பக்கங்கள்

சனி 11 2012

வல்லரசு இந்தியாவில் தொடரும் ஆதிக்கச் சாதியின் கொடுங்கோன்மை...

சாதி-வெறி

கோவை மாவட்டம் பூவலப்பருத்தி என்ற கிராமத்தில் இன்று்ம ஆதிக்கச்
சாதியினர் வசிக்கும் தெரு வழியாக செல்லும் தாழ்த்தப்பட்டோர் தமது
செருப்புகளை கையயில் தூக்கிக் கொண்டுதான் செல்கின்றனர்(படம்)

தமிழகத்தின் தெற்கு,மேற்கு மாவட்ட கிராமஙகளில் புதியவர்கள் மத்தியில்
காபி.டீயை பிளாஷ்டிக் கப்புகளில் வழங்கி வருவது மாதிரி வெளிப்பார்வைக்கு
போக்கு காட்டுவதும், உள்ளுர் தாழ்த்தபட்டவர்களுக்கு மேலோட்டமாக பார்த்தால் கண்ணுக்கு தெரியாதஅளவுக்கு  அடியில பெயிண்டால்  தடவப்
பட்ட கிளாஸ்களில் காபி.டீ தருவதும் நவீன வடிவ தொழில் நுட்பங்களில் இரட்டை டம்ளர் முறையும் சாதி வெறியும்  காந்தியின் வல்லரசு இந்தியாவில் இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

எவ்வளவுதான் நவீன உத்திகளால் போர்வை கொண்டு மூடினாலும்
 பாப்பாபட்டி,கீரிப்பட்டி,கொட்டக்காச்சியேந்தல் போன்ற கிராம ஊராட்சி
தேர்தல்களைப்போல வெளிச்சம் போட்டு  காட்டிவிடுகின்றன.

...............புதிய ஜனநாயகம் சூலை 2012 இதழிலிருந்து.......
.....

வெள்ளி 10 2012

இனமான தளபதியின் போர் முழக்கம்............


தமிழகத்து இன்னால
முதல்வர் ஆட்சிக்கு
வந்த காலந்தொட்டு
தமிழகத்து.............

முன்னால் அமைச்சர்களை
மாவட்ட செயலாளர்களை
கழத்தின் முன்னணியினரை
பொய் குற்றம் சாற்றி........

கொடுஞ்சிறையிலே தள்ளி
அடைத்து வந்தார்..............

எதிர்கட்சி தலைவரையும்
உடன்பிறவா தோழியின்
குடும்பத்தினரையும்........
பொய் வழக்கு போட்டு
அலைக்கழித்துவந்தார்

இனமான கட்சியின்
பொருளாரும் தமிழகத்து
தளபதியுமான என்மீதும்
கொடாநாட்டு உண்மையை
பேசியதால்................

பொய்யென்றும் களங்கம்
என்றும் போலீஸ்படையின்
கெத்திலேஅவதூறு ...........
வழக்கென்ற போர்............

தொடுத்துள்ளார் நீதிக்கு
 தலைவணங்கும் மனுநீதி
முதல்வர்.........................

அச்சுருத்தலுக்கும்,
மிரட்டலுக்கும்
பணிய மாட்டேன
இந்தப்போரை
நீதி மன்றத்தின் நிழலிலே
சந்திக்க தயார் தயார்
என போர் முழக்கமிட்டார்.
வீரத் தளபதி.................





வியாழன் 09 2012

வருத்தப்படாமல்......பாரம் சுமக்காதவர்கள்.......



தொழிழ் திறமையை விட, வரிஏய்ப்பு,அந்நிய செலவாணி மோசடி போன்ற
தகிடுதத்தங்களின் பெரும் உலக கோடிஸ்வரர்களாக உப்பி வரும் டாடா,
அம்பாணி போன்ற முதலாளிகள், முன்னால் இன்னால் கிரிமினல்கள்
ஓட்டுப்பெறுக்கும் தலைவர்கள் அரசாங்க பள்ளி, கல்லூரிகளில் பணியாற்
றும் சில ஆசிரியர்கள் பேராசிரியர்கள் போன்றவர்கள்தான் தனியார் பள்ளி
கல்லூரிகளை நடத்துகிறார்கள்.

