பக்கங்கள்

சனி 12 2014

காதல் கனவனின் நினைவில் தவித்த காதல் மனைவி!!

மவுலிவாக்கத்தில் 5-வது நாளாக தொடரும் மீட்புப் பணி| படம்.ம.பிரபு.
படம்.tamil.thehindu.com


சென்னைக்கு அருகில்
மவுலிவாக்கத்தில்
பதினோறு மாடி
ஒன்று சினிமாவில்
அடுக்கி வைத்த
மாதிரி நிசத்தில்
சரிந்து விழுந்தது.

அதில் அறுபத்தி ஒரு
பேர் பலி ஆனார்கள்
இடுபாடுகளில் சிக்கி
இறந்தவர்களின் உடலை
ஒவ்வொன்றாக மீட்டு
வந்தபோது................

புதிதாக மணமுடித்த
காதல் மணைவி
தன் காதல் கனவரை
பற்றிய நிணைவில்
தவித்தாள்.......
.

அவராக இருப்பாரோ
இல்லை இல்லை அவராக
இருக்க மாட்டார்.....
கண்டிப்பாக அவராக
இருக்க மாட்டார்.........

போகும்போது என்னிடம்
போய்விட்டு வருகிறேன்
என்றுதானே! பிரியமுடன்
சொல்லிச் சென்றார்.

அதனால்................
அது..அவராக இருக்க
மாட்டார்.நிச்சயமாக
அவராக இருக்க மாட்டார்.

எந்தப் பாவமும் செய்ததில்லை
எந்தத் துன்பமும் கொடுத்ததில்லை.
ஆகையினால் அது அவராக
இருக்க மாட்டார்............

இன்று சம்பள நாள்
வாங்கி வந்தவுடன்
கயிறாகதொங்கும்
மஞ்சள்  கயிற்றில்
நாலு கிராம் திரு
மாங்கல்யத்தை
சேர்த்தால் ஆயுள்
கெட்டி  என்றாரே.................

ஆகவே... அது..
அவராக  இருக்க மாட்டார்.

என்னைத்தான் உலகம்
என்று நம்பியிருந்தாரே!
அவரின் உலகமான
என்னை விட்டு சென்று
இருக்க மாட்டார்............

அதனால் அது...
அவராக இருக்க மாட்டார்.

வயிற்றிலே சுமந்திருக்கிற
அவரின் வாரிசையும்...அந்த
வாரிசை பெற்றெடுக்கும்
என்னையும்  அவரால்
பிரிந்து செல்ல முடியாது.

ஆகையினால் அது (பிணம்)
அவராக இருக்க மாட்டார்.


வெள்ளி 11 2014

நல்லவர்கள் வீட்டில் இருக்க வேண்டிய நல்லவர்களின் படங்கள்..

படம்.www.philosophyprabhakaran.com

உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் சந்தித்த  நண்பரின் அழைப்ப்பின் பேரில் அவரது வீட்டுக்கு சென்றார் நண்பர்.

நண்பரின் வீட்டுக்கு சென்றபோது நண்பரின் துணைவியார்,தன் வாரிசுகளான மகன்,மகள் மற்றும் குடும்பத்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.    நிலவும் சாதி வெறி  சமஸ்தானத்தில்  நண்பர் உயர் வகுப்பை  சேர்ந்தவராக இருந்தாலும்  ஏற்றத்தாழ்வுகள் பார்க்க மாட்டார். சம்பிராதயங்களை எதையும் மதிக்க மாட்டார்.

ஆரம்பத்தில் அவர் இடது கட்சியின்  பகத்சிங் படத்தை முன்னிலை படுத்திய வாலிபர் சங்கத்தில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றியவர். அதனால் மார்க்சிய பரிச்சயம் உள்ளவர். அதன் பயனாக  .சாதி மறுப்பு திருமணம்  செய்தவர்.

அந்த நேரங்களில்,  வீட்டுக்கு அழைத்து வந்துள்ள நண்பர் . இடதுகளுக்கு எதிர் முகமான பேனா கட்சியான மகஇக ஆதரவாளராக இருந்தவர். வெ்வவேறு முகாம்களில் இருந்தாலும் நண்பர்கள் என்ற முறையில் இருவரும் வாதங்களில் முட்டி மோதிக் கொள்வார்கள்.

கரசாரமாக விவாதம் செய்து கொண்ட போதிலும், நண்பரின் கட்சியில் உள்ளவர்கள். நண்பரிடம் பேச வேண்டாம் என்றும், உத்தரவு போட்டும் நண்பரிடம் பேசினால் போலீஸ்  தங்களையும் பிடித்துச் செல்லும் என்று பயமுறுத்திய போதும் நண்பர் பயப்படமால் நண்பரிடம் நட்பு பாராட்டியவர்.

