பக்கங்கள்

சனி 30 2017

அறிவியலை அவமானப்படுத்தும் இஸ்ரோ மடச்சாம்பிராணிகள்..

பெரியாரின் ”கடவுள் மறுப்புக்” கருத்துக்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடியுமா ? 

அதற்கு மிக எளிதான வழி ஒன்று இருக்கிறது. 

உங்கள் குழந்தையிடம் பூமியின் தோற்றம், உயிர்களின் தோற்றம் பற்றி சொல்லிக் கொண்டே இருங்கள். 

சமயம் கிடைக்கும் போதெல்லாம் அது பற்றிய அறிவியல் தகவலை சொல்லிக் கொண்டே இருங்கள். 

ரொம்ப அறிவியலாக உள்ளே போய் கூட சொல்ல வேண்டாம். மேலோட்டமாக கொஞ்சம் யோசிக்க வைத்தாலே போதும். 

“இதப் பாரு. நீ ரெண்டு பேரும் இந்த இடத்துல இப்படி இருக்கோம் சரியா? 

எப்படி இங்க இப்படி இருக்கோம்னு பாரு. 500 கோடி வருசத்துக்கு முன்னாடி சூரியன்ல இருந்து ஒரு துண்டு பிஞ்சி விழுந்து சுத்தி சுத்தி சூரியன விட்டு தள்ளிப் போச்சு. 

அது குளுந்தாச்சி. கட்டியாச்சி. அதுதான் நம்ம பூமி. 

அப்புறம் பூமியோட தோற்றம் 450 கோடி வருசம் முன்னாடி தொடங்குது. 

So பூமி தோன்றும் போது அங்க எல்லாமே Non living things தான். கல்லு மண்ணு உலோகம் தண்ணி இப்படித்தான் இருந்திச்சி. இந்த Non living things ல இருந்து Living things எப்படி வந்திச்சி. 

யோசிச்சி பாரு இப்ப நீ உயிருள்ளதுக்கும் உயிர் இல்லாததுக்கும் எவ்ளோ வித்தியாசம் பாக்குற. உயிர் உள்ளது வளருது சாப்பிடுது  ஆனா உயிர் இல்லாதது வளராது சாப்பிடாது அசையாது. 

இந்த உயிர் இல்லாததுல இருந்து உயிர் உள்ளது வந்தது முக்கியமான Turning point ஆகும். 

அப்போ மக்கள் கிட்ட இது எப்படி நடந்தின்னு குழப்பம் இருக்கு. இதுக்கு ஒரு தீர்வ Urey miller சோதனை சொல்லுது. 

அதன்படி 300 கோடி வருசம் முன்னாடி இருக்கிற பூமியோட தன்மையை அதாவது மின்னல் எல்லாம் அதிக பலத்தோட இருக்கும், அந்த செட் அப் எல்லாம் செய்து சின்னதா ஒரு மாடல் சோதனை சாலைல உருவாக்கினாங்க. 

அதுல சில அமினோ ஆசிட்கள் கிடைச்சதாம். அமினோ ஆசிட் ஒரு உயிர் பொருளுக்கான அடிப்படை. அமினோ ஆசிட் வெச்சிதான் உயிர் செல் உருவாகும். 

அப்போ முதல்ல மின்னல் வெட்றதால நிறைய அமினோ ஆசிட் உருவாகுது, அதுல இருந்து ஒரு செல் உருவாகுது. அந்த ஒரு செல் பல கோடி வருசம் கழிச்சி அதுவே அதை உற்பத்தி பண்ணுது. 

அப்படி பல செல் உயிர்கள். பல வடிவமான உயிர்கள் வளருது. 

அப்புறம் டைனோசர் அட்டகாசம் பண்ணுது. அப்ப நாம பாலூட்டிகள் எல்லம் ஜுஜூப்பி. பிறகு விண்கல் மோதுனதால டைனோசர் அழியுது. அதுக்கப்புறம்தான் நாம Mammals பூமிய டாமினேட் செய்றோம். 

அதுல மனுசனுக்கு கொஞ்சம் அறிவு அதிகமா இருக்கு. 

ஆனா அவனுக்கு இயற்கை கொடுக்கிற பயம் அதிகம் இருக்கு, திடீருன்னு வெள்ளம் வருது, சுனாமி வருது, சூரியன் சாயங்காலம் மறைஞ்சிருது, எரிமலை வெடிக்குது. உடனே இதையெல்லாம் வணங்குறான். தயவு செய்து எங்கள எதுவும் செய்திராதீங்கன்னு கெஞ்சுறான். 

