பக்கங்கள்

சனி 19 2014

இப்படியும் விளம்பரம் செய்து படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தலாம்...

படம்.tamil.thehindu.com


ஏற்கனவே, சூப்பர் ஸ்டார் குசு போட்டதை கண்ணும் காது வைத்து மனம் கமழும் வசனையாக ஊடகங்கள் பரப்பின.

சிங்கப்பூர் சென்று அதி நவீன சிகிச்சை செய்து வாழ்நாளை அதிகப் படுத்திக் கொண்டதால் காலியான கல்லாவை நிரப்புவதற்க்காக கோச்சடையான் படத்தை டூப் போட்டு எடுத்தார்கள்.

டூப் போட்டு நடித்ததினால் அந்தப் படத்தின் மூலமாக கல்லா நிரம்பவில்லை போலும்.

அதனால், மீண்டும் கல்லாவை நிரப்பும் குறியோடு, “லிங்கா”வில் இரட்டை வேடம் ஏற்று.டூப்பு போடாமல் சூப்பர் ஸ்டார் சண்டை காட்சியில் நடித்து கொண்டு இருக்கும் பொழுது மயங்கி விழுந்தார். அல்ல அல்ல மயங்கி சரிந்தார் என்றும்

உடனே.பதற்றமடைந்த படம்பிடித்துக் கொண்டு இருந்தவர்கள். ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ..மருத்துவர்களை சூட்டிங் ஸ்பாட்டுக்கு வரவழைக்கப்பட்டு,வந்த மருத்துவர்கள் சோதித்து பார்த்து “அலர்ஜீ காரணமாக மயங்கியதாக தெரிவித்தார்களாம்.

500 படத்தில் நடித்த ஒருவர் மருத்துவ சிகிச்சைக்கு உதவ வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு காத்துகிடக்கிறார்.

இன்னொரு நடிகருக்கோ, மருத்துவமனையையே வரவழைத்து சிகிச்சை செய்யப்படுகிறது.

படத்தை இயக்குபவரோ, சூப்பர் ஸ்டார் பூரண நலத்துடன் இருப்பதாக மறுப்பு செய்தி வெளியிடுகிறார்.

கல்லாவை நிரப்புவதற்கு ,ஒரு படத்திற்கும் அதில் நடிக்கும் நடிகர்க்கும்  எப்படி எப்படியெல்லாம் விளம்பரம் கொடுத்து எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார்கள். பாருங்கள்.




ஐ.எஸ.ஐ முத்திரையிட்ட மின்சாரத்தையே பயன்படுத்துங்கள்.!!!


l





சட்டையை  தேய்பத்ற்க்காக தேய்ப்பவரிடம் சென்று, சட்டையை தேய்த்து கையோடு வாங்கி வருவதற்க்காக அவருக்கு அருகில் நின்றேன்.

அப்போது பக்கத்து கடையின் வாசல் திண்டில் அமர்ந்து ஒருவர் செய்திகளை படித்துக் கொண்டு இருந்தார். சிறிது சத்தத்துடன் படித்து கொண்டே வந்த பொழுது...

மின்சாரத்தை சிக்கனப்படுத்த டிப்ஸ் என்று வாசித்துவிட்டு படிக்க ஆரம்பித்தார்.

டிப்ஸ் என்று  அவர் படிக்க ஆரம்பித்தவுடன். நானும் அவர் படிப்பதை காது கொடுத்து கேட்டேன்.

 ஐ.எஸ.ஐ  முத்திரையிட்ட மின்சாரத்தையே பயன் படுத்த வேண்டும். 

சுவிட்சுகள்,பிளக்குகளை எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும் என்று வாசித்தார்.

கிண்டலுக்கு வாசிக்கிறாரா என்று அவர் முகத்தை பார்த்தால் எந்தவித சலனமும் தெரியவில்லை.

