பக்கங்கள்

வியாழன் 16 2017

கேள்வி ஒன்று.. விடைகள் இரண்டு...!!!



மனிதன் எப்படி
சிந்திக்கிறான் இது கேள்வி ?

ஆன்மா என்ற
ஒன்று இருப்பதால்
சிந்திக்கிறான் பதில்
ஒன்று- பதில்

இரண்டு மூளை
என்ற உறுப்பு
இருப்பதனால் மனிதன்
சிந்திக்கிறான் இந்த
விடைகள் இரண்டும்
ஒன்றுக்கு ஒன்று
வேறானாவை முழுக்க
முழுக்க எதிரானவை.

செவ்வாய் 14 2017

இதுவும் சர்வாதிகாரம்தான்



ஏய்.......

வேலை நிறுத்தத்தை கைவிடு,

வந்தே மாதரம் பாடு,

நவோதயா பள்ளியை திற,

தேசியக்கொடிக்கு சலாம் போடு

நீட் தேர்வை  நடத்து.......

இதுவும் சர்வாதிகாரம்தான்.......

திங்கள் 13 2017

நான் சொன்னது விளையாட்டுக்கு இல்லை...


எங்க ஊருக்கு அடுத்த ஊரில் வசிக்கும் தெரிந்தவரின் மகன் நான் செல்லும் வழியில் தனியாக அமர்ந்திருந்தான். அவனிடம் பேசலாம் என்று எண்ணி அவனுக்கு அருகில் சென்று அவன் முகத்தைப் பார்த்தேன்.அவன் முகம் கோபமாகவோ. கடுகடுப்பாகவோ இல்லை.நான் அவனுக்கு அருகில் சென்றதை கவனித்தஅவன் என்னைக் கண்டதும் எழுந்து நின்றான்.

அவனை உட்காரச் சொல்லி.அவனுக்கு அருகில் நான் நின்று கொண்டு அவனை விசாரித்தேன்.பத்தாவதில் பெயிலாகி விட்டதைச் சொன்னான். தந்தை எதுவும் சொல்ல வில்லை. அம்மா மட்டும் திரும்ப படிக்கச் சொல்வதாக சொன்னான்்

சரி, நீ என்ன முடிவு எடுத்து இருக்கிறாய் என்று கேட்டபோது...அவனின் அக்காவின் வீட்டுக்காரர் மாடு மேய்க்கச் சொல்லும்  வேலையைச் செய்வதாக  நிணைக்கிறேன் என்றான்

தண்ணியுமில்ல..வெள்ளாமையும் இல்லாம நிலமெல்லாம் தரிசா கிடக்குதல.நீ எப்படிடா மாடு மேய்ப்ப என்று கேட்டபோது..போது என் மாமான் சொல்லுறாரே...என்றான்.

உன் மாமன் அந்த ரசீனி ரசிகன்தானேடா...அவன்கிட்ட நான் சொன்னதாக சொல்லுடா.....ரசீனியே  அரசியலுக்கு வருவதற்கு தயராக இருகக்கும்போது உன்னை மட்டும் ஏன்டா மாடு மேய்க்கச் சொல்றான்..பேசாம ரசீனி கட்சி தொடங்கும்போது உடனே வட்டச் செயலாலரா ஆகிவிடச் சொல்லு..உன் மாமன் வட்டச் செயலாளராக ஆகிட்டா... நீ உன் மாமனுக்கு வலது கையா ஆகியிருடா..என்று நான் சொன்னபோது... எங்கம்மா படிக்க.சொல்லுதே..என்றபோது


