பக்கங்கள்

சனி 07 2013

அய்.நா. உத்தரவு பெற்ற பிறகே, சிலைகளை கரைக்க தண்ணீர் நிரப்ப வேண்டும்.!!!



நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தியில் சிலைகளை கரைக்க,அய்.நா. உத்தரவு பெற்ற பிறகே, சிலைகளை கரைக்க தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று மாடு பிடி வீரர் மடசாமி ,மாட்டு சந்தை மாநாட்டில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, மாட்டு சந்தை மாநாட்டில் மாடுபிடி வீரர் மாடசாமியின் கமிஷன்காரர் பேட்டி ஒன்றில் கூறியதாவது.

விநாயகர் சதுர்த்தியில் இந்து மகா தீய சக்திகள்.1008 சிலைகளை  சர்வதேச சமூகத்துக்கு புறம்பாக தயார் செய்துள்ளன. இந்த சிலைகளை கரைக்க தெப்பத்தில் தண்ணீர் நிரப்ப தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், அதி காரிகள் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையென்றால் சிரியாவின் நடுரோட்டில் சிலைகளை போட்டுவிட்டு போராட்டம் செய்வோம்.
என்கிறார்கள்.

சிலைகளை கரைக்க தண்ணீர் நிரப்புவது பற்றி.அய்.நாவின் கண்காணிப்பாளர் கள் அங்கு சென்று ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க உள்ளனர். அதுவரை இந்து மகா தீய சக்திகள் காத்திருக்கவேண்டும்.

அதே சமயம், தண்ணீர் இல்லாத காரணத்தால் சிலைகளை சிரியாவின்  நடு ரோட்டில் போடுவது கண்டத்துககுரிய செயல் என்று மாடுபிடி மாவீரர் மட சாமி  தெரிவித்துள்ளார்.

சிலைகளை கரைக்க தண்ணீர் அவசியம் என்றால், அய்.நா. பாதுகாப்பு சபை ஒப்பதல் அளிக்க வேண்டும் என்றும் மாடுபிடி மாவீரர் மடசாமி கூறியுள்ளார்.

சிலைகளை கரைக்கும் முயற்சியின் தற்போதுள்ள நிலைமையை குறித்தும் அய்.நா. சபையின் தலைவர் மாட்டு சந்தையின் மாநாட்டில் கூறியுள்ளார்.

எனவே, விநாயகர் சிலைகளை கரைக்க அய்.நா. உத்தரவு பெற்ற பிறகே.தெப்பத்தில் தண்ணீர் நிரப்ப.தண்ணீர் திறக்க வேண்டும் என்று  மாட்டு சந்தை மாநாட்டில் மாடுபிடி மாவீரர் மாடசாமியின் கமிஷன்காரர் கூறியுள்ளார்

வெள்ளி 06 2013

வருந்துவதற்கு ஒன்றுமில்லை........

 
பயணக்கைதி என்ற வகையில் என்னை சில வினாடிகளில் சுட்டுக் கொல்லப் போகிறார்கள் என்று சிறைச்சாலைப் பாதிரியார் இப்பொழுதுதான் எனக்கு தெரிவித்தார்.எனது பொருட்களை வந்து எடுத்துச் செல்வதந்கு சர்ச் மெடி சிறை அதிகாரிகளுக்கு மனு போடும்படி உங்களை வேண்டிக் கொள்கிறேன் எனது தஸ்தாவேஜிகள் சில இங்கே உள்ளன. ஒருவேளை அவை என்னை நினைவுறுத்த உதவியாக இருக்கக்கூடும்.

