பக்கங்கள்

வியாழன் 04 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -8

 அந்தப் பெண்ணும் அவரும் ஒரே சாதியாக , ஒரே நிறமாக  உறவு முறையாக இருந்தாலும் வசதி வாய்ப்பில் ஏற்றத்தாழ்வுகள் மலைக்கும் பள்ளத்துக்குமாய் இருந்ததினால். இருவரும் உருகி உருகி காதலித்தாலும் பெண்ணின் வீட்டார்கள் அவருக்கு பெண் கொடுக்க மறுத்துவிட்டனர்.தங்களின் வசதிக்கு மேல் உள்ள வரனாக பார்த்து சட்டுபுட்னு திருமணத்தை முடித்துவிட்டனர்.

திருமணத்துக்கு முன்னரே காதலர்கள் இருவரும் ஓடிப்போகும் முடிவை கைவிட்டனர். காதலரோ எங்கிருந்தாலும் வாழ்க! என்ற பாணியிலான மன நிலைக்கு வந்துவிட்டார். காதலியோ என்றும் உன்னை மறவேன். காலம் என்றைக்காவது கை கொடுக்கும் என்ற உறுதியில் இருந்தார்.

தன் காதலிக்கு திருமணம் முடிவானதற்கு முன்பே காதலர் பெண்ணின் அப்பா, அம்மா மற்றும் அவரின் நெருங்கிய உறவினர்களிடம் காதலியை தனக்கு மணமுடிக்க வேண்டினார். பலகட்டமாக போராடினர். அவரின் போராட்டம் தோல்வியில்தான் முடிந்தது.அவரின் காதலியும் காதலருடன் சேர்ந்து தன் வீட்டாரிடம் போராடிப் பார்த்தார். ஒன்றும் காரியம் நடக்கவில்லை.. அப்பவே மனதில் கருவிக் கொண்டார். பின்னாளில் வருவிங்கடா அப்ப..உங்கள வச்சுகிறேன்டா..என்று

தன் காதலரை திருமணம் முடிக்க காதலி பல தடவை  வற்புறுத்திய போதும் காதலர் . “உனக்காவே நான்” என்று மறுத்துவிட்டார்.

காலங்கள் சென்றது காதலிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை காதலரின் சாயலில் இருந்ததால்.. காதலியின் கன்வர் சந்தேகப்பட்டு கேட்டபோது  ..காதலி அவரிடம் எல்லா உண்மையையும் சொல்லி விட்டார். கனவர் நொந்து நூல் நூலாகிவிட்டார்.  ஏற்கனவே இருந்த நோயோடு  இந்தக் கவலையும் ஒன்று  சேர செத்தும் போனார்.

காதலரின் நண்பர் ஒருவர் சொன்னார். உன் காதலியின் கனவர்தான் இறந்தவிட்டாரே! இப்போது உன் காதலியை நீ திருமணம் செய்து கொள்வாயா? என்று...

காதலர்க்கு சிறு நம்பிக்கை வந்தது.. காதலியை சந்தித்து இந்த விசயத்தை சொல்லி ஒப்பதல் பெற்றார். ஆனால் .பிறந்த வீடும் புகுந்த வீடும்  சம்மதிக்கமாட்டார்கள். கொலை வெறியில் இருப்பார்கள். வேண்டாம் நாம் எப்போதும் காதலர்களாக இருப்போம். இதோ உன் குழந்தை. இந்தக் குழந்தையை பார்த்து அவர்கள் காண்டாகட்டும். என்று காதலர்க்கு சொன்னார்.

காதலர் திரும்பவும் காதலியின் பெற்றொர்களை அனுகினார். அவர்கள் மறுத்தபோது  என்காதலியின் வாழ்வை நாசமாக்கி விட்டீர்களே! என்று சண்டையிட்டார். ஒன்றும் நடக்கவில்லை. தன் காதலி சொன்னதுதான் நடந்தது.

காதலி சொன்னபடியே காதலர்  சம்மதித்து  காதலர்களாகவே வாழ முடிவு எடுத்தார்.. காதலர்களின் நண்பர் நண்பிகளின் ஆதரவுடன் அவர்கள் காதலர்களவே  தங்கள் காதலை தொடர்ந்தனர்.. காதலியின் புகுந்த வீட்டார்க்கும் பிறந்த விட்டார்க்கும் அரசல் புரசலாக செய்தி வந்து கண்ணக்கோல் வைத்து இருவரையம் பிடிக்க முயற்சி செய்தும். முயற்சி பலிக்கவில்லை..காரணம்

காதலியின் உபயத்தால் காதலர்  காசு பணம் என்ற சமூக அந்தஸ்தில் உயர்ந்தவிட்டதால் யாரும் கேள்வி கேட்க இடமின்றி காதலர்கள் காதல் தொடர்ந்து  கொண்டு இருக்கிறது.