நண்பரும் தன் நண்பரிடம் இடது கட்சியின் அரசியல் பித்தலாட்டத்தை விடாமல் அம்பலத்தியதால். நண்பர். வாலிபர் சங்கத்திலிருந்தும் இடது கட்சியின் செயல்பாட்டிலிருந்தும் முற்றாக விலகி விட்டார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பே இருவரும் நண்பராக இருந்தாலும் இடையில் அரசியலால் அவர்களுக்குள் எந்த பிணக்குகளும் இருந்ததில்லை.

நண்பரின் வீட்டில் நண்பரின் துணைவியார் வற்புறுத்தி சாப்பிட சொன்ன போது, நிகழ்ச்சியில் சாப்பிட்டதால் மறுத்துவிட்டு, நண்பரிடம் கூச்சத்தாலோ, ஒதுங்கும்போக்காலோ சாப்பிட மறுக்கவில்லை என்று தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.

நீண்டநாள் கழித்து சந்தித்தால், தங்களைப்பற்றியும், தங்களின் வாழ்வா தாரங்களைப் பற்றியும் தெரிவித்துக் கொண்டார். அரசியல் செயல் பாடுகளை பற்றியும்  பேசிக் கொண்டனர்.

சிறிது இடைவெளியில் நண்பரின் வீட்டை பார்த்தார்.. வீட்டின் சுவற்றின் பல தலைவர்களின் படங்கள் மாற்றப்பட்டு இருந்தன.அவற்றில் சில படங்கள் நண்பரின் சிநதனைக்கும் செயல்பாடுகளுக்கும், கொண்ட  கொள்கைகளுக்கும் விரோதமாக இருந்தன.

நண்பர் திரும்பி வந்தபோது சுவற்றில் மாற்றப்பட்டுள்ள படங்களை  குறித்து கேட்டார். நண்பரின் சிந்தனைக்கும் கொண்ட கொள்கைகுளக்கும் எந்த  வேறு பாடு இல்லாததால்........

சில தலைவர்களின் மக்கள் விரோத போக்கையும், தீண்டாமை கொடுமைகளுக்கு ஆதரவாக இருந்ததையும்  நண்பர்க்கு நிணைவுபடுத்தி, நல்லவர்கள்  வீட்டில் நல்லவர்களின் படங்கள்தான் இருக்க வேண்டும் என்றபோது. அவர்கள் எல்லோரும் நல்லவர்கள்தானே என்றார் நண்பர் அப்பாவியாக.....

 நண்பரின்  நண்பர் ஆதார சுத்தமான  விவாத்தாலும் தனக்கு தெரிந்த அரசியல்  நிலைப பாட்டாலும்,  காந்தி, நேரு, சுபாஸ்சந்திரபோஸ், சாதிவெறி குலதெய்வம், இடது கட்சியின் தலைவர் ஆகிய படங்களை  கழற்றி அபபுறப்படுத்த செய்துவிட்டார்.

மார்க்சும் ஏங்கெல்சும் சேர்ந்து இருந்த படம், லெனினும் ஸ்டாலினும் ஒன்றாக இருந்த படங்கள் ,பகத்சிங் ,ராஜகுரு,சுகதேவ் மூவரும் இருந்த படங்கள், மருது சகோதரர்களின் வரைந்த படங்கள்,அம்பேத்கார் படங்கள், பெரியார் படங்கள், முதலிய படங்களை நண்பரின் துனைகொண்டு துடைத்து புதுப் பொலிவுடன் மாட்டும்படி செய்துவிட்டார்.

அம்பேத்கர் படத்தை  சுவற்றில் மாட்டும் போது நண்பர் சற்று தயங்கினார். அம்பேத்கர் சாதிவெறி தலைவரில்லை,  அவர் எல்லா  ஒடுக்கப்பட்ட. அடக்கப்பட்ட மக்களுக்குமான தலைவர் , குற்ற பரம்பரை சட்டத்தை முதன்முதலில் நீக்கியவர் இவரே. அக்ராகாரத்து பெண்களான ,பார்ப்பன பெண்களுக்கு  முதன்முதலில் விடுதலை வாங்கித்தந்தவர். அம்பேத்கரே. அதற்க்கான ஆதாரங்களை குறிப்பிட்டு , மேலும் தகவலுக்கு வே. மதிமாறன் புத்தகத்தை வாங்கி படிக்குமாறு கூறியபோது, தயக்கம் தெளிந்தவராக, நல்லவர்களின் வரிசையில் அம்பேத்கா் படத்தையும் சேர்த்தார்.