சட்டை தேய்ப்பவரிடம் கேட்டால் அவரைப்பற்றி தனக்கு  தெரியவில்லை.என்றார்.

ஐ.எஸ.ஐ  முத்திரையிட்ட மின்சாரத்தையே பயன் படுத்துங்கள் என்று அவருதான் அப்படி படித்தாரா? அல்லது எனக்குத்தான் அப்படி கேட்டதா??? அல்லது

மின்சாரத்துக்கு ஐ.எஸ,ஐ முத்திரைதான் இருக்கா...ஒரு வெளக்கெண்ணையும் எனக்கு புரியாமல் தவித்த போது...

 காதுல, காது கேட்கும் கருவிய வாங்கி மாட்டுறா வெண்ணெ...என்று ஒரு அசீரீரி  ஒலித்தது.


வெள்ளி 18 2014

அது கொடியவர்களின் கூடாரம்...!!!


சேப்பாக்கத்தில் இருக்கும் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்
tamil.thehindu.com


கிரி கெட் கிளப்பா...-அது
பேண்டு  போட்ட
கொடியவர்களின் கூடாரம்

அந்த   பேண்டு
போட்ட கொடியவர்களின்
கூடாரத்திலே புத்தக
வெளியீடா....அந்த.
வெளியீட்டிற்கு வேட்டி
கட்டியவர்களுக்கு.. வரச்
சொல்லி அழைப்பிதழ்களா...???

வெட்கம்...வெட்கம்
பேண்டு போட்ட
கொடியவர்களின்
கூடாரத்துக்கு..............

அவமானம் அவமானம்
வேட்டி கட்டி
சென்றவர்களுக்கு............

போடா கேனப்பயலே
சங்ருத்தவன். செத்த பிறகு
அவன் வீட்டுக்கு
சென்று துக்கம்
விசாரிக்க போவது
மானங்கெட்ட தனம்
இல்லையாம் ..டா...
பெருந் தன்மையாம்மடா.......

வியாழன் 17 2014

கல்லா இல்லாததால் சிகிச்சைக்கு மனு கொடுத்த நடிகர்.


பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா என்பவர் அவருக்கு வயது 74, இவர் கடந்த 50 வருடங்களாக திரைப்படங்களில் நடித்து  வந்தார்

அப்படி 50 வருடங்களில் 500 படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்ததால் இவர் வீட்டு கல்லா நிரம்பவில்லை. இவர் கல்லா நிரம்பிருந்தா சிங்கப்பூர்ர்க்கோ...ஆ...ஆமெரிக்காவுக்கோ சென்று அதி நவீன சிகிச்சை முடிந்து மீண்டும் திரைப்படங்களில் நடித்து காலியான கல்லாவை நிரப்பி இருப்பார்.  இவருக்கு பெருமாளு கண் திறக்கவில்லை..

உடல் நலத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு வழி இல்லாததால், பெரிய கதாநாயகர்களுடன் உடன் நடித்திருந்தாலும் அவர்களிடம் உதவி கேட்டு செல்லாமல் .. பச்சை தமிழர்கள் கோலோச்சும் நடிகர்கள் சங்கத்திடம் போய் நிற்காமல்..........

மாவட்ட ஆட்சியரிடம் சென்று தன் உடலை்நிலை தேற  மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு மனு கொடுத்துள்ளார்.  

குப்பையை கிளறும் கோழி......




படம்mpmathivanan.blogspot.com


கொக்கரக்கோ-என்று
கூவிய  சேவலும்
குப்பையை கிளறிய
கோழியும்- அந்த
தெருவின் முச்சந்தில்
இருந்ததுகள்...........

வேட்டி கட்டிய
ஆள் அரவம்
கேட்ட சேவல்
தன் தலையை
நீண்டு உயர்த்தி
அப்படியும் இப்படியும்
திருப்பி அரவத்தை
கூர்ந்து கேட்டது.

