பக்கங்கள்

வியாழன் 04 2017

சார்...நீங்க...


சார் .....நீங்க
ஊருக்கு புதுசுங்களா...
எப்படி கண்டு“
பிடித்தேன்னு....ன்னா
.

அது ஒன்னும்
பெரிய ரகசியம்
இல்ல சார்.

பஸ்ஸிருந்து இறங்கியவுடன்
பேந்த பேந்த
முழிச்சுகிட்டு நின்னேங்களா
அத வச்சு
கண்டு போட்டேன்
சார்... சரி

எங்க போகனும்
சார்..சொல்லுங்க
கரகிட்ட நேரா
அங்க போய்
விட்டுறேன் வாங்க..

என்னது சொர்க்கத்துக்கா
அங்க  எல்லாம்
இந்த வண்டியில
போக முடியாது
சார்..........

ஆமா..வீட்டுல
சொல்லிட்டு வந்தீங்களா?
சொல்லாம வந்தீங்களா??
இப்படி கோபப்படுறிங்க...


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ





புதன் 03 2017

பொருக்கியை கடவுளாக கொண்ட மதம்

#இந்துமதம்:

விசித்திரமானது இந்து மதம். வேடிக்கையாக இருக்கிறது இந்துக்களின் இறைநம்பிக்கை.

‘ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒழுக்கமாக வாழ்ந்தான் ராமன் அதற்காகத்தான் அவனை வணங்குகிறோம்’ என்கிறார்கள் இந்துக்கள். அவர்களேதான்,  பாலியல் நோய் வந்து பாதிக்கப்பட்டிருக்க வேண்டிய அளவிற்கு சகlட்டுமேனிக்கு பல பெண்களோடு உறவு கொண்ட, கொலை போன்ற கிரிமனல் குற்றங்களுக்காக சிறுவர் சீர்திருத்த்தப் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டிய கிருஷ்ணனையும் தெய்வமாக தொழுகிறார்கள்.

ஒழுக்கம் குறித்து தனி வாழ்க்கையில் அதிகம் பேசுகிற இந்துக்கள், தங்களின் கடவுள் பொறுக்கியாக இருந்தாலும் அதனை பூரிப்போடு ஏற்றுக் கொள்கிறார்கள்.

இந்துக்களின் இறைவழிபாட்டில் இருக்கிற இந்த முரண்பாட்டை அவர்கள் புரிந்து கொள்வதுமில்லை. டாக்டர் அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் புரியவைத்தால் அதை புரிந்து கொண்ட பின் அதற்காக அவர்கள் வெட்கப்படுவதும் இல்லை. இந்து மதம் இந்துக்களை சுயமரியாதையும், சுயஅறிவும் அற்றவர்களாகவே உருவாக்கி வைத்திருக்கிறது.

இந்துக்களாக அடையாளப்படுத்தப்பட்டு, முட்டாள்களாக, சூத்திரர்களாக நடத்தப்படுகிற, அவமரியாதைக்குள்ளாகிற பிற்படுத்தப்பட்டவர்களின்  சுயமரியாதைக்காக பார்ப்பனிய தந்துவங்களோடு நேருக்கு நேர் மோதிய டாக்டர் அம்பேகத்ரை, அவமதிக்கிறார்கள், சுயமரியாதையற்ற சூத்திரர்கள்.

‘நான் யாருக்கும் அடிமையில்லை

எனக்கடிமை யாருமில்லை’

என்ற நூலிலிருந்து…….

ஆசிரியர் வே. மதிமாறன்

செவ்வாய் 02 2017

இந்த நாட்டோட சாபக்கேடு.....

சார்“ மே”
தின கூட்டத்துக்கு
போனீங்களே கூட்டம்
எப்படி சார்...

ஓ.....பிரமாதம்...

பேச்சாளர்களின் பேச்சு

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு
வகையில் சூப்பர்..

அப்பா நாட்டில்
விரைவில் மாற்றம்
வந்துடுமா சார்

அது வந்து....

என்ன சார்
பிரமாதம் சூப்பர்னு
சொன்னீங்களே சார்.