தங்கள் கல்லூரிகளில் படிக்கும் ஒரு சிலருக்கு கேம்பஸ் இண்டர்வியூ
மூலம் வேலை கிடைப்பதை நூறு சதவீதமாக பொய்யாக வியம்பரம்
செய்து கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். இப்படி விதவிதமான மோசடி
களையும் அயோக்கிய தனங்களை செய்பவர்கள்தான்.கல்வி வள்ளல்களாக
 கல்வி தந்தைகளாக தொழில் அதிபர்களாக வலம் வருகிறார்கள். வந்து
கொண்டும் இருக்கிறார்கள்.

உதவி. புமாஇமு தமிழ்நாடு...

புதன் 08 2012

மகா ...கவியின் புளுகு மூடை............



மகா கவியின் குரு நாதராக யாணைக்கால் வியாதி கொண்ட ஒரு சித்தர்
அவர் பெயர் கோவிந்தசாமி சித்தர்.

அந்த சித்தரின் சித்து விளையாட்டில் ஒன்றில் மகாகவியின் செத்தப்
போன தந்தையையும் தாயையும் நேராக காட்டியிருக்கிறார். அந்த சித்து
விளையாட்டின் அரிய அனுபவத்தை கண்ட மகாகவி தன் சுய சரிதையில்
இப்படி....எழுதியிருக்கிறார்...

பொன்னடியால் என மனையைப புனிதமாக்கப்
போந்தான் இம்முனி ஒருநாள் இறந்த எந்தை
தன்னுருவம் காட்டினான், பின்னே என்னைத்
தரணிமிசைப் பெற்றவளின் வடிவம் உற்றான்
அன்னவன் மாயோகி என்றும் பரமஞானத்து
அனுபூதி உடையன் என்றும் அறிந்து கொண்டேன்
 மன்னவனைக் குரு வென நான் சரணடைந்தேன்

 அற்புத சித்துக்களை நடத்திய கோவிந்தசாமி சித்தருக்கு தன் யாணைக்கால்
வியாதியை குணப்படுத்த தெரியவில்லையே!!! இதை அறியாத மகாகவி
சித்தரோடு சேர்ந்து தன் புளுகு மூடையையும் அவிழ்த்துவிட்டு இருக்கிறார்.

.........................................தினமணி இணைப்பிலிருந்து



செவ்வாய் 07 2012

துரோகியின் துரோகத்தை புரிந்து கொண்ட தேசப்பக்தர்...

1922ஆண்டு  சௌரிசௌராவில் மகத்தான தேச பக்த ஊர்வலம் சென்று கொண்டு இருந்தது. அந்த ஊர்வலத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில்
பிரிட்டிஷ் இந்தியாவின் போலீஸ்படை கொடிய அடக்கு முறையை ஏவி
யது.அந்தக் கொடிய அடக்கு முறையை தாங்கமுடியாமல. கோபம் கொண்ட
மக்கள் அங்கிருந்த காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர்.

அந்தத் தீ யில் இருபத்திஇரண்டு போலீஸ்காரர்கள் இறந்துவிட்டனர். சௌரி
சௌரா ஊர்வலத்தில்  போலீஸ் ஏவிய அடக்கு முறையை கண்டிக்காத,
அடக்குமுறையால் இறந்த இந்திய மக்களுக்காக வருந்தாத பிர்லா
மாளிகை விசுவாசி தன் எஜமான விசுவாசத்துக்கு ஆதரவாக...........


சௌரி சௌரா மக்களின் போராட்டத்தைக் கண்டித்து தான் தொடங்கிய
சட்ட மறுப்பு  இயக்கத்தை வாபஸ் பெற்றார். ஒருதலை பட்சமான இந்தத்
தலைவரின் துரோகத்தனத்தைக் கண்டுதான..................

அந்நிய ஆட்சியை அகிம்சை முறையில் தூக்கி எறியமுடியாது என்றும்.
அகிம்சை முறையில் பெற்ற விடுதலையும் உண்மையான விடுதலையாக
இருக்காது என்றும் ஆயுந்தாங்கிய போராட்டத்தின் மூலமே.. அந்நிய
ஆட்சியை தூக்கி எறிந்து விடுதலைப் பெற முடியும் என்று பிரகடனம் செய்து
“நவ ஜவான் பாரத்சபா” என்ற இயக்கத்தை தொடங்கினார் பகத்சிங்............


நாத்திக சிங்கம் பகத்சிங் ..நூலிருந்து.......

திங்கள் 06 2012

செத்து போவதற்குகூட அதிர்ஷ்டமில்லாதவர்கள்...



