பக்கங்கள்

சனி 28 2014

எல்லா கொடுமையும் இங்கு நடக்கும்..

கொள்ளைக்காரர்களே.....கொளளைக்கு எதிராக போராடுவார்கள்.

நாடு சுதந்திரம் பெற்றதாக சொல்பவர்கள்,  சட்டத்தையும் நீதியையும் மதிக்க வேண்டும் என்பார்கள். நடைமுறையில் அவர்களே மதிக்க மாட்டார்கள்.

எப்படின்னு கேட்பவர்களுக்கு ......

முன்னால் மத்தியஅரசை ஆண்டவர்கள், கொள்ளைக்காரர்கள் கொள்ளையடிக்க பாதுகாப்பாக இருந்து கொள்ளையடித்தவர்கள். எந்தெந்த வழிகளெல்லாம் இருக்கிறதோ? அத்துனை சந்து பொந்துகளிலும் நுழைந்து கொள்ளையடித்தவர்கள்.

இவர்களுக்கு பதிலாக அதாவது அடுத்த ரவுண்டுக்கு வந்த கொலைகாரர்கள் ஆட்சியில் ரயில் கட்டண உயர்வை எதிர்த்து. ரயில் மறியல் போராட்டம் செய்கிறார்கள். கொள்ளைக்காரர்கள் கொள்ளையை எதிர்த்து போராடுகிறார்கள்.

அதற்க்காக அடுத்த ரவண்டாக வந்துள்ள கொலைகாரர்கள் யோக்கிய சீகாமணிகள் அல்ல. அவர்கள் கொலைகாரர்கள் என்ற கூடுதல் திறமையோடு கொள்ளளைக்காரர்கள் வழியிலே கொள்ளையும் அடிப்பார்கள்.

மதுரை காமராஜர் பல்கலை துண்வேந்தரின் நியமனம் செல்லாது என்று தப்பித்தவறி, உண்மையாக நடுநிலையாக, அபூர்வமாக நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும்.  சட்டத்தையும் நீதியையும் மதிக்க மாட்டார்கள்.

சட்டத்தையும் நீதியையும் மதிக்கச் சொன்னவர்களே. மதிக்காதபோது, மற்றவர்களை மதிக்கச் சொல்லி ,பெரும்படையை குவித்து  தங்களின் அதிகாரத்தை நிலை நாட்டுவார்கள்.

இப்படிபட்ட நிலைமைதான் சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும்....

இத்தகைய நிலைமையை  தெரிந்த படித்தவர்களும் சரி,படிக்காதவர்களும் சரி இநதக் கொள்ளைக்காரனைவிட்டா...அந்த கொலைகாரன்., இந்த கொலைகாரனைவிட்டா.....அந்தக் கொள்ளைக்காரி..கொள்ளக்காரன்... மாற்றி மாற்றி ஓட்டுப் போடுவதையே, தங்களது ஜனநாயக உரிமைன்னு பீத்திக் கொள்கிறார்கள்.

இப்படி பீத்திக் கொள்பவர்கள்  ஓட்டு போடுவதை நிறுத்தி யோசிக்காதவரை இந்த நிலைமை தீரப்போவதில்லை..

அடுத்த  ஒரு கட்டத்தில் கொள்ளைக்காரர்களும்,கொலைகாரர்களும் சேர்ந்து  ஜனநாயக உரிமையான ஓட்டு போடுவதை அவர்களே! நிறுத்தி விடுவார்கள்.

அப்போது பீத்தவும் முடியாது..கத்தவும்முடியாது.. இப்படியான எல்லாக் கொடுமையும் இங்கு நடக்கும்.






வெள்ளி 27 2014

குஜராத்திக்காரருக்கு முன் தமிழ் பயின்ற முன்னோடி குஜராத்திக்காரர்.

மகாத்மா-காந்தி

56 இஞ்ச் மார்பு படைத்த குஜராத்தீ  வீரர்.. இந்தியாவின் பிரதமராக ஆவதற்கு முன் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு மாநிலமாக வோட்டு பிச்சை கேட்டு போகும்போது. “வணக்கம்” “நன்றி” என்ற சில வார்த்தைகளை அந்தந்த மாநில மொழிகளுக்கு ஏற்றவாறு செண்டிமெண்ட்  பேசி, பிச்சையிடும் மகா சனங்களின் நெஞ்சை “டச்” பண்ணிவிடுவார்.

இதே மாதிரி, தமிழ் நாட்டுக்கு வந்தபோது, வணக்கம், நன்றி என்று தமிழிலில் கூறி தமிழக மக்களின் நெஞ்சங்களை “டச்” பண்ணினார்.