அடுத்து சில மனுசங்கள பாம்பு கொத்தி வெச்சிட்டு போயிருந்து. பாம்ப எப்படி டீல் பண்றதுன்னு அவனுக்கு தெரியல. உடனே பாம்பை ஒரு தெய்வமா வணங்குறான். 

இப்படித்தான் முதல் முதல்ல சாமி வர்றார். 

அப்போ நல்லா கவனி பூமி உருவாக தொடங்கி 500 கோடி வருசம் ஆகுதுன்னா அதுல கடவுள் எப்போ வர்றார். இப்போ 5000 வருசமாத்தான் வர்றார். 

இப்போ நீ ஒரு சினிமா பாக்குற சரியா. அதுல லாஸ்ட் சீன்லதான் கடவுள் வர்றார். அது மாதிரி அர்த்தம். 

இப்போ மனுசனுக்கு இன்னும் அறிவு ஜாஸ்தி ஆகுது. அவன் இயற்கைல இருந்து அவன ஒரளவுக்கு காப்பாத்திக்கிறான். இயற்கையை கடவுளா கும்பிடுற பழக்கம் கொஞ்சம் குறையுது. அதே சமயம் மனுசன் குரூப் குரூப்பா வாழ்றான். 

அப்போ ஒவ்வொரு குரூப்லையும் உள்ளுக்குள்ள சண்ட வருது. அந்த சண்டய எல்லாம் தீத்து வைக்கிறது அந்த குரூப்ல உள்ள வயசானாவங்கள தலைவனா வைக்கிறான். 

அது அப்படி கொஞ்சம் கொஞ்சமா வளந்து ஒரு குரூப்புக்கு தலைவன் கட்டாயம் வேணும்கிற கான்செப்ட் வருது. 

இப்போ என்னவாகுது தலைவனுக்கு கர்வம் வருது. 

தான் சொல்றத மத்தவங்க கேக்குறது அவனுக்கு பிடிச்சிருக்கு. உடனே என்ன செய்றான் நான் தான் கடவுள் அப்படின்னு சொல்றான். 

தலைவனுக்கு ஜால்ரா போடுறவங்க எல்லாம் ஆமா நீதான் கடவுள்ன்னு சொல்றாங்க. இப்ப இயற்கைல இருந்து கடவுள் மனுசன் வடிவமாகிப் போறாரு. 

முதல்ல செத்துப் போன தலைவர்கள சாமியா கும்பிட ஆரம்பிக்கிறாங்க. இப்படி கொஞ்சம் கொஞ்சமா மனுசன் சாமியை வெச்சி மத்தவங்கள அடக்க ஆரம்பிக்கிறான். 

நீ இப்ப கிளாஸ் லீடரா இருக்க. நீ எப்படி கிளாஸ்ல கண்டிரோல் பண்ணுவ. “நீ பேசினா மிஸ் திட்டுவாங்க “ அப்படித்தான மிரட்டுவ. 

அப்படித்தான் அந்த காலத்துல மன்னர்கள் மக்கள மிரட்டுனாங்க. “நீ இப்படி செய்தா அது சாமிக்கு பிடிக்காது. நாந்தான் சாமி வழி வந்தவன்” இப்படி சொன்னாங்க. 

இதுக்கப்புறம் அந்த மன்னனும் மன்னனுக்கு ஜால்ரா போடுற குரூப்பும் என்ன செய்யுது ”சாமி புக் “ ஒண்ண எழுதி வைக்குது. 

மனுசங்க எல்லாம் இந்த ”சாமிபுக்” சொல்ற்படிதான் கேக்கனும் அப்படின்னு திரும்ப திரும்ப சொல்லி மக்கள ஏமாத்துறாங்க. அந்த “சாமிபுக்ல” இருக்கிறது எல்லாமே பொய். அடுத்தவங்கள எப்படி அடக்கலாம். 

ஒடுக்கலாம்னுதன் அதுல இருக்கும். இப்படித்தான் கடவுள் நம்ம கூட வர்றார். சரியா இப்படி ஒரு கடவுள நம்ம மேல திணிக்கிறாங்க. 

சரி இப்படி திணிக்கிற கடவுள் எப்படி வேகமா ஹிட் ஆகுறாருன்னு பாரு. அதுதான் நீ கவனமா புரிஞ்சிக்கனும். 

இப்ப ஒரு குரங்கு இருக்கு. அதுக்கு ரொம்ப பசிக்குது. அப்போ அதோட மூளைக்கு சாப்பிட எதாவது கிடைக்காதான்னு இருக்கும். அதுக்கு மேல அதுக்கு எதுவும் தோணாது.