எனது வாழ்வு  முழுவதிலும் ஒரு லட்சியத்தைப் பின்பற்றி ஒழுகி வந்தேன், அந்த லட்சியத்துக்குக் கடைசிவரை நான் உண்மையாக நடந்து கொண்டேன. என்பதை என் நண்பர்கள் அறிவார்களாக! பிரான்ஸ் வாழட்டும் என்பதற்க்காக நான் இறக்கிறேன் என்பதை இந்த நாட்டு மக்கள் அறிவார்களாக,

கடைசிமுறையாக என்து மனசாட்சியைத் தொட்டுச் சோதித்து விட்டேன. வருந்துவதற்கு எனக்கு ஒன்றுமில்லை. இதை நீங்கள் எல்லோர்க்கும் தெரிவிக்க வேண்டுமென்பதுதான் என் ஆசை. இன்னொருமுறை பிறப்பேனேயானால இதே பாதையில்தான் மீண்டும் செல்வேன்.

கம்யூனிசம் என்பது உலகின் மறுபிறப்பு. அது ஒரு ஒளி பொங்கும் வைகைறையைத் தோற்றுவிக்கும். தோற்றுலிக்கச் செயலாற்றிக் கொண்டு வருகிறது. எனது ஆருயிர் நண்பர் பால்வேயான் குதூரியர் சொன்னது சரி என்று நான் திடமாக நம்புகிறேன். மார்ஷல் காஷான் எனக்கு ஒரு சிறந்த குருவாக வாய்த்தார். அதில் சந்தேகமில்லை. அதனால்தான் இவ்வளவு சித்தத் தெளிவோடு இவ்வளவு நம்பிக்கையோடு நான் சாவை எதிர் நோக்கி நிற்கிறேன்.

“சென்று வருகிறேன்! பிரான்ஸ் நீடூழி வாழ்க!”.
                                                                                                  காப்ரியல்

“மார்க்ஸிய மெய்ஞ்ஞானம்” என்ற நூலிருந்து

செவ்வாய் 03 2013

நிஜத்தில் சாதிக்க முடியாததை நிழலில் சாதிக்க முடியும்!!!

அண்ணா-ஹசாரேsep 3 -satyagraha-fb-

1960 களில் நடந்த நக்சல்பாரி போராட்டம்,மாணவர்போராட்டம், எமர்ஜென்ஸி போன்ற  வரலாற்றில் நடந்த உண்மை நிகழ்ச்சிகளை கமர்சியல்  தத்துவதுக்கு ஏற்ப படமெடுத்து  காசாக்கி இதன் மூலம் தான் அரசியல் படங்கள் எடுப்பதில் கில்லாடி.வல்லவன் என்று பெயர் பெற்றவர்.

இந்தியில் கமர்சியல் கலந்த  அரசியல் படங்களை எடுத்து பேரும் புகழும் பெற்றவரான பிரகாஷ் ஜா
‘சத்தியாகிரகா’ படம் ஹசாரே-கெஜ்ரிவால் பற்றிய கதையல்ல: பிரகாஷ் ஜா
குண்டாச்சட்டிக்குள்ளேயே குதிரையை ஓட்டி,நிணைத்த இடத்துக்கு செல்லலாம் என்று தான் நம்பி இருப்பதை. தன் படங்கள் மூலமாக மற்றவர்க ளையும் நிழலை நிஜமென்று நம்ப வைப்பவர்.

ஆக,இந்திய சினிமா உலகில் சமகால அரசியலை ஆராய்ந்து இயக்கியதால் வெற்றிபட இயக்குநர் என்ற புகழுடன் மீண்டும் இதே பாணியில் “ சத்யகிரஹா” என்ற பெயரில்......

அன்னாஹசாரேவின் மெழுகுவர்த்தி போராட்டத்தை பற்றியும்   மெழுகுவத்தி ஏந்தியே ஊழலை ஒழித்து விடலாம் என மனப்பால் குடித்து நடந்தமாபெரும் அந்த போராட்டத்தில்  கலந்து கொண்ட மாபெரும் நடுத்தர வர்க்கத்தைப் பற்றியும், கருவாகக் கொண்டு காரம்,மணம்,குணம் அணைத்து அம்சங்களையும் கொண்ட“ சத்யாகிரஹா” என்ற மாபெரும் படத்தை..

