பக்கங்கள்

சனி 08 2016

கொக்கலிக்கிறது சிகப்பு நாடா.....

........................

தகவல் அறியும்
உரிமைச் சட்டம
அதிகார வர்க்க
ஆட்சி  ஆளர்களின்
சிகப்பு நாடாவை
ஒழிக்க வந்து
விட்டது என்று
பூரித்தார்கள் தகவல்
உரிமை ஆர்வலர்கள்

இந்த ஆர்வலர்களை
பார்த்து கொக்கலிக்கிறது
அப்பல்லோ மருத்துவமனையில்
ஆட்சி ஆளர்களின்
சிகப்பு  நாடா..........

வெள்ளி 07 2016

மர்ம மருத்துவமனை.............

தம்பி நில்
முன் வைத்த
காலை பின்னே
வை.. நாய்கள்
ஜாக்கிரதை என்ற
அறிவிப்பு பலகை
இல்லை என்ற
தைரியத்தில் அருகில்
செல்லாதே இங்கிருந்தே
பார்  தம்பி

அதோ தெரிகிறதே
அது என்ன
தெரியுமா அது
மர்ம  தேசம்
மர்ம குகை
மாதிரி ஆன
அது ஒரு
மர்ம மருத்துவமனை
அங்கு என்ன
நடக்கிறது நடந்து
கொண்டு இருக்கிறது
என்பது இதுவரை
 இந்த உலகத்துக்கே
தெரியவே இல்லை
என்னமோ நடக்கிறது
மர்மமாய் இருக்கிறது.


Image result for அப்பல்லோ மருத்துவமனை


வியாழன் 06 2016

காந்தியை மகாத்மா என்று அழைக்காதவர்கள்.......

தலீவா..ஜெ.யை அம்மான்னு அழைக்காதவுக..யாருன்னு ஒருத்தர சொல்லுங்க தலீவா....

 நல்லா யோசிச்சு பாருடா.... எனக்கு கெட்ட கோபம் வந்துரும் .....உனக்கு யாருமே நிணவு வரலியாடா.....

இல்லயே தலீவா.....

போடா  ...வெங்கம் பயலே..........

திட்டாதிங்க..தலீவா... யாருன்னு சொல்லுங்க  தலீவா.....

 என் அம்மா...உன் அம்மாவைத் தவிர... நா...என்னிக்குடா....மத்தவங்கள அம்மான்னு கூப்பிட்டு இருக்கேன்...

அட...உங்களச் கேட்கல தலீவா..... வேற கட்சியி ல இருக்கிறவங்கள கேட்டேன் தலீவா.....

எனக்கு தெரிஞ்சு..வினவு தோழர்களிருந்து..எல்லாருமே...அம்மா..ன்னுதான் கூப்பீடுறாங்க... அம்மான்னு கூப்பிடாதவுக  யாருமே இல்லடா...... ஆனா....காந்தீயை... மகாத்துமான்னு தன் கடைசி காலம் வரைக்கும் கூப்பிடாதவுங்களை மட்டும்தான்டா  எனக்கு தெரியும்...

அட..அப்படியா.... அப்பேருபட்டவங்க  யாரு தலீவா..... சொல்லுங்க தலீவா....

அவுங்க வேறு யாரும்  இல்லடா.. டாக்டர் அம்பேத்கார், தந்தை பெரியார், முகம்மது அலி ஜின்னா இவுங்க மூவரும்தான்டா இந்தீயாவின் சொளக்காட்டு பொம்மையான காந்தீயை மகாத்துமான்னு கூப்பிடர்தவங்க..

ஆ.........ஆ....ஆ...ஆ.. பட்டுக்கோட்டைக்கு வழிய கேட்டா... நீங்க கொட்ட பாக்குக்கு விலைய சொல்ற மாதிரி இருக்கு தலீவா... இதுவும் . நல்ல செய்திதான் தலீவா..............




FB_IMG_1475673936804.jpg ஐக் காண்பிக்கிறது
படம் உதவி-

புதன் 05 2016

காரணம் தெரிந்துவிட்டது.......அண்ணே........

அண்ணே....அண்ணா. எம்ஜியார் போன்றவர்களை வெளி நாட்டு மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு சென்ற மாதிரி  ஜெயை கொண்டு செல்ல வில்லையேண்ணே  ஏன்ண்ணே.....

அது மருத்துவ சட்ட சிக்கல்லுன்னு சொல்லிக்கிறாங்கடா.... உம் பொண்டாட்டிய பேரு காலத்துக்கு கொண்டு போனபோது..உன்கிட்ட கையேழுத்து வாங்கினது நிணவுல இருக்காடா.......

ஆமாண்ணே.... கையெழுத்து போட்ட பின்தானே  ஆப்ரேசனே செஞ்சாங்கண்ணே....