ஆனா மனுசன எடுத்துக்க அவனுக்கு சாப்பிட எதுவும் கிடைக்கலன்னு வெச்சிக்க “சாப்பிட எதுவும் கிடைக்காதாங்கிற” அந்த தவிப்பு ஃபீல் இருக்கில்ல, அத கடவுளா மாத்திப்பான். 

கடவுளே எனக்கு சாப்பிட எதாவது கொடு அப்படின்னு சொல்லிப்பான். அவனுக்கு அதச் சொல்லிக் கொடுத்தது அவனோட அம்மா அப்பா. அவன் கடவுளேன்னு சொல்லிகிட்டே போகும் போது சாப்பிட எதாவது கிடைச்சா உடனே கடவுள்தான் அதக் கொடுத்தாருன்னு நினைச்சிக்கிறான். 

அப்போ மனுசனோட சொந்த Emotions இருக்கு பாரு.  

அதுக்கெல்லாம் கடவுள் வடிவம் கொடுக்கிறான். நீ ஹோம்வொர்க் செய்யாம போவ உடனே நீ வேண்டுவ “கடவுளே இன்னைக்கு மிஸ் ஸ்கூலுக்கு வரக் கூடாது”. 
கிரிக்கட் பாக்குறோம் “கடவுளே இந்தியா ஜெயிக்கனும்”
 
நல்லா கவனிச்சா இது எல்லாம் மனுஷனோட ஆசைகள்.

இந்த ஆசைகளப் போய் கடவுள் கடவுள்ன்னு சொல்லிட்டு இருப்போம். 

தினமும் நமக்கு எதாவது விசயம் நடக்கனும்னு இருக்கும் அப்படித்தான. அப்போ ஆடோமெட்டிக்காக கடவுளா வேண்ட ஆரம்பிச்சிருவோம். 

இப்படித்தான் கடவுள் ஹிட் ஆகுறாரு. இப்படித்தான் ஒவ்வொரு மனுசனுக்குள்ளும் கடவுள் தந்திரமா உள்ளே வந்திருவாரு. 

So இப்படி தனி தனியா ஒவ்வொருத்தருக்குள்ள இருக்கிற கடவுள, அந்த “சாமி புக்” கோஷ்டி இருக்கு பாரு. 

அவனுங்க ஈஸியா இழுத்திருவானுங்க. உன் மனுசல இருக்கிற கடவுள்தான் இந்த சாமிபுக்ல இருக்கு . 

இந்த கடவுளுக்கு இதப் பண்ணினா உனக்கு நல்லது செய்வாரு. 

நீ இதச் செய் அப்படின்னு சொல்லும். 

So கடவுள சரியா புரிஞ்சிகிட்டா ஹட்டோரி மாதிரி, டோரேமான் மாதிரி, ஸ்பைடர் மேன் மாதிரி அவரும் ஒரு சுவாரஸ்மான கேரக்டரா தெரியும். அவர் மேல பயமோ பதற்றமோ கொள்ளத் தேவையில்லை. ஏன்னா அப்படி ஒருத்தர்தான் கிடையாதே. Nature தான் உண்மை அப்படித்தானே. ”

இப்படி அறிவியலைச் சொன்னாலே கடவுள் மூடநம்பிக்கையில் இருந்து குழந்தைகளை மீட்கலாம். 

சும்மா கடவுள் கிடையாது. கும்பிடாதே என்றெல்லாம் சொல்வதினால் எப்பலனும் இல்லை. அறிவியலைச் சொல்லி அதைச் செய்ய வேண்டும். 

சமீபத்தில் ஒரு பேட்டரி பல்ப் வேலை செய்யும் வீடியோவை மகள் பேசுவதாக நான் எடுப்பதாக தயாரானேன். 

அதை எடுக்கும் முன் மனைவி மகளுக்கு விபூதி பூசி விட்டு சென்றார் 

நான் ரெடி ஸ்டார்ட் என்று எடுக்கப் போகும் முன் மகள் தடுத்தாள். என்ன என்றேன்.

“அப்பா சொல்லப் போறது சயின்ஸ். விபூதி நல்லா இருக்குமா. நான் அழிச்சிரவா” என்று விபூதியை எடுத்து விட்டு அறிவியல் பேசலாலானாள். 

அச்செயல் கண்டு பூரித்துப் போனேன். 

