பக்கங்கள்

சனி 28 2013

99 சதவீத மக்களின் சாவை தீர்மாணிக்கும் மனிதக் கடவுள்கள்..................


கார்லோஸ் சிலிம், பில் கேட்ஸ்
மெக்சிக பெருமுதலாளி கார்லோஸ் சிலிம்மும், அமெரிக்க பெருமுதலாளி பில்கேட்சும் (படம் : நன்றி rt.com).


உலக மக்கள் தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லாத பெரும் கோடீஸ்வரர்களான இந்த மனிதக் கடவுள்கள்களே!!!.......... உலகத்திலுள்ள 99 சதவீத மக்களின் சாவுகளை தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள்.

இந்த 99 சதவீத மக்கள் என்ன சாப்பிடவேண்டும், எப்படி வாழ வேண்டும்,  என்ன செய்ய வேண்டும், எங்கே வெளிக்கு போக வேண்டும். எப்படி சாக வேண்டும். என்று அனைத்தையும் பிளான் போட்டு , இந்த கோடீஸ்வரர்களே !தீர்மானிக்கிறார்கள். அன்றி........தங்கத்தேரில் உலாவரும்  ,கற்சிலை கடவுளும் அல்ல..... மனக்கோட்டையில் குடி புகுந்துள்ள கற்பனைக் கடவுளும் அல்ல.

இந்தக் கோடீஸ்வர கடவுள்கள்கள் தங்களிடமுள்ள பணத்தை கஜனாவில் பூட்டி வைப்பதில்லை. கஞ்சிக்கு செத்தவர்களுக்கும் படியளப்பதுமில்லை. தவமிருந்து வேண்டும் பக்தனுக்கு  அவதாரம் எடுத்து அருள் பாவிப்பதுமில்லை

இந்த மனிதக்கடவுள்கள்ர்கள்  மட்டும். உலகில் அனைத்து சுகபோகங்களை அனுபவிப்பதற்கும்  பல அவதாரங்களையும் லீலைகளையும்  எடுப்பதற்கும் அனுபவிப்பதற்கும்  சக்தியும் உரிமையும் பெற்றுள்ளது

பெரிய மாளிகையில் வாழும் கடவுளர்களுக்கு. இந்த மாளிகை போதாதென்று சொந்தமாகவே தீவுகளை வாங்குறது. கப்பல்களிலும்,ஜெட் விமானிங்களிலும் பவனி வந்து குதுகாலிக்கிறது.

,ஏக்கம்,கவலை,இல்லாமை போன்ற எதற்கும் கவலை இல்லாமல் இந்தக் மனிதக் கடவுள்கள்,சாவு வரும்வரைக்கும் திருப்தியான சந்தோசத்தில் மிதக்கிறது.

 உலகத்தையே ஆளும் இப்பேர்ப்பட்ட   முதற்கடவுளர்கள்...........

பெரும்பாலும் நிதி மூலதன பெரு நகரங்களான நியூ யார்க் நகரங்களில் 99 சதவீதமும்,‘ஹாங்காங்கில் 75 சதவீதமும், மாஸ்கோவில் 74 சதவிதமும் லண்டனில் 67 சதவீதமும் .இந்த மனிதக் கடவுள்கள் வசிக்கிறது.

 மேற்கண்ட இடங்களில் வாழும் ஒரு சதவீதம்கூட இல்லாத இந்தக் சனிப் பகவான்கள்தான் உலகத்திலுள்ள 99 சதவீத மக்களை  அவர்களுக்கு தெரியாத,புரியாத வண்ணம் ஆட்டி படைத்து வருகிறது..

நன்றி!! வினவு.

,




வெள்ளி 27 2013

மூக்காண்டியானவர் ஜீவானந்தமாக மாறிய கதை.......



திருவாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த பூதப்பாண்டி என்ற ஊரில் பொதுப்பணித்துறை உள்ள  பாசன துறையில் பணிபுரிந்த பட்டன் என்பவருக்கும் உமையம்மையான என்ற பட்டன் மனைவிக்கும்
மூன்றாவதாக பிறந்ததினால் மத நம்பிக்கையில் மூக்காண்டி என்று பெற்றோரால் பெயர் சூட்டப்பட்டார்.

