பக்கங்கள்

சனி 21 2016

ஜனநாயகம் என்றால்........

அண்ணே..... தேர்தல் முடிவ பத்தி என்ன கருத்துண்ணே உலாவுது...??

ஜெயிச்சவங்க எல்லாம் ஜனநாயகம் வென்றது என்று சொல்றாங்க...தோத்தவங்க எல்லாம்..ஜனநாயகம் தோற்றது பணநாயகம் வென்றதுன்னு சொல்லித்திரிகிறாங்க  தம்பி...

 பணநாயகம் சரிண்ணே    ஜனநாயகம்ன்னா  என்னாண்ணே...?????

ஜனநாயகம்ன்னா.... அதுசரி  நீ ..ஓட்டு போட்டீயய்யா......

ஓ.....போட்டேன்ண்ணே..........

ஓட்டு போட்டேல்ல.... அது மாதிரி அஞ்சு வருசத்துக்கு ஒரு முறை ஓட்டு போடுவதுதான் தம்பி ஜனநாயகம்...

அஞ்சு வருசத்துக்கு ஒரு முறை ஓட்டு போடுவதுதான் ஜனநாயகம்மா...!!!! ரெம்ப நன்றிண்ணே.....

இதுக்கு எதுக்கு தம்பி..நன்றின்னு.....!!! ஜனநாயகத்த பற்றி சொல்லுவது எனது சன நாயக கடமையில்லையா....!!!

வியாழன் 19 2016

புகை போக்கியான வாயும் கறை படிந்த கையும்...

சலசலவென்று பேசிக்
கொண்டு இருக்கும்
அவர்கள் அருகில்
சென்றால் குப்பென்று
சாராய வாடை
வீசும் இத்துடன்
பாக்கு வெற்றிலையால்
காவி ஏறிய
பறகளுடன் வாயின்
இரு ஓரங்கள்
வெந்து  போயிருக்கும்
அதனுடன் பிரியாணி
பருக்கை ஒட்டிக்
கொணடு இருக்கும்
அந்த வாயில் 
இருந்து  புகை 
போக்கியில் புகைபோல
புகை வந்து
கொண்டு இருக்கும்
அந்த கூட்டத்தில்
இருக்கும் ஆண்களுடன் 
பெண்களின் கைகளையும்
பார்த்தால் ஓட்டுக்கு
இருநூறு ரூபாய்
வாங்கியதற்கு அடையாளமாக
விரல் நுனியில்
தேர்தல் மையின்
கறை இருக்கும்.
     

புதன் 18 2016

கறைபடாத கைக்கு சொந்தக்காரர்



கறைபடாத கைக்கு
சொந்தக்காரர் என்றால்
அவர்தான். அவர்
ஒட்டு போட்டதுக்கு
அடையாளமாக கையில்
கறையே  இல்லை

ஓட்டு போடாமல்
கையை கறை
ஆக்காத வரும்
கறைபடாத கைக்கு
சொந்தக் காரர்தான்.

செவ்வாய் 17 2016

அடிமைகள் அழைப்பதினால் அப்படி கூப்பிட முடியுமா...??

 தோழர்... இந்த்த் தேர்தலில் யார் வருவார்கள் தோழரே...

நான் ஜோசியன் இல்லையே...நண்பா...???

தாங்கள் அப்படிச் சொல்லக்கூடாது.. ஒவ்வொரு தேர்தலிலும் தாங்கள் கணிப்பு சரியாக இருக்கிறது. அதனால்தான் கேட்கிறேன் தோழரே...
சொல்லுங்கள்.

அப்படியா...? எனக்கு எதுவும் தெரியவில்லை நண்பரே...

அப்படி என்றால்.. கிளி ஜோஷ்யம் பார்க்கலாமா...???

தமிழ்நாட்டு தேர்தலைப்பற்றி கிளிக்கு என்ன தெரியும்...? கிளியிடம் கேட்பதைவிட... குடி(கார) மக்களிடம் கேட்கலாம் நண்பரே.....

நன்றி! தோழரே.. தங்களின் வழிகாட்டலின் படி...அதோ த்ள்ளாடி தள்ளாடி வரும் குடி மகனிடமிருந்து ஆரம்பிக்கிறேன் தோழரே...

