பக்கங்கள்

வெள்ளி 01 2011

பச்சைகட்டைவெந்தாலும் சாதி(தீண்டாமை)மட்டும் வேகுமா?

அண்டசோறுக்கு ஒருசோறு பதம். குக்கர் சோறுக்கு விசில்சத்தம் பதம்.
அது மாதிரி சாதித் தீண்டாமைக்கு சின்னபதம். கீழ்சாதியைச் சேர்ந்த ஒரு பணக்காரன் வீடு கட்டுறான்.  இவன் வீட்டு கட்டிட வேலைக்கு மேல்சாதியை சேர்ந்த இருவர்  வேலைசெய்கின்றனர். இருவரில்ஒருவன் கிருக்கன் (எப்படி வேலசெய்யுறான்னுதெரியல).

வேலை நடந்து கொண்டு இருக்கும்பொழுது ஒருவனுக்கு தண்ணீர் தாகம் கீழ்சாதிக்காரன் வீட்டில் குடியிருக்கும் மேல்சாதிக்காரி வீட்டில் தண்ணீர் கேட்டு வாங்கிகுடித்தான்.அந்த மேல்சாதிக்காரியோ இதுவரை ஆறு,ஏழு பேருக்கு வைப்பாட்டியாக இருந்து ஏழுபிள்ளையும் பெற்று உறவினர்களால் ஒதுக்கப்பட்டு வீடு கிடைக்காமல் மாநகரில் அரிசனசேரின்னு ஒதுக்கப்பட்ட தெருவில் வாடகைக்கு குடியிருந்து வருகிறாள்


ஒருவன் தண்ணி குடித்ததும் கிறுக்கனுக்கும் தண்ணி தாகம் எடுத்தது. “டேய், ,நீ எங்க தண்ணீ குடித்த-என்று அவனிடம் கேட்டான்.அதைக்கேட்ட வீடு கட்டுபவனின் மனைவி ,பிரிஸ்ஸிருந்து தண்ணி  பாக்கெட் எடுத்துதரவா?ன்னுகேட்க,அந்தலூசுப்பய, “வேண்டாம்னு சொல்லிபுட்டு”அந்த மேல் சாதிக்காரி கொடுத்த மண்டித்தண்ணிய மண்டினான். ஆடு, மாடு கூடத்தான் மண்டி தண்ணிய மண்டுது.அது சாதியா பாக்குது.

ஒரு லூசுப்பயகூட சாதித்தீண்டாமை பாக்குறான்னா!? செத்தபிறகு அவன் கட்டைவெந்தாலும், சாதீத்தீண்டாமை மட்டும் வேகுமா??

“உள்ளென்று வைத்து,புறமொன்று பேசாதீங்க.
“கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களா?
கெடாமல் இருந்தாலும் கீழ்மக்கள் கீழ் மக்களா?
---பதில் சொல்லுங்கள்- படித்தவர்களே!

புதன் 30 2011

சிறுதுளி பெருவெள்ளம்

அன்பார்ந்த வாக்காள பெருமக்களே!

வருகின்ற சட்டமன்ற தேர்தல்திருவிழாவில் எந்த கொள்ளைகாரனுக்கு, கொள்ளகாரிக்கு ஓட்டளிக்கப் போகிறீர்கள

“பழையன கழிதலும்,புதியன புகுதலும்”. மாதிரி பழைய சம்பவங்களை மறந்துவிட்டீர்களா?அல்லது பெருந்தன்மையுடன் ஒதுக்கிவிட்டீர்களா? அரசு அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினர் ஓட்டு போடாமல்இருக்க்கூடாது என்றதால் பயந்து விட்டீர்களா? 

 பலர் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி குழப்பிவிட்டதனால் குழம்பிவிட்டிர்களா? இல்ல எதையுமே கண்டுக்கிறாம நமக்கென்னனு ஒதுங்கியிருக்கீங்களா? இவை எதுமேயில்லாமல் மொத்தமா குடுகுடுப்பைகாரன நம்பி எதிர்பார்த்துகிட்டு இருக்கீங்களா?


நீங்கள் ஓட்டு போட்டாலும் போடாவிட்டாலும் ஆட்சி அதுபாட்டுகு நடந்துகிட்டுதான் இருக்கும்.தேர்தல்திருவிழா வந்தாலும் வராவிட்டாலும் ஆட்சி நடந்துகிட்டுதான் இருக்கும். விலைவாசிகள் மற்றும் எல்லாம் விஷம்போல ஏறிகிட்டுதான் இருக்கும்.

