பக்கங்கள்

சனி 16 2014

கூவலில்.. இது ஹைடெக் கூவல்..

படம்.-www.maalaimalar.com


களவானி காங்கிரஸின் முன்னால் டெல்லி முதலைமைச்சரும் இன்னாள் கேரளாவின் ஆளுநருமான ஷீலா..தீட்சித் என்பவர்.

புதிதாக வந்த பேரரசர்க்கு ஒரு அறைகூவல் விடுத்து இருக்கிறார்.

கவர்னர் பதவியை ராஜினாமா செய்யத் தயார். ஆனால், எந்த நிர்பந்தத்துக்கும் கட்டுப்பட மாட்டேன் என்று.......

இப்படி ஹைடெக் கூவல் விட்ட இந்த அம்மா.. டெல்லியில் இருந்தபோது ஏழு எட்டு ஏ.சி, பத்து.இருபது வாட்டர்ஹீட்டர் களுக்கு தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு மின்சாரத்தை உறிஞ்சி எடுத்து ராஜபோகமாக வாழ்ந்து வந்தார்.

கேராளாவில் அவர்கள் கட்சி ஆளுவதால், ஆளுநர் பதவியில் இருந்து  கொண்டு  எப்படி எல்லாம் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தார் என்பது உடனடியாக தெரியவரா விட்டாலும். பின்னாளில் தெரிய வரும்போது அப்போதும் வேறு மாதிரியான ஹைடெக் கூவல் விட்டு கொண்டு தன் ராஜபோக வாழ்க்கையை எந்த பாதிப்பும் இல்லாமல் தொடர்வார்

இந்த ராஜபோக வாழ்க்கையை  புதிதாக ஆள வந்தவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் , முன்னால் பேரரசுக்கு உரியவர்களை போதும் நீங்கள் அனுபவித்தது, இனி நாங்கள் என்று ,பவ்வியமாக ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள் . புதிய பேரரசர்கள்.

வியாழன் 14 2014

இராஜ பாளையத்து நாய் என்றாலே..சும்மா அதிருதுல்ல..

rajapalayam dog
படம்-http://www.vallamai.com/


இருக்கப்பட்டவர்கள் செல்லமாக கொஞ்சி வளர்க்கும்  நாய்களிலிலே பிரசித்தி பெற்றது நாலு கால்  நாய்கள்  .

 சீமான்களும் சீமாட்டிகளும் சேர்ந்து அழகி போட்டிகள் நடத்துவது மாதிரி, நாலுகால் நாய் வளர்ப்பவர்களும் தங்களது செல்வாக்கான மட்டங்களில் தங்களின் செல்வச் செழிப்பையும் தாங்கள் வளர்க்கும் இரண்டு நாய்களின் மாதிரியான நால் கால் நாய்களின் விசுவாசத்தையும், கீழ்படிதலையும் “ச்சூ என்றவுடன. பாய்ந்து வந்து கடித்து குதறும்  வீர பராக்கிரமத்தையும் உலகிற்கு காட்டும் விதமாக நாலுகால் நாய்கள் கண்காட்சி நடத்துவார்கள்.

இது நாடுகள் அளவிலும், மாநில அளவிலும்,மாவட்ட அளவிலும் நாலுகால் நாய்களின் அணிவகுப்பு கண்காட்சிகளை நடத்தி தங்களுக்கு பெருமை தேடிக் கொள்வதோடு அதையும்  பெருமையாக பீத்திக் கொள்வார்கள்.. 

இந்த நாலுகால் கண்காட்சிகளில் உயர்ரக நாலுகால் நாய்களான ஆப்கன் ஹைவுண்ட,சவ்சவ்,பொமரேனியன்,சுவாவா,மினியேச்சரபினசர்,பக்காக்சர் ஸ்பெனியல்,ஐரிஷ்செக்டர்,டாபர்மேன் போன்ற வெளி நாட்டு நாய்களும்,...........

ராஜபாளையம்,சிப்பிப்பாறை, கோம்பை போன்ற இந்திய உள்நாட்டு நாலுகால் நாய்களும் கண்காட்சியில் ,தங்களின் மப்பை காட்டுவதற்க்காக உலாவிட்டு அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாலுகால் நாய்களுக்கு  சாப்பிடுவதற்கு கோப்பைகளும், அங்கீகாரத்திற்க்காக  கழுத்தில் மாட்டிக் கொள்ள பதக்கங்களும், நாய் வளர்த்த பெருமகனார்க்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

இப்படியான நாலுகால் நாய்கள் கண்காட்சியில் பங்கு பெற்று உலகப் புகழ் பெற்ற இராஜபாளையத்து நாலுகால் நாய் ஒன்று. இராஜ பாளையத்தில்   சும்மா 62 பேரை கடித்து   அவர்களிடம் தன் வீரத்தை காட்டி, ஓட ஓட, விரட்டி அவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதிலிருந்து என்ன தெரிகிறது... “இராஜபாளைத்து நாலுகால் நாய் என்றாலே...சும்மா அதிருதில்ல.”....

புதன் 13 2014

இப்படியும் சமா(இ)ளிப்பு..........

ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஓட்டு கேட்டு வரும்போது ஒரு பேச்சு ,வெற்றி பெற்றவுடன் ஒரு பேச்சு, ஆட்சி நாற்காலியில் அமர்ந்தவுடன் ஒரு பேச்சு....இப்படி ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒரு பேச்சாக பேசி வருபவர்கள், புதுசா ஆட்சிக்கு வந்தவர்கள்.

இது அவர்களுக்கே உரித்தான் பேச்சு அல்ல, ஒவ்வொரு கட்சிகளிடம் உள்ள இயல்பான,மாற்முமடியாத,மறுக்கமுடியாத கொள்கை முழக்கம் .இது அடிமட்ட தொண்டனிலிருந்து பேரரசர் வரைக்கும் நீட்டி பரவியிருக்கிறது.

60 ஆண்டுகளில் ஆண்டவர்கள் செய்யாததை, 60 நாட்களில் செய்யமுடியுமா?ஃ என்று பேரரசர் மோடி கேட்டு சமாளிப்பது மாதிரி....
படம்-www.vinavu.com


பேரரசர் கட்சியின் தமிழகத்து முன்னால் மூத்த தலைவர் ஒருவரான் இவர்  இப்படி பேசி சமாளிக்கிறார்.

செத்துப்போயி கறையான் அரித்து, மண்ணொடு மண்ணாகி போன  சமஸ்கிருதத்தை தோண்டி எடுத்து .அதற்ககு உயர்பிக்கும் முகமாக ,சமஸ்கிருதாத்தை வார விழாவாக கொண்டாடிச் சொல்லி பேரரசு உத்தரவு போட்டது.

அதை  மானமுள்ள தமிழர்கள் எதிர்த்தார்கள். அந்த எதிர்ப்பை சமாளிப்பதற்க்காக , இப்படி பேசியிருகிறார்

தமிழுக்கும் ஒரு வாரம் விழா எடுத்து கொண்டாடுங்கள். அதற்க்காக சமஸ்கிருத வார விழாவை எதிர்க்காதீர்கள் என்றார்.

தமிழ் பேசும் மாநிலத்தில் தமிழ் வார விழா கொண்டாட சொல்வது போல் சமஸ்கிருதம் பேசும் மாநிலத்தில் சமஸ்கிருத வார விழா கொணடாடுவது தானே ,என்றும் சமஸ்கிருதா விழாவுக்கு ஒரு ஆணை பிறப்பித்தது மாதிரி தமிழ் வார விழாவுக்கு ஆணை பிறப்பியுங்கள் என்றால்.............

அதற்கு என்ன சொல்வார்.   ஒன்று இளித்துக் கொண்டு  பலவிதமாக சமா (இ)ளிப்பார்..

செவ்வாய் 12 2014

காணாமல் போன முன்னால் சவுண்ட் ஸ்பீக்கர்........

படம்-www.gjkmedia.com
தற்போது  ஆண்டு கொண்டு இருக்கும் பேரரசர்க்கு முன்னால் ஆண்ட பேரரசர்க்கு ஒரு சவுண்ட் ஸ்பீக்கர் இருந்தார். அவரை தமிழ் மக்கள் அன்போடு பட்டம் கொடுத்து அழைத்த பெயர் நாறவாய் நா..ராயணசாமி என்பவர்.

ஒவ்வொரு மாதத்தின் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை அதாவது பதிணைந்து நாட்களுக்கு ஒரு முறை என்று கணக்கு வைத்து  ,ஆகாயவிமான தளத்தில் இலங்கை பிரச்சனையாகட்டும், பாகிஸ்தானுக்கு மிரட்டல் விடுவதாகட்டும், உள்ளுர் பிரச்சனையாகட்டும், சர்வதேச பிரச்சனையாகட்டும்,கட்சி பிரச்சனையாகட்டும், மொய்க்கும் ஊடக விபச்சார பக்கிகளின் ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஒவ்வொரு விதமாக ,சளைக்காமல், வாய் வலிக்காமல் சவுண்டு விட்ட? அந்த முன்னால் சவுண்ட் ஸ்பீக்கர் காணாமல் போய்விட்டார். 

ஊடக விபச்சார பக்கிகளும் தங்களுக்கு பெருந்தீனியாக இருந்தவரை, செய்நன்றி மறந்து  அடுத்த சவுண்டு ஸ்பீக்கரை நாடி சென்று விட்டார்கள்.   

என்னே.....உலகம்டே.....இது.....சே.....

ஞாயிறு 10 2014

படம் சொல்லும் உண்மை..........

படம்-உண்மை இதழ்













கோயிலுக்குள் போகையிலே... செருப்பை மட்டும்தான் வெளியே விட்டுச் செல்வோம். மூட நம்பிக்கையோடு உள்ளே சென்று,  வெளியே வரும்போது சாதி ,மத வெறி பக்தியுடன் வருவோம்.


 உலகமே சுருங்கிப்போச்சு... அது போல நாகரிக மனிதர்களின் மனமும் சுறுங்கி போச்சு........... விட்டா கோயிலுக்குள்ளே கூட செருப்போட  போவோம்

ஆனா போக மாட்டோம், ஏன்னா..சாமிக்கு பயந்தல்ல.....போலீசுக்கும் வழக்குக்கும்,, மதவெறி பக்கிகளுக்கு பயந்து தான்.--- எல்லா வகையான பக்தர்களின் நிலைமை இதுதான்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...