சாதி மறுப்பு மணம் புரிந்த நண்பர். அரசியல் செயல்பாடு இல்லாவிட்டாலும் அரசியல் கோட்பாட்டு தத்துவங்களில் தொடர்ந்து ஈடுபாட்டுடன் இருக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறியபோது நண்பரை நண்பர் தட்டிக் கொடுத்து தன் பாராட்டுதலை தெரிவித்தார்.

 நண்பரின் துணைவியாருக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. பாதி படங்களுக்கு மேல் எடுத்துவிட்டதால் வீடு பார்ப்பதற்கு சுத்தமாக இருந்ததென்று.  நண்பர்க்கும்  திருப்தியாக இருந்தது..

நண்பர்  விடை பெறும்போது  நண்பரிடமும் அவரது துணைவியரிடமும் வலியுறுத்தி சொன்னார்.

 ஆசான்களின் படங்களையும் ,தலைவர்களின் படங்களையும் தப்பித்தவறி பூஜைக்குரிய தெய்வங்களாக மாற்றி விடாதீர்கள். அதாவது ஆசான்களில் படங்களில் சந்தனம்  தொளிப்பதோ, குங்குமம் பொட்டு வைப்பதோ, சாம்பிரானி புகை காட்டுவதோ கூடாது, கூடாது. கூடாது என்று.

நண்பர் உறுதியாகவும் நண்பரின் துணைவியார் வியப்பாகவும் இருந்து நண்பர்க்கு விடை கொடுத்தனர். அடுத்த முறை இந்தப்பக்கம் வரும்போது தங்கள் வீட்டுக்கு வந்து தங்களை சந்தித்துவிட்டு செல்கிறேன் என்று உறுதி கூறிவிட்டு ஆசான்களின் படங்களை ஒரு முறை பார்வையிட்டு   விடை பெற்றார் நண்பர்.

.


இவர்கள் எந்த ஊர் ஆ...ஆதிவாசிகள்.???


 இவர்கள் எந்த ஊர் ஆ.................ஆதிவாசிகள்.

படம் பார்த்து கதை விடுங்கள் அல்லது சொல்லுங்கள்..

வியாழன் 10 2014

சினிமா பாடலுக்கு கண்கலங்கியவர்கள்---சிறுகதை


படம.அன்பின்வாசல்.

நண்பர்கள் இருவர். பிழைப்புக்காக வெவ்வேறு ஊர்களில் இருந்தவர்கள். சொந்த ஊருக்கு வந்தவர்கள் சந்தித்துக் கொண்டார்கள்.தங்களுடைய சந்திப்பில் தங்களுடைய வாழ்நிலையைப்பற்றியும் குடும்ப நிலைகளைப் பற்றியும் பேசிக் கொண்டார்கள்.

தொடர்ந்த அவர்களது பேச்சில் தங்களின் பழைய நிணைவுகளையும் அசை போட்டனர். அந்த அசைவுகளில் சினிமா பக்கமும்,சினிமா பாடல்களைப் பற்றியும் அவர்களின் பேச்சு சென்றது.

நண்பர்கள் பேசிக் கொண்டு இருந்த பக்கம் வந்த ஒருவர். தன் வேலையின் ஊடே நண்பர்கள் பேசிக் கொண்டு இருந்ததை செவிமெடுத்து கேட்டுக் கொண்டு இருந்தார்.

சினிமா பாடலைப்பற்றிய பேச்சில்.இளையராஜாவின்இசையில் வந்த “கண்ணே கலைமானே” என்றபாடல், படம் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே தன் கண்களை கலங்க வைத்தாகவும் .

அந்தப் படத்தின் வரிகளையும், அந்த வரிகளுக்கு ஏற்றவாறு இசையும். அப்படத்தில் நடித்திருந்த கமலும் சிறிதேவியும் தங்களது நடிப்பால் அவரை கண் கலங்க வைத்தவிட்டார்கள் என்றார் ஒரு நண்பர்.

இதை ஆமோதித்தவராக அடுத்த நண்பர் . படத்தை பார்த்து கண் கலங்குவதைவிட பாடலை கேட்ட மாத்திரத்திலே தான்  கண்
கலங்கியதாக, “நானாக நானில்லை தாயே” என்ற பாடலைக்
குறிப்பிட்டார். மற்றொரு நண்பர்.

அவர்கள் இளையராஜா ரசிகர்களாக இருக்கவேண்டும் அல்லது கமல் ரசிகர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பர்கள் பேசிக் கொண்டு இருந்ததை கவனித்தவர்.

சிவ பூஜையில் கரடி நுழைந்த கதையாக... நீங்கள் கமல் ரசிகர்களா?  இளையராஜா ரசிகர்களா? என்று கேட்டுவிட்டார்.

அப்பொழுதுதான் இரு நண்பர்களுக்கும் தங்களின் பேச்சை அவர் கவனித்து கொண்டு வந்திருப்பதை அறிந்தார்கள்.