 இந்த அய்யாவுக்கு முன், அம்மா ஆனவர், தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களை இவர்கள்  “டச்” பண்ணிவிடுவார்கள் என்ற   தன் அனுபவத்தால், தமிழக மக்களின் நெஞ்சங்களை வகுந்தெடுத்து
நெஞ்சே இல்லாமல் செய்து விட்டதால்.

அய்யாவின் நன்றி! வணக்கம். என்ற சென்டிமென்ட்- டச்- ஆக வில்லை என்று தேர்தல் முடிந்த பிறகே, அய்யாவுக்கு தெரிய வந்தது.

 பிரதமர் அய்யாவின் இந்த சென்டிமென்ட் உத்தியை, இவருக்கு முன்னே .இவரது மாநிலத்துக்காரர் ஒருவர். இந்த செண்டிமென்டை பயன் படுத்தியுள்ளார்.


அந்த குஜராத்திகாரரும். வயது போன  காலமான 78வது வயதில் தமிழ் மொழியை கற்க விறும்பினார். திருக்குறளின் மேன்மையை அறிவதற்க்காக தமிழ் மொழியை கற்க ஆசை இருப்பதாக விளம்பரபடுத்திக்கொண்டார்.

பிரதமர் அய்யா மாதிரி. வணக்கம். நன்றி என்று வாய்வழி சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் “ திக்கற்றவர்களுக்கு தெய்வமே துனை” என்று மட்டும் தமிழில் எழுதவும் கற்றுக்கொண்டார். குஜராத்திக்கார வீரர்க்கு முன்னோடியான குஜராத்திக்காரர்.





காரைக்குடி தத்துவத்தை திருத்தி எழுதிய பட்டுக்கோட்டை





வாழ்க்கையின் சிக்கல்களை கண்டு புலம்புவது,விரக்தி அடைவது, ஏங்குவது, கவலை கொள்வது இப்படியான தத்துவமாக எழுதி தள்ளிவிட்ட ஒரு கோப்பையில் குடியிருந்த காரைக்குடிக்கு

சமத்துவம், சமதர்மம் சூளுரை போன்ற தத்துவங்களில் பாடல் எழுத முடியவில்லை.

கம்பெடுத்து சண்டை போடும் வாத்தியாரின் படமான “நடோடி மன்னன்” திரைப்படத்தில் வரும் தூங்காதே....தம்பி....தூங்காதே..... முதலில் காரைக்குடி எழுதியபோது கரைக்குடியால் சமத்துவத்தை வைத்து எழுத முடியவில்லை. எழுதினாலும் சரியாக வரவில்லை.

பிற்பாடு,சமதர்மம்,சமத்துவத்தில் தூள் கிளப்பிய பட்டுக்கோட்டையை அழைத்து திருத்தி எழுதச் சொன்னார்கள். கரைக்குடி எழுதிய பாடலை திருத்தி எழுதிய பாடல்தான். இன்றுவரை...

வாத்தியாரின் எழவுக்கும் சரி, பொளந்த நாளுக்கும் சரி,பட்டுக்கோட்டையின்பாடலைப்போட்டு, வாத்தியாரை சமத்துவ நாயகன் என்று இன்றுவரைக்கும் பிலீம் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

நன்றி!! வசந்தம்.


வியாழன் 26 2014

மூக்கு கண்ணாடியை கண்டு பிடித்தவரை கண்டு பிடித்தவர்.!!!


படம்www.lastplace.com











சூரியனுக்கு எப்போதும் என்மேல் கோபம். அவரின் கோபத்திலிருந்து  கண்களை பாதுகாப்பதற்க்காக நான் வெளியில் போகும்போது பிரவுன் கலர் கூலிங்கிளாஸ் அணிந்து செல்வது வழக்கம்.

ஏன்? கருப்பு கண்ணாடி அணிய மாட்டீங்களா? என்று கேட்பவர்களுக்கு. எம்ஜீயார்,கருனாநிதி இவர்கள் மாதிரியானவர்களுக்கு கருப்பு கண்ணாடி  பட்டா போட்டு கொடுத்து இருப்பதால் நான் அணிவதில்லை என்று
சொல்லி விடுவதுண்டு.

நான் கண்ணாடி அணிவதை பிடிக்காத என் தெருவாசிகள் ஆண்பெண் இருவரும் பேதமில்லாமல் எனக்கு பின்னால் பொறணி பேசுவார்கள். அவர்கள் பேசுவது எனக்கு கேட்காததால்,  அவர்கள் வாய் அசைவதை பார்த்தும் பேசாமல் சென்று விடுவேன்.

அப்படி.ஒரு நாள் காலையில் சென்றபோது.  இரண்டு போலிகளின் கட்சிகளின் ஒன்றான இடது கட்சியில்  தோழராயிருந்து நண்பரான ஒருவர்.