இத அப்படியே  நிணவுல வச்சுக்க..... இப்ப நா...சொல்றத  அமைதியா..கேட்டுட்டே வா....

சரிண்ணே.............

அண்ணாதுரைய வெளிநாட்டு சிகிச்சைக்கு கொண்டு போனபோது.. அண்ணாதுரையின் வீட்டுக்காரம்மா சிகிச்சை பேரேட்டுல கையெழுத்து போட்டாங்க.... எம்ஜியாருக்கு ஜானகி கையெழுத்து போட்டதினால..அமெரிக்காவுக்கு கொண்டு போனாங்க.... ஜெ..க்கு கையெழுத்து போட  யாரு இருக்கா....

உடன் பிறவா  தோழி.... இருக்காங்கலண்ணே....

அவுக ரத்த உறவு முறை இல்லேடா... ரத்த உறவு முறை கொண்டவுகளுக்கு  மட்டும்தான்டா உரிமை இருக்கு.....

அப்போ..அண்ணன்..தம்பி..யாருமே இல்லையாண்ணே....

இல்லேன்னுதானே..... வெளி நாட்டுக்கு கொண்டு போகாம.... அப்பல்லோவில வச்சிருந்து லண்டன் டாக்டர... இங்கு வரவச்சு இருக்காங்க........

சே..... யாருமே..இல்லயா...  அனுபவிக்காம போறதுக்கா இம்புட்டு சொத்து சேத்து வச்சிருக்காங்க.... சாராயக் கடைய திறந்து தமிழ்நாட்டு மக்களை எல்லாம் நாசப்படுத்துனாங்க....

இருக்குற வரை சுகபோகமா..வாழ்ந்து போக வேண்டாமாடா.....

அப்போ..அப்பல்லோவுல சிகிச்சை செய்யிறது அவுக சொந்தப் பணமாண்ணே..

இல்லடா.... அரசு செலவுடா...... இப்போ..உனக்கு காரணம் தெரிந்துவிட்டதா..டா

காரணம்  தெரிந்துவிட்டது..அண்ணே.........

செவ்வாய் 04 2016

மன்னாதி மன்னர்களே.........

மன்னாதி மன்னர்களே...
இந்த மன்னாதி
மன்னர்களை தேர்ந்தெடுத்த
சூராதி சூரர்களே...!!!

ரெண்டு பேர்
அமரும் பெஞ்சுக்கு
எல்லாம் காவிரி
மேலாண்மை வாரியம்
அமைக்க முடியாது.

பின்ன....


பாராளுமன்றம் என்ற
பன்றித தொழுவத்திலே
பன்றிகள் ஊளையிட்ட
சத்தத்தின் பின்னால்தான்
சட்டம் இயற்றி
அமைக்க முடியும்.

அப்படி என்றால்

மீத்தேன், கெயில்
குழாய் பதிப்பு,
கூடங்குளம் அணுஉலை
அணுக் கழிவுகளை
கொட்டும் நியூட்ரினோ
கிடங்கு, கோக்
பெப்சி தண்ணீர்
கார்ப்பரேட்டுகள் வட
மொழி திணிப்பு,
உயர்கல்வி. உயர்
வேலை வாய்ப்புகளை
பறிக்கும் புதிய
கல்விக் கொள்கை
போன்றவற்றை அந்தப்
பன்றித் தொழுவத்தில்
ஊளையிட்டு கத்திய
சத்தத்தினாலா கொண்டு
வந்தீர்கள் வந்தார்கள்

மன்னாதி மன்னர்கள்
சூராதி சூரர்கள்


ஞாயிறு 02 2016

அவர்கள் வாயில் வழைப்பழம் இருக்குமோ........

ஆந்திராவில் இருந்து
கர்நாடாகவுக்கு பொழைக்க
போன வட்டல் நாகராஜ்
தமிழ்நாட்டுக்கு தண்ணி
தராதே என்று போராடுறான்.


தமிழ்நாட்டில் இருந்து
கர்நாடகாவுக்கு பொழைக்க
போன  நடிகன்
ராஜ்குமாரும்  காவிரி
தண்ணீரை தமிழ்நாட்டுக்கு
தராதே என்று போராடினான்
இவர்கள் வாழவைத்த
நாட்டுக்கு நன்றிக்
கடனை காட்டும்
விதமாக தங்கள்
பொழப்பை ஓட்டுகிறார்கள்.

ஆனால்.......


எங்கெங்கோ இருந்து
தமிழ்நாட்டுக்கு  பொழைக்க
வந்த  எல்லாப்
பய பிள்ளைகள்
மட்டும் வாய
தெறக்க மாட்டுறாங்களே
ஒருவேள அவர்கள்
வாயில் வாழைப்பழம்
இருக்குமோ  மக்கா.............





ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...