பக்கங்கள்

சனி 18 2014

ஜோசியராக மாறிய அடிமை சித்தப்பன்..........

Sarathkumar Aismk LEADER-1.jpg
http://ta.wikipedia.org/s/bz2



நான் கூறியபடியே ஜாமீன் கிடைத்து விட்டது. மேல் முறையீட்டிலும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக வெகு விரைவில் பதவியில் அமருவார்.

விடாமல் துரத்தும் கோடாம் பாக்கத்து இளம் சிறுசுகள்..

நடிகை நயன்தாரா.jpg
படம்-http://ta.wikipedia.org/wiki/



காதலில் விழுந்து
காயம்பட்டு தடுமாறி
எழுந்த கதாநாயகியுடன்

ஜோடி சேர்ந்து
நடிக்க கோடாம்
பாக்கத்து இளம்
சிறுசுகள் விடாமல் 
துரத்துகள்........

வெள்ளி 17 2014

சும்மா..ஒன்னும் கொடுக்கலாடா.....ப்பா...

படம்--http://media.dinamani.com/2014/10/15/surya-vishal.jpg/article2479036.ece/alternates/w460/surya-vishal.jpg

 சார்............

ஆந்திர மாநில
ஹுட் ஹுட் புயல்
நிவாரண பனிகளுக்கு

ஆந்திர....தமிழ்
ஹீரோ...ஹீரோயின்ஸ்
இலட்சக் கணக்கிலே
வாரி கொடுத்து..
உதவுவது..பற்றி..

சும்மா..ஒன்னும்
கொடுக்கலடா...ப்பா..
வருமான வரி கணக்கில்
சலுகை பெற கொடுக்கறாங்கன்னு
நீங்க.......... சொல்லுவது

ஒரே கல்லில் ரெண்டு
மாங்காய்ய்டா.மாங்கா..
மடையான்னு சொன்னது

கஞ்சிக்கு செத்த எனக்கு
புரியவே...யில்ல..
சார்.............................

வியாழன் 16 2014

ரேசன் அரிசியை பொடைக்க சொளகு இல்லாமல் தவிக்கும் ராஜா மகள்..

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது -
ஏங்கண்ணா..............

செயற்கை கோளு ராக்கெட்ட
விண்ணில் செலுத்திகிட்டே
இருக்கீங்களே..............அதனால

கழிப்பறை இல்லாதவங்களுக்கு
கழிப்பறை கிடச்சிடும்மா........?

வேல இல்லாதவுகளுக்கெல்லாம்
வேல கிடச்சிடும்மா.........??

மாதம்  மும்மாரி  மழை
பொழிஞ்சு வெள்ளாமை
விளஞ்சு கஞ்சிக்கு
செத்தவர்க்ளுக்கெல்லாம்
நிம்மதியாக ஒரு வேள
கஞ்சியாவது கிடச்சிடும்மா  ??

ஏவின ராக்கெட்டு போல
ஏறின விலவாசி தொபக்கிடின்னு
எறங்கிடும்மா.......???

பறக்கும் செயற்கை கோளால
ஊழல் பேர்வழிகள களி
தின்ன வச்சு கம்பி
எண்ண வைக்க முடியும்மா..????

வெயிலுக்கும் மழைக்கும்
ஒதுங்க வழியில்லாம
தவிக்கிறவங்களுக்கு  ஒதுங்க
இடம் கிடச்சிரும்மா......?????

திண்டு கொழுத்து போயி
பேளுவதற்கு முடியாம
தவிக்கிறவங்க....  சிரமம்
இல்லாம  பேள முடியும்மா..?????

 ஏண்டா...................டேய்..

ராஜா மக..........
ரேசன்ல்ல வாங்கிய  புழுத்த
அரிசியை பொடைக்க சொளகு
இல்லாம இருக்குறது..உங்களுக்கு
தெரியுமாடா................ஙோங்கனிகளா....!!!!!!!!!!!!!!








எருமையின் தோல்வியும் கழுதைப்புலிகளின் வெற்றியும்...

புதன் 15 2014

இது சேவைப்படை...அது கூலிப்படை....




பணம் பொருள் போன்று
எவ்வித கைம்மாறு
பெறாமல் விருப்பு
வெறுப்பு கொள்ளாமல்
சாதி மதம் வேறுபாடு
பார்க்காமல் நடுநிலை
தவறாமல் தமது உழைப்பை
கொடுத்து வேலை செய்யும்
 படை இது சேவைப்படை............