இருந்தும் அதற்க்காக நண்பர்கள் வெட்கப்படாமல்,“ நாங்கள் யாருடைய ரசிகர்களும் இல்லை. நாங்கள் பார்த்த படங்களில் உள்ள பாடல்கள் எப்படி எங்களை அறியாமல் கண் கலங்க வைத்துவிட்டதை  பேசிக் கொண்டு இருக்கிறோம் என்றுவிட்டு தங்களை பற்றி சிறிது அறிமுகம் செய்து கொண்டார்கள்.

அவரும் நண்பர்களிடம் தன்னைப்பற்றி அறிமுகம் செய்துவிட்டு, நண்பர்கள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.

அந்தக் காலத்து பாடல்களுக்கு நீங்கள் கண் கலங்குவது மாதிரி கண் கலங்க கூடாதன்னுதான் இந்தக் காலத்து படங்களின் பாடல்களில் குத்துப் பாட்டும் ஓவர் சத்தமும் புரியாத வார்த்தைகளும் கொண்ட பாடல்களாக வருகின்றன

 இப்ப வரும் பாடல்களும் காட்சிகளும்  ரசிக்கிற மாதிரியாக இருப்பதில்லை. அப்படியே ரசித்தாலும் இப்படிக நீங்கள் பேசிக் கொள்வது மாதிரியாக மனதில் ஒட்டவில்லை என்றும்

அப்படியே, இப்ப வந்த படங்களிலுள்ள பாடல்களில் உங்கள் மனதை தொட்ட பாடல்களை ஒன்று கூறுங்கள் என்றார்.

நண்பர்கள் இருவரும்  அவரின் வாதத்துக்கு மறுப்புரை எதுவும் கூறாமல் ஆமாம், நீங்கள் கூறுவது உண்மைதான் என்றனர்.இப்ப வரும் பாடல்கள் மன்தில் நிற்பதில்லை என்றனர்.

நண்பர்களான உங்களைப்போல் சினிமாவில் காட்டப்படும் துயரக் காட்சியையும்  துக்க   காட்சியையும்  அதனுடாக பாடப் படும் பாடலையும் கேட்டு கண் கலங்கியவர்கள். நிஜத்தில் நடக்கும் துக்க துயர காட்சிகளுக்கு கண் கலங்கி இருப்பார்களா...?? என்று கேட்டார்

நண்பர்கள் இருவரும் எதுவும் பேசாமல் மௌனமாக அவரையே பார்த்தார்கள்.

பின் அவரே தொடர்ந்தார். நிஜத்தில் மவுலிபாக்கத்தில் நடந்த 11மாடி இடிந்த விபத்தில் மடிந்துபோன 60 பேர்கள் பலியான காட்சிகளை கண்டும் கேட்டும் இருந்தவர்களில் எத்தனைபேர்கள், இறந்தவர்களின் உறவினர்களைத்தவிர நிஜத்தில் கண் கலங்கி இருப்பார்கள் சொல்லுங்கள் என்றார்.

மனசாட்சிபடி சொல்வதென்றால் இறந்தவர்களின் உறவினர்களைத் தவிர மற்ற யாரும் கண் கலங்கி இருக்க மாட்டார்கள். நாங்களும் பேப்பர்களை படித்தோம் தொலைக்காட்சிகளில் பார்த்தோம். ஆனால் எங்களின் பேச்சின் ஊடே மவுலிப்பாக்கம் சம்பவம் பற்றி பேச்சே வரவே இல்லை. நீங்கள் சுட்டிகாட்டிய பின்புதான் அந்த சம்பவத்தின் நிணைவே வருகிறது.என்றார்கள் நண்பர்கள் இருவரும்.

அவர்களும் வெளியூரில்  தங்கி வேலை பார்ப்பவர்களாக இருந்தார்கள் .

நண்பரிகளில் ஒருவர் கேட்டார்.ஏன்? இப்படி மறதி??? என்றார்.

மறதி மட்டும் இதற்கு காரணமல்ல.... சிந்தனையும் அப்படியாகத்தான் இருக்கிறது. குறிப்பாக சொல்வதென்றால் உங்கள் வாழ்நிலைதான் உங்கள் சிந்தனையை தீர்மானிக்கும் காரணியாக இருக்கிறது.

இப்படிபட்ட சிந்தனைக்கு வலு சேர்க்கும் விதமாகத்தான் இன்றைய அரசியலும், சமூக அமைப்பும் செயலாற்றுகின்றன. அதனால்தான்.

நீங்கள் மட்டுமல்ல, வறியவர்களும்கூடசினிமாவில் காட்டப்படும் துயரக் காட்சிகளையும் துக்கப்பாடல்களையும் கண்டு கண் கலங்குபவர்கள். நிஜத்தில் நடக்கும் காட்சிகளுக்கும் நடந்த நிகழ்வுகளுக்கும் கண் கலங்கவதில்லை. அதைப்பற்றி கவலைப்படுவதும் இல்லை.

