பக்கங்கள்

சனி 02 2021

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...1

 யார் துறவி ??? சொல்லுங்க.....

Villavan Ramadoss தன்னுடைய நிலையைப் புதுப்பித்துள்ளார்.
தஞ்சையில் துறவி இளங்கோவன் என்றொரு திமுககாரர் இருந்தார் (துறவி என்பது அவருக்கு எப்போதோ தரப்பட்ட அடைமொழி, எல்லாவற்றையும் இழந்து அரசியல் செய்ததால் வந்திருக்கலாம்). திருவையாறு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். (நம்மாழ்வாரின் சொந்த சகோதரர்)

கட்சிக்காக அரசு வேலையை விட்டவர். சொத்துக்களை விற்றவர். சாவதற்கு முதல்நாள்வரை நகரப்பேருந்தில் பயணித்து வாடகை வீட்டில் வசிக்கும் வாழ்வை வாழ்ந்தவர்.

அவரால் சொத்துக்களை இழந்தவர்கள் யாரும் இல்லை, எந்த கலவரமும் அவரால் தோன்றிவிடவில்லை. நாத்திகரான அவரால் எந்த ஆத்திகனும் அச்சுறுத்தல்களை சந்திக்கவில்லை. முக்கியமாக பொறுக்கி கும்பலுக்கு அமைப்பு அடையாளம் கொடுக்கும் இழிந்த வாழ்வை அவர் வாழவில்லை.
இப்ப சொல்லுங்க
,
இளங்கோவனும் துறவி, ராம்கோபாலனும் துறவியா?

வெள்ளி 01 2021

காதல் : சாதி வெறியர்கள் இப்போது அதிகம் புலம்புவது ஏன்?

காதல் : சாதி வெறியர்கள் இப்போது அதிகம் புலம்புவது ஏன்? Love Marriage | Villavan Ramadoss | ThinnaiTV

ஜாதிவெறியர்களின் பல ஆண்டுகால டெம்ப்ளேட் மீம் ஒன்றை துரை முருகன் மகன் கதிர் ஆனந்த் பகிர்ந்துள்ளார். அது திமுகவினரால்கூட பரவலாக கண்டிக்கப்பட்டது. இது ஒரு நபரின் சாதிவெறி என்று புரிந்துகொள்வது தவறானது.
சாதிவெறி இயக்கங்கள் முன்னெப்போதையும்விட இப்போது நிதி வலிமையோடு இருக்கின்றன. அவர்களால் சாதாரண மக்களிடையே செல்வாக்கு செலுத்த முடிகிறது என்பதும் கசப்பான உண்மை. அவர்கள் காதல் மணங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதை முதல் லட்சியமாக வைத்திருக்கிறார்கள்.
மறுபுறம் சாதிகளுக்கு இடையே திருமணம் நடப்பது தவிர்க்க இயலாததாகி வருகிறது. பெரிய அரசியல் விரும்பம் இல்லாமல் இருக்கும் மக்கள் இந்த இருவேறு கள நிலவரங்களுக்கு இடையே அல்லாடுகிறார்கள்.
இவர்களுக்கு தேவைப்படும் வகையில், இவ்விவகாரத்தில் என்ன செய்யலாம் செய்யக்கூடாது என்பது பற்றி திண்ணை டிவி பக்கத்திற்கு தயாரித்த காணொளி. அரசியல் காணொளி அல்ல, ஆகவே அரசியல் பிடிக்காத பெற்றோர்களுக்கும் பரிந்துரைக்கலாம்.


புதன் 29 2021

மீண்டும்...மீண்டும் தொடரும்... சாதி ஆணவக் படுகொலைகள் !

 






திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் ஆவூர் கிராமத்தில் வசிக்கும் சேகர் என்வரின் மகள் S.அமுலு. வயது 29,இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார்.


கும்மிடிப்பூண்டி வட்டம் பெரியபாளையம் அருகாமையில் உள்ள காரணி என்ற கிராமத்தில் வசிக்கும் அண்ணாமலை என்பவரின் மகனான A.கௌதமன்,வயது 32, என்பவரும் ரயிலில் பணிக்கு வரும் போதும் செல்லும் போதும் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காதலாக மாறி கிட்டதட்ட எட்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.


இந்த நிலையில் இவர்கள் இருவரும் காதலிப்பதை அறிந்து கேள்விப்பட்ட கவுதமனின் பெற்றோர். கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். கவுதமன் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் அமுலு தலித் சமூக  பிரிவை சேர்ந்தவர் இதனால் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொண்டார் கவுதமன். 


இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியில் 29.03.2019,-அன்று இருவரும் திருமணம் செய்துக் கொண்டு சென்னையிலேயே தேனாம்பேட்டை DMS அருகிலுள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். விடுமுறை நாளான ஞாயிற்று கிழமைகளில் கவுதமன் சொந்த ஊரான காரணி சென்று வருவார்.


இந்த சூழலில் தான் கவுதமனிடம் அவரது பெற்றோர் மற்றும் அண்ணன் சீனிவாசன் மற்றும் அக்காக்கள் மணிமேகலை,கோமதி இருவரும் நீ அவளை விட்டு, விட்டு வந்து விடு உனக்கு வேறு திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறி வந்துள்ளனர். மிகவும் வற்புறுத்தியும் இருக்கிறார்கள். இதன் காரணமாக கவுதமன் கடந்த ஒரு வருடமாக தன் வீடான காரணிக்கு போவதை நிறுத்திக்கொண்டார்.


2020,-ல் கருவுற்ற அமுலுக்கு 18.08.21'ல் அன்று சென்னை RSMS. என்ற மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது இந்த நிலையில் குடும்ப சூழலின் காரணமாக கடந்த ஜனவரியில் 2021,ல் இருந்து ஆவூர் கிராமத்தில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர் இந்த தம்பதிகள்.


17.09.21, அன்று காலையில் 06, மணிக்கு கவுதமனின் செல் போனுக்கு அவரின்  தாத்தாவான ராதா ரெட்டியார் இறந்து விட்டார் என்று தகவல் வருகிறது  இதை கேள்விப்பட்டவுடன் கடந்த ஒரு வருடமாக ஊருக்கு போகாத அவர் தன் பைக்கை எடுத்துக் கொண்டு காரணி கிராமம் நோக்கி போகிறார். அன்று போனவர் தான் ,கவுதமன் இன்று வரை வீடு திரும்பவில்லை.


20.09.21- இரவு அன்று அமுலுவின் அண்ணன் பிரவீண் என்பவர் தன் தங்கையின் கணவரான கவுதமனை காண்பதற்காக தேடிச்சென்ற போது அந்த ஊரில் கவுதமனின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர், பேனர்கள் இருப்பதை கண்டு அதிர்ந்து போகிறார். தன் தங்கைக்கு தகவல் தெரிவிக்கிறார். கணவர் இறந்ததை கூட மனைவியான அமுலுக்கு தெரிவிக்காமல் கவுதமனின் சடலத்தை எரித்து விட்டனர்.


அவனுடைய பெற்றோர்கள் எதற்காக உடனே கவுதமனை எரித்தார்கள் அவர்கள் செய்த கொலைக்கான ஆதாரங்கள், தடயங்களை அழித்திடவா என்று கேள்வி எழுப்புகிறாள் அந்த பெண்.கையில் கைகுழந்தையுடன் கண்ணீர் வழிய காத்திருக்கிறாள் அந்த இளம்பெண். அமுலு.  சாதி ஆணவக் கொலை செய்து என் கணவரை கொன்று விட்டனரே .இனி எனக்கு யார்? என்று அந்த பெண் கதறும் போது நம் கண்கள் குலம்மாகி விட்டது. ஒரே மாதமான குழந்தை தன் தந்தையின் முகம் காணாமலேயே தாயின் கரங்களில் அனாதையாக தவழ்கிறது.


இந்த கொடூரமான சம்பவம் சம்மந்தமாக 21.09.2021, தேதி இரவு 21.30  மணிக்கு ஆரணி காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது எண்.259/பிரிவு174, குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 201,இதவி- வில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

எனவே மேற்கண்ட நபர்களை விசாரிக்க வேண்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மர்மமான முறையில் சாதி ஆணவக் படுகொலை செய்யப்பட்ட கவுதமன் மரணத்திற்கு நீதி கிடைக்கவேண்டும்.


கவுதமனின் அன்பு மனைவி அமலுக்கும் அந்த  குழந்தைக்கும் நீதி கிடைத்திட வேண்டும். என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது .தொடர்ந்து நடைப்பெறும் சாதி ஆணவக் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து களத்தில் நிற்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி.


  சாதி ஒழிப்பே ! சமூக விடுதலை !!

செவ்வாய் 28 2021

சாதி ஆதிக்க போலீசின் கைதை கொண்டாடிய மக்கள்..!!!!