இஸ்ரோவில் இருந்து கொண்டு எத்தனையோ மடச்சாரம்பிராணி இந்திய விஞ்ஞானிகள் நெற்றியில் பட்டை நாமத்தோடு அறிவியலை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

கேட்டால் ”மதம் ஆன்மாவை செழுமைப்படுத்தும் அறிவியல்” என்று உளறி வைப்பான்கள். 

இவளோ விபூதியோடு அறிவியல் பேசுவதை தவறு என்கிறாள். 

ஏதோ ஒன்றை சரியாக சொல்லிக் கொடுத்திருக்கிறேன்தான் போல என்று மகிழ்ந்து கொண்டேன். 

உங்கள் குழந்தைகளை பெரியார் சொன்ன பகுத்தறிவு வழியில் கொண்டு போவதைப் போல நீங்கள் அவர்களுக்கு  செய்யும் நன்மை எதுவுமில்லை. 
.
 நன்றி!    whasapp seithikalil eduthathu

வெள்ளி 29 2017

சரஸ்வதி பூஜை பற்றி பெரியார் பேசியது




சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை! கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும், 

வித்தை வரும் என்று சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, 

நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு, நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும்.  

அதாவது சரஸ்வதி என்கின்ற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில் அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி அதற்கு உடன்படாமல் பெண் மான் உரு எடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் வேடம்  உருவெடுத்து அவளைப் பின்தொமடர்ந்து ஓடவும், சிவன் வேடன்  உருவெடுத்து ஆண் மானைக்கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக சம்மதித்தாக சரஸ்வதி உற்பவக்கதை சொல்லுகிறது.

அதாவது தன்னை பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது. மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்கு பேத்தி என்று சொல்லப்படுகின்றது. அதாவது பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின்மீது  ஆசைப்பட்டபோது வெளியான இந்திரீயத்தை ஒரு குடத்தில் விட்டு வைக்க, அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாகி அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்றது. 

இதனால் பிரம்மனுக்கு சரஸ்வதி மகன் வயிற்றுப் பேத்தி ஆகிறாள். 

எனவே, சரஸ்வதியின் பிறப்பும், வளர்ப்பும், நடவடிக்கையும் மேற்படி பார்ப்பனப் புராணப்படி மெத்த ஆபாசமும், ஒழுக்க ஈனமுமானதாகும்.

நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால்  வித்தையின் பயன் தொழிலென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் ஒரு நாளைக் குறித்துக்கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி புஸ்தகங்களையும், ஆயுதங்களையும் வைத்து பூஜை செய்கிறார்கள். 

இந்த பூஜையில் அரசன் தனது ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள், திராசு, படிக்கல், அளவு மரக்கால், படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும், தொழிலாளிகள் தங்கள் தொழில் ஆயுதங்களையும், இயந்திர சாலைக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும், மாணாக்கர்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சீலைகளையும், நகைகளையும், வாத்தியார்கள் வாத்தியக் கருவிகளையும் மற்றும் இதுபோலவே ஒவ்வொருவர்களும் அவரவர்கள் லட்சியத்திற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூஜை செய்கின்றார்கள். 

இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய் பூஜை செலவு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தை செலவு செய்தும், போதாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட யாதொரு நன்மையும் ஏற்படுவதாக சொல்லுவதற்கே இல்லாமல் இருக்கின்றது.

ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த,- வருகின்ற அரசர்களெல்லாம் இன்றைய தினம் நமது நாட்டில் ஆயுதத்தை வைத்து பூஜை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கி முனையில் மண்டி போட்டு சலாம் செய்துகொண்டு இஸ்பேட் ராஜாக்களாக இருந்து வருகின்றார்களே ஒழிய ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகிய பூஜையின் பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர்களைக் காணோம்.

சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில்  ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து  பொய் கணக்கு எழுதாமலோ, தப்பு நிறை நிறுக்காமலோ, குறை அளவு அளக்காமலோ இருக்கிறார் என்று சொல்ல முடியாது. 

அதுபோலவே கைத் தொழிலாளிக்கும் தங்கள் ஆயுதங்களிடத்தில்  வெகு பக்தியாய் அவைகளை கழுவி, விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நடந்துகொள்கின்றார்கள் என்றாவது  அல்லது அவர்களுக்கு தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லுவதற்கு இல்லாமலே இருக்கின்றார்கள். 