செத்துப்போனவர்களின் உறவினர்கள்கூட பதினாறு நாட்கள் கழித்து நடக்கும் கருமாதி என்ற ஈமக்கிரியை வரைக்கும் தான் நிணைப்பார்கள்.அப்புறம் அவர்களும் இந்த மைய நீரோட்டத்தில் கலந்து விடுவார்கள். என்றுவிட்டு

அமைதியாக தன் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த நண்பர்களிடம், இடையில் நுழைந்து உங்கள் ரசனையை குலைத்துவிட்டதற்க்காக மன்னிப்பு கேட்டுவிட்டு , அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார். அவர்.

நண்பர்கள் இருவரும்  அவர் சென்ற திக்கை பார்த்தபடி,  தங்கள்  கண்களுக்கு அவர் உருவம்மறையும் வரைஅமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
.




புதன் 09 2014

மூன்றே நாட்களில் எழுதி முடித்த ஒரு நாவல்! (தொடர்ச்சி)

கானகன் நாவல் ஓவியம் cover
படம்iruthisuvaasam.com

மூன்றே நாட்களில் எழுதி முடித்த நாவல் பெயர் “கானகன்” இந்த நாவலைப் பற்றி நான் என்ன நிணைத்னோ அதில் ஒன்றிரண்டை, நாவலைப்பற்றிய அமர்வில் உறையாற்றியவர் கூறி விட்டார்.

அவர் பேசுவதற்கு முன்பே நான் நிணைத்தவிட்டதால் அதனையும் மற்ற சிலவற்றையும் கூறிவிட்டு  நான் தப்பித்துவிடலாம்.

பழிவாங்கும் தமிழ்படம் ஒன்றை பார்த்ததை  நிணைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கதாநாயகன் .அவனுடைய சிறுவயதில் தாயை கொன்ற வில்லனை
பழி வாங்கவேண்டும் என்ற சிந்தனையிலே  வளர்ந்து அல்லும்பகலுமாய் அலைந்து திரிந்து, வில்லனை கொல்வதற்கு சமயம் பார்த்து,வில்லனை பழி வாங்கியவுடன் கதை முடியும். இதே மாதிரியானமுடிவுதான், “கானகன்” நாவலின் முடிவாகத் தெரிகிறது. இந்த முடிவானது நாவலின் ஆசிரியர் திரைத்துறையில் இருப்பதால்..அதன் தாக்கத்தின் பாதிப்பாக இருக்கலாம்.

அய்ந்தறிவு படைத்தாக சொல்லப்படும் விலங்குகளுக்கு பழிக்குபழி வாங்கும் திறன் இருப்பதாக ஆசிரியர் சரவணக்குமார் உரையாடல் அரங்கில் கூறியபடி வேட்டையன் தங்கப்பனால் கொல்லப்பட்ட தாய்ப்புலியின் வாரிசான பாப்பா புலி வேட்டையன் தங்கப்பனைநிணைவில் வைத்திருந்து பழிவாங்கியதற்கு ஆதாரமாக“காடடுயீர்-கானகப் பாதுகாப்பாளர் லாரன்ஸ் அந்தோனி எழுதிய மூன்று புத்தகங்களையோ  அல்லது அவற்றில் ஒன்றையோ ஆதாரமாகக்கொண்டு இந்த நாவலை எழுதியிருப்பார் என்று எனக்கு தோன்றுகிறது.

இதற்கு மாறாக. நடப்பில்..சமூகத்தில் நிலவும் நிகழ்வுகளை பார்த்தால் அப்படி எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது.

சில உதாரணங்கள் . பாம்பு பால் குடிக்கும் என்று பால்   ஊற்றுகிறார்கள்.பாம்பு மகுடி இசைக்கு ஆடுவதாக கூறுவதும். கொட்டாச்சியை ஒதக்கி வைத்துக்கொண்டு பழி வாங்கின யானை கதைகள் மாதிரியான கதைகளை தமிழ் சினிமாவில் கண் காது எல்லா வைத்தும் காடடி இருக்கிறார்கள்.

ஆனால் உண்மை என்ன? பாம்பு பால் குடிக்காது. மகுடி இசை கேட்க பாம்புக்கு காது இருக்காது. இப்படியாக ஒவ்வொருத்தரும் தங்களின் வாழ்விடங்களில் நடந்த நிகழ்ந்த கதைகளை தொன்று தொட்டு  உப்பு,புளி, காரம் சேர்த்து சொல்வார்கள். இன்னும் தெளிவாகச் சொல்லனும் என்றால். இந்தியாவுக்கு காந்தி, அடிஉதை, மிதிபட்டு,  கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்- என்ற எதிர்த்து பேச  முடியாத  கதைகளைப் போல்தான்.

