பக்கங்கள்

சனி 17 2016

“ வந்துட்டேன்னு சொல்லு.... திரும்பி வந்துட்னேன்னு சொல்லு

உறவினர் வீட்டு
துக்க நிகழ்வில்
கலந்து கொண்டு
மயானத்தில் நின்று
இருந்த போது...
அதோ..அதுதான்
நடிகர் வடிவேலு
வீடு என்று
பக்கத்தில் இருந்த
பங்களாவைக் காட்டிச்
சொன்னார்  உறவினர்

சென்ற தேர்தலுக்கு
முந்தின தேர்தலில்
தி.மு.காவுக்கு ஆதரவாக
பிரச்சாரம் செய்த
குற்றத்திற்க்காக தோண்டி
துறுவி பொது

வாய்க்காலை ஆக்கிரமித்து
சுற்றுச்சுவர் கட்டியதாக
அதிமுக அரசியால்
பொய் வழக்கு
புனைய பட்டதோடு
பட வாய்ப்பும்
இழந்த செய்தியும்
என் நிணைவில்
வந்து நின்றது

 மக்களை சிரிக்க
வைக்க தன்னை
இழிவு படுத்திக்
கொண்ட அந்த
நகைச்சுவை நடிகன்
வீர முழக்கத்துடன்....

“ வந்துட்டேன்னு சொல்லு....
திரும்பி வந்துட்னேன்னு
சொல்லு... எப்படி
போனேனோ அப்படியே
வந்திருக்கேன்னு சொல்லு”
என்று சொல்லி
 கலகல வென்று
கத்தி சண்டையில்
வந்து ..விட்டார்...



வியாழன் 15 2016

தென்னாட்டு காந்தீ ஜியின் தத்துவ முழக்கங்கள்......

தென்னாட்டு காந்தீ
யாரென்று உங்களுக்கு
தெரியாமல் இருக்க
வாய்ப்பு இல்லை..

அந்தத் தென்னாட்டு
காந்தி ஜியின்
தத்துவ முழக்கங்கள்
தங்களுக்கு தெரிந்து
இருக்கவும் வாய்ப்பு
இல்லை  தெரிந்து
இருந்தால் நிணைவுக்கும்
தெரியாமல் இருந்தால்
தெரிந்து கொள்வதற்குமாய்
அந்தப் பேர்
அறிஞரின்  தத்துவ
முழக்கங்கள் இது.

 ஒரு பானை
சோற்றுக்கு ஒரு
சோறு பதம்
போல கை
நாடி பிடித்து
உணர்ந்து கொள்வது
போல  சில

“ஒன்றே குலம்
ஒருவனே தேவன்”

“பிள்ளையாரை உடைக்க
மாட்டோம் அந்தப்
பிள்ளையாருக்கு தேங்காய்
உடைக்கவும் மாட்டோம்”

“ எங்களுக்கு கொள்கைதான்
வேட்டி பதவியோ
மேல் துண்டு”

“மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கும் மனம் உண்டு”

“நான் முற்றும்
துறந்த முனிவன்
அல்ல அவளோ
படி தாண்டா
பத்தினியும் அல்ல”

எப்படி..எப்படி.....?



எப்படின்னு கேள்வி
எல்லாம் கேட்கக்கூடாது

அவர்........

சிறந்த கவிஞர்
சிறந்த சிந்தனையாளர்
சிறந்த பேராசிரியர்
சிறந்த பேச்சாளர்
சிறந்த திறனாய்வாளர்
சிறந்த மனிதர்ன்னு

சொன்னா  வாய்
பொத்தி மெய்
பொத்தி கேட்கனும்


செவ்வாய் 13 2016

கொண்டவனும், கொண்டவளும் ............



........


கொண்டவன் சரியில்லை
என்றால்  கண்டவன்
எல்லாம் உரிமை
கொண்டு ஆடுவான்.

கொண்டவள் சரியில்லை
என்றால் கொண்டவன்
கண்ட பரதேசியிடம்
சென்று யாசிப்பான்...

 இங்கு கொண்டவனும்
சரியில்லை கொண்டவளும்
சரியில்லை என்பதே உண்மை.

திங்கள் 12 2016

குதிரை வேகமும்...ஆமை வேகமும்.......




ஜெயலலிதா  அரசின்
குதிரை வேக ஊழலும்
ஆமை வேக நிர்வாகமும்
தமிழ்நாட்டிற்கு கிடைத்த
ஆறாவது மிகப்
பெரிய சோதனை..



சோதனைகள் சாதனைகளாக
தொடர ஏழாவது
முறையும் ஆட்சிக்
கட்டிலில அமர
பயன் படட்டும்

கல்தோன்றா
மண் தோன்றா
முன் தோன்றிய
மூத்த குடியே
உன் புகழ்
ஓங்கி பரவட்டும்...............

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...