 



கண்ணகி கொலை வழக்கில் சாதிவெறி போலீஸ் தமிழ்மாறன்.


ஸ்டாலின் தி


தேனி மாவட்டத்தைச் சார்ந்த தமிழ்மாறன், கடலூர் மாவட்டம் மங்களம்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இப்பகுதி மக்களிடம் பணம் பறிப்பதையே தம் கடமையாக செய்து கொண்டிருந்த தமிழ்மாறன், ஒரு கைகலப்பு வழக்கில் லஞ்சம் கேட்டு, அது விஜிலென்ஸ் புகாராக ஆகி, நேற்று கையும் களவுமாக காவல் நிலையத்திலேயே பிடிபட்டார். தமிழ்மாறன் பணியாற்றிய இடங்களிலெல்லாம் இலஞ்சத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டவர். அதன் பலனாகவே இன்றைக்கு கம்பி எண்ணுகிறார். மேலும், தமிழ்மாறன் இலஞ்சப் பேர்வழி மட்டுமல்ல, மோசமான சாதிவெறியனும் கூட.
தேவர் சாதியைச் சார்ந்த இவர் விருதாச்சலம்-பெண்ணாடம் பகுதிகளுக்கு திட்டமிட்டே நியமிக்கப்பட்டவர். இவர் விருதாச்சலத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றிய போது, அன்றைய வி.சி.யின் அரசியல் குழுத்தலைவர் திருவள்ளுவன் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராணடுக்குப் பிறகு விடுதலையானதையொட்டி இயக்கத்தினரால் ஒட்டப்பட்ட சுவரொட்டியை ஆள் வைத்து கிழித்தார். 'அவன் என்ன தியாகியாடா?' என்று கேட்டு சுவரொட்டி ஒட்டியவர்களை தாக்கினார். இதுபோன்ற பல சம்பவங்கள் அவரது சாதிய முகத்தைக் காட்டினாலும், தமிழகமே அதிர்ந்த ஒரு சாதியாணவப் படுகொலையில் கை நனைத்ததுதான் முக்கியமானது.
2003 இல் விருதாச்சலம் அருகே உள்ள புதுக்கூரைப் பேட்டையில்வைத்து, வன்னியர்களால் விஷம் கொடுத்து, எரித்துக் கொல்லப்பட்ட காதலர்களான முருகேசன்(பறையர்)-கண்ணகி(வன்னியர்)யின் சம்பவத்தில் தமிழ்மாறனுக்கும் பங்கிருக்கிறது. அவர்கள் இருவரும் கொல்லப் படுவதற்கும் முன்னவே, காவல்துறைக்கு தகவல் கிடைத்ததும், விரைந்து சென்று குற்றவாளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு, கொல்லுவதற்கு அனுமதிக்கொடுத்துவிட்டு திரும்பிய அயோக்கின்தான் இந்த இன்ஸ்பெக்டர். அப்போதே இந்த நபரின் தில்லுமுல்லு மக்களிடம் வெறுப்பை உருவாக்கியது.ஆனாலும் எந்த பதற்றமும் இல்லாமல் இலஞ்சத்தில் மூழ்கிக் கிடந்திருப்பது இப்போது தெரிகிறது. குற்றங்களை தொடர்ந்து செய்வதில் அவ்வளவு தீவிரம்.
எங்கும் இல்லா அதிசயமாக இவர் கைதை மக்கள் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடியிருக்கிறார்கள். கைவிலங்கிட்டு கொண்டு செல்லுங்கள் என்று முழங்கியிருக்கிறார்கள் அவர்கள். அந்தளவுக்கு மக்களிடம் 'நல்ல பெயரை' சேர்த்து வைத்திருக்கிறார். இடையில் புகுந்த இந்து முன்னணியினர், போலீஸ் மீது கல்வீச்சில் இறங்க, தடியடியும் நடந்திருக்கிறது. ஆனாலும் அனைத்து மக்களும் தமிழ்மாறன் கைதானதில் நிம்மதியடைந்திருக்கிறார்கள்.
தடியடியை தவிர்த்து இருக்க வேண்டும் காவல்துறை. ஒருவன் கல்லெறிந்தான் என்பதற்காக நூற்றுக்கும் அதிகமானவர்களை, அதுவும் வன்முறையை நாடாமல் இலஞ்சத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவளித்த எளிய மக்களைத் தாக்குவது கண்டனத்திற்குரியது.
இத்தகைய சாதிவெறி போலிஸ் தமிழ் மாறனை உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...