வருக!....தமிழ் நாட்டின் குடி மகனே...! வருக!.. இவ்விடம் சற்று தள்ளாடாமல் நிற்க!  வரப்போகிற தேர்தலில் யாருக்கு ஒட்டு போட்டீங்க

வணக்கம்........ தலைவா... என்னாது  ...ஓ....ஓ....ஓட்டா.......அப்பிடீன்னா........ஹா....ஹா...ஹா..... ஓட்டா...... எனக்கு இல்லேன்னு சொல்லிட்டாங்கே.......

அப்படியா ...ஏன்? இல்ல  இருந்திச்சுனா.....யாருக்கு போடுவீங்க....... சார்

இருந்திச்சின்னா....... அய்யாவுக்குத்தான் போடுவேன்.....சார்..

என்னாது  அய்யாவுக்கா...!!!! அம்மா கட்சியின் வேட்டிய கட்டிக்கிட்டு... அய்யாவுக்கு போடுவேன்னு சொல்றீங்க.....ஏன்? இப்படி....!!!

ஷ்ஷ்......ஷ்.....ஷ்...... யாரு அம்மா...கண்டவக எல்லாம் என்னைப் பெற்ற அம்மா ஆக முடியுமா...??  என்ன சார்...  குடிச்சுட்டு உளருறேன்னு பாக்கீறீங்களா ..அந்த .அய்யாவ பாருங்க. கலைஞர், தலைவர்ன்னு பேரு வச்சுருக்கிறார்... அவர அப்பான்னு யாரும் கூப்பிட்டாங்களா..??அவர மாதிரி...இந்த புளச்சி தலைவி, கொளவி,கலைஞின்னு பேர வச்சுக்காம... அம்மா.நொம்மான்னு வச்சுகிட்டு, என்னபெற்று எடுத்து வளர்த்த  அம்மாவின் பெயரை கெடுக்குது...

..நீங்களெல்லாம் அப்படித்தானே கூப்பிடுறிங்க.......................

நானா...ஹா...ஹா...மத்தவுங்க எப்படியோ..??. அண்ணனுடன் ஜோடி சேர்ந்து நடித்தாலே..அண்ணினுதான் கூப்பிட்டேன்... தலைவரோட சேர்ந்தப்போ தலைவின்னுதான் கூப்பிட்டேன்.... அம்மான்னு கூப்பிடவேஇல்லை.. தலைவா..அம்மான்னு அடிமைகள் அழைப்பதினால் அப்படி கூப்பிட முடியுமா...??அம்மான்னு அடிமைகள் அழைப்பதினால் அப்படி நானும்  கூப்பிட முடியுமா...??
........................

ம்ம்...தோழரே..  என்னப் பாருங்க ..உங்களுக்கே  தெரியும்.என்னை குடிகாரனாஆக்கினது யாருன்னு!! நீங்களும் எத்தன தடவ எனக்கு அட்வைசு பன்னியிருப்பீங்க.. வயதான என் அம்மாவும் எத்தினி வாட்டி உங்க்கிட்ட என்னய திருத்தச் சொல்லி அழுதிருக்கும்..சாராய கடைய திறந்து என்னை நாசமாக்கியவர்கள் எப்படி  அம்மாவாக இருக்க முடியுமா..??? தோழரே

இப்போ...அம்மான்னா... அவரைத்தானே குறிக்கும்...ப்பா...

அதுக்காக அம்மான்னு கூப்பிட முடியுமா....!!!நான்  அந்தக் கட்சியில்இருந்தாலும்  அந்தக் கிழவியை அம்மான்னு கூப்பிட்தில்ல்லையே...
நிஜமாகவா.......

அட.. சார்.......பொய்யா சொல்றேன்

பின் என்னப்பா ..தோழர்தான் இத்தினவாட்டி அட்வைசு பன்னி இருக்காருல... அந்த சாராயத்தை  வாங்கி குடிக்கிறத...விட்டுட வேண்டியதானே...???

என்ன செய்யிறது குடிச்சுப் பழகிப்புட்டேன். விட முடியல.... ...தப்பிக்கவும் வழியில்ல கடைய அடச்சலவாது  என்னால குடிக்காம இருக்க முடியும் என்ற நப்பாசையிலதான் சொல்றேன்... கலைஞர்க்காவது போகப் போகிற கடைசி காலத்திலாவது..  அவருக்கு புன்னியம் கிடைக்கிறதுக்காவாவது என்னை மாதிரி குடிகார பயலுக்கள காப்பத்தின புன்னியம் கிடைக்குமுன்னு சாராயக்கடைய மூடுவாரு.ன்னு........நம்புறேன்..