கோழியோ சேவலின்
தைரியத்தில் எதையும்
கண்டு கொள்ளாமல்
குப்பையை கிளறிக்
கொண்டு இருந்தது

செவ்வாய் 15 2014

நிழலை நிஜமென்று காட்டுவது சினிமாக்காரர்களின் குற்றம்.

படம்.nammatamilcinema.com



காக்கி சட்டை படத்தில் வில்லனாக நடித்த சத்யராசின் வசனத்தையே படத்தின் தலைப்பாக வைத்து “தகடு தகடு”என்ற பெயரில் தயாரித்த படத்தின் பாடல் வெளியீட்டில்

பாடல்களை பெற்றுக் கொண்ட சினிமாக்காரர்களின் தமிழன்ஆன நடிகர் பேசியபோது  சினிமாவை அழிக்கும் சக்தியாக திருட்டு வி.சி.டி வளர்ந்து இருக்கிறது. தகடு தகடு என்ற படமும் வி.சி.டியை பற்றியதுதான்.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபோல் திருட்டு வி.சி.டியையும் ஒழிக்க முடியாது. ஏனென்றால் இந்தக் குற்றத்தில் மக்களும் ஈடுபடுகிறார்கள் என்றார்.

ஆக.......அவரின் கூற்று படி......பார்த்தால்.............
.
 மக்களின் பொழுது போக்கை காசு பறிக்கும் தொழிலாக மாற்றியது .அந்த மக்களின் சிந்தனையை மழுங்கடித்தது ,நிழலை நிஜமென்று நம்ப வைத்தது போன்றவை சினிமாக்காரர்களின் குற்றம்.

இந்த குற்றத்தை செய்யும்   சினிமாக்காரர்கள் திருந்தாதவரை. நிழலை நிஜமென்று நம்பவதும் ஒழியாது.  நிழலைக்காட்டி காசு பறிப்பதும் ஓயாது.

ஆன்மீக சேவை என்ற பெயரில் அடிமை முறை ..

ஹிந்து ஆன்மீக ,சேவை என்ற பெயிரில் ஆரிய பண்பாட்டை பிரபலபடுத்தும் நவீன உத்திகளில் ஒன்று.





சென்னையில் நடைபெற்று வரும் ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆச்சார்ய வந்தனம் நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்து ஆசிபெறும் மாணவிகள்.
சென்னையில் நடைபெற்று வரும் ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆச்சார்ய வந்தனம் நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்து ஆசிபெறும் மாணவிகள்.






திங்கள் 14 2014

காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தூக்கிட்டு போன கதை


படம்.vayalaan.blogspot.com
காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தூக்கிட்டு போன கதை  உங்களுக்கு தெரியுமா?  அந்தக் கதை இதுதான் படியுங்கள்.

சாதி பெருமை பேசிய நடிகன், நடிக்காத வேடமே இல்லை என்று பில்டப் செய்வார்கள் அவரின் ரசிக குஞ்சுமணிகள்.

மன்றாடியர் வி.சி.கணேசன் என்ற நடிகர். “கை கொடுக்கும் கை” என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் பாரதி யார் வேடமிட்டு நடித்திருந்தார்.

அதற்கு முன்பே, இவருக்கு பாரதி வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற தீராத வெறி..

பாரதி கதையை யாராவது கொண்டு வந்து கொடுத்தால் உடனே.கால்ஷீட் கொடுத்து நடிக்க தயாராக இருந்தார்.

ஒரு பாடலில் பாரதி யாராக நடித்த படத்தை பார்த்தவர்கள், அச்ச அசலாக பாரதி மாதிரியே இருக்கிறீர்கள் என்று நடிகரை ஏற்றிவிட, சாதி பெருமை பேசிய நடிகரோ.. பாரதி நடிப்புக்காக ஏங்கிக் கொண்டு காத்து  கிடந்தார்.