 மலைவாழ் மக்கள் -தாய் புலியை கொன்ற வேட்டையனை  ,பாப்பா புலி  பழிக்குப்பழியாக   கொன்றதாக  அவர்கள் ரசனைக்கு ஏற்றாற்போல்  கதை கூறியிருக்கிறார்கள்.

இந்த நாவலின் சிறப்பு.மலைவாழ் மக்களின் பேச்சு வழக்குகளை அப்படியே பதிவிட்டு இருப்பது.............முடிவாக.........

குறையைச் சொன்னால் சோர்ந்து விடுவார். நிறையைச் சொன்னால் மிதந்து விடுவார் ,

என்ற சமூக  நடப்பு நிகழ்வுகளினால் ” வலசை” உரையாடல் அரங்கில் வெளியிடப்பட்ட , லச்சுமி சரவணக்குமார்  “ மூன்றே நாட்களில் எழுதிமுடித்த நாவல்” ஆன “காரிகனை” படித்துப் பார்த்து தங்களின்கருத்துகளை பகிருங்கள்என்று கூறி. “கானகன்” நாவல் பற்றியஎனது புராணத்தை நிறுத்திக் கொண்டு தங்களின் பார்வையில் “கானகன்” புராணம்  எப்படி??? என்று எதிர் பார்க்கிறேன்.


மூன்றே நாட்களில் எழுதி முடித்த ஒரு நாவல்! ! !


படம் .பாலகுமார்.

கடந்த மூன்று நாட்களாக வேலை இல்லை.அதனால் தூக்கம் வரவில்லை. வேலை இருந்தாலும். வேலையை சீக்கிரம் முடிக்க வேண்டும்என்றஎண்ணத்திலும் தூக்கம் வருவதில்லை................

முன்னே போனால் கடி, பின்னே போனால் உதை,  அப்படி ஒரு நாளில் வேலை இல்லை. அன்று வழக்கம்போல் கூகுல் பிளஸில் நுழைந்து  செல்போனில் நோண்டிக் கொண்டு இருந்த பொழுதினில்..............

“வலசை” உரையாடல் அரங்கு, கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு. நாவல், கட்டுரை,  அனைவரும் வருக!! என்ற பதிவு கண்ணில் பட்டது.

அட.நாமளும் கதை.கவிதை.கட்டுரை எழுதுறோம்ல........ நம்மளையும்தான் வரச் சொல்லுறாங்க.......... என நினைத்து.....மறக்க கூடாது என்பதற்க்காக செல்போனில் அலாரம் வைத்துவிட்டு மீண்டும்  செல்லில் நோண்டுற வேலையை தொடர்ந்தேன்.


காலையில் மறந்திருந்த எனக்கு மறக்காமல்...அலாரம் அடித்து நிணைவு படுத்தியது எனது செல்போன்.........

பிரேம் நிவாஸ்ஹோட்டலை  அடைந்து வரவேற்பாளரிடம் வலசை  உரையாடல் அரங்கை பற்றி கேட்டபோது .ஆறாவது மாடிக்கு போகச் சொன்னார்.

அஆ.. என்று வாய் பொளக்காமல் படியைப் பார்த்து நின்ற போது, லிப்டில் போகச் சொன்னார். யாரவது உடன் வருவார்களா?? என்று சிறிது நேரம் எதிர்பார்த்து காத்து இருந்தேன். யாரும் வருவது மாதிரி தெரியவில்லை

எதுக்கு வம்புன்னு படியில் நடந்தேன். லிப்டில் தனியாக போகாதற்குக்கு காரணமும் இருக்கிறது. முன்னொரு காலத்தில், நான் மட்டும் தனியாக  ஒரு லிப்டில் பயணித்தபோது..திடீரென்று நின்றுவிட்டது.. நான் லிப்டில்  இருந்த நேரம் பார்த்து ஜெனரெட்டரும் எனக்கு எதிராக தன் வேலையைக் காட்டிவிட்டது.

லிப்டுக்குள்லிருந்து  சத்தம் கொடுத்து போது வெளியில் உள்ளவர்களுக்கு கேட்கவில்லை.இரண்டு மணி நேரம் உள்ளே தவியா்ய் தவித்த அனுபவத்தில்தான் லிப்டில் தனியாக செல்வதை தவிர்ப்பது .இரண்டு பேர் மூன்று பேர் சேர்ந்து சென்றால்... லிப்டில்  போவது என்று முடிவு அது ஒரு..தனிக்கதை.......