என்னைக் கிண்டல் அடித்தார். “ இப்படி பெரிசுகளெல்லாம், கூலிங்கிளாஸ் போட்டுகிட்டு சிறுசுகளாக வேஷம் காட்டுறதலதான் இப்படி வெயில் காலையிலே கொளுத்துது என்றார்.

அய்யா, “என்னயிலிருந்து இடதுலிருந்து  கொய்யா கட்சிக்கு தாவுனிங்க என்றேன்.

நான் சொல்வதை புரியாமல் விழித்தார்.

யோவ்,  கொய்யா ராமதாஸ் கட்சிக்கு. எப்பய்யா போன என்றேன்.

நான் ஏன்? அந்த சாதி வெறி கட்சிக்கு போகப்போறேன் என்றார்.

பின்ன, அந்தாளு சொல்றதான, நீயும் சொல்ற .என்றேன்.

அந்த வெண்ண,சொல்ற மாதிரியா? இருக்கு என்றார்.

பின்ன. உன் கட்சி கொள்கை மாதிரி  பேசுறா...யாக்கும்   என்று கேட்டுவிட்டு நானே தொடர்ந்தேன்

ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கூலிங்கிளாஸ் போட்டுகிட்டு, அவுங்க சாதி பணக்கார பொண்ணுங்கள  காதல் என்ற பேருல மயக்குறாங்கேன்னு அந்த ஆளு சொன்னத.... நீ ஓங் கட்சி மாதிரி.. இந்த ஏரியாவுக்கு ஏத்த மாதிரி என்கிட்ட சொல்லு றீரு... என்றேன்.

ஹா......ஹா......ஹா.....ஹா............. என்று சிரித்தார்.

எதச் சொன்னாலும்.எப்படிச் சொன்னாலும் ஏதாவது ஒரு லொள்ளு--வ கண்டுபிடிச்சுரே...ய்யா என்றார்.

என்ன செய்யுறது. இந்த மர மண்ட கண்டுபிடிக்கிற மாதிரியில நீங்களும் சொல்லுறீக......

மண்ட தான் நறச்சு பொச்சு, அந்த மண்டக்கு டை அடிச்ச .. ஒன்ன பாக்குறவங்களுக்கு நீ இளவட்டமாக தெரிவே..... இந்த வயசிலேயும் மார்க்கண்டனாகவே இருக்க.......

யோவ். ஒன்ன மாதிரி ரெண்டு வீடு கட்டி, அந்த ரெண்டு வீடும் பாத்தாம வேலைக்கு வர்ரதுகளையும் சேத்துகிட்டு. லோ..லோ...லோன்னு அலஞ்சி கிட்டு இருந்தா  ...  நீயும் எப்படி என்ன  மாதிரி  இருப்பே.......

கல்யாணம் முடிக்காம...... தப்பு தண்டா...செய்யாமா  இருந்தா.... நீயும் மார்ககண்டன்தானய்யா என்று சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுது.


இந்த மார்கண்டனை பார்த்து பொறாமை படுறது யாரு தோழரே!! என்று 
கேட்டு  மூன்றாவதாக ஒருவர் வந்தார்.

அய்யா...சாமி நானு கிழக்கு பக்கமா போகையிலே,. வெயிலு என் மேல் பட்டு உங்களையேல்லாம் கண்ணை சுறுக்கி பார்க்காமல் இருப்பதற்க்காக காதுக்கு பின்புறமாக உள்ள கழுத்து வலியையும் தாங்கிக் கொண்டு கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து வந்தால்....

சாதி வெறி கட்சித்தலைவர் கொய்யாபழம் சொல்ற மாதிரி சொல்லி என்னை கிண்டல் செய்றாய்யா இந்தப் பெருசு எனறேன். வந்தவரிடம்.

நீங்கள் அணிந்து வந்த கண்ணாடியை கூலிங் கிளாஸ்னு சொன்ன பெருசுக்கு பல்லும்பொச்சு சொல்லும் போச்சு..... இப்போ கண்ணும் போச்சு... அதான் மூக்கு கண்ணாடிய கூலிங்கிளாசுன்னு சொல்லுது பெருசு என்றார் வந்தவர்..

இடது கட்சி நண்பர் சொன்னார். ஏ...ய். எனக்கு கண்ணு நல்லாத் தெரியும் ஒனக்குத்தான் தெரியல.... என்றார்.

ஆமாமா,....ஒமக்கு நல்லாத் தெரியும் , மூக்கு கண்ணாடிய போயி.. கூலிங்கிளாஸ் கண்ணாடியின்னு சொல்லியிருந்தபோதே தெரியும். 
என்றவர் ஒரு பீடியை பற்ற வைத்தார்.

