பக்கங்கள்

வியாழன் 07 2013

அதிகார பிச்சை கேட்ட பிச்சைக்கார ஏட்டையா............


ஆட்டோமூலம் ஊர்ஊராக சென்று கோன்ஐஸ்,கப்ஐஸ் வியாபாரம் செய்பவர் சுப்புராஜ் என்பவர். இவர் ஐஸ்வியாபாரம் செய்து கொண்டு இருந்தபொழுது சுப்புராஜ் வியாபாரம் செய்து கொண்டு இருக்கும் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் ஆறுமுகம்.

இவர் சுப்புராஜ்விடம் வந்து ஐஸ்கப் கேட்டுள்ளார் சுப்புராஜோ,பகுதி காவல் நிலையத்தின் ஏட்டையா. என்ற மரியாதைக்காக ஒரு கப் ஐஸ்ஸை இலவசமாக தந்துள்ளார்.

ஏட்டையா ஆறுமுகத்துக்கோ. ஒரு கப்ஐஸ்மட்டுமே வாங்கிச் செல்வது தனது பதவிக்கு கௌவரவ குறைச்சலாக இருப்பதாக கருதி இருபது கப்ஐஸ் தருமாறு கேட்டுள்ளார்.ஒரு கப்ஐஸ் ரூபா 5லிரந்து 20ரூபாவரைக்கும் இருக்கு.

வியாபாரி சுப்புராஜோ, எந்த ஐஸ் கப்பை கொடுத்தாரோ தெரியவில்லை. ஒருகப் ஐஸ்சை மட்டும் கொடுத்துவிட்டு. இருபதுகப்ஐஸ்செல்லாம் தர முடியாது என்று மறுத்திருக்கிறார்..

ஏட்டையாவுக்கு கோபம்வந்து ,தனது பதவியையும் அதிகாரத்தையும் மதிக்கத் தெரியாத ஐஸ் வியாபாரியை நையப்புடைத்துவிட்டார்.

ஒருகப் ஐஸ்சைக் கொடுத்து, ஏட்டையாவின் பதவியையும் அதிகாரத்தையும் மதிக்கத் தெரியாத வியாபாரி சுப்புராஜோ, ஏட்டையாவிடம் மொத்தமாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

ஏட்டையாவிடம் வாங்கிக் கொண்டத்தை தாங்கமுடியாமல் ஐஸ் வியாபாரி எஸ்பியிடம் முறையிட, பகுதி காவல் நிலையம் ஏட்டையாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

ஏட்டையாவோ  இது மாதிரி அதிகார பிச்சை கேட்பது புதுசு இல்லையாம்,.ஏற்கனவே, அதிகார பிச்சைகேட்ட பிரச்சினையில் ஏட்டையா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுயிருந்தும், ஏட்டையா திருந்தவில்லையாம்.  என்ன செய்வது நூலைப்போலத்தானே சேலையும் இருக்கும்.


திங்கள் 04 2013

மாற்றான் மனைவி மீது வழக்கு போட்ட மாற்றான் மனைவியின் கனவன்


என்னங்க இது! கழுத்த சுத்தி மூக்க தொடுற  மாதிரியில்ல 
இருக்குன்னு பாக்குறிங்களா??

சில விடயங்களில் நேராக மூக்கத் தொடலாம். இந்த 
விடயங்களில் கழுத்த சுத்தித்தான் மூக்ககைத் தொட வேண்டியதிருக்கு…………..

மதுரை மாநகரை சேர்ந்தவர் ஒருவர். மதுரை மாவட்ட 
மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒரு வழக்கு ஒன்றை தாக்கல்
செய்தார்.

தாக்கலான மனுவை விசாரனை செய்த மாஜிஸ்திரேட் 
வழக்கு தாக்கலானவரின்  பகுதியைச் சேர்ந்த காவல் 
நிலைய போலீஸ் இன்ஸ்பெக்ட்டர்க்கு, தாக்கலான மனுவிலுள்ளவர்களிடம் விசாரனை செய்து இரண்டு 
மாத கால அவகாசத்தில் அறிக்கை தாக்கல் செய்ய 
உத்தரவிட்டார்.

தாக்கலான வழக்கின் விபரமானது.

மாற்றான் ஒருவருக்கு மனைவியாக இருக்கும் பெண்ணுக்கும்.
வழக்கு தாக்கல் செய்தவர்க்கும் திருமணம் நடந்தும்.அதற்கு 
அத்தாட்சியாக ஒரு குழந்தையும் உள்ளதாகவும்.