படியேறி உரையாடல்  அரங்கில் அமர்ந்தபோது கவிதை அமர்வு நடந்து கொண்டு இருந்தது எல்லோரும் தங்களின் தனித்திறமை வெளிக் காட்டிக் கொண்டு இருந்தனர்.

ஒவ்வொரு அமர்வைப்பற்றியும்  வருகை தந்தவர்கள்.  அவரவர்களின் வலைப்பூவில் தங்கள் திறமையைக் காட்டுவார்கள் என்பதால்.நான் எழுதுவது அவ்வளவு நல்லா இருக்காது .

கவிதை அமர்வு முடிந்து  அடுத்த அமர்வு தொடங்கும் இடைவேளையில் எனக்கு தெரிந்த முகங்கள் யாராவது இருக்கிறார்களா? என்று பார்த்தேன். என்னை யாரும் சுலபத்தில் கண்டுவிடலாம் இளவயதில் எப்படி தோற்றத்துடன் இருந்தேனோ அப்படியே இன்றும் உள்ளேன். என்னால்தான் மற்றவர்களை  உருவத்திலும் சரி குரலிலும் சரி ,கண்டுபிடிக்க முடியாது .

அப்படி எனக்கு ஒன்றிரண்டு பரிச்சயமான முகங்கள் தெரிந்தன. அதில் ஒரு முகம் என்னைப்பார்த்து புன்னகைத்தது. அந்த புன்னகைக்கு பதிலாக வணக்கம் செலுத்தினேன்.

மற்ற இரண்டு முகங்களோ என்னைக் கண்டுக்கிரவே இல்லை. அதனால் நானும் கண்டு கொள்ளவில்லை.

இரண்டாவது அமர்வு தொடங்குவதற்கு சற்று முன்தான் “ மூன்றே நாட்களில் எழுதி முடித்த நாவல்” லை கொடுத்தார்கள். விலையை பார்த்தபோது  இருநூறு என்று இருந்தது.

அணிந்துரை, மதிப்புரை,வாழ்த்துரை, ஆசிரியர் உரை மற்றும் நாவலின் கடைசி பக்கத்தையும் படித்துவிட்டு புத்தகத்தை கொடுத்துவிடலாம் என்று நிணைத்த நேரத்தில்  நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும்  நாவல் புத்தகம் கொடுக்கப்பட்டது.

உணவு இடைவேளையில் நிதி நிலைமையைச் சொல்லி நாவல் புத்தகத்தை திருப்பி கொடுத்துவிடலாம் என்று நிணைத்துக் கொண்டு உரையாடல்களை கவனித்துக் கொண்டு இருந்தேன்.

இரண்டாவது அமர்வு முடிந்து உணவு இடைவேளையும் விடப்பட்டது. முன்பு  நிணைத்ததுபோல் நாவலை படித்துவிட்டு நாவலை சேர்ப்பிக்க முயன்றபோது அந்த நாவல் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டதாக தெரிந்தது

அரங்கில் அமர்ந்து அந்த நாவலை படித்தபோதுதான் “மூன்றே நாட்களில் எழுதி முடித்த நாவால்” லின் காரண காரியங்களை அதன் ஆசிரியர் எழுதியிருந்தது  தெரிந்தது.

ஆகவே,.......... இத்துடன் எனது புராணத்தை முடித்துக் கொண்டு,  திரு.எஸ்.வி. ராஜதுரையுடன் அவர்களின் அணிந்துரையுடன்,   திரு.லச்சுமி சரவணக்குமார் அவர்கள் எழுதிய நாவலைப்பற்றிய புராணத்தை  எனக்கு தெரிந்ததை அடுத்தப்பதிவில் குறிப்பிடுகிறேன்.


திங்கள் 07 2014

பிரியாணி விருந்தைப்பற்றி இந்தியாவின் முன்னால் தலைநகரில் புத்தகம் வெளியிட்ட முன்னால் அதிகாரி..!!!

படம்www.maalaimalar.com

இந்திய பிரியாணி விருந்தைப்பற்றியும், மணமக்கள் இல்லா  திருமணம் பற்றியும் இந்தீயாவின் தேர்தல் ஆணையத்தின் முன்னால் தலைமை ஆணையர் எஸ்.ஓய். குரோஷி என்பவர் ,தான் எழுதிய புத்தகத்தை இந்தியாவின் முன்னால் தலைநகரமான இலண்டனில் வெளியீட்டுஇந்திய தேர்தலின் போது தான் கண்டுபிடித்த அரியபெரிய கருத்துகளை கூறி சிறப்புரை ஆற்றினார்.

இந்தியத் தேர்தலில் வாக்காளர்களை கவர.பிரியாணி விருந்து கொடுப்பது மணமக்கள் இல்லாமல் திருமணவிழா நடத்துவது போன்றவற்றின் மூலம் கருப்பு பணம் எப்படியெல்லாம் செலவிடப்படுகிறது என்று வெளிப்படுத்தினார்.