உங்கொம்மாட்ட சொல்றா...அம்மா..நான் படிச்சு முடிச்சாலும் எனக்கு உடனே வேலை கிடைக்கப்போறதில்ல...மாமாவோட தலைவரு ரசினி அரசியலுக்கு வரப்போறாராம்.. அப்படி வந்தால்  மாமா.. வட்டச் செயலாளராக ஆகிடுவார். நானு அவரக்கு வலது கையாக ஆகிவிடுவேன். அதோடு தேர்தல்ல மாமா நின்னா ஜெயிச்சுடுவாரு..ஜெயிச்சிட்டா  மந்திரியா ஆயிடுவாரு..பின்ன அந்த பவரு வச்சு  நானும் டபுள் பட்டம் வாங்கிடுவேன்....டீ ஆத்துனவங்க...டீ வித்தவங்க எல்லாம் எனக்கு முன்மாதிரியாக  அவுங்கவுங்க பவரு வச்சுதான் பட்டம் வாங்கியிருக்காங்கன்னு சொல்லுடா ...இத உன் மாமானிடம் சொல்லுடா அவனுக்கு எல்லாம் தெரியும்...


நிஜமாகத்தானா சொல்றிங்க  விளையாட்டுக்கு சொல்லலியே......

உன் மாமன் உன்னை மாடு மேய்க்க சொன்னது விளையாட்டுக்கா சொன்னான்

இல்லையே........................

அப்ப நான் சொன்னதும் விளையாட்டுக்கு இல்ல..டா....

ஞாயிறு 12 2017

மறுபிறவி என்ற ஆன்மா பிறந்த கதை..


ஆதி கால மனிதர்களுக்கு தங்களைப் பற்றி ஒன்றும் தெரியாது.உலகத்தைப் பற்றியும் தெரியாது.அஞ்ஞானத்தில் ஆழ்ந்திருந்தனர். அவர்களுக்கு ஆச்சரியமாக தோன்றியதை எல்லாம் மனிதனுக்கும்  இயற்கைக்கும் அப்பாற்பட்ட சக்திகளால் உண்டாக்கப்பட்டவை என்று நம்பினார்கள்.

அவர்கள் கனவுகள் காணும்போது அந்தக் கனவுகளில் தாங்களும் தங்கள் நண்பர்கள் உறவினர்கள் உயிர் பெற்று வாழ்வதை கண்டார்கள். இ்த்தைகைய கனவுகள் அவர்களுடைய கற்பனையை தூண்டிவிட்டன. அந்தக் கற்பனையைக் கொண்டு ஒவ்வொருவனுக்கும் இரட்டை வாழ்க்கை உண்டு என்று முடிவு கட்டினார்கள். ஒவ்வொருவனுக்கும் ஒரு வாழ்க்கையல்ல இரட்டை வாழ்க்கையுண்டு என்ற கருத்து அவர்களை கலங்கச் செய்தது.

எனவே தாங்கள் சிந்திக்கும் சிந்தனைகளும் அனுபவிக்கும் புலனுணர்ச்சிகளும் தங்கள் உடம்பின் நடவடிக்கையல்ல.அவையெல்லாம் ஒரு சுயம்புவான ஆன்மாவால் நடைபெறுகின்றன. அந்த ஆன்மா உடம்புக்குள்ளே குடி கொண்டிருக்கிறது சாகும்போது அந்த ஆன்மா உடலைவிட்டுப் பிரிந்து போய்விடுகிறது என்றெல்லாம் அவர்கள் கற்பனை செய்து கொண்டார்கள்.

அதிலிருந்து ஆன்மா அழிவற்றது என்ற கருத்து பிறந்தது.  பொருளான உடம்புக்கு வெளியே அப்பால் நின்று  ஆன்மா வாழ  முடியும் என்ற கருத்து பிறந்தது.

இறந்த பிறகும் “ஆன்மா” என்ற ருபத்தில் மனிதன் தொடர்ந்து வாழ்வதாக அவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்தார்கள். அதுவும் அந்த ஆன்மாவானது மென்மையான ஒரு வித பொருளான கண்ணாடி போல ஒளி புகும் தன்மை பெற்ற பொருள் என்றும் கற்பித்துக் கொண்டார்கள்..

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...