அணைத்து புகழும் தனக்கே, என்ற கணக்கீல்  தானே கதை எழுதி.தயாரித்து இயக்கி உள்ளார்.

நிஜத்தில் அன்னாஹசாரேவின் மெழுகுவத்தி போராட்டம், மெழுகைப்போல் உருகி காணாமல் போனதை .நிழலில் மெழுகுவத்தியால் ஊழல் ஒழியும் என்று இந்தியா முழுவதும்  காட்ட போகிறார்.

விளைவு. நிஜத்தில் சாதிக்க முடியாதததை, முடியாமல் போன வழிகளிலே சாதித்து விடலாம்,சாதித்துவிட்டதாகவும் நிழலில் காட்டுவார், படம் பார்க்கும் மெழுகுவத்திக் கூட்டமும்  மெழுகுவத்தியால்  சாதித்து விட்டதாக புளகாங்கிதம்  அடையும்.

மெழுகுவத்தி ஏந்தும் கூட்டத்திற்கும், நிழலை நிஜமென்று நம்பும் மக்களுக்கும் ஏற்றவாறுதான்  முன்னணி நடிகர்களான இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அன்னா ஹசா ரே ஆகவும், சர்வதேச செய்தியயாளராக கரீனாகபூரும், நடுத்தர வர்க்கத்து போராளி இளைஞனாக அஜய்தேவ்கானும்,  அரசியல்வாதிகளின் தரப்பாக மனோஜ்பாஜ்பாயும் களமிரக்கப்பட்டு இவர்களின் நடிப்பால் மெழுகுவத்தி போராட்டத்தால்  ஊழல் ஒழிப்பதாக,ஒழிக்கப்படுவதாக  நிழலை நிஜமாக காட்டி  சாதிக்க முடியும் என்று காட்டுவார்.


ஞாயிறு 01 2013

நவநீதம் பிள்ளையின் வஞ்சப் புகழ்ச்சி...........




தமிழ் இலக்கணத்தில் வஞ்சப்புகழ்ச்சி அணி என்று இலக்கணம் உள்ளது.

அதில் .இகழ்வதுபோல் புகழ்வதுதான் வஞ்சப்புகழ்ச்சி. அந்தத வஞ்சப் புகழ்ச்சி போலவே, ஐ.நா. மனித உரிமைக்கமிஷனின் தலைவரான நவநீதம் பிள்ளை,

கொலைகார ராஜபட்சேவின் அரசை இகழ்வது போல் இழித்து கடைசியில் அவன் அரசை  புகழ்ந்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களை அழித்தொழித்த போரில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து ஆராய்வதற்க்காக கடந்த ஒரு வாரமாக சுற்றுப்பயணம் செய்து வரும் பிள்ளை.

பயணத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறியிருக்கிறார்.

உள்நாட்டில் நடந்த போரால் சீர்குழைந்த நாட்டை சீரமைக்க கிடைத்த பயன்படுத்திக் கொள்ளாமல்.சர்வாதிகாரபோக்கை நோக்கி இலங்கை அரசு நடைபோடுகிறது. இதனால் போர் முடிந்த பின்னரும் பாதிப்புகள் குறையவில்லை.

பாதிக்கப்பட்டவர்களை நான் சந்தித்தபோது.அவர்கள் கொடுமைக்கு ஆளானாதும்,கட்டாயங்களுக்கு ஆளானதும் தெரியவந்தது.

எனினும்,இலங்கை அரசின் மறு குடியமர்த்தல் மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாடு பணிகள் திருப்தி அளிக்கிறது என்றார்.

ஒரு பொதுக்கூட்ட மேடையொன்றில்,போலீஸ் செய்யும் கொடுமைகளை விலாவாரியாக பேசிவிட்டு, கூட்டமுடிவில் கூறப்படும்.நன்றியுரையில் போலீசுக்கு நன்றி!‘ என்று கூறப்படுவதுபோல்தான். நவநீதம் பிள்ளையின் அறிக்கையும்.......


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...