பக்கங்கள்

சனி 24 2016

சினிமா என்றாலே..ஏமாற்றுதாண்ணே.......

அண்ணே நீங்க
அன்பே..வா
என்ற படத்தை
பார்த்து இருக்கீங்களா..?

அந்தப் படம்
சிம்லாவில் போயி
எடுத்தது இல்லையாம்


ஊட்டியில் எடுத்து
விட்டு சிம்லாவில்
எடுத்ததாக காட்டி
ரசிக  மாமணிகளை
ஏமாத்திட்டாங்க அண்ணே..

என்னாது  எம்ஜியார்
சரோஜா தேவி
மூஞ்சியையே பார்த்ததால்
உங்களுக்கு ஊட்டியும்
சிம்லாவும் தெரியலையா

சரியாப் போச்சு
ஊட்டியை சேர்ந்தவுகளுக்கே
ஊட்டீயை தெரியல
இதுல உங்களுக்கும்
எனக்கும்   அந்த
 ரசிகர்களுக்கும் எப்படி
அண்ணே தெரியும்.

நீங்க சொல்வது
போல் சினிமா
என்றாலே ஏமாற்று
தான் அண்ணே....




வெள்ளி 23 2016

சேதி தெரியுமா.....????????

நடந்து சென்ற
என்னை எதிரே
வந்தவர் தடுத்தார்
தடுத்தவர் யாரென்று
நான் யோசிப்பதற்குள்
கடையில் உடகார்ந்து
ஒருவரை காட்டி
அவர் உங்களை
அழைத்தார் என்றார்.

கை சைகையால்
வா ..என்று
அழைத்தார்
கடைக்கார அண்ணன்

இருக்கையில் அமரச்
சொன்னவர் ஒரு
சேதி தெரியுமா..?
என்றார் என்ன
சேதி என்று
கேட்ட போது
இன்று பேப்பர்
பார்த்தாயா..என்று..

இல்லை என்று
தலையாட்டிய போது
தொலைக்காட்சி பார்த்தாயா..
என்றார் இல்லை
என்று சொன்ன
பதிலைக் கேட்டு
அப்படி என்னைய்யா
வேலை என்றார்

பிறகு அவரே
அந்தச் சேதியைச்
சொன்னார். நாகராஜனை
19வட்ட செயலராக
நியமித்த அவரோட
அம்மாவுக்கு நள்
இரவில் திடீர்
மூச்சு திணறல்
ஏற்பட்டு அப்பலோ
ஆசுபத்திரியில அவசர
பிரிவில் சேத்து
இருக்காங்க என்றார்.

வண்டியை விட்டிருமா
ஏற்கனவே நாசக்
காடாக இருக்கும்
தமிழ்நாடு இன்னும்
மோசக் காடாக
ஆயிறுமா என்று
 நான் கேட்ட
போது அவர்
சொல்ல முடியாது
எம்ஜியார் கதை
மாதிரி நடந்தாலும்
நடக்கலாம் என்றார்

அப்போ.. அடிமைகள்
கூடி இருப்பது
சோகமாக இருந்தது
உள்ளாச்சிக்கு அல்லாமல்
இதற்க்குத் தானா....
என்றேன் வியப்புடன்.

வியாழன் 22 2016

வைரத்தைவிட சிறந்தது அது....!!!!!!




உடைந்து சின்ன
துகள்காக சிதறி
விட்ட பாட்டிலை
ஒற்றி எடுக்க
மாடு வளர்க்கும்
மனோகர் வீட்டுக்கு
போன போதுதான்
தெரிந்தது. இன்றைய
இந்தீயாவில் கோஹினூர்
வைரத்தை விட
மதிப்பு  மிக்கதாம்
அது... எது
என்றால் அதுதான்
“மாட்டுச் சானம்”

செவ்வாய் 20 2016

மகனை மறந்து மறைந்த தாய்க்கு... முதலாவது நிணைவு தினம்..

என் தாய்
பிறந்த சில
வருடங்கள் கழித்து
என் தாயின்
தந்தை இறந்தார்.

என் தாய்
என் தந்தையை
மனம் புரிந்த
சில மாதங்களில்
என் தாயின்
தாய் மறைந்தார்

என் தாய்
என்னை இரண்டாவதாக
பெற்று எடுத்த
சில நாட்களில்
என் தந்தையை
அகால மரணத்துக்கு
பறி கொடுத்தார்.

இரண்டு குழந்தைகளுடன்
தன் கனவனை
பறி கொடுத்து
நிற்க கதியாய்
நின்றவரை பெண்டாள
சுற்றி சுற்றி
வந்தான் என்
தந்தையின் உடன்
பிறந்தான் ஒருவன்.

அழகும் அறிவும்
அற்ற என்
தாய் தான்
பெற்ற குழந்தையான
என்னைப் பார்த்தே
தைரியம் கொண்டு
பெண்டாள நிணைத்தவனை
 எதிர்த்து நின்றார்.

வெறி கொண்ட
அந்த காமுகனோ
தாயின் மடியில்
பால் குடித்துக்
கொண்டு இருந்த
என்னை இடைஞ்சலாக
கருதி காலால்
 மிதித்த  போது
குணிந்து கொண்டு
அவன் மிதித்த
மிதியை தன்
இடுப்பில் வாங்கி
என்னை காப்பாற்றியதால்
என் தாய்
வயதான காலத்தில்
குறுக்கு ஒடிந்து
கூனியாய் போனார்.