அய்ரோப்பாவின் அனைத்து நாட்டு வாக்காளர்களைவிட, இந்தியாவின் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் என்றும் அப்படி அதிகமான வாக்காளர்களை வாக்களிக்க வைப்பது  பெரிய சவால் என்றும்

அத்தகைய சவாலை மிகப்பெரிய ஜனநாயக முகமாக விளங்கும் இந்தியாவில் நிறைவேற்றுவதை பெருமையாக குறிப்பிட்டுள்ளார்

மேலும், இந்தியாவின் ஜனநாயகத் தேர்தல் கொண்டாட்டத்தை கொன்று விட்டதாக குற்றம் சாட்டப்பட்டதையும் சேர்த்து, தன் புத்தகத்தை படிப்பவர்களுக்கு அலுப்பு தட்டாமல்  இருக்க நகைச்சுவையுடன் எழுதியுள்ளதாக  தெளிவுபடுத்தினார்.

பிரியாணி விருந்து, மணமக்கள் இல்லா திருமணம் போன்றவற்றை நடத்தும் அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதையும் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் பிரச்சாரத்துக்கு , அரசாங்கமே செலவிடுவது தீர்வாக அமையாது என்றும், சட்டத்தை  கடுமையாக்கி தேர்தல் ஆணையம் எடுத்து வருவதையும் மேலும் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.


ஆக....முன்னால் தேர்தல் ஆணையரின் கருத்துப்படி, இனி வரும்காலங்களில்  சமீபத்தில் நடந்த தேர்தல்களை முன் மாதிரியாகக்கொண்டு   தேர்தல் நாளன்று அதாவது  ஓட்டு போடும் நாளன்று 144 தடை உத்தரவு போட்டு,    ஒரு பய வெளியே தல காட்டக்கூடாது என்பதற்க்காக கூடுதலாக ஊரடங்கு சட்டத்தையும்  இன்னும் இது போன்ற கடுமையான சட்டத்தை அமுல்படுத்தி.........

மணமக்கள் இல்லாமல் நடக்கும் திருமணத்தைப்போல, வாக்களார்கள் இல்லாமல், திறமையாக,நேர்மையாக  தேர்தலை நடத்தலாம் என்று   இந்தியாவின் முன்னால் தலைநகரில் இருந்து கொண்டு பச்சை கொடி காட்டியுள்ளார்.முன்னால் தலைமை தேர்தல் அதிகாரி.............................




ஞாயிறு 06 2014

பிரதமரானாலும் குற்றம் குற்றமே....!!!



ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவர்  நிஷந்த் வர்மா என்பவர். அகமகாபாத் நீதி மன்றத்தில்  கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் பிரமாதமான வேட்பாளர் மோடி2012 வருடம் சட்டசபை தேர்தலில் தனது வேட்பு மனுவில், திருமண விபரத்தை மறைத்துள்ளார்.இதன்படி, அவர் மீது போலி சாரும் தேர்தல் அதிகாரியும் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும். அதனால்  மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கானது கூடுதல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எம்.எம் ஷேக் முன்பு விசாரனைக்கு வந்தது.  விசாரனையில்

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பரிவு 125(ஏ) (3)ன்படி மோடி தனது வேட்பு மனுவில் திருமண தகவலை மறைத்தது குற்றமே.... இக் குற்றத்துக்காக மோடிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்க முடியும்.

ஆனால். அதே மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 125(ஏ) (3)ன் கீழ் வரும் வழக்குகள் சம்பவம் நிகழ்ந்து ஒரு வருடத்துக்கள் தொடர வேண்டும் ( (இப்போது மோடி பிரதமராகி விட்டபடியால்) பிரதமர் மோடி மீது வழக்கு பதிய உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்தார்.

இது குறித்து ஆம் ஆத்மி வர்மா கூறினார். மோடி குற்றம் செய்து இருக்கிறார் என்று நீதி மன்றமே கூறிவிட்டது . எனவே, உச்ச  நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என்றார்.

அந்த நீதி மன்றமும் பிரதமர் மோடி மீது வழக்கு பதிய உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்துவிடும்போது. என்ன செய்வார்.

 முதலமைச்சராக இருந்தபோது குஜராத் படுகொலை வழக்கிலே தண்டிக்க உத்தரவிடாத நீதிமன்றம்  பிரதமரான மோடி யை தண்டிக்க உத்தரவிடாது என்பது நன்றாக தெரிந்திருந்தும்.  இல்லாத மாண்பை காப்பதற்க்காக பிரதமரானாலும் குற்றம் குற்றமே என்று  கத்தி ஊளையிடுவார்....

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...