அந்தக் குழந்தை தாயின் வயிற்றில்  இருந்தபோது 
பிரசவத்துக்காக தாயின் வீட்டுக்குச்சென்ற அவர் 
மனைவியானவர், திரும்ப கனவனரான அவர் வீட்டுக்கு 
வரவில்லை என்றும், பிறந்த குழந்தயை பார்க்கச் 
சென்றபோது பார்க்கவிடாமல் தடுத்ததாகவும்,

இவர்கள் திருமணத்தின்போது போட்ட நகைகள் மற்றும் 
சீர் வரிசைப் பொருட்களை மனைவி எடுத்துச்சென்றதாகவும். 
சில வருடங்கள் கழித்து குடும்பம் நடத்த மனைவியை  
அழைக்க ,மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு சென்றபோது.., 
இவரின் மனைவியானவர் வேறுஒருவருக்கு மனைவியாக 
வாழ்ந்து வருவதும் அவர்களுக்கு குழந்தை இருப்பதும் தெரிய 
வந்ததாம்.

அப்படி தெரிந்திருந்தும் மனுதாரர் மனைவியை அழைத்தபோது மணைவியும் மாற்றனும். மணைவியின் பெற்றோரும் சேர்ந்து 
கொலை செய்து விடுவதாக மிரட்டினார்களாம்.

தாலி கட்டிய கணவன்  உயிரோடு இருக்கும்போது 
மாற்றானை திருமணம் செய்து குழந்தையும் பெற்ற 
மணைவியின் செயலும்….,

மருமகன் உயிரோடு இருக்கும்போது மாற்றானுக்கு 
திருமணம் செய்துவைத்த பெற்றோரின் செயலும்…..

கட்டிய கணவன்  உயிரோடு இருக்கும்போது தனது  
மணைவியை திருமணம் செய்து பிள்ளையும் பெற்று 
குடும்பம் நடத்திய மாற்றானின் செயலும்

குடும்பம் நடத்த மணைவியை அழைத்தபோது, 
மணைவியை கணவனுடன் அனுப்பாமல் மணைவியின் 
பெற்றோரும் மாற்றனும் சேர்ந்து கொலை செய்து விடுவதாக 
கொலை மிரட்டல் விட்ட செயலும் தண்டிக்கப்படவேண்டிய குற்றங்களாகும். இவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும் 
என்று மாற்றானுக்கு மணைவியாக இருக்கும்  மணைவியின் 
கணவன்  தாக்கல் செய்த வழக்கின் விபரமாகும்.

இந்த வழக்கின் உண்மைத்தன்மை தெரிந்து. இது எந்தவகையான 
பண்பாடு என அறிந்து. இதில் யார் வெல்வார்! யார் வீழ்வார்!! 
என்பது .இந்த வழக்கின் இறுதி தீர்ப்பானது, ஏழுகடல்தாண்டி,
ஏழுமலை தாண்டி,ஏழுபாலைவனம் தாண்டி வெளிவரும்
போதுதான் எனக்கும்,உங்களுக்கும் மற்றவர்களுக்கும் 
தெரியவரும்.

ஞாயிறு 03 2013

இரக்கமற்ற அணைத்துவகை வாகன ஓட்டிகளுக்கு………………!!!



தமிழகத்து அனைத்துவகை வாகன ஓட்டிகளே!. 

உங்களின் இடைவிடாத முயற்சியினால்  வாகன விபத்தில்  தமிழகம்இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இன்னும் சற்று முயற்சி எடுத்தால் டாஸ்மாக் நிறைந்த தமிழகத்தை, புருட்சி தலவியின் நீண்ட நாள் கணவை நணவாக்கி குஜராத்தை பின்னுக்கு தள்ளி  இந்தியாவில் முன்னோடி முதல் மாநிலமாக  ஆக்கிவிடலாம்.

77.5% வாகனவிபத்து வாகன ஓட்டிகளான உங்களால் ஆனது.
3.5%விபத்துக்கள் பாதசாரிகளால்.சைக்கிளில் செல்பவர்களானது.
1.5%விபத்துக்கள் மோசமான சாலைகளானது.

ஆளும் கட்சிக்கும், அரசுகளுக்கும் ஆயிரத்து எட்டு பிரச்சினைகள் இருப்பது போல் உங்களுக்கும இருக்கலாம். ஆட்சியாளர்கள் மற்றும் ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகள்மாதிரி இரக்கமற்ற சுயநலகிருமியாக இருந்துவிட்டுப் போங்கள்.

ஆனால்.நீங்கள் ஓட்டும் வாகனத்தால் ஏற்றி துடிதுடித்து கிடப்பவர்களை போட்டுவிட்டு  பறந்து சென்று காணாமல் போய்விட்டாலும்,

உங்களால் துடிதுடித்து கிடப்பவர்களை மருத்துவமனையில் சேர்த்துவிட  ஆயிரத்து எட்டு வழிகளில் ஒன்றிலாவது நேர்மையாக செயல்படுங்கள்…….

இரக்கமற்ற சுயநலமிக்க. டாஸ்மாக்குடிமகன். மற்றும் குடிமகன் இல்லாத அணைத்துவகை வாகன ஓட்டிகளே!!!!!!

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...