நம்பிக்கைதான் வாழ்க்கையின்னு சொல்லிக்கிறாங்க....  முடிவு வரட்டும் பார்ப்போம்  உங்க நம்பிக்கையை என்றார் தோழர்..





திங்கள் 16 2016

இது சாராய ஜனநாயகம் இதில் கிடைக்காது நியாயம்!

சாராயத்துக்காகவே
ஒரு ஆட்சி நடக்குது
மக்கள் எதிர்த்துக் கேட்டால்
மண்டையைப் பிளக்குது
இது சாராய ஆட்சி
காவலுக்கு நிற்கும்
போலீசே சாட்சி!
இது சாராய ஜனநாயகம்
இதில் கிடைக்காது நியாயம்!
எங்கள் பெண்களை விதவையாக்கி விட்டது
இந்த டாஸ்மாக்,
எங்கள் பிள்ளைகளை சாகடித்து விட்டது
இந்த டாஸ்மாக்
எங்கள் ஊரையே சீரழித்து விட்டது
இந்த டாஸ்மாக்
நாங்கள் போராடாமல்
யார் போராடுவது?
குடியால்
குடும்பத்தையே தெருவில் நிறுத்தியது
குற்றமில்லையாம்,
பாதிக்கப்பட்டவர்கள்
குடும்பமாக தெருவுக்கு வந்து
போராடுவதுதான் குற்றமாம்!
மணிக்கணக்கில்
ரோட்டை அடைத்து ஓட்டு வேட்டை
எங்கே உன் தடியடி?
ஊரே சிரிப்பாய் சிரிக்குது
ஒவ்வொரு பினாமி பெயரிலும்
ஊழல் பணம் பல கோடி…
எங்கே உன் கொக்கிப்பிடி?
கொள்ளையர்க்கு பாதுகாப்பு
கொள்கையர்க்கு கைகால் முறிப்பு…
போஸ்டரை மட்டுமே
கிழித்துக் கொண்டிருந்த போலீசு
புடவையையும் கிழிப்பதுதான்
சட்டம் ஒழுங்கின் சிறப்பு!
சாராயத்தை
நிறுத்தச் சொன்னதற்கேன்
இத்தனை ஆத்திரம்
சாராயம் இல்லாமல்
இயங்காதோ அரசு எந்திரம்?
டாஸ்மாக்கின் ஒவ்வொரு துளியிலும்
குடிகெடுக்கும் வெறித்தனம்
மக்களின் குரலை மதிக்காத
இந்தத் தேர்தல் வெறும் சதித்தனம்!
மதுவிலக்கு படிப்படியாகவாம்
மதுவை விலக்கக் கோருபவர்களை
ஒடுக்குவது உடனடியாகவாம்!
பெண்களின் முடியை பிடித்து இழுத்து
பிள்ளைகள் கன்னத்தை கிழித்து
ஆடைகளை அவிழ்த்து
அடித்து பூட்ஸ் காலால் மிதித்து
கைது செய்து கை கால் முறித்து
குழந்தைகள் அழுகுரல் ரசித்து…
வேடிக்கை பார்க்கும் அரசமைப்பிற்கு
இன்னும் வேண்டுமா ஓட்டு?
டாஸ்மாக்கோடு இதற்கும் சேர்த்து
போடுவோம் பூட்டு!
– துரை.சண்முகம்,
நன்றி! வினவு
puthiya-jananayagam-may-2016



இந்த கேள்விக்கு என்ன பதில்......

திருப்பூர் அருகே 3 கன்டெய்னர்களில்  570 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்

கேள்வி-1.இவ்வளவு அதிகமான தொகைக்குசொந்தக்காரர்  தமிழ்நாட்டில் யார்?

கேள்வி-2. ரூ 5கோடிக்கே  இவ்வளவு பாதுகாப்பு வேண்டும் என்ற விதிமுறை இருக்கும்போது ரூ 570 கோடி க்கு லுங்கி கட்டிய போலீசை அழைத்து சென்றது எப்படி.... எப்படி??

கேள்வி-3 ,சீல் வைக்கப்படாத அந்தப் பெரிய தொகை பணத்தை பகலில் அல்லாமல் இரவில் அதுவும் இரண்டாவது சனிக்கிழமையான விடுமுறை நாளில் கொண்டு செல்ல காரணம் என்ன...என்ன???

தலைப்பைச் சேருங்கள்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...