இதற்கிடையில் சாதிக் குலப் பெருமையை நிலை நாட்டிய சாதிக் குலகொழுந்தான ,ஆஸ்கர் நாய்கனும்.பாரதியாக நடிக்க வேண்டும் என்று ஆசையை வளர்த்துக் கொண்டு ஏங்கிக் கொண்டு காத்து கிடந்தார்.

பாரதியாக தான் நடிக்க விரும்பவதாக சாதி குலக்கொழுந்து சொன்னபோது சாதி பெருமை பேசிய நடிகர்,சாதிக் குலக் கொழுந்தை கட்டி அணைத்து உச்சி மோர்ந்து வாழ்த்து சொன்னது.

ஆக. இந்த ரெண்டும் பாரதியாக நடிக்க  காத்து கொண்டு இருந்தது.

2000ம் ஆண்டில் பாரதி கதையை பாரதி பெயரில் படமெடுக்க போவதாக அறிவிப்பு  வந்த நிலையில்....

காத்து கிடந்த ரெண்டு இதுகளுமே எதிர் பார்க்காத அளவுக்கு.மார்வாடி சேட்டு மாதிரி இருந்த  சயாஜி என்ற  வில்லன் நடிகருக்கு சேர்ந்தது பாரதியாக நடிப்பதற்கு...........

இப்போது தலைப்பை படித்து பாருங்கள். உங்களுக்கு புரியும். “காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தூக்கிட்டு போன கதை..”

நன்றி! ...பிலிம் நியூஸ் ஆனந்தன்.

படம்..www.vinavu.com


அதிக விலை கொடுத்து படம் பார்த்த ரசிகனின் வலி யாருக்கு தெரியும்....

விஷால் - லட்சுமி மேனன் முத்தக் காட்சி லீக் ஆனதால் பரபரப்பு
படம் cinema.dinakaran.com

















 திரையரங்குகள் குறைந்து போன  இந்தக் காலத்தில் ஒரு திரையரங்கில் வெளியான ஒரு  டப்பா படத்துக்கு அதிக விலை கொடுத்து படம் பார்த்த ரசிகனின் வலி யாருக்கும் தெரியும்......

அவனைப்போன்று அதிக விலை கொடுத்து டப்பா படத்தை பார்த்து நொந்து போன ரசிகனுக்குத்தான் தெரியும்.

இதைத் தெரியாத புரியாத.அல்லது புரிந்து தெரியாமல் நடிக்கும் நடிகரும் தயாரிப்பாளருமான ஒருவர்.

ஒரு முத்தத்துக்கு. சம்பளத்தைவிட தனியாக பத்து லட்சம் கொடுத்து திரைப்படம் தயாரித்த தயாரிப்பாளருக்கத்தான் அதன் வலி தெரியும் என்று கூறியுள்ளார்.

தற்போது தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு நடந்தவரும் பகுதியில் உள்ளுர் கேபிள் தொலைக்காட்சியில் புதிய படங்கள் ஒளிபரப்ப பட்டதால் வெகுண்டு எழுந்த  கதாநாயக நடிகர் உள்ளுர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இதுபற்றி செய்தி சேகரிப்பாளரிடம் அந்த நடிகர் கூறியதாவது.

நான் படப்பிடிப்பு முடிந்து எனது அறையில் இருந்தபோது,உள்ளுர்  கேபிள் தொலைக்காட்சியில் புதிய படங்களான வடகறி, உன் சமையலறையில் போன்ற படங்கள் ஒளிபரப்பப்பட்டன. இதுபற்றி ஆதாரத்துடன காவல் நிலையத்தில் புகார் செய்தேன் என்றார்.


 அதிக விலை விக்கிற டிக்கெட்டை வாங்கி ..யாருப்பா படம் பார்க்க சொன்னது என்று ரசிகர்களை கேட்பது  மாதிரி

இவர....யாருப்பா..ஒரு முத்தத்துக்கு பத்து லட்சம் கொடுத்து .திரைப்படம் தயாரிக்கச் சொன்னது.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...