சரிப்பா.... ஓம் பார்வைக்கு மூக்கு கண்ணாடின்னே வச்சுக்குவோம். இந்த மூக்கு கண்ணாடிய கண்டுபிடிச்சது யாரு? சொல்லு என்றார் நண்பர்.

அட,கொக்கா...மக்கா...சத்தியமா.. நான் கண்டுபிடிக்கலப்பா என்றார். புகையை விட்டபடி

நானும், பதிலுக்கு, மூக்கு கண்ணாடிய நீங்க கண்டு பிடிக்கலைன்னா... மூக்கு கண்ணாடின்னு உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டேன.

பீடியை இழுத்து புகையை விட்டபடி மேல பார்த்தபடி யோசித்தார். யாருன்னு கண்டுபிடித்தவராக, தன் சட்டைப்பையிலிருந்த நூறு ரூபாய் நோட்டை எடுத்து விரித்துப் பார்த்தார். பிறகு எங்களிடமும் காட்டினார்.

அதிலிருந்தவர் தன் மூக்கு கண்ணாடியுடன் தன் பல்லு இல்லாத பொக்கை வாயை காட்டி சிரித்தபடி இருந்தார்.

தோழரே, மூக்கு கண்ணாடி போட்டு இருப்பவரை, மூக்கு கண்ணாடிய கண்டு பிடித்தவாராக காட்டுறாரு... என்றார் நண்பர்.

ஆமாங்க,  சொல்றது சரிதாங்க!!! மூக்கு கண்ணாடி போட்டு இருப்பவங்க... தங்களுடைய பயன்பாடு முடிந்ததும் கழட்டி வச்சுருவாங்க.. ஆனா, ரூபா நோட்டல் இருப்பவரு, எப்பவாச்சும் மூக்கு கண்ணாடிய கழட்டி வச்சதை பாத்து இருக்கிங்களா??... நான்கூட வீட்டுக்கு போனதும் இவரு கண்டுபிடித்த மூக்கு கண்ணாடியை கழட்டி வச்சுருவேன்.... 

படத்து ல இருப்பவரு.... ரூபா நோட்ட இவரு மடுச்சு வைக்கும்போது, “ அய்யோ மூக்கு கண்ணாடி ஒடஞ்சபோகுமுன்னு பயந்து கழட்டி வச்சு இருக்காரா..என்றபோது..

ரெண்டு பேருமே.என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.

தோழரே, வெயிலு, உண்மையிலே..உங்க மண்டையை பொளந்திருச்சு, எதுவும் ஆகிவிடறதுக்குல்ல.. போற இடத்துக்கு போயிட்டு சீக்கிரமா வந்துடுங்க....  என்று எனக்கு விடை கொடுத்தார் நண்பர்.

 இப்போதாவது கண்ணாடி அணிவது புரிஞ்ச்சேன்னு சொல்லி நண்பரிடமும், மூக்கு கண்ணாடியை கண்டுபிடித்தவரை கண்டுபிடித்தவரிடமும் விடை பெற்று சிரிக்காமல் நடக்க ஆரம்பித்தேன்.















புதன் 25 2014

பத்து கேள்விகளும் பத்து பதிவர்களும்















என்னுடைய பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் தமிழ்ப்பதிவர் ஒருவர் என்னிடம் கேட்டார்.

வலிப்போக்கன். உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். அதோடு உங்கள் பதிவில் கருத்துரையிட்ட பதிவர்களின் பதிவுகளையும்  படித்து வருகிறேன்.

அப்படி படித்து வந்த பதிவுகளின் போது கில்லர்ஜீ பதிவுகளில் ”பத்து கேள்விகளும் பத்து பதிவர்களும்” பதிவை படித்தபோது, பத்து பதிவர்களில் உங்கள் தளத்தையும் குறிப்பிட்டு இருந்தார்.

நீங்களும், பத்து கேள்விகளும் பத்து பதிவர்களும்  தொடர் பதிவை நீங்களும் தொடர்வீர்கள் எதிர் பார்த்தேன் என்றும். நீங்கள்  ஏன்?தொடரவில்லை என்று என்னைக் கேட்டு இருந்தார்.

 நான் அவரிடம், நான் நிணைப்பதை. உள்ளது உள்ளபடி சொல்லவா? அல்லது சாந்து வச்சு, பூசி மொழுகி சொல்லவா? என்றபோது ..

நீங்கள் என்ன நிணைத்தீரோ... அதைத் சொல்லவும். உள்ளதை உள்ளபடி சொல்பவர் அல்லவா? அப்படியே சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன் என்றார்.

 அவருக்காக....நினைத்தது.... நிணைத்தபடி............