“பரத்வாத்” ஆசிரமத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த காலத்தில்.
பெரியாரின் வர்ணாசிரம போராட்டத்தால் வெளியேறிய மூக்காண்டி

சிறு வயல் செல்வந்தரான காசி விசுவநாதர் உதவியுடன் “காந்தி ஆசிரமம்” என்ற புதிய ஆசிரமத்தை உருவாக்கி,அதன் பொதுச் செயலராக செயல்பட்டு வந்த காலத்தில்தான்

“மூக்காண்டி ”என்ற தனது பெயரை “ஜீவானந்தம்” என்று பெயர் மாற்றிக் கொண்டார். தற்போது இந்திய வலதுகளின் தானைத்தலைவராக கொண்டாடப்படுகிறார்.

புதன் 25 2013

தேநீர் விற்றவர் பிரதமரானால்...நாட்டை விற்கமாட்டார் என்பதற்கு உத்திரவாதம் உண்டா.....??ஃ



veyilaan.com 




















நாட்டை விற்பவர்களை விட தேநீர் விற்பவர் மேல் என்றார் ஒரு கட்சி அறிவித்த பிரதம வேட்பாளர் ஒருவர்.

நாட்டை விற்றவர் யோக்கியதைகள் கொள்ளைக்கு முதலிடமும் கொலைக்கு அடுத்த இடமும் கொடுத்தவர்கள்

ஆனால், தேநீர் விற்றவர் யோக்கியதைகள் கொலைக்கு முதலிடமும், கொள்ளைக்கு அடுத்த இடமும் கொடுத்தவர்

தேநீர் விற்பவரின்  தொழில் யோக்கியதை என்னவென்று , தேநீர் குடித்த அநேகம் பேர்களுக்கு தெரியும். இருந்தாலும் என் அனுபவத்தை சொல்கிறேன்.

கொஞ்சுன்னு பால், நிறைய தண்ணி,  தேநீரில் அதிக தண்ணீர் இருப்பது தெரியாமல் இருப்பதற்க்காக தேயிலைத்தூள் கலந்த கலவை,இத்துடன்
சிறிது சீனி...........

ஒரு கிளாசில் கால்அளவே உள்ள தேநீரை...சர்ர்ர்......சர்ர்....ரென்று ஆற்றி  நுரையை பெருக்கி முழு கொள்ளவு கொண்ட தேநீரா...........ஆக்குவது.

இதோடு பார்சல் தேநீர் என்றால். சீனியை குறைத்து போடுவது...அல்லது போடாமல் விடுவது. கூடுதலாக சுடுதண்ணிரையும் தேயிலைத்தூள் கலவையை  ஊற்றுவது.

படி அரிசியில் முனி அரிசி சோமாறுவது மாதிரிதான் தேநீர் விற்பதும்.

இப்படி. தேநீர் விற்று கல்லாவை நிரப்பிய வியாபாரி. நாளை பிரதமரானால் கொஞ்சம் நஞ்சம் இருக்கிற நாட்டையும் விற்க மாட்டார் என்பதற்கு உத்திரவாதம் உண்டா..........???

தேநீர் விற்ற வியாபாரின் குணம்தான் மாறாமல் இருக்குமா.......???

உலக வங்கியில் பண்ணி மேச்ச  அதிகாரியே..........நாட்டை ஏலம் போட்டு விற்ற  வியாபாரியாக மாறிவிட்டபோது...............

வியாபாரி குணமுள்ள தேநீர் வியாபாரி, பிரதமராகி............வியாபாரத்தை வரிவுபடுத்த எண்ணி>  ஏற்கனவே உள்ள  முன்னால் உலக வங்கி வியாபாரியை முந்த வேண்டி அவனுக்கு நான் இளச்சவனா என்ற கோதாவில் இறங்கி..... நாட்டை கூவிக் கூவி விற்கமாட்டார்  என்பதற்கு உத்தரவாதம்தான் உண்டா.................???

குடிகாரன் பேச்சு........விடிந்தால் போச்சு என்பது மாதிரி, தேநீர் வியாபாரி தற்போது பேசிவரும் பேச்சு................. பிரதமராக ஆகி பிரதான வியாபாரியாக மாறிவிட்ட பிறகு முன்ன பேசிய பேச்சும் பின்னதில் இருக்குமா.......??
கானாமல் போகும்மா.............என்பதற்க்காவது உத்திரவாதம்தான் உண்டா.............???


செவ்வாய் 24 2013

தனுஷ்கோடிக்கு மேளம் கொட்டும் பத்திரிக்கை வியாபாரிகள்..........




பிரதமர் வேட்பாளரை, தேர்தல் வருவதற்கு ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே அறிவித்து கல்லா கட்ட முயலும் ஒரு கட்சியான பாரதீய கட்சியின்

தமிழக தலைவரான பொன்னான ராதாவின் கிருஷ்ணன் . விதைத்தா முளைக்காமலா போகும் என்ற ரீதியில்.