அது போலவே புஸ்தகங்களையும், பென்சிலையும், கிழிந்த காகிதக் குப்பைகளையும், சந்தனப் பொட்டு போட்டு பூஜை செய்கின்றார்களே அல்லாமல் காலோ, கையோபட்டுவிட்டால் தொட்டு கண்ணில் ஒத்திக் கும்பிடுகின்றார்களே அல்லாமல் நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5 பேர்களுக்குள்ளாகவே இருந்து வருகின்றார்கள்.

இவ்வளவு ஆயுத பூஜை செய்தும், சரஸ்வதி பூஜை செய்தும், இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் அடிமைகளாக இருக்கின்றார்கள், நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வருகிறார்கள். 

நமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக்  கருதி வேறு நாட்டிற்கு குடி போகின்றார்கள். 

நமது மக்கள் நூற்றுக்கு அய்ந்து பேரே படித்திருக்கிறார்கள். 

சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள்.

இதன் காரணம் என்ன?

நாம் செய்யும் பூஜைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய் கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்கவேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம். வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ, கல்வி தெய்வம் என்கின்ற எண்ணமோ சுத்தமாய் கிடையாது.

அன்றியும் நாம் காகிதத்தையும் எழுத்தையும்  சரஸ்வதியாய் கருதி தொட்டுக்  கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்கு கல்வி இல்லை. ஆனால், வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர்களில் நூற்றுக்கு  நூறு ஆண்களும், நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள். 

உண்மையிலேயே சரஸ்வதி என்று ஒரு தெய்வமிருந்திருக்குமானால் பூசை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும், கல்வி மான்களாகவும் செய்யுமா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.

உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகளுக்கு உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால் அதை பூசை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும், தொழிலற்றும், வியாபார மற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூசை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள். இந்தப் பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்.

ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது, இதற்காக ஜனங்கள் பணம் செலவு  செய்வது, பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை, பொரி, சுண்டல், வடை, மேள வாத்தியம் வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்கு  தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர்போக ரயில் சார்ஜ் ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப் பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா என்றுதான் கேட்கின்றேன். 

ஒரு வருஷத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும், நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கி விடும். இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.

(ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது - 20.10.1929 குடிஅரசு இதழில் வெளியானது).

வியாழன் 28 2017

அதிசியம்தான்........



2002ல் குஜராத்
இனப் படு கொலையின்
போது உயர்
நீதி மன்ற
நீதிபதிகளே  உயிர்
தப்ப ஒட
வேண்டிய நிலையை
உருவாக்கிய கலவர
நாயகனே பிரதமராக
அமர்ந்திருக்கும் நாட்டில்
ஆன்மீக பொறுக்கி
ராம் ரகீம்க்கு எதிராக
தீர்ப்பு வழங்கிய
நீதிபதி கொல்லப்படாததது
அதிசியம்தான்............!!!!!!!!!!!!!!!!!

செவ்வாய் 26 2017

மகா யாகம் நடத்தியவரின் புத்தசாலித்தனம்....


பழைய நோட்டுகளை
ஒழித்துக் கட்டியதால்
அரசுக்கு  கிடைத்த
லாபம் 16,000 கோடிரூபாய்

புதிய ரூபாய்
நோட்டுகளை அச்சடிக்க
ஆன செலவு
21.000 கோடி ரூபாய்..

மகா யாகம்
நடத்தியவரின் புத்தி
சாலிதனம் இதுதான்.


திங்கள் 25 2017

ஒழுக்கம் கெட்டாலும் அவர்கள்......????


இந்திய உலகத்தில்
தர்மத்தை நிலை
நாட்டும் பொருட்டு
உயர் குலத்தில்
பிறந்த மேன்மக்கள்
ஒழுக்கம் கெட்ட
எத்தகைய காரியங்களிலும்
தம்மை ஈடு
படுத்திக் கொளவரர்கள்

அதாவது.......
ஒழுக்கம் கெட்டாலும்
அவர்கள் மேன் மக்கள்..

ஞாயிறு 24 2017

ஆன்மீக பொறுக்கியின் பொறுக்கி உபதேசம்...


“நான் கடவுளின் அவதாரம்
நான் கண்ணனை போன்றவன்
நீங்கள் கோபியரை போன்றவர்கள்
உங்கள் உள்ளத்தை எனக்கு
முழுவதுமாக ஒப்படைத்து இருக்கிறீர்கள்
உடலையும் என்னிடம் ஒப்படைத்தால்
உங்கள் பக்தி  முழுமைப்படும்”

----வல்லுறவு--கொலை--விரை நீக்கம்
பிறன்மனை அபகரிப்பு புகழ்
ஆன்மீக பொறுக்கி ராம் ரகிம்




ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...