எனக்கு பத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லத் தெரியாது. யோசித்தால் அம்புட்டு சீக்கிரமாக வந்து தொலையாது.. அதனால...தாங்கள்  எனக்கு கேள்விதான் கேடகத் தெரியும் என்று நிணைக்கக்கூடாது. எனக்கு கேள்வியும் கேட்கத் தெரியாது.

ஏதாவது. ஒரு கேள்விய கேட்டு, அந்தக் கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரியலன்னு சொல்லி,என்னைய பதில சொல்லு என்று கேட்டால்.. பதில் தெரியாமல் நான்  திண்டாட வேண்டியிருக்கும். அதனால்தான் கேள்வியும் கேட்பதில்லை..

பதிவர் மதுரைத்தமிழனால் தொடங்கி வைக்கப்பட்ட, பத்து கேள்விகளும் பத்து பதிவர்களும் எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது.


அமெரிக்க வாழ் மக்களின் அமெரிக்க மொழியின் இணையதளத்தில் பதிவிடப்பட்ட பதிவை....மதுரைத் தமிழர், தற்போது அமெரிக்க வாழ்தமிழராகஇருப்பதால்..அங்கு படித்ததை, பார்த்ததை, தமிழ்படுத்தி. அவரின் படிப்பு திறனுக்கேற்ப சாந்து வச்சு,பூசி மொழுகி, தமிழர்களின் தமிழ் இணையதளத்தில்..................

பிள்ளையார் சுழி போட்டு, ”பத்து கேள்விகளும்.பத்து பதிவர்களும்” என்ற பதிவை பதிவிட்டு தொடங்கி வைத்துள்ளார்.

அந்தப் பதிவானது  , தமிழ்பதிவர்களால் தொடர் பதிவாக , “ஆம்வே”.எம்எல்எம், போன்ற ஜெயின்  மார்கெட்டிங் மாதிரி  போய்க்  கொண்டு   இருக்கிறது.

என் படிப்புக்கும் அறிவுக்கும்,  அது சாத்தியப்படாது... அதனால் நான் தொடரவில்லை...என்றேன். வலைசரத்தை பற்றி கேட்டபோது, இந்த ஒப்பீடு வலை சரத்துக்கு வராது என்றேன்.

இதற்குப்பிறகு அவர் பதிலேதும் சொல்லவில்லை..  கேள்வியும் கேட்கவில்லை.

அதனால்தான் கில்லர்ஜீக்குப் பிறகு, ”பத்து கேள்விகளும் பத்துபதிவர்களும்”பதிவை தொடரவில்லை என்பது அவர்க்கு புரிந்து இருக்கும் என்று நிணைக்கிறேன்.

எனக்கு.

வேலை இருக்கும் நாளெல்லாம் எனக்கு வேலை நாள்.
வேலை இல்லா நாட்களெல்லாம் விடுமுறை நாள்கள்.


செவ்வாய் 24 2014

சுவரொட்டி பிரச்சாரம்.--ஒரு அனுபவம்.




சற்று விடிந்துவிட்ட அதிகாலை  நேரம்  சாலையோரம் நடந்து கொண்டு இருந்த பொழுது.  சாலை ஓர  சுவற்றிலே ஒருவர் சர் சர் ரென்று.   போஸ்டர் ஓட்டிக்கொண்டு இருந்தார்.

போஸ்டரின் வாசகத்தை படித்தால்  அது “கொள்ளைக்கார தனியார் பள்ளிகளிலே சிறந்த கொள்ளக்கார பள்ளி எங்கள் பள்ளி” என்று  இருந்தது.

வாளியில் கரைக்கபட்ட பசையை பெரிய பிரஸ்ஸால் தொட்டு சுவற்றில்  பசையை தடவி பின் போஸ்டரை ஒட்டினார். அவரது கையில் பசை ஒட்டவில்லை. போஸ்டரை ஒட்டிய பின் அருகில் நின்று இருந்த ஹீரோ ஹோண்டா பைக்கில் பசை வாளியை தொங்கவிட்டு  அதில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ள  துணியில்  பேருக்கு கைகளை துடைத்துவிட்டுக் கொண்டு  வண்டியில்  சர்ரென்று கிளம்பிவிட்டார் அடுத்த இடத்தில் போஸ்டர் ஒட்டுவதற்கு............

இதைக்கண்டதும்  அட போஸடர் ஒட்டுவதற்கு கூட தொழில் நுட்பம் வளர்ந்திருப்பதை கண்டேன்.  முன்னோரு காலத்தில்  சைக்களிலே மாநகரம் முழுவதும் சென்று போஸ்டர் ஒட்டி ய நிணைவும். போஸ்டர் ஒட்டியதற்காக கைது செய்யப்பட்டு சிறை சென்ற நிணைவும் வந்தது.





http://www.vinavu.com/2009/12/04/eelam-rathi-8-ipkf/












இந்திய கொலைகார(அமைதி) படை, ஈழத்தில் சென்று தன் பராக்கிரமத்தை. தன் வல்லமையை ஈழத்து மக்களிடம் காட்டிக் கொண்டு இருந்த நேரம்.

அதை எதிர்த்து தமிழகத்து மக்கள் அலைகடலென திரண்டு இந்திய கொலைகாரப படையை எதிர்த்து  வீதிகளில் இறங்கி தங்களின்  எதிர்ப்பை தெரிவித்துக்  கொண்டு இருந்தனர்.

அப்போது தமிழகத்தில்  செயல் பட்டுக் கொண்டு இருந்த (மகஇக)மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி  போன்ற அதன் தோழமை அமைப்புகளும்  களத்தில் இறங்கி பரபரப்பாக செய்ல்பட்டுக் கொண்டு இருந்தது.

நகரமெங்கும் ஈழப் போராட்டத்தை ஆதரித்தும், இந்திய (அமைதி)கொலைகார படையை எதிர்த்தும் ஈழத்திலிருந்து  வாபஸ்வாங்க கோரியும் மகஇகவும் அதன் தோழமை அமைப்புகளும்  தாங்கள் செயல்பட்டுக் கொண்டு இருந்த நகரம் மற்றும் மாநகரமெங்கும்  போஸ்டர் இயக்கம் நடத்தியது.

கூலிக்கு ஒட்டுபவர்கள் கூட அந்த மாநகரமெங்கும் ஒட்டியிருக்க மாட்டார்கள் .அவர்களே வியக்கும் வண்ணம்,அவர்களைத்தாண்டி கண்ணில் படும் இடங்களில் எல்லாம் அமைதிப் படையை எதிர்த்த பிரச்சார  போஸ்டர் ஒட்டப்பட்டது.

போஸ்டர் ஒட்டும்போது ஒரு விதிமுறையுடன் ஒட்டப்பட்டது. இன்றைக்கு இருப்பது மாதிரி,விதிமீறி ஒட்டப்பட்டது கிடையாது

அதாவது, தலைவர்கள் என்று சொல்லப்பட்ட அவர்களின் சிலைகள் மீதோ தேசிய நெடுஞ்சாலை மற்றும் தெருக்களை குறித்து ஊண்டப்பட்டுள்ள  வழிகாட்டி போர்டுகளில் மீதோ, ஏற்கனவே, ஒட்டப்பட்டுள்ள.நிகழ்ச்சிகள் முடிந்திறாத போஸ்டர்களின் மீதோ, மாற்றுக் கொள்கை கொண்டவர்களின் போஸ்டர்கள் மீதோ, வெள்ளை அடித்து சுத்தமாக வைத்திருக்கும் சுவற்றின் மீதோ   சுவரெழுத்து எழுதப்பட்ட சுவரின் மீதோ    தவறியும் ஒட்டப்பட்டது கிடையாது.

அப்படிபட்ட  ஜனநாயக விதி முறைகளுடன் முதல்நாள் நகரமெங்கும் போஸ்டர் ஓட்டப்பட்டது. அப்படி  போஸ்டர்  ஒட்டியும்  திருப்தி ஏற்ப்படவில்லை. அவருக்கு. போஸ்டரும் அதிகமிருந்தது.

மாநகர பேருந்துகளில் போஸ்டர்   ஒட்டுவது வழக்கம். அதன்மூலம்தான் பட்டி.தொட்டிகளுக்கெல்லாம் சென்று சேரும் .முதல்நாள் நகரங்களில் ஒட்டும் வேலை முடிந்ததும். அன்று இரவோடு இரவாக பசை காய்ச்சி போஸ்டர்களை மடித்து ஒழுங்கு படுத்திக் கொண்டார்

இன்றைக்கு பசை பாக்கெட்டில் விற்பனை  செய்வது மாதிரி அன்றைக்கு இல்லை . பசையை காய்ச்சி கரைத்து எல்லாம் ரெடியாக்கி மணி பார்த்த போது மணி மூன்று ஆகியது. படுத்தால் அசதியில் தூங்கி விடுவோம் என்று நிணைத்த அவர். அந்த மாதத்தில் வந்திருந்த “புதிய கலாச்சாரம்“ இதழை  மணி ஆகும் வரை படித்திருந்து விட்டு மணி ஆகியதும் சைக்கிளைில் எடுத்துக் கொண்டு   அந்த நகரத்தின் மையப் பேருந்து நிலையத்துக்கு சென்றார்.

இன்றைய நாளில்  அழகை விரும்பும் அழகே இல்லாத அழகர்கள் “அரசு பேருந்துகளில் போஸடர் ஒட்டுவது ”தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது போல் அன்று இல்லை.

அன்று மாநகரப் பேருந்தில் போஸ்டர் விளம்பரம் செய்வது. அந்த மாநகர மக்களிடத்திலும்  அந்த மாநகரைச் சுற்றியுள்ள  கிராம மக்களிடத்திலும் அரசியலை கொண்டு சேர்க்கும் பிரதானமான சாதனமாக இருந்தது.

இன்றைக்கு இருக்கிற மாதிரி, சேர். ஆட்டோ, கால்டாகஸி, மினிபஸ் என்று எதுவும் கிடையாது. பெரும்பாலான போக்குவரத்து  சாதனமாக அரசு மாநகரப் பேருந்துதான் இருந்தது. நாசமாய் போன புன்னிவான்களால் கொண்டு வரப்பட்ட தனியார்மயம், தாரளமயத்தால் உலகமயத்தால் பொதுப் போக்குவரத்தை குறைத்து எல்லாத்தையும் தனியார் மயமாக்கி விட்டார்கள்.

இந்தப் புன்னியவான்களில் தனியார் மயத்தால்தால்தான்., ஒன்னுக்கு போனால் போஸ்டர், வெளிக்கு போனால் போஸ்டர் என்று எழவு எடுத்தெற்க்கெல்லாம் பேருந்தில் போஸ்டர் ஒட்டியதால்.

அவர்களை சாக்கிட்டு. மகஇக போன்ற அமைப்புகளின் பிரச்சார சாதனமான சுவரொட்டி பிரச்சாரத்தை  தடுக்கும் பொருட்டே அரசு பேருந்துகளில் போஸ்டர் ஒட்டுவதை தடுத்துவிட்டார்கள். சட்டமும் போட்டுவிட்டார்கள்.

இப்போது பஸ்களில் பாருங்கள்.  இந்த பேருந்தில் சுவரொட்டி ஒட்டுவது
தடை செய்யப்பட்டுள்ளது. மீறி ஒட்டினால் தண்டிக்கப்படுவீர்கள் என்ற வாசகம் இருக்கும்.   மீறி எழவு போஸ்டர்கள் ஒட்டும்  பெரிய தலைகள் தண்டிக்கப்படமாட்டார்கள் என்பது  அந்த போஸ்டர் ஒட்டுபவர்களுக்கு
நன்றாகவே தெரியும்.

மையப்பேருந்து நிலையத்தில் சென்ற பிறகு சைக்கிளை ”புதிய கலாச்சாரம்” பத்திரிக்கை போடும் ஒரு கடையில் ஓரமாக நிறுத்திவிட்டு மளமளவென்று போஸ்டரில் பசையை  போட்டு தனி ஒருவராக, நகரும் பஸ்களில் ஒட்ட ஆரம்பித்தார்.

மாற்று அமைப்புகளை சேர்ந்தவர்களும் இவரைப்போலவே,  இந்திய அமைதிப்படை பிரச்சினைக்காவே போஸ்டர் ஒட்டிக் கொண்டு இருந்தனர். அவர்கள் இருவர் மூவராக சேர்ந்து ஒட்டிக் கொண்டு இருந்தனர்.

கொஞ்சம் விடிந்த நேரத்தில் இவருக்கு ஆதரவாக ஒரு தோழர் வந்து சேர்ந்தார். இருவரும் சேர்ந்து   நின்று கொண்டு இருந்த பஸ்களிலும்  வெளியேறும் பஸ்களிலும் மாறி மாறி போஸ்டர்களை ஒட்டினர்.

ஒட்டிய போஸ்டருடன் வெளியேறிய பஸ்களினால் பிரச்சாரம் சூடு பிடித்தது. அதை மோப்பம் பிடித்து பொறுக்க முடியாத காங்கிரசு களவானிகளில் யாரோ ஒருத்தர் போலீசுக்கு போன் செய்து தூண்டிவிட....

போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டு இருந்தவர்களை தேடி , நாலு போலீஸ் நாலா புறமும் தேடி வந்தது.  உதவிக்கு வந்து  போஸ்டர் ஒட்டிக் கொண்டு இருந்த தோழரை போலீஸ் பிடித்தது.

போஸ்டருக்கு பசை போட்டுக் கொண்டு இருந்த இவர். அதனைக் கண்டதும் பசை வாளியுடன் ஓடிச் சென்று, நான்தான் போஸ்டர் ஒட்டியவன். நான் ஒட்டுவது புதிய கலாச்சாரம் என்ற பதிவுப்பெற்ற பத்திரிக்கையின் வால் போஸ்டர் அவர் எனக்கு உதவிக்காக வந்தவர்.
அவரை விட்டு விடுங்கள் என்றார்.

பசை வாளியுடனும். போஸ்டர்ருடனும்  இருப்பதை பார்த்ததும், அவரை அடிக்கடி பார்த்து இருப்பதால்  அவரிடம்,  அமைதிபடையை எதிர்த்து போஸ்டர் ஒட்டுவதாக   சங்கு ஊதி விட்டவர்களை பற்றிய விபரத்தை சொல்லியபடி போஸ்டரின வாசகத்தை பார்த்துவிட்டு  உதவிக்கு வந்த தோழரை  அந்த இடத்தை விட்டு போகச் சொன்னார்கள்.

இதைக்கண்டதும் ஒட்டிக் கொண்டு இருந்த மாற்று அமைப்பினர்களும் பின்வாங்கி விட்டனர்.

இவரையும் மாற்று அமைப்பினைச் சேர்ந்த இருவரையும்  சேர்த்து,அருகில் இருந்த ரிக்சாவில  ஏற்றிக் கொண்டு போலீஸ் நிலைத்திற்கு   கொண்டு  சென்றனர். அவரும் எல்லா போஸ்டர்களையும் ஒட்டிவிட்ட  வெற்றிக் களிப்பில் மிதந்தார்.

அன்று மதியம் அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டியதாக வழக்கு போடப்பட்டு  மாவட்டக் கோர்ட்டிக்கு கூட்டிச் சென்று   மாஜிஸதிரேட்
முன்  இழுத்து ஆஜர்படுத்தப்பட்டு பதிணைந்துநாள் காவலில் மத்திய சிறைச்சாலையில்  அடைக்கப்பட்டார்.








திங்கள் 23 2014

ஓர வஞ்சனைகள்...

படம் மாலைமலர்











அங்கு

மின் விசிறி இல்லா வீட்டீல்
படுத்திருந்த அவனிடம்
வியர்வையையும் புழுக்கத்தையும்
ஏற்படுத்தியது வெக்கை..

இங்கு

வீதியில் செல்பவர்கள் மேல்
புழுதியையும் குப்பைகளையும்
வாரி இறைத்து கொண்டு இருந்தது
காற்று..........

ஞாயிறு 22 2014

முத்தமிட்டதால் பொலிவிழந்த சமாதி...!!!


படம்tamil.boldsky.com














ஆஸ்கார் வைல்ட் என்ற  ஐரிஷ் எழுத்தாளர். ஒரு நாள் செத்து போனார்.

அவர் செத்து போன  பிறகு.அவருடைய ரசிகைகள் அவருடைய சமாதியில் முத்தமிடுவது வழக்கம்.

அப்படி.அந்த எழத்தாளரின். பெண் ரசிகைகள் சமாதியில் முத்தமிட்டதால். உதட்டில் பூசியிருக்கும் லிப்ஸ்க்டிக்கில் உள்ள ரசாயணப் பொருள்களால் அவரது சமாதி பொலிவிழுந்துவிட்டதாம்.


என்னங்கய்யா இது???

ஒரு பக்கம் ஒரு முத்ததுக்கு பத்து லட்சமுன்னு அறிவிக்குறாங்க....

இன்னொரு பக்கம் முத்தமிட்டதால் சமாதி பொலிவிழந்துவிட்டதுன்னு சொல்லுறாங்க.............


ஏட்டிக்கு..போட்டியாவுல..இருக்குது.

ஒரு முத்தத்துக்கு பத்து லட்சம்...!!!!

படம் மாலைமலர்











தொழிலுக்கு தேவையானால் முத்தம் கொடுப்பதில் தவறில்லை என்று,“ காற்று உள்ள போதே  தூற்றிக் கொள்ள முற்பட்டு தொழிலாள நடிகை புத்திசாலித்தனமான அறிவிப்பை வெளியிட.......

தொழில் வல்லூ நர்களான  இயக்கு..நர்களோ.. காற்றோடு காற்றாய் நம் கல்லாவையும் நிரப்பி விடலாம் என்ற பேராசையில் ,  தொழிலில் இரண்டு மூன்று இடங்களில் முத்தக்காட்சியை இணைத்து தேவை என்று .... அதி புத்திசாலித்தனத்தைக்காட்ட.........

தொழிலாள நடிகையின்  எம். டீ.யான ,தாய்க்குலமோ... ஒரு முத்தத்துக்கு பத்து லட்சம் என விலை நிர்ணயித்து தன் தொழிலின் மேதாவிதனத்தை நிருபிக்க

அதி புத்திசாலியான  இயக்கநர்களோ, “எங்களுக்கு பத்து லட்சம் தூசி மாதிரி”.. என்று ரசிகர்களுக்கு  படம்போட்டு காட்டினாலும், ரசிக சிகாமணிகளின்  மண்டைக்குள்ள அவ்வளவு சீக்கீரமா  ஏறிறும்.


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...