அடுத்த பிரதமர் மோடிதான் என்றும், கூடவே மோடி பிரதமரானால் இராமேஸ்ஸ்வரம் புனித தீவாக அறிவிக்கப்படும்.என்ற வாயோடு

மத்தியில் பா...ஜ ஆட்சிக்கு வந்தால்..தனுஷ்கோடிக்கு ரயில் விடப்படும்.மற்றும் நான்குவழிச்சாலை போக்குவரத்து வசதிகள் ஏற்ப்படுத்தப் படும் என்று அள்ளி வீசியவுடனே..................

தமில்நாட்டு செய்தி பத்திரிக்கை நிறுவன வியாபாரிகளெல்லாம் கனஜேராக சேர்ந்து “ 49 ஆண்டுகளாகியும் புதுப்பொழிவு பெறாத தனுஷ்கோடி” என்றும்

“நினைவலைகள்” என்றும்

“இரவில் சூழ்ந்த கொடுங்கதை” என்றும்  தங்களோட பத்திரிக்கையில கொ்ட்டோ கொட்டுன்னு  மேளம் கொட்டிட்டாங்க.........

ஏற்கனவே, சென்னை டூ செங்கோட்டை எக்ஸ்பிரஸ் தாயராக இருக்குது

 இதுல வேற செங்கோட்டை டூ தனுஷ்கோடின்னு எக்ஸ்பிரஸ் விடப் போறாங்க..............

மோட்சத்துக்கு போறவங்க எல்லாம் தயாரா இருங்கன்னு சொல்லாதது ஒன்னுதான்.

 

திங்கள் 23 2013

இப்போது காயம் சூரணம் மாத்திரைகளிலும் கிடைக்கும்.!!!!

ayurvedamaruthuvam.blogspot.com 













அமெரிக்காவை மடக்குவதற்கும்
 பிரச்சனை அடங்குவதற்கும்
சங்கீதாவை அடக்குவதற்கும்......
இப்போது காயம் சூரணம்
மாத்திரைகளிலும் கிடைக்கும்.

ஞாயிறு 22 2013

தூதர் தேவஆனி விவகாரத்தால்,ஜனநாயகமாக நடக்கும் முதல் நாடு அமெரிக்...காவா?இந்தி...யாவா?ஃ




உலகின் ஜனநாயக நாடுகளாக பீத்திக் கொள்ளும் அமெரிக்காவும் இந்தியாவும்

தூதர் தேவஆனி யின்   மறுபக்கம் எதுவாக இருந்தாலும்,
பணிப்பெண் சங்கீதா சிஐஏ எஜென்டாகவே இருந்தாலும்

உலகின் முதல் ஜனநாயக நாடான அமெரிக்கா, பணம்,பதவி,அந்தஸ்து,இனம் ஆகியவற்றுக்கு மசியாமல்,குற்றம் சாட்டப்பட்டவர் எம்மாம் பெரிய்ய்ய ஆளாக இருந்தாலும் தன் நாட்டு சட்டதிட்டபடிதான் நடவடிக்கை எடுக்கிறதா....???

உலகில் பெரிய்ய்ய்யா.....ஜனநாயக நாடான இந்தியா, பிரதமரே.........ஆனாலும், உச்சி குடுமி மன்ற நீதிபதியே ஆனாலும் கஞ்சிக்கு வழியில்லாமல் வாடி வதங்கி வீதியோரம் படுத்திருக்கும் பிச்சைக்காரனே ஆனாலும் “ சட்டத்தின் முன் அனைவரும் சமம.” என்ற தன் நாட்டு சட்டதிட்டபடிதான் நடவடிக்கை எடுக்கிறதா..........???

உலகில் முதல் ஜனநாயக நாடும்,பெரிய்ய்ய..ஜனநாயக நாடும, எந்தவித சுயலாப நோக்கமின்றி,பிளாக்மெயில் திட்டம் எதுவுமில்லாமல் உண்மையாக நேர்மையாக நடவடிக்கை எடுக்கும் முதல்நாடு அமெரிக்காவா???இந்தியாவா..?

முதலாளிகளின் ஜனநாயகத்தை உச்சானி கொம்பில் தூக்கி வைத்து உச்சா கொட்டி பஜனை பாடும் அறிஞர்களும்,வல்லுநர்களும்,தாசானு தாசர்களும் முதலாளிகளின் ஜனநாயகத்தை ஏற்றி போற்றி காக்கும் அத்துணை தூண்களும் பதில் சொல்லனும்  அமெரிக்காவா? இந்தியாவான்னு??

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...