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாகுமா? ஓட்டுசீட்டு நமக்கு வாழ்க்கை தருமா? ஓட்டு போட்டால்மட்டும் விலைவாசி, பெட்ரோல்,கரண்ட்கட் போன்றவை  குறையுமா?

ஓட்டு போடாவிட்டால் ஊழல், இலஞசம், நாசம், அடக்குமுறை பெருகுமா? நீங்கள் ஓட்டு போட்டாலும், போடாவிட்டாலும், எந்தவிலையும், எந்த முறைகேடுகளும் குறையப்போவதில்லை.

நீங்கள் காசு வாங்கி ஓட்டுபோட்டாலும்,காசு வாங்காமல் நேர்மையாக ஓட்டுபோட்டாலும் தேர்தல்திருவிழா முடிந்தபின் வெற்றி பெற்றவரோ அல்லது தோற்றவரோ உங்களை கணவில்கூட நினைத்துப்பார்க்கமாட்டார். நினைத்தாலும் அவரால் ஒன்றும் செய்துவிடமுடியாது.

“சுயநலமே! தன்முன்னேற்றம்” என்ற இந்தக்காலத்தில் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.ஓட்டுரிமை பெற்றதலிருந்து. நீங்களும் மற்றவர்களும் ஓட்டு போட்டுருப்பீர்கள .உங்களுக்கோ, மற்றவர்களுக்கோ. இந்த நாட்டு ஏழை மக்களுக்கோ நிம்மதியாக கஞ்சி குடிப்பதறகு வழி கிடைத்திற்க்கா? 

பெற்ற சுதந்திரம் என்கிறார்களே.அந்த சுதந்திரத்தை ஓட்டுவாங்கிப்போன அமைச்சர்களாவது பாதுகாத்து இருக்கிறார்களா? அவர்கள் பாதுகாப்பது பெரும் முதலாளிகளையும், அந்நியர்களையுதான்

நீங்கள் போடும்ஓட்டால் வெற்றிபெற்றகட்சிக்கு சொத்து பெருகும் பேறும்புகழும் வளரும். தோற்ற கட்சிக்கு தோற்றதினால் சொத்தும்பேரும் புகழும் குறையாது.

நீங்கள் ஓட்டு போடாமல் இருந்துவிட்டால், அதற்காக ரோட்டில் பாலாறும் தேனாறும் ஓடாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.ஓட்டு போடாதினால் நீங்கள் சிந்திக்க தொடங்கியிருக்கிறீர்கள். கொள்ளையடிப்பவர்களுக்கும், ஊழல் பேர்வழிகளுக்கும் அங்கீகாரம் அளிக்கவில்லை ஆளுகின்றவர்கள் அவர்கள் இஷ்டத்துக்கு உலகவங்கியிடம் கடன் வாங்கி குவித்தால் நாம் பொறுப்பேற்க்கமுடியுமா? 

 நாம்மட்டும் நேர்மையாளராக இருந்தால் போதுமா? நம் சமுகத்தையும் நேர்மையுள்ளதாக மாற்ற வேண்டும். அதற்கு முதல் படிதான் (ஜயப்பாவின் 18படியல்ல) புறக்கணியுங்கள். ஓட்டு யாருக்கும் போடாதீர்கள.
“சிறுதுளி பெருவெள்ளம்”
-------------------------------------------------------------------
எங்கள்வணக்கம் எங்கள்வணக்கம்
ஓட்டுகேட்டு வராதவங்களுக்கு எங்கள்வணக்கம்
எங்கள்வணக்கம் எங்கள்வணக்கம்
ஓட்டு யாருக்கும் போடாதவர்களுக்கு எங்கள்வணக்கம்.
-நன்றி. மக்கள்கலைஇலக்கியகழகம். தமிழ்நாடு

ஞாயிறு 27 2011

இலட்சத்தில்.ஒருவன்

பெரியோர்களே,   இனையத்தில் வல்லவர்களே,
வருகையாளர்களே,
அனைவருக்கும் வணக்கம்.

இலட்சத்தில் ஒரு புள்ளியாய் வருகிறேன்.
நீங்கள் ஆதரவு தருவதும்,தராததும். 
என்னுடைய இடுகைகளை பொருத்தது 
என்பதை நானறிவேன். நன்றி.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...