கூட்டம்  கூடியது
பேசியது எல்லாம்
உண்மைதான் ஆனா..

 சொல்லுங்க சார்,

உன்கிட்ட சொல்றதுக்கு
என்ன கூட்டம்
கூடுகிற அளவுக்கு
வேலை செய்யிறதுக்கோ
தியாகம் செய்யிறதுக்கோ
வருவது இல்லையப்பா....

இதுதான் இந்த
நாட்டோட சாபக்
கேடு சார்,

ஞாயிறு 30 2017

ஒரு புல்லு வாங்கி கொடுத்தாலும் அந்த இரகசியத்த....

அண்ணே ஒரு
சின்ன உதவி ண்ணே..

யேன் பெரிய
உதவின்னா நா
செய்ய மாட்டேன்னு
எப்ப சொன்னேன்.

எப்ப பாரு
உங்களுக்கு விளை
ஆட்டுதான்  போங்க..

அப்ப முடி
அடுத்த கடையில
வெட்ட போகவா..

அய்யோ அண்ணே
ஆ...ஊன்னா
கத்திய நீட்டுறிங்களே..


ஆரு..நானா..
கையில வளர்நத
நகத்த வெட்டுறதுக்கு
ஒரு பிளேடு
கூட இல்லாதவன
போயி கத்தி
வச்சு இருக்கேன்னு
சொல்லுறியே தம்பி


க......க.......க...
எனக்கு உங்க
பேச்ச கேட்டா
சிரிப்பு தாண்ணே.
வருது...க.க....க


அப்படியா... நீ
சிரிக்கிற மாதிரியா
பேசுறேன்  அப்போ
முடி வெட்டுற
கூலிய கேட்காதே...

வாயில அடிச்சது
பத்தாதுன்னு என்
வயித்தில அடிக்கிறீங்லே
அண்ணே........க..க.க...

சரி சிரித்தது
போதும் கவனமா
முடிய வெட்டு
நீ பாட்டுக்கு
கோணக்கா மாணக்கா
வெட்டி விடாத
அப்புறம் ஜல
தோசம் பிடித்துவிடும்.

உங்களுக்கா ஜல
தோசம் பிடிக்குமா
பொய் எல்லாம்
சொல்லாதீங்க அண்ணே

அட.உனக்கு
எப்படிடா தெரியும்..

கடந்த ஒரு
வருசமாக தாடீயொட
தாண்ணே திறியிறீங்க
செவ்வராஜ் கேட்டதுக்கு
காதலுமில்ல தோல்வியுமில்ல
தாடி வச்சதிலிருந்து
எப்ப குளிச்சாலும்
தலை துவட்டமா
விட்டாலும் சளி
ஜல தோசமே
பிடிக்கலை அதுக்குத்தான்
தாடி மீசை
வச்சுருக்கேன்னு அன்னிக்கு
சொல்லிங்க ண்ணே...

அட ஆமடா....

அத பத்திதாண்ணே
ஒரு சின்ன
உதவின்னு கேட்டேண்ணே

அப்படியா சொல்லு
உடனே செய்றேன்

செல்வராசு  கிட்ட
சொன்னது மாதிரி
யாரு கிட்டயும்
தாடி மீசை
வச்சால் ஜல
தோசம் பிடிப்பதில்லை
சொல்லா திங்கண்ணே..

ஏன்டா அப்படி


நீங்க சொன்னதிலிருந்து
வாரத்துக்கு ஒரு
தடவை முகச்
சவரம் செய்யிரவரு
தாடி மீசை
வச்சிட்டாருண்ணே அது
 மாதிரி எல்லாரும்
 தாடி மீசை
வைக்க ஆரம்பிச்சுட்டா
எம் பொழப்பு
கந்தலா போயிடும்ண்ணே

தம்பி கவலைப்
படாதே அண்ணண்கிட்ட
சொல்லிட்டல..ஒரு
புல்லு வாங்கித்
தந்தாலும் அந்த
இரகசியத்த சத்தியமா
அண்ணன் எவருகிட்டேயும்
யாருகிட்டயும் சொல்ல
மாட்டேன் போதுமா..

போதும் அண்ணே..
போதும் அண்ணே..


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...