது கடைசி பெஞ்சுதானே........


திங்கள் 10 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-83.




Image result for எலியும் பூனையும்





நீதி மன்றங்களைப்பற்றி பேசியதில் கேட்ட கதை.......

உலகத்திலுள்ள உள்ள எல்லா நாடுகளிலும் பூனை கோர்ட்டு, மற்றும் எலி கோரட்டுன்னு ரெண்டு கோர்ட் இருக்கிறது. பூனை கோர்ட்ல போயி, எலி வழக்கை சொல்லி போது....

ஐயா.... இந்தப் பூனைங்க எங்க வம்சத்தையே தின்னு தீர்க்குதுங்க ஐயா... எங்கள காப்பாத்த ஒரு வழி சொல்லுங்கய்யான்னு கேட்டா... 

பூனை கோர்ட்டு என்ன சொல்லும்......உங்களை சாப்பிடாம நாங்க எப்படி உயிர் வாழ முடியும்.. உங்களை சாப்பிடறதே நியாயம் தானேன்னு தீர்ப்பு சொல்லும்.

பூனை கோர்ட்டு---- முதலாளி வகையறா...
எலி கோர்ட்டு---- பாட்டாளி மக்கள் வகையறா









ஞாயிறு 09 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-82.

உச்சத்தை தொட்ட.......பெட்ரோல்.............

Image result for உச்சத்தை தொட்ட பெட்ரோல்












என் இரண்டு
சக்கர வாகனத்தின்
 சேமிப்பு தொட்டியில்
சல சல வென்று ஓடியபடி
சொன்னது  பெட்ரோல்
 நான் உச்சத்தை
 தொட்டுவிட்டேன் இன்னும்
சில நாளில்
உச்சத்தையும் கடந்து
விடுவேன் அப்போது
என்ன செய்வாய்




பஸ் பயண
சீட்டு விலை
உயரத்தால் இரண்டு
சக்கரத்தில்  என்னை
 நிரப்பி சந்து
பொந்து  என
சர்ரு புர்ருன்னு
பறந்தாயே  நான்
உச்சத்தை கடந்த
பின் என்ன
செய்வாய் என்றது

உன் உச்சத்தை
குறைக்க மனு
கொடுப்பேன் என்றதும்

தூ என்று
துப்பியது பெட்ரோல்
மனு கொடுப்பதால்
என்  சிறு
மயிரையும் புடுங்க
முடியாது என்பது
உனக்கு தெரியாதாடா
என்றதும் நான்
படக் என்று
நீதிமன்ற கதவை
தட்டுவேன் என்ற
போது  ஆமா
கிழிச்ச  நீ
குடியிறுக்கும் வீட்டு
பிரச்சனைக்கே ஒரு
கதவும்  திறக்கல
இதுல என்
உச்சத்தை தடுக்க
உடனே நீதிமன்ற
கதவு பொளந்திரும்
போடா போடா
வெங்கம் பயலே
உருமா கட்டுறது
எப்போ என்று
சிரித்தது பெட்ரோல்

உன் உச்சத்தை
குறைக்க பாரத்
பந்த் நடக்கிறது
அப்போது தெரியும்
ஏறிய உச்சத்தை
இறக்குவது பற்றி..

அடடே போராட்டமா..
சாத்வீக போராட்டமா
தூத்துகுடியில சாத்வீகப்
போராட்டம் நடத்தினதுக்கு
பதிமூன்று பேர்
செத்தது தெரியுமில....



மீண்டும் பெட்ரோல்
என் உச்சத்தை
யாரலையும்  தடுக்க
முடியாது கேன..
என்றது....உன்
இருமாப்புக்கு வரும்
தேர்தலில் பெரிய
ஆப்பு வைக்கப்படும்
என்பதை கேட்டு

ஹாஹாஹா என்று
சிரித்த பெட்ரோல்
மெதுவாக  முனுமுனுத்தது

போடா லூசுப்
பயலே  தேர்தலே
திருடர் பாதைதான்டா
என்றபடி அடுத்த
வாசகத்தை சொல்லாமல்
சட்டென்று  வாயை
மூடிக் கொண்டது.

எனக்கு பின்
வரும் இரண்டு
சக்கர வாகன
ஓட்டிகளிடம் அடுத்து
தான் உச்சத்தை
தொட்டதை பெருமையாக
பீத்துவதற்கு................

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...