முள்ளிவாய்க்கால் படுகொலையில் பலியானவர்கள் ஒரு வகையில்
அதிர்ஷ்டகாரர்கள். எந்த அவதியும் படாமல் ஒரேடியாய் போய் சேர்ந்து
விட்டார்கள் அதிலிருந்து தப்பித்தவர்கள் முள்வேலிக்குள் அடைபட்டு
நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறாரகள்

இந்தியாவுக்கு அதிலும் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள் 113 முகாம
களில் 19,916 குடும்பங்களைச்சேர்ந்த73.251 பேர் தஞ்சம் அடைந்திருப்பதாக
அரசு புள்ளி விபரம் ஒன்று கூறுகிறது.

முகாம் என்ற போர்வையில் மாட்டுக் கொட்டகையில் அடைப்பட்டு கிடக்
கிறார்கள் அகதிகள். கியூபிரிவு போலீசால் கண்காணிக்கப்படுகிறார்கள்
வெளியில் சென்றால் மாலை 6 மணிக்குள் பட்டிக்கு திரும்பி விட வேண்டும்
 வேறு மாட்டுக் கொட்டகையில் தங்கியுள்ள உறவினர்களை பார்க்கசென்றால்
வட்டாட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும். வேலை தேடி செல்வதற்கு
ஆயிரத்து தொண்ணூறு கட்டுப்பாடுகள. எதிர்த்தாலோ,கேள்வி கேட்டாலோ
புலிகள் முத்திரை. மாட்டுக் கொட்டகையில் பிறந்து வளர்நது பள்ளிப் படிப்பை
முடித்தவர்களுக்கு. படித்தது போதும் என்ற கணக்கில் கல்லூரியில் படிக்க
அனுமதி மறுப்பு..........

இப்படி எந்த உரிமையும் அங்கிகாரமும் இல்லாமல் கிடந்தவர்கள் கள்ளத்
தோனியில் முப்பது நாற்பது பேர் செல்லக்கூடிய ஒரு சின்ன படகில் 130 பேர்
நெருக்கியடித்து நின்றவாறு பதினைந்து நாள் பயணத்தில் உயிர் பிழைத்தால்
ஆஸதிரேலியா  இல்லையென்றால் ஜல சமாதி என்று முடிவோடு புறப்பட்ட
வர்களை தடுத்து 107 ஆண்கள்,19 பெண்கள் 25 குழந்தைகள் உள்பட 151
 பேர்களைகேரள(போலீஸ்) மக்களின் நண்பர்கள் பிடித்து தமிழகத்து மக்கள் நண்பர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஈழத்திற்கும் போகமுடியாமல்,தமிழ்நாட்டிலும் வாழமுடியமல், வேறு
நாட்டிற்கும் தப்பிச்செல்ல முடியாமல் செத்துப் போவதற்குகூட அதிர்ஷ்
டம் கெட்டவர்களாக தமிழகத்து முள்ளிவாய்க்காலில் அடைக்கபட்டவர்
களாக இருக்கிறார்கள்.


ஈழத்-தமிழ்-அகதிகள்

நன்றி!!!!!
http://www.vinavu.com/2012/07/05/puthiya-jananayakam-july-2012/

ஞாயிறு 05 2012

இது என்னா..........இது???????ஃ

ஏழு அடுக்கு கோபரம்
ஞாயிறு தொடங்கி சனி முடிய நாட்கள் ஏழு!
வாரத்தின்  மொத்த நாட்களும் ஏழு!!!!!!!
உலகத்தின் பழைய-புதிய அதிசியங்களும் ஏழு!!
சொல்லிக் கொள்கிற வானுலகங்களும் ஏழு!!!!!!
நரகத்திற்கு செல்லும் வழியும் ஏழு!!!!!
தேவன் என்பவர் ஆசீர்வதித்து பரிசத்தமாக்கிய நாளும் ஏழு!!!!!!!
உலகத்தின் பரப்பளவில் இந்தியாவின் இடம் ஏழு!!!!!!!!!
 நான் போட்டு இருக்கும் செருப்பின அளவும் ஏழு!!!
---------- அட என்னங்கப்பா இது ஏழு ஏழா வருது.இதிலேயும்
அண்டைநாட்டு சதியாக இருக்குமோ   அல்லது ஆங்கிலேயனின்
செய்வினையாக இருக்குமோ.................. ?????????????

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...