ஞாயிறு 31 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -7

 வழக்கம் போலவே  காதலர்கள் கூடும் செனட் சபைக்கு சென்றேன். கூட்டத்தில் புதியவர்கள் சிலர் இருந்தனர். அந்தப்புதியவர்களிடம் பழையவர் ஒருவர் காதில் கிசு கிசுத்தார். நான் கவனித்தேன் ..ஆனால் சொன்னார் என்று தெரியவில்லை. நார்மலாக பேசினாலே எனக்கு கேட்காது.. இதில் கிசு கிசுத்தால் சுத்தமாக கேட்காது..

அவர்கள் கிசு கிசுப்பதை பார்த்தபடியே.. செனட் சபையின் கூட்டத்தில் உட்கார குனிந்தேன். புதிய காதலர்களில் ஒருவர் என்னிடம்  சில கேள்விகள் கேட்டார். உட்காருவதை தவிர்த்து நின்றபடியே அந்தக் காதலர் கேட்ட கேள்விக்கு பதில் கூறினேன்.

“உங்களுக்கு டீ குடிக்கிற பழக்கம் இருக்கா...”?

“இல்லை”  ...

“புகை பிடிக்கும் பழக்கம்”....??

“ இல்லை”..

“ தண்ணி அடிக்கிற பழக்கம்”...???

“ இல்லை..”

“ திருமணம்....செய்து......

“ இல்லை”......

“காதலிச்சு இருக்கீங்களா...????”...

“ இல்லை”....

“ சரி., பெண்களை சைட்டாவது அடிச்சிருக்கீங்களா...”??????

“ இல்லை..”

“ யோவ்... அப்ப என்னதாய்யா வாழ்க்கையில செய்திருக்க..”...

“ எதுவும் இல்லை”


“எதுவுமே செய்யாமல் இருக்கும் நீவீர் காதலர்கள் கூடும் இந்த செனட் சபைக்கு என்னா மயித்துக்கு வர்ரீரு.... போய்யா...போயி தனியாக உட்காரு ” என்று செம கடுப்புல..கையை நீட்டினார்

அந்தக் காதலரின் கோபத்தை அறிந்த நான் அவர் கை நீட்டிய இடத்தில் போயி அமர்ந்தேன்.  என்னைப பற்றி கொச்சையாக பேசினார். அதைக் கேட்ட பழைய காதலர்களில் இருவர் என்னைப் பற்றி கொச்சையாக பேசுவதை கேட்டு.. கொச்சையாக பேசாதே என்று தடுத்தனர். புதிய காதலரும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

 நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை..  ஒருவரை சுட்டிக்காட்டி இவரது பார்வையில் தியாகி.... எனது பார்வையில்  கேனயன்...,ஏமாளி... உங்களது பார்வையில்....நையன், ஓம்போது ..... இவரின் சித்தப்பனின் மனைவி. இவர்மீது  மானபங்கம் செய்ததாக புகார் கூறியபோது... இவர் ஆண்குறியை ஒன்னுக்கு இருக்க மட்டும்தான் பயன்படுத்தியிருக்கிறேன். வேறு எதற்கும் பயன்படுத்தவில்லை. நம்பவில்லை என்றால் பரிசோதிக்கலாம் என்றார் பாருங்களேன்... ஆண்மையற்றவன் மலடாக இருக்கிறவன்கூட ஆசை இல்லாமல் இருப்பதில்லை. நானே பலமுறை கோளாளாறு எதுவும் இருக்கலாம் பரிசோதனை செய்து பாருங்கள் என்று சொல்லியிருக்கிறேன் . பாத்துக்கலாம் என்று சொன்னாரே தவிர பரிசோதனை செய்தாரா என்று தெரியவில்லை. அவரை தனியாக உட்கார வைக்க வேண்டாம். அவருக்கு காது கேட்காது அருகில் உட்கார வைக்கலாம் என்றபடி  கை சைகையால் என்னை அழைத்து அருகில் வந்து அமரும்படி செய்தார். புதிய காதலர்களும் வியப்புடன் பார்த்து அனுமதித்தனர்.

நிற்க.... காதலர்கள் சொன்ன சரடு கதைகள் என்பது  காதலர்களின் செனட்  சபையில் காதலர்கள் சொன்னவைதான் அந்தக் கதைகள் எனது பாணியில்  எழுதியவைகள்தான்.. படிப்பவர்களின் புரிதலுக்காக..................



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...