மக்களின் வரிகளை
கொழுத்த கூலியாகப்
பெற்று அந்த மக்களுக்கு
விசுவாசமாக இல்லாமல்
தனிவகை சாதியாக
வளர்ந்து......நின்று
விருப்பு வெறுப்பு
கொண்டு சாதி மதம்
பேதம் பார்த்து
நடுநிலை தவறி
செய்கின்ற வேலைக்கு
விரோதமாக ஒரு
பக்கச் சார்பாக
அணிவகுத்து  சகல
அதிகாரங்களையும் பெற்று
அந்த அதிகாரத்தை நிலை
நாட்ட  வதைத்து
சித்ரவதை செய்து
அதற்கு எந்தவித
தண்டனையும் பெறாமல்
அணைவரையும் அச்சுறுத்தி
பெரும் படையாக
காட்சி தரும்
படை அது கூலிப்படை............




செவ்வாய் 14 2014

தேவையின் போது ...கிடைக்காததினால் வேண்டாமுன்னு சொன்ன தம்பி...



படம்--sinthanaiillathavan.blogspot.com

ஏப்பா.........தம்பி...

என்னா.......ண்ணே.....

நா.... ஒன்னு கேட்டா..
தப்பா நெணைக்க மாட்டியே...

என்னான்னு கேளுங்கண்ணே
தப்பா.... சரியான்னு பிறகு
நெணைக்கிறேன்.....ணே..

அது..... வேற ஒன்னுமில்ல தம்பி
ஒன்ன...பத்திதான்...தம்பி..........

என்னப்பத்தியா......அது
என்னான்னு... சொல்லுங்கண்ணே.

ஒனக்கு வயசு இம்பட்டு ஆகியும்
நீ கலியாணம் கிளியாணம்
முடிக்காமே இருக்கீயே........ஏந் தம்பி...

அதுவா..............ண்ணே
அது வேற ஒன்னுமில்லண்ணே
எனக்கு தேவைப் படும்போது
எதுவுமே கிடைக்கலண்ணே....அதனால
தேவைப்படும்போதே கிடைக்கலையே
அது இனி என்னாத்துக்குன்னு
விட்டுட்டேண்ணே...................

அட...என்னப்பா.....இது
அநியாயமா..... இருக்கு
எல்லாருக்கும் எல்லாதும்
தேவைப்படும்  போதா
கிடச்சிருக்கு...........

எல்லாருக்கும் எல்லாமும்
தேவைப்படுற நேரத்தில்
கிடைக்கட்டும் என்றுதாண்ணே
வேண்டாமுன்னு விட்டுட்டேன்

அட......போ்ப்பா...பெரியாரே!!
அறுபது வயசுல கலியாணம்
முடிச்சாரு... அது தெரியுமுல....

அவருக்கு தேவைப்படும்போது
கிடைத்தது அதனால் முடித்தாரு..
அதையே காரணம் காட்டி ...அவளோ
படி தாண்டா பத்தினியுமல்ல..நானோ
முற்றும் துறந்த முனிவருமல்ல..என்று
சொன்ன் பொழப்பு வாதியின் பிதாமகன்
 ஒருவர்.....வாந்தாரு... அது தெரியுமுல்ல

அது அதுக்கு ஒரு காரணம்
வச்சுயிருக்கியே.....தம்பி.....



திங்கள் 13 2014

ஒரு அனுவும் அசையவில்லையடி ஆத்தா.....



ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்: வரும் 17-ந் தேதி விசாரணை
படம்-http://mmimages.maalaimalar.com/Articles/2014/Oct/6b0e29f8-05f3-43e4-a1c1-841e8e030aba_S_secvpf.gif

பால்குடமென்ன........
விசேச பூசையென்ன............
மண்சோறு உண்டதென்ன
உன்னாவிரதம் இருந்ததென்ன
ஆயிரத்தாறு மொடடையென்ன
கடையடப்பென்ன..செய்த
அராஜகமென்ன- உருட்டலென்ன
மிரட்டலென்ன- திட்டிய வசவுகளென்ன

அடி ஆத்தா....நீ விடுதலை ஆக
வேண்டி பல தீங்கு இங்கு
நாங்க செய்தாலும் ஒரு
அனுவும் அசையவில்லையடி
ஆத்தா...........................

ஒரு ரூபா சம்பளத்தில்
அறுபத்தாறு கோடியே அறு
பத்தாறு லட்சம் நீ சம்பாதித்தாலும்

நிரந்தர முதலமைச்சர் நீதானென்று
எச்சில் ஒழுக நாங்க கூப்பாடு
போ்ட்டாலும்...................

உழலுக்கு பின்னே.......நீ
ரெண்டு முறை முதல்வராக
அமர்ந்திருந்த பாவத்தை விட
விகட கவியாய் பதினெட்டு
வருசமாய் நீதி அரசரயையே
நீ......     இழுத்தடித்த பாவம்
தாண்டி......ஆத்தா.....

நீ விடுதலை ஆக தடையாய்
இருக்குதடி.. ஆத்தா................

தெய்வம் நின்று கொல்லும்
(நீதி)அரசர் அன்றே கொல்வாரடி
ஆத்தா.................அதனால்தான்
 உன் மனு விசாரனையை
பதினேழுக்கு மா்ற்றி விட்டாரடி
ஆத்தா.......................

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...