என் சின்னஞ்
சிறு வயதில்
காலையில் நான்
கண் முழிக்கும்
முன்பே என்னை
என் சகோதரியின்
பாதுகாப்பில கவனிப்பில்
விட்டு விட்டு
வேலைக்கு சென்று
விடும் தாய்

வேலை முடிந்து
இரவு வீடு
வந்து சேரும்
போது தூங்கி
விடும் என்னை
எழுப்பி மறுநாள்
தாயைக காணாமல்
வரும்  என்
அழுகைக்கு பரி
காரமாய் தான்
வாங்கி வந்த
தின் பண்டங்களை
தின்ன விட்டு
சாப்பிடாமல் படுத்து
விட்டதால சிறிது
உணவையும் உண்ண
விட்டு தொட்டிலில்
நான் தூங்கும்
வரை ஆட்டி
விட்டு பின்
தூங்கி எழுவார்
என்னை வளர்த்து
ஒரு ஆளாக
ஆக்கிய தாய்.க்கு

நான் பிறந்து
வளர்ந்து  எனது
ஐம்பது அய்ந்து
வயதுவரைக்கும்
என் தாய்க்கு
பாது காவலானாக
பாது காப்பாய்
என் தாய்
சொல்லுக்கு மறு
பேச்சு பேசாதாவனாய்
என் கடமையை
செய்து வந்தேன்.

 அப்படி பட்ட
என்னை முதுமை
அடைந்த என் தாய்
தன் பழைய
நிகழ்ச்சி நிரலின்
படியே தன்
மகளிடமும் மகளின்
மகள் மகன்களான
பேத்தி பேரன்களின்
கவனிப்பில பாதுகாப்பாய்
அவர்களுக்கு பாது
காவலாய் இருக்க
விட்டு விட்டு
தன் மகனை
மறந்து  திரும்ப
முடியாத நிலையில்
மறைந்து விட்டார்.
என்தாய்.

மகனை மறந்து
மறைந்த என்
தாய்க்கு இன்று
முதல் ஆண்டு
நிணைவு நாள்...


குறிப்பு- . என் தாய் என்னை மறந்து மறைந்த நாள் 20.09.2015.


IMG-20160825-WA0005.jpg ஐக் காண்பிக்கிறது
என் தாய்க்கு மகள்வழி பேத்திகள் தங்கள் நகைளை போட்டு அழகு பார்த்தபோது எடுத்த படம்




திங்கள் 19 2016

கொலைக்கும் தற்கொலைக்கும் ஒரு விளக்கம்...








தமிழர்களை கன்னடர்கள்
கொன்றாலோ அல்லது
கன்னடர்களை தமிழர்கள்
கொன்றாலோ அது
கொலை. கொலை..


மேல் வர்ணத்தார்
கீழ் வர்ணத்தாரை
கொன்று ஒழித்தாலோ

நாலு சுவர்கள்
இருக்கும் காவல்
நிலையத்திலோ அல்லது
சிறைச்சாலையிலோ ஒருவர்
பாதுகாப்பாக இருக்கும்
போது  அவர்
இறந்தால் அது
தற்ற் கொலை..தற்கொலை..

இதுதான் அன்றிலிருந்து
இன்று வரை உள்ளது

புரியாதவர்கள் தெரிந்ததவர்களை
கேட்டு தெரிந்து கொள்க...!!!

அறிந்தவர்கள் அறியாதவர்களை
அறிய.... வைக்க...!!!!


ஞாயிறு 18 2016

கடவுளின் கடவுளையே கொதிக்க வைத்த .....நான் மணி யார்.????

பல குறிப்புகளுடன்
தமிழர்களை  கீழ்த்தரமாக
தமிழ் இனத்தையே
சாடி இருக்கிறான்
ஒரு பொறுக்கி
ஒரு அயோக்கியன்
என்று எழுதியிருக்கிறார்
 பதிவர் பசி பரமசிவம்

கடவுளின் கடவுளான
பசி பரமசிவத்தை
பதிவிட  வைத்த
நான் மணி
என்பவர் யார்
தமிழர்க்கும் அவருக்கும்
எத்தனை நூற்று
ஆண்டு பகை...
என்று தெரியவில்லை.


தமிழர்கள் நாட்டு
சன நாயகத்தில்
நாம் எல்லோரும்
மன்னர் என்று
தென்னாட்டு காந்தி
சொன்னது போல

கல் தோன்றா
மண் தோன்றா
காலத்தே  முன்
தோன்றிய மூத்த
குடியான தமிழ்
குடியில் பிறந்த
மூத்த குடி
மக்களின் அந்த
நல்லவர்களின் நல்லவர்கள்
தமிழனை பற்றிய
அவதூறு பதிவுக்கு
மறுப்பு பதிவு
போட துப்பு
இல்லையோ... அல்லது
இயல  வில்லையோ...???
என்பதும் தெரியவில்லை....


கடவுளின் கடவுளையே!
தமிழ்மணத்தில் புகார்
கொடுக்க வைத்து
நடவடிக்கை இல்லை
என்று பசி
பரமசிவத்தை கொதிக்க
வைத்த நான்
 மணி என்பவர்
யாருப்பா..யாரு...???
நான் மணியே
நீ யாருன்னு
வந